குரீர, வடு, திமில் – சொல்  ஆராய்ச்சிக் கட்டுரை -1 (Post 10,806)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,806

Date uploaded in London – –    3 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

குரீர KURIIRA என்ற ரிக் வேத சொல் புதிராக இருந்தது. இந்தப் புதிரை தமிழ் அகராதி விடுவிக்கிறது.வேறு ஒரு சொல்லுக்குப் பொருள் காண்பதற்காக 1935 ஆம் ஆண்டு ஆனந்த விகடன் அகராதியைப் புரட்டிக்கொண்டு இருந்தேன்.அப்போது ரிக் வேத புதிருக்கு விடை கண்டேன்

‘குரீர’ என்பதற்கு கீத் & மக்டொனால்ட் எழுதிய வேத இலக்கிய சொல்லடைவில் VEDIC INDEX by A A Macdonell and A B Keith ‘மணப்பெண்ணின் தலையை அலங்கரிக்கும் ஒரு ஆபரணம்’ என்று ரிக் வேத 10-85-8 , அதர்வண வேத 6-138-3 மந்திரங்களை மேற்கோள் காட்டியுள்ளார்

பின்னர் யஜுர் வேதத்தில் வேத கால பெண் தெய்வமான சினீவாலி(Siniivaali)யை வருணிக்கும் போது ‘சு-குரீர’ என்று வர்ணிக்கப்பட்டதைக் காட்டி இது ஒரு தலை அணி என்கிறார்.கெல்டனர் (Geldner) என்பவரோ இதன் பொருள் கொம்பு என்பதாகும், ஆனால் இச் சொல் பயன்படுத்தப்பட்ட இடங்களில் ‘கொம்பு’ என்தற்குத் தேவையே இல்லை என்கிறார்.

பகவான் சிங் எழுதிய வேத கால ஹரப்பன் மக்கள் The Vedic Harappans by Bhagawan Singh என்ற ஆங்கிலப் புஸ்தகத்தில் குரீர என்பது கொம்பு போன்ற தலை ஆபரணம் என்றும் ஹரப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட பெண் தெய்வத்தின் தலையில் கூட இது காணப்படுகிறது என்றும் எழுதியுள்ளார்.

இதற்கு சங்க இலக்கிய நூலான கலித்தொகையில் விடை இருக்கிறது மருதக் கலியில் ‘குரற்கு’ என்பதற்கு ‘க ந்தலுக்கு’ என்று பொருள் கூறப்பட்டுள்ளது. அதுவும் முல்லைப்பூக்கள்  கூந்தலை அலங்கரிக்கட்டும் என்ற பொருளில் எழுதப்பட்டுள்ளது

ரிக்வேத கல்யாண மந்திரம் உலகப்பிரசித்தி பெற்றது. இன்றும் பிராமணர் மற்றும் உயர்ஜாதி  வடக்கத்தியர் வீட்டுக் கல்யாணங்களில் இந்த மந்திரத்தைக் கேட்கிறோம். அதில் வரும் பொருள்

ரிக்வேதம் 10-85-8

“மணமகள் ஏறிய தேருக்கு துதிப்பாடல்கள் தேரின் குறுக்குச் சட்டங்களாக இருந்தன; குரீர சந்தம் தேரை அலங்கரித்தது. அஸ்வினி தேவர்கள், மணமகனுடைய தோழர்களாக இருந்தனர்  அக்கினி தேவன் திருமண ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கி நடந்து வந்தான்”

4000 முதல் 6000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த வேத கால இந்துவின் திருமண ஊர்வலத்தின் அற்புதமான வருணனை இது.

கலித்தொகையிலும் கூந்தல் அலங்காரத்துக்கு முல்லைப்பூக்கள் பயன்படட்டும் என்ற வரியில் குரல் வருகிறது மருதக் கலி (72-20) பாடலிலும் ‘குரல் கூந்தல்’ என்ற வரி இருக்கிறது. கூந்தலை அள்ளி முடிந்து அலங்க   ரம் செய்யும் பொருள் தொனிக்கிறது

மணிமேகலை முதலிய இன்னும் பல பாடல்களிலுமிதைக் காணலாம்

மணிமேகலையில் குரல் தலைக் கூந்தல் என்ற சொற்றொடர் வருகிறது .

அகநானூறு நாலாவது  (4 & 376) பாட்டில் குரங்கு உளை என்பது குதிரையின் பிடரி  மயிர் என்று வருகிறது

xxxx

அகராதி கொடுக்கும் பொருள்

குரங்குளை – சுருண்ட பிடரி மயிர்  (Mane)

குரப்பம் – குதிரை மயிர்

குரலம் – நெற்றியில் அசையும் சுரி மயிர்

இதிலிருந்து பெறப்படும் பொதுவான பொருள் —

இது தலை முடி பற்றியது.

நெற்றியில் அழகாகப் புரளும் பெண்ணின் முடி அல்லது கூந்தலை வாரி முடிந்து அலங்கரித்தல்

xxx

ஆகவே ஆராய்ச்சி முடிவு,

ரிக் வேத சொல் குரீர சங்க இலக்கியத்தில் உள்ளது.

அது முடி அலங்காரம் பற்றியது.

ரிக் வேத கல்யாண மந்திரத்தில் வரும் மணப் பெண்ணின் தேரிலும் இப்படி அலங்காரக்  குஞ்சம் தேரின் முன்னால் தொங்கியது

குரீர=  தேரின் முன்பக்க குஞ்சம் = மணப்பெண்ணின் முன் பக்க அலங்கார முடி அல்லது  ஆபரணம் (சுட்டி )= இதுவேத கால சினீவாலி பெண் தெய்வத்துக்கும் இருந்தது.

கட்டுரையின் அடுத்த பகுதியில் மேலும் சில சுவையான சொற்களைக் காண்போம்

To be continued……………………………..

tags-  குரீர, முடி அலங்காரம், தலை முடி

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: