Post No. 10,788
Date uploaded in London – – 28 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Part 2 of நீலக் கச்சை பூவார் ஆடை; தமிழ்ப் பெண்களின் ‘Bra’ ‘ப்ரா‘
நூலினு மயிரினும் நுழை நார் பட்டினும்
பால்வகை தெரியாப் பன்னூறடுக்கத்து
நறுமடி செறிந்த வறுவை வீதியும்
—ஊர்காண் காதை , சிலம்பு. வரிகள் 205/7
((கீழே விளக்கம் காண்க))
xxx
நீலக் கச்சை, பூவார் ஆடை – புறம் 274, பாடியவர் உலோச்சனார்
ஒரு மறவன் போர்க்களம் சென்றான். அவன் பூப்போட்ட சட்டை அணிந்திருந்தான். இடுப்பில் நீல நிற கச்சையை / பெல்ட்டை அணிந்திருந்தான் .
உண்பது நாழி; உடுப்பது இரண்டே – புறம் 189; பாடியவர் நக்கீரர் ஆண்டியானாலும் அரசன் ஆனாலும் எல்லோருக்கும் உடம்பு ஒன்றுதான். ஒரு நாழி அளவு தானியம் போதும்; மேலாடை, அரை ஆடை என்ற இரண்டு துண்டுகள் போதும்.
கோட்டம் கண்ணியும் கொடுந்திரை ஆடையும் – புறம் 275
பாடியவர்- ஓரூ உத்தனார்
வளைந்த கண்ணியும் , கடல் அலை போன்ற மெல்லிய ஆடையும் அணிந்த மறவன்.
மேலாடையும் இடுப்பில் கச்சும் அணிவது பற்றி மதுரைக் காஞ்சியும் பாடுகிறது :-
திண்டேற் பிரம்பிற் புரளும் தானை
கச்சம் தின்ற கழல் தயங்கு திருந்தடி
–மதுரை. 435-436
எல்லோருக்கும் ஒரு வகை சீருடை, அதாவது UNIFORM யூனிபார்ம் இருந்தது. இன்று நாம் சட்டை போட்டுக் கொள்கிறோம். ஆனால் அக்காலத்தில் சட்டையில்லை; வேட்டியும், மேல் துண்டும்தான். சபைக்கு வருவோர் மட்டும் ‘கஞ்சசுகம்’ என்ற சட்டை அணிந்திருந்தனர்.
மகாபாரதத்தில் யுதிஷ்டிரர் பட்டாபிஷேகத்துக்கு வந்த ரிஷி முனிவர்கள் இப்படி கஞ்சுகம் அணிந்ததை குறிப்பிடுகிறது ; இதை ஆர்ய தரங்கிணி நூல் எழுதிய ஆ.கல்யாணராமன் குறிப்பிட்டுள்ளார்.இண்டிகோ என்னும் அவுரிச் செடி சாயத்தை இத்தாலிக்கு பழந்தமிழர்கள் ஏற்றுமதி செய்தனர். இந்த இந்திய சாயம் பற்றி பிளினி என்ற ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
சங்க காலத்துக்குப் பின்னர் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தில்தான் அதிக விஷயங்கள் கிடைக்கின்றன. பெரும்பாலான ஆடைச் சொற்கள் ஸம்ஸ்க்ருதச் சொற்கள்.
இப்போது பிராமணர்கள் மட்டும் அணியும் பஞ்ச கச்சம் அக்காலத்தில் அரண்மனைக்குச் செல்லும் அதிகாரிகள் போன்றோர் அணிந்த உடை ஆகும்..
கி.வா. ஜகந்நாதன் போன்ற அறிஞர்கள் எப்போதுமே இந்த உடையில்தான் வெளியே வருவார்கள்.
சேரன் செங்குட்டுவன் சபையில் இருந்தான். வேறு பெண்களைப் பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தான். மகாராணிக்கு ஊடல் வந்தது. எனக்கு தலை வலிக்கிறது என்று பொய் சொல்லிவிட்டு அந்தப் புரத்துக்குப் போய்விட்டாள். பக்கத்தில் இருந்த மஹாராணி திடீரென்று மறைந்த செய்தி அறிந்த செங்குட்டுவன் அவளைப் பார்க்க விரைந்தான். அப்போது மன்னனை இடைமறித்த பொற்கொல்லன் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டான். அவன் சட்டை போட்டுக்கொண்டு வந்த செய்தியும் சிலப்பதிகாரத்தில் உள்ளது —
மெய்ப்பை புக்கு விலங்குநாட்டைச் செலவின்
கைக்கோற் கொல்லனைக் கண்டனனாகி
–கொலைக்களக் காதை 107-108
பாண்டியன் அரண்மனையில் வேலை பார்த்த வெளிநாட்டு யவனரும் சட்டை அணிந்து இருந்தனர்
உடம்பின் உரைக்கும் உரையா நாவின் படம்புகு மிலேச்சர்
–முல்லைப்பாட்டு 66-67 வரிகள்.
