Post No. 10,802
Date uploaded in London – – 2 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
அதர்வண வேதத்திலும் (10-7-42/43) நெசவு, நெசவாளர் பற்றிய மந்திரங்கள் உள்ளன.
இது ஏற்கனவே ரிக்வேத 10-130-ல் கண்ட விஷயம்தான்
42. தன்னந் தனியாகவுள்ள இரண்டு இளம் பெண்கள் வெவ்வேறு வர்ணப் பெண்கள், ஆறுபகுதிகளில் நெசவு செய்கிறார்கள் . ஒருவன் இழைகளை இழுக்கிறான்; மற்ற ஒருவன் பரத்துகிறான் அவர்கள் அறுப்பதில்லை; இறுதிவரை உழைக்கிறார்கள்
அவர்கள் இருவரில் யார் யார் என்று எனக்குத் தெரியாது; ஒரு புருஷன் நெசவு செய்கிறான்; மற்றவன் நீக்குகிறான்
இதிலும் ரிக் வேதம் போலவே பெண்களே நெசவு வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
XXX
ரிக் வேதத்தில் துணி சம்பந்தமுள்ள சொற்கள் நிறைய உள்ளன.
சொற்களும் அவை வரும் மண்டலங்களும், துதியின் எண்ணிக்கையும் பின் வருமாறு:-
அட்க – போர்த்தும் துணி (RV.5-74-5; 6-29-3; 8-41-9)
அதிவஸ் (RV.1-140-9; 1-162-16; 10-5-4)
ஊர்ன ம்ருதா – கம்பளம் போல மென்மையான (5-5-4; 10-18-10
ஓட – பாவு (6-9-2/3)
காந்தாரி அவிக – காந்தார ஆடு (Afghanistan) RV 1-126-7
சித்ர ரஸ்மி – வர்ண நூல் (1-134-4)
தந்து – நூல் (i-12-1; 2-3-6)
தந்திர – தறி (10-71-9)
தமிழ், ஸம்ஸ்க்ருதச் சொற்கள் ஒரே மூலத்தில் இருந்து வந்திருக்கலாம்
தசரா – நூலைக் கொண்டு செல்லும் கருவி SHUTTLE? (10-130-2)
தசராணி – தரையிலுள்ள துணி (10-130-2)
த்ரிகா – மும்மடங்கு (10-59-9)
த்ரிதந்து – முப்புரி
பூணுலை முப்புரி நூல் என்று சங்க இலக்கியங்கள் போற்றுகின்றன
தம்ச ரஸ்மி – அற்புத நூல்; மிகவும் சன்னமான நூல் (1-134-4)
தீர்க்க தந்து – நீண்ட இழை – ( 10-69-7)
தனுத்ரி – நெசவுக் கருவி carding bow? Quick (3-31-6; 9-93-1)
த்ராபி – போர்வை (1-25-13; 1-116-0; 4-53-2)
பேச – பூ வேலைப்பாடுமிக்க / எம்ப்ராய் டரி துணி
(2-3-6; 4-36-7; 7-34-11)
வயன் – நெசவு வீவ் WEAVE என்னும் ஆங்கிலச் சொல்லின் மூலம் (5-47-6)
வார – கம்பளி நூல் ; வூல் WOOL என்ற ஆங்கிலச் சொல்லின் வேர் (1-128-6; 5-16-2)
வாச – உடை (1-34-1; 10-26-6)
வஸ்திர- வேஷ்டி, ஆங்கிலத்தில் VEST வெஸ்ட்
வாஸோவாய – நெசவாளி WEAVER (10-26-6)
வேமன – lதறி (Yajur Veda 19-83)
வேசி – ஊசி (7-18-17)
சீப்ரா – தலைப் பாகை (2-2-3; 4-37-4; 10-96-4)
சுக்ர வாச – வெள்ளை ஆடை (1-113-6)
சிரி – தறியிலுள்ள கருவி shuttle (1-71-9) also weaver
தறியில் குறுக்கு நூல் இழையை ங்கிச் செல்லும் ஊடை
சூசி – ஊசி (2-32-4)
தமிழ்ச் சொல்லின் வேர்
சப்த தந்து – ஏழு புரி கயிறு (10-52-4; 10-124-1)
சுவாசன் – நல்லுடை தரித்த (6-51-4; 9-97-50)
பகவான் சிங் என்பவர் வேத கால ஹரப்பன் நாகரீகம் என்ற நூலில் இந்தப்பட்டியலைக் கொடுத்துள்ளார் (Bhagawan Singh- The Vedic Harappans)
Xxx
ஆங்கிலத்திலோ தமிழிலோ சில ரிக் வேத சொற்கள் இருப்பது குறிப்பிடததக்கது .
