30 ரிக் வேத மேற்கோள்கள்; ஏப்ரல் 2022 நற்சிந்தனை காலண்டர் (Post No.10,797)

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,797

Date uploaded in London – –    31 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக் வேத நாலாவது மண்டல பொன் மொழிகள், மேற்கோள்கள்

பண்டிகை நாட்கள் – ஏப்ரல் 2 யுகாதி /தெலுங்கு வருடப் பிறப்பு ; 10- ஸ்ரீ ராம நவமி; 14- தமிழ் வருடப் பிறப்பு, மஹாவீர் ஜயந்தி ; 16- சித்ரா பெளர்ணமி ;15- புனித வெள்ளி; 18- ஈஸ்டர் திங்கள்

ஏகாதஸி விரத நாட்கள் – 12, 26

16- சித்திரா பெளர்ணமி; 30-அமாவாசை

முகூர்த்த நாட்கள் – ஏப்ரல்  6, 15,21, 25, 29

Xxxx

ஏப்ரல் 1 வெள்ளிக்கிழமை

சமுத்திரத்திலிருந்து இனிப்பான அலை எழுகிறது அது சூரிய ஒளியுடன் அமிர்தமாகிறது -ரிக் வேதம் 4-58-1

XXX

ஏப்ரல் 2 சனிக்கிழமை

நிலத்தின் அதி தேவதையை  நாங்கள் வணங்குகிறோம்.அவன் எங்களுக்கு பசுக்களையும் குதிரைகளையும் அளிப்பானாகுக  -4-57-1

XXX

ஏப்ரல் 3 ஞாயிற்றுக்கிழமை

நிலத்தின் தேவனே , பசுக்கள் பாலைப் பொழி வதைப் போல இனியவற்றை எங்களுக்கு தருவாயாக 4-57-2

XXX

ஏப்ரல் 4 திங்கட் கிழமை

நிலத்திலுள்ள தாவரங்கள் அனைத்தும் எங்களுக்கு இன்பமே நல்குக 4-57-3

XXX

காளைகள் நன்றாக உழுக ; மனிதர்கள் நன்றாக உழைக்கட்டும் ; கலப்பைகள் நன்றாக உழுக; கயிறுகள் நன்றாகக் கட்டட்டும் ; சாட்டைகள் நன்றாக செயல்படட்டும் 4-57-4

XXX

ஏப்ரல் 5 செவ்வாய்க்கிழமை

சுநா ! சீரா ! எங்கள் துதிகள் உங்களை மகிழ்வுறச் செய்யட்டும். நீங்கள் வானத்தில் உண்டாக்கியவை இங்கே பொழியட்டும் ( இவை இரண்டும் உழவர்களுக்கு உதவும் தேவதைகள் அல்லது சூரியன் , உழவுக் கருவிகள் என்பர் )

XXX

ஏப்ரல் 6 புதன் கிழமை

சீதா என்னும் உழவே ! எங்கள் அருகில் வருக; உன்னை நாங்கள் போற்றுகிறோம்.எங்கள் வளம் பெருக ஆசீர்வதி; நல்ல அறுவடை என்னும் கனிகளைக் கொண்டு வா 4-57-6

XXX

ஏப்ரல் 7  வியாழக்கிழமை

கலப்பைக் கொழு நம்முடைய நிலத்தை சுகமாக உழுக காளைகளும் உழவர்களும் சுகமே வாழ்க; மழையும் பொழியட்டும் ; சு நா ! சீரா !  செல்வ மழை பொழியுங்கள் 4-57-8

xxx

ஏப்ரல் 8 வெள்ளிக்கிழமை

மநுவின் சந்ததிகளுக்குச் செல்வம் நல்கும் சவிதா (சூரியன்) எங்களுக்கு மிகச் சிறந்த செல்வத்தை அளிக்கட்டும் -4-54-1

xxx

ஏப்ரல் 9 சனிக்கிழமை

சவிதாவே ! மனிதர்களான நாங்கள் அறிவின்மையாலோ, அகந்தையினாலோ, அலட்சியத்தினாலோ உனக்கோ, ஏனைய கடவுளருக்கோ, மனிதர்களுக்கோ குற்றம் செய்த்திருந்தால் அந்தப் பழியை அகற்றவும் 4-54-3

xxx

ஏப்ரல் 10 ஞாயிற்றுக்கிழமை

ஸவிதாவே , உனக்கு தினமும் மூன்று முறை பொழியப்படும் சோம ரசம் எங்களுக்கு செளபாக்கியத்தை அருளட்டும் 4-54-6

xxx

ஏப்ரல் 11 திங்கட் கிழமை

அதிதியையும் , சிந்துவையும், தேவியான சுவஸ்தியையும் நட்புக்காக மந்திரங்களால் போற்றுகிறேன்.இரவும் பகலும் நாங்கள் விரும்புவதைச்  செய்யட்டும் 4-55-3

xxx

ஏப்ரல் 12 செவ்வாய்க்கிழமை

செல்வங்களைத் தேடுவதற்காக கடல் கடந்து செல்வோர் துதிப்பது போல துதிக்கிறேன். வானமே, பூமியே,, அஹிர் புத்னியோடு உங்களை விரும்பத் தக்க செல்வங்களுக்காக துதிக்கிறேன் 4-55-6

xxx

ஏப்ரல் 13 புதன் கிழமை

உண்மையைப் பேசுபவளும், மிகுந்த செல்வம் படைத்தவளுமான உஷா தேவி , நாங்கள் விரும்பியதை எல்லாம் அருளட்டும் 4-55-9

xxx

ஏப்ரல் 14  வியாழக்கிழமை

இரவு என்னும் சகோதரி சென்ற பின்னர் வானத்தின் புதல்வியான உஷா , ஒளியைப் பரப்புகிறாள். அனைவர்க்கும் ஆனந்தம் அளிப்பவள் உஷை.4-52-1

xxxx

ஏப்ரல் 15 வெள்ளிக்கிழமை

அழகிய குதிரை போல இருப்பவளும், , பிரகாசிக்கும் கிரண ங்களின் தாயும் ஆன உஷை, அஸ்வினி தேவர்களின் தோழி ஆவாள்  4-52-2

xxx

ஏப்ரல் 16 சனிக்கிழமை

வெறுப்பை விலக்கும் உன்னை, உண்மையோடு உறையும் உன்னை, அறிவைத் தரும் உன்னை திருப்பள்ளி எழுச்சி பாடி துதிக்கிறோம் – 4-52-4

xxx

ஏப்ரல் 17 ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு திசையின் இருட்டிலிருந்து எழுகிறாள் அறிவைத் தரும் உஷா.வானத்தின் புதல்வியான அவள் மக்களுக்கு நலனைக் கொண்டு வருகிறாள்.4-51-1

xxx

ஏப்ரல் 18 திங்கட் கிழமை

செல்வம் மிகுந்தோரை வாரி வழங்கத் தூண்டுபவள் உஷா தேவி; கருமித் தனம் படைத்தவர்கள் தூக்கத்திலிருந்து எழாமல் இருக்கட்டும் 4-51-3

xxx

ஏப்ரல் 19 செவ்வாய்க்கிழமை

பிருஹஸ்பதி எந்த வீட்டுக்குச் செல்கிறானோ அவன் சொந்த மனை யிலே  செல்வத்தோடு செழிக்கிறான்.. அவனுக்குப் பூமியானது எல்லாப் பருவங்களிலும் பழம் தருகிறது.4-50-8

xxx

ஏப்ரல் 20 புதன் கிழமை

புகழ்பெற்றவர்களும் , அறிஞர்களும்  ஆன முன் கால ரிஷிக்கள் , பிரகஸ்பதியைத் தங்கள் முன்னே ஸ்தாபித்தார்கள் . அந்த பிரஹஸ்பதி, இனிய நாக்குள்ளவன்; மூவுலகங்களிலும் நாதத்தோடு இருப்பவன்; புவியின் எல்லைகளைத் தாங்குபவன்  4-50-1