சம்ஸ்க்ருதம் அல்லது தமிழ் மொழி பேசாதவர்களை ‘மிலேச்சர்’ என்றும் கரடு முரடான சொற்களைப் பேசுவோர் என்றும் தமிழ்ப் புலவர்கள் திட்டுவார்கள். ‘வன் சொல்’ யவனர் என்று ஏசுவர்.
XXX
.சிலப்பதிகாரத்தில் இன்னும் ஒரு செய்தி ….
சஞ்சயன் போன பிறகு , பாண்டிய நாட்டு வீரர்கள் ஆயிரம் பேர், சேரன் செங்குட்டுவனுக்கு திறைப் பொருள் கொண்டுவந்து கொடுத்ததாகவும் அவர்கள் கஞ்சுக யூனிபார்ம்/ சீருடை அணிந்து இருந்ததாகவும் இளங்கோ அடிகள் பாடுகிறார்.
சஞ்சயன் போன பின் கஞ்சுக மாக்கள்
எஞ்சா நாவினர் ஈரைஞ்ஞூற்றுவர்
–சிலம்பு. கால்கோட் 167-68
XXXX
இடையர் போன்றோர் எளிய உடைகளை அணிந்து இருந்தனர் ,
ஒன்றாமற் உடுக்கைக் கூழார் இடையன்
–பெரும்பாண் . வரி 175
உடுக்கை இழந்தவன் கைபோல — என்று வள்ளுவனும் ஆடைக்கு ‘உடுக்கை’ என்று சொல்லுவதை ஒப்பிடலாம்
பெண்கள் இடையில் மட்டும் ஆடை அணிந்து இருந்தனர் . மலையாளத்தில் இப்படிப் பெண்கள் மார்பகத்தை மறைக்காமல் இருந்த படங்களை பழைய புஸ்தகங்களில் இன்றும் காணலாம். மஹாராணி போன்றவர்கள் மார்பகக் கச்சு (BRA) அணிந்தனர். பெண்கள் மார்பகத்தின் மீது சந்தனம் முதலியவற்றால் ஓவியம் வரைந்தனர். இது பற்றி அகத்துறைப் பாடல்களில் நிறைய குறிப்புகள் வருகின்றன ..
ஐய பிதிர்ந்த சுணங்கணி மென்முலை மேல்
தொய்யில் எழுதுகோ
–முல்லைக்கலி 11-16/17
இடையில் மேகலை அணிந்து, அதன்மேல் பூந்துகிலைச் சுற்றிக்கொண்டனர்.
பிறங்கிய முத்தரை முப்பதிருகாழ்
நிறங்கினர் பூந்துகில் நீர்மையின் உ டீ இ
–சிலம்பு. கடலாடு காதை 87-88
புண்ணிய நறுமலர் ஆடை போர்த்து
-சிலம்பு .13-172
புதுமணப் பெண்கள் முதலிரவு அறைக்குள் வந்தபோது புத்தாடைகளால் உடலை மூடிக்கொண்டு வந்த செய்தி அகநானூறு திருமணப் பாடலில் -86 வருகிறது
வெண்ணிற ஆடைகளை அணிந்து பெண்கள் பந்தாடிய செய்தியும் கிடைக்கிறது. செக்கர் வானைப் போன்ற செவ்வண்ணம் ஊட்டிய பூத் தொழில் செய்யப்பட்ட ஆடைகள் , புடவைகள் மதுரையில் விற்கப்பட்டன என்று மாங்குடி மருதப்பினார் பாடுகிறார் – மதுரைக்கு காஞ்சி வரிகள் 431-433; 513
டாக்கா மஸ்லின்
உலகப் புகழ்பெற்ற டாக்கா மஸ்லின், தாகேஸ்வரி தேவி கோவில் கொண்டுள்ள டாக்கா நகரில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. ஒரு மோதிர வளையத்துக்குள் பல நூறு அடி நீளமுள்ள டாக்கா மஸ்லின் துணியைச் சுருட்டி நுழைத்து விடலாம். இது இப்போது அடியோடு அழிந்துவிட்டது. டாக்கா மஸ்லின் துணியை
அழிக்க எண்ணிய வெள்ளைக்கார்கள் அந்த நெசவாளர் ஆயிரம் பேரின் கட்டை விரல்களைத் துண்டாக்கிய செய்தி வரலாற்றில் நடந்த கொடூரங்களில் ஒன்றாகும்.
இது போன்ற நுண்ணிய ஆடைகளை தமிழர்களும் செய்தனர். பாம்புச் சட்டை போன்ற மெல்லிய ஆடை, கடல் அலை போன்ற மெல்லிய ஆடை, எலி மயிரால் செய்யப்பட்ட ஆடை என்றெல்லாம் குறிப்புகள் கிடைக்கின்றன . ஒருவேளை எலி மயிர் போன்ற மிருதுவான, மெ ன்மையான என்ற பொருளில் சொல்லி இருக்கலாம்.
நூலினு மயிரினும் நுழை நார் பட்டினும்
பால்வகை தெரியாப் பன்னூறடுக்கத்து
நறுமடி செறிந்த வறு வை வீதியும்
—ஊர்காண் காதை , சிலம்பு. வரிகள் 205/7
பொருள்
நுண்ணிய பருத்தி நூலினாலும் , எலி மயிரினானும், பட்டு நூலினானும் தத்தம் பகுதிகளால் நெய்யப்பட்டு முற்கூறிய துகில் வருக்கங்களில் ஒவ்வொன்றை நூறாகத் தெரிந்தெடுக்க ப்பட்ட அடுக்குப் பல நூறாகிய மடிப்பு புடவைக் கடைகளும்
புடவைக்கு கடைகளுக்கு வாசங் கொளுத்துதலின் ‘நறு மடி’ என்றார் .
அந்தக் காலத்தில் கண்ணுக்குப் புலப்படாத மெல்லிய இழைகளால் ஆடைகள் நெய்யப்பட்டன ; அவற்றின் மீது பூக்கள் வரையப்பட்டிருந்தன. . பாம்பின் சட்டையைப் போல மெல்லியதாக இருந்தன. . இதை பொருநர் ஆற்றுப்படையில் காணலாம்
நோக்கு நுழைகல்லா நுண்மைய பூங்கனிந்து
அரவுரி என்ன அறுவை நல்கி – பொருந. வரி 82-83
அரவு = பாம்பு; அறுவை = துணி
பாம்பின் சட்டை போலும் மூங்கிலின் உட்புறத்தேயுள்ள வெள்ளை நிற தோல் போலவும் அமைந்த பூங்கலிங்கத்தை புறநானூற்றுப் புலவர் மாறோக்கத்து நப்பசலையார் பாடுகிறார் :
பாம்புரியன்ன வடிவின காம்பின்
கழை படு சொலியின் இழையணி வாரா
ஒண் பூங்கலிங்கம் உடீ இ — புறம் 383.
புகையைப் போலவும் பாலாவியைப் போலவும் ஆடைகள் விளங்கிற்று —
புகை விரிந்தன்ன பொங்கு துகில் உடீஇ
ஆவியன்ன அவிர் நூற் கலிங்கம் —
பெரும்பாண் . வரிகள் 469/70
சீவ சிந்தாமணியிலலும் மயிரால் ஆடை நெய்வது குறிப்பிடப்படுவதாக (பாடல் 2686) உ.வே.சாமிநாதையர் எழுதுகிறார் .
To be continued…………………………………..
tags- எலி மயிர், ஆடை, உடுக்கை, பாம்புத் தோல், மெல்லிய , சிலப்பதிகாரம்
நீலக் கச்சை பூவார் ஆடை; தமிழ்ப் பெண்களின் ‘Bra …
https://tamilandvedas.com › நீலக…
20 hours ago — தமிழர்களின் தழை உடை (REED DRESS of TAMILS) பற்றிய இரண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளை 2012-ல் …
கச்சை | Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › க…· Translate this page8 Sept 2012 — தமிழர்களின் தழை உடை (Reed Skirt) பற்றி சங்க … இதைப் புறநானூறு “ நீலக் கச்சை பூவார் …