IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
Post No. 10,799
Date uploaded in London – – 1 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
உலகிலேயே பழைய புஸ்தகமான ரிக்வேதத்தில் ஒரு அற்புதமான உவமை வருகிறது. கவிஞர்கள் கவிதை புனைவது, நெசவாளர் துணிகளை நெய்வது போல இருக்கிறதாம். இதனால் நெசவுத்தொழில் எவ்வளவு உச்சகட்டத்தில் இருந்தது என்பது தெரிகிறது. தமிழர்கள் ஸம்ஸ்க்ருதத்தை அப்படியே காப்பி copy அடித்து புஸ்தகங்களுக்கு ‘நூல்’ என்று பெயரிட்டனர். ஸம்ஸ்க்ருத மொழியில் சூத்ர (நூல்) என்றால் புஸ்தகம், துணிமணிகளுக்கான நூல் (Sutra= Book, Thread) .தமிழர்கள் எழுதுவதற்கு 500 முதல் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே ‘சூத்ர’ம் துவங்கிவிட்டது. பாணினி பயன்படுத்திய ‘சூத்திர’த்தை தொல்காப்பியப் பொருள் அதிகாரத்திலும் காணலாம். தமிழ் மொழியும் ஸம்ஸ்க்ருதமும் இரண்டு கண்கள் என்பதால் தமிழ் அகராதியிலும் நிகண்டிலும் தமிழைவிட அதிகமான ஸம்ஸ்க்ருதச் சொற்களை ‘தமிழ்’ என்று பெயர் சூட்டினார்கள்
வேத கால இந்துக்களை நாடோடிகள் என்று வெளிநாட்டு அரைவேக்காடுகளும் மார்க்சீய கட்சியினர் எழுதிய புத்தகங்களும் சித்தரித்தன. ஆனால் நெசவு மற்றும் விவசாயம் பற்றி ரிக் வேதம் நெடுகிலும் குறிப்புகள் உள்ளன. இது வெளிநாட்டு “அறிஞர்களின் ” முகத்திரையை கிழிக்கின்றது
ஏராளமான விவசாய சொற்களும்,நெசவாளர் குறிப்புகளும் உள்ளன.
இதோ சில பாடல்கள்/ மந்திரங்கள்
வருணனை நோக்கி ரிஷி கிருத்சமதன் பாடிய பாடல் RV.2-28-5
“கட்டுகளில் இருந்து அவிழ்ப்பது போல என்னை பாவத்திலிருந்து விடுவி; நாங்கள் வளர்வோமாக; நான் பாடல் என்னும் ஆடையை நெய்யுங்கால் நூல் இழையை அறுத்துவிடாதே என்னுடைய செயல் நிறைவடையும் வரை அது கெடாமல் பார்த்துக்கொள்வாயாக” .
இதில் கவிதை புனைவதை ஆடை நெய்வதற்கு ஒப்பிடுகிறார்.
பாடல் என்னும் ஆடை என்பது நேரடி மொழிபெயர்ப்பு (R T Griffith கிரிப்பித்) (அறிவு என்னும் ஆடை என்று ஜம்புநாதன் மொழிபெயர்க்கிறார்.)
XXX
2-38-4
ரிஷி கிருத்சமதன் ஸவிதாவை (சூரியன்) நோக்கிப் பாடிய பாடலில் வரும் மந்திரம் 2-38-4:
ஆடையை நெய்யும் பெண்மணியைப் போல இரவு (ராணி) இந்த உலகத்தை மீண்டும் நெய்து மூடுகிறாள்.காலையில் கதிரவன் எழுகிறான் களைப்பற்றவனும் , பருவங்களை உண்டாக்குபவனுமான சூரியன் எழுந்தவுடன் உலகம், உறக்கத்திலிருந்து எழுகிறது.
XXX
ஊடு நூல் – பாவு நூல்
நான் குறுக்கிழைகளை அறியேன் ; நெடுக்கிழைகளை அறியேன். ஒரு போட்டியில் நெசவாளர்கள் நெய்யும் ஆடையையும் அறியேன்; இங்கு எந்த மனிதனுடைய புதல்வன் கீழே இருக்கும் தந்தையால் கற்பிக்கப்பட்டு , மேலேயுள்ளவனைப் பற்றிய விஷயங்களை அறிவான்?