நீல நிறை உடை அணிந்த பலராமனை நீலாம் பரரதாரி என்றும் மஞ்சள் பட்டாடை தரித்த கிருஷ்ணனை பீதாம்பரதாரி என்றும் வண்ண உடைகளால் அழைத்தோம். சமணர்களின் வெள்ளாடை தரித்த ஸ்வே தாம்பரரையும் உடையின் வர்ணத்தின் அடிப்படையில் அழைக்கிறோம். விநாயகர் துதியில் சுக்லாம்பரதர = வெள்ளாடை தரித்த என்றும் பாடுகிறோம்.
Xxxx
சீவக சிந்தாமணியில் எலி மயிர் ஆடை
சிலப்பதிகாரம் ஊர் காண் கதையில் மதுரை நகர கடைத்தெருக்கள் வருணிக்கப்படுகின்றன . அதில் ஜவுளிக்கடை பற்றிய வருணனையில் மயிரும் என்ற வரிக்கு எலி மயிர் ஆடைRAT HAIR DRESS என்று அடியார்க்கு நல்லார் எழுதியதை முன்னர் ஒரு கட்டுரையில் சொன்னேன். அதற்கான அடிக்குறிப்பில் உ.வே.சாமிநாதையர் சீவக சிந்தாமணியில் 2686 பாடலிலும் உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.
இதோ அந்த பாடல்
செந் நெருப்புணுஞ் செவ்வெலிம் மயிர்
அந்நெருப்பளவாய் பொற்கம்பலம்
மன்னருய்ப்பன மகிழ்ந்து தாங்கினார்
என்னரொப்புமில்லவர்க லெளன்பவே
–சீவக சிந்தாமணி 2686
பொருள்
கண்ணால் காண முடியாத மிக மெல்லிய செந்நிறத் துகில் அணிந்த அல்குலையும் , அழகிய ஒளி வீசும் மணிப் பூண்களையும் உடைய மகளிர் , சிவந்த நெருப்பின் நிறம் போன்ற – எலி மயிரால் செய்த — அந்நெருப்பைப் போலவே குளிருக்கு வெப்பம் தரத்தக்கதென மன்னரால் ஆராய்ந்து அனுப்பப்பட்ட — கம்பளிகளை விரும்பி அணிந்தது கொண்டு, எவரும் ஒப்புவமை கூற இயலாதபடி இருந்தனர்
சிலப்பதிகாரத்தில் ஆடை வகைகளில் மயிர் என்று மட்டும்தான் இருந்தது. திருத்தக்க தேவரோ சிவப்பு நிற எலி மயிர் என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார்!
XXXX
ஆர்ய தரங்கிணி ARYA TARANGINI BY A.KALYANARAMAN என்ற ஆங்கில நூலில் அ.கல்யாணராமன் (1968) மேலும் பல புதிய தகவல்களைத் தருகிறார்.
“இந்திய ஆடைகள் சுமேரியாவிலும் எகிப்திலும் காணாப்படுகின்றன கர்ப்பாச / பருத்தி என்ற சொல், கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு மொழிகளிலும் உள்ளன. பருத்தி என்பது இந்திய தாவரம் என்பதையும் எல்லோரும் ஒப்புக் கொள்கின்றனர். அது பசிபிக் சமுத்திரத் தீவு நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இந்தியாவிலிருந்து சென்றது .
கிரேக்கர்களும் ரோமானியர்களும் எழுதிய நூல்களில் இந்தியர்களின் பூ வேலைப்பாடுமிக்க, ரத்தினம் பதித்த கம்பளி மற்றும் பட்டு ஆடைகளைக் குறிப்பிட்டுள்ளனர்.
பாணினி எழுதிய இலக்கண நூலில் பட்டு (கெளசேய ) கம்பளி (ஒளர்ண), பருத்தி (கர்ப்பாச ), லினன் (ஒளமக ) உடைகள் குறிப்பிடப்படுகின்றன. ARRIAN அரியன் எழுதிய நூலில் இந்தியர்களின் மேலாடை, உள்ளாடை பற்றி குறிப்பிடுகிறார். பாணினியும் ‘ஆப்ரபாதின’ என்ற உள்ளாடை முழங்கால் வரை செல்வதைக் கூறுகிறார். இடுப்பில் ஒரு கச்சை /பெல்ட் மூலம் அது இறுகக் கட்டப்பட்டுள்ளது . மெளரிய கால சிற்பங்களிலும் இதைக் காண்கிறோம்.
பாணினி ‘பிருஹத் ஆச்சாதன’ என்னும் பெரிய போர்வை பற்றிப் பேசுவதால் தையல் கலை பற்றியும் அறிய முடிகிறது . இதற்கு ‘ப்ரவர’ என்று பெயர்.
