Post No. 10,809
Date uploaded in London – – 4 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
குரீர என்ற ரிக் வேத சொல்லின் பொருளை நேற்று கண்டோம். இன்று ‘வடு மற்றும் ‘திமில்’ ஆகிய சொற்களின் அர்த்தத்தை ஆராய்வோம்
‘வடு’ என்றால் உடம்பில் ஏற்படும் தழும்பு அல்லது காயம் என்ற பொருளே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. ஆனால் ஐங்குறு நூறு என்னும் சங்க இலக்கிய நூலில் இரண்டு இடங்களில் வடு என்பதற்கு சிறுவன், பிரம்மச்சாரி என்ற பொருள் வருகிறது. அக நானுற்றில் முலையின் முகடு என்பதற்கும் ‘வடு’ பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆனந்த விகடன் தமிழ் அகராதி (1935) தரும் பொருள்:-
இளங் காய், பிரம்மச்சாரி, வாலிபன் , வண்டு முதலிய பொருள்களைத் தருகிறது
பிராமணர்கள் பூணுல் கல்யாண பத்திரிகை அடிக்கையில் இஷ்ட மித்ர பந்துக்களுடன் வந்திருந்து வடுக்களை ஆசீர்வதிக்கும்படி வேண்டுகிறோம் என்று அழைப்பார்கள்.
இது படு என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொல்லில் இருந்து வந்த சொல். சம்ஸ்க்ருத அகராதியில் இந்தப் பொருள் வருகிறது.
மோனியர் வில்லியம்ஸ் அகராதி ‘இளைஞன், பையன்’ (Youngster, Lad) என்பதற்கு ‘வடு’ என்றே கொடுத்திருக்கிறது ஆனால் ‘BADU படு’ என்ற சொல்லும் பயன்படுத்தப்படுவதால் ப= வ மாற்றத்தையும் காண்கிறோம்
இது சங்க இலக்கியத்திலும் இதே பொருளில் வருவது சங்க நூலில் மேலும் ஒரு ஸம்ஸ்க்ருத்ச் சொல் இருப்பதைக் காட்டுகிறது