இதிலுள்ள நெசவு உவமையில் ஊடு நூல் – பாவு நூல் பற்றிக் கூறுவது நெசவு மிகவும் பரவிய ஒரு தொழில் என்பதைக் காட்டுகிறது. இங்கு நெசவு என்பது பெரிய தத்துவம் அல்லது பாடல் போட்டி பற்றியது என்று வில்சனும் கிரஸ்மானும் வெவ்வேறு விளக்கங்களைக் கூறினாலும் நெசவு பற்றிய உவமையை எல்லோரும் ஏற்கின்றனர்.
(VEDIC TRANLATORS: R.T. GRIFFITH, PROF. WILSON, and GRASSMANN)
XXX
புலவன் வீட்டில் நெசவு நூலை எலிகள் கடிக்கும் வறுமை பற்றிய சாதாரண உவமைகள் முதல் இந்த மாபெரும் பிரபஞ்சத்தை உருவாக்கிய பிக் பேங் தியரி Big Bang Theory வரை , நெசவு உவமை உபயோகிக்கப்படுகிறது
10-130-1/2
வேள்வி என்னும் யாகத்தை நெசவுக்கு ஒப்பிடுகிறார் பிரஜாபதியின் புதல்வர்
” சிருஷ்டிக்கப்பட்ட பொருள்களின் இழைகளால் எங்கும் பரத்தப்படுவதும் 101 வருடங்கள் நீடிக்கப்படுவதுமான இந்த யக்ஞத்தை பிதாக்கள் நெய்கிறார்கள்; அவர்கள் பாவு (Warp) நூலின் அருகில் அமர்ந்து கொண்டு முன்னே நெய்யுங்கள், பின்னே நெய்யுங்கள் என்று உரத்த குரலில் பேசுகிறார்கள் “
(101 புரோகிதர்கள் என்பது கிரிப்பித் R T Griffith மொழிபெயர்ப்பு)
“புருஷன் (God) இந்த ஆடையை விரிக்கிறான்; புருஷன் அதை மேலே சுருட்டுகிறான். அவன் இதை சுவர்க்கத்தின் மீது பரத்துகிறான்.அவனுடைய தறி நெய்யும் கம்பங்கள் யாக சாலையில் நடப்பட்டுள்ளன அவை சாமங்களை (Saman Hymns) நெய்யும் நாடாக்களாக , நெசவு நூல் நாழிகளாகச் (ஷட்டில்) செய்தன
. (இந்த கிரணங்கள் வேள்வியின் பீடத்திலே அமர்ந்தன – என்பது ஜம்புநாதன் மொழிபெயர்ப்பு);
தறியில் (Loom) குறுக்கு இழைகளை எடுத்துச் செல்லும் பாகத்தை ஷட்டில் shuttle என்பார்கள். இங்கே பிரபஞ்சத்தை உண்டாக்கிய மாபெரும் வெடிப்பு Big Bang பற்றிப் பேசுகிறார்கள் என்பது என் கருத்து. இது பிரபஞ்ச்சத்தின் தோற்றம் Creation என்ற தலைப்பில்தான் இந்த துதியானது , எல்லா புஸ்தகங்களிலும் உளது
XXX
எலி தின்னும் நெசவு நூல்
ரிஷி கவச ஜலூஷன் பாடியது
RV.10-33-3
சதக்ரதுவே! வழிபடுபவனான என்னை கவலைகள், நூற்களைத் தின்னும் எலிகள் போலத், தின்கின்றன. இந்திரனே! மகாவனே ! நல்ல தானங்கள் கிடைக்க அருள்செய்; தந்தையைப் போல எங்களைக் கவனித்துக் கொள்வாயாக
(சங்க இலக்கியத்தில் ஈறும் பேனும் உள்ள கந்தை ஆடைகளுடன் சென்று வள்ளல்களிடம் கெஞ்சிய பாணர்களின் பாடல்களை நினைவு படுத்தும் மந்திரம் இது)
xxx
இவ்வாறு பல பாடல்களில் போகிற போக்கில் நெசவு உவமைகள் வருவதால் இது மக்களுக்கு நன்கு தெரிந்த விஷயம் என்பது புலப்படுகிறது. பெரும்பாலும் பெண்களே இந்த நூற்பு வேலையில் ஈடுபட்டதும் தெரிகிறது. பட்டு, கம்பளம் போன்றவை பற்றிய குறிப்புகள் தனியே உள்ளன.
To be continued………………………………..
Tags- எலி ,நெசவு , ஊடு, பாவு, நூல் , சூத்ரம்