இது 24 அடிக்கு 12 அடி அகலம் உடையது. ரோமானிய TOGA டோகா போன்றது.யுதிஷ்டிரர் பட்டாபிஷேகத்துக்கு ரிஷிகள் கஞ்சுகம் , தலைப்பாகை அணிந்து வந்ததாக மகா பாரதம் கூறுகிறது
பகவான் சிங் எழுதிய வேதிக் ஹரப்பன் ஆங்கிலப் புஸ்தகம் வருவதற்கு முன்னரே அய்யாசுவாமி கல்யாண ராமனின் ஆர்ய தரங்கிணி அச்சிடப்பட்டது. அவர்தரும் வேத கால ஸஸ்க்ருதச் சொற்களின் பட்டியல் இதோ :
அட்க – மேலங்கி
உபநஹ – காலணி
உஸ்னிஸ – தலைப்பாகை, டர்பன்
தரப்ய – பட்டு ஆடை
த்ராபி – மேலங்கி
நிவி – உள்ளாடை
பரிதன – உடை, துணி
பண்டவ – சாயம் ஏற்றாத துணி
பேசஸ் – எம்ப்ராய்டரி / பூ வேலைப்பாடு மிக்க துணி
வாதபன – காற்றைத் தடுக்கும் துணி
சமுல – கம்பளிச் சட்டை
சமுல என்பதும் கம்பளம் ஆக வாய்ப்பு உண்டு பாய்மரக் கப்பல்களில் பிரமாண்டமான துணிகள், காற்றைத் தடுக்கப் பயன்பட்டிருக்க வேண்டும். இப்படிப்பட்ட கப்பல்கள் கரிகாலன் காலத்தில் இருந்ததாக சங்கப் புலவர்கள் பாடுகின்றனர். (புறம். 66, வெண்ணிக் குயத்தியார்).
எனது ஆராய்ச்சி
ப்ரவர= தமிழில் போர்வை ஆனது
ஆச்சா தன = தமிழில் ஆடை ஆனது ; ஆங்கிலத்தில் ATTIRE அட்டைர் ஆனது
டியூனிக்TUNIC – என்பது தமிழ் துணி- யின் மரூஉ
டோகா TOGA – என்பது தோகை போன்ற ஆடை அல்லது தொங்கல் .
திரைச் சீலை போன்றதையும் தொங்கல் என்போம்
சட்டைSHIRT/SKIRT என்ற தமிழ் ச் சொல் காட்டன் COTTON என்ற சொல்லுடன் தொடர்புடையது.
காட்டன் /பருத்தி/ பஞ்சு அரேபிய மொழித் KATN தொடர்புடையது.
சூசிக என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் தமிழில் ஊசி ஆனது
வாய என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் ஆங்கிலத்தில் WEAVE வீவ் ஆனது நெய் / நெசவு என்ற சொல் எகிப்திய நெசவுத் தெய்வம் NEITH நெய்த் – உடன் தொடர்புடையது.
கம்பளம் /கம்பலம் சீவக சிந்தாமணியில் வருகிறது
படாம் (யானையின் முக படாம் ) = பட்டு என்பன ஒரே மூலத்தில் இருந்து பிறந்த சொற்கள்.
பருத்தி = பட்டு (TTH= TT) என்பதையும் கூட மொழியியல் ரீதியில் தொடர்பு படுத்த முடியும்.
கத்திரி SCISSORS என்ற மயிர் குறைக் கருவி பற்றி சங்க இலக்கியத்தில் படிக்கிறோம். இதே கருவி தையலிலும் பயன்பட்டி கும் என்பதில் ஐயமில்லை . தையல் = TAILOR டெய்லர் என்ற சொற்களில் உள்ள ஒற்றுமையும் ஒப்பு நோக்கத்தக்கது.. சுருங்கச் சொன்னால் தமிழ்- சம்ஸ்க்ருத மூலச் சொற்களே உலக மொழிகளில் காணப்படுகினறன.
‘கண்டம் துண்டம்’ என்பது சம்ஸ்க்ருதம்- பாணினியின் நூலில் கூட உள்ளது. ‘துண்டு’ போடப்பட்ட துணிதான் துண்டு / முண்டு ஆகியதா என்பதையும் ஆராய வேண்டும்.
தந்திர – தறி (10-71-9)
தமிழ், ஸம்ஸ்க்ருதச் சொற்கள் ஒரே மூலத்தில் இருந்து வந்திருக்கலாம்
-சுபம் —
tags- தறி, கத்திரி, கம்பளம், நெசவு, ஆடை, துண்டு, எம்ப்ராய்டரி, நெசவாளர்