xxx

ஏப்ரல் 21 வியாழக்கிழமை

வாயு தேவனே , மனோ வேகமுள்ள 99 குதிரைகள் உன்னை ஏந்தி வருக 4-48-1

xxx

ஏப்ரல் 22 வெள்ளிக்கிழமை

வாயுவே, உனக்கு இந்திரன் தேரோட்டியாகக் கிடைத்துள்ளான் ; நூறாயிரம்/ நியுதம் குதிரைகள் உடைய நீ, எங்களுடைய 100 விருப்பங்களைப் பூர்த்தி செய்ய வா 4-46-2

xxxx

ஏப்ரல் 23 சனிக்கிழமை

தேனுக்காக ஓடிவரும் தேனீக்களை போல எங்கள் வேள்விகளுக்கு விரைந்து வாருங்கள் அசுவினி தேவர்களே 4-45-4

xxx

ஏப்ரல் 24 ஞாயிற்றுக்கிழமை

மற்றவர்களின் பக்தியில் சிக்கி தாமதம் செய்துவிடாதீர்கள் ; நாம் பழைய நட்பினால் கட்டப்பட்டுள்ளோம் 4-44-5

xxxx

ஏப்ரல் 25 திங்கட் கிழமை

சிந்து (கடல் அல்லது நதி) உங்கள் குதிரைகள் மீது நீரைத் தெளிக்கின்றன. சூரிய ஒளியானது உங்கள் தங்க நிறமுள்ள குதிரைகளை செந்நிறப் பறவைகள்  போல பிரகாசிக்கச் செய்கின்றன இதனால் உங்களை அனைவரும் அறிவர் ; அஸ்வினி தேவர்களே இதனால், நீங்கள் சூர்யாவின் புதல்விக்கு அதிபதி ஆனீர்கள்  4-43-6

xxx

ஏப்ரல் 26 செவ்வாய்க்கிழமை

நான் இந்திரன், நான் வருணன் . என் மகிமையால் நான் இருவராய் இருக்கிறேன். நான் பறந்தவையும், ஆழமுள்ளதும் , அழகுள்ளதானதுமான வண்ணமாகவும் பூமியாகவும் உள்ளேன் 4-42-3

xxx

ஏப்ரல் 27 புதன் கிழமை

புகழ் அடைவதற்காக செல்வந்தர்களை நாடும் மக்களைப்போல , யாசகம் செய்யும் பெண்களை போல, என்னுடைய துதிகள் வருகின்றன 4-41-9

xxx

ஏப்ரல் 28  வியாழக்கிழமை

வாயு தேவனே, நியுதம்/ லட்சம்  என்னும் அளவுக்கு குதிரைகள் உடையவனே, பழி ச் சொல்லை நீக்குபவனே , இந்திரனைச் சாரதியாக உடையவனே , ஒளி வீசும் உன் தேரில் சோமரசம் பருக விரைந்து வா- 4-48-2

xxx

ஏப்ரல் 29 வெள்ளிக்கிழமை

இந்திரா- வருணா , பெற்றோர்களைப் போல தாராளமாக அருள் செய்வதால், உங்கள் நட்புறவை நாங்கள் நாடுகிறோம் 4-42-7

xxx

ஏப்ரல் 30 சனிக்கிழமை

இந்திரா, வருணர்களே, நீங்கள் பசுக்களை விரும்பும் காளை  போல எங்கள் துதியை விரும்புங்கள்; ஆயிரம் பால் தாரைகள் இருக்கும் பெரிய பசுவைப்போல எங்களுக்குச் செல்வத்தை பொழிக 4-41-5

—subham —

Tags– ரிக் வேதம்,  பொன் மொழிகள், மேற்கோள்கள், நாலாவது மண்டலம் , ஏப்ரல் 2022, காலண்டர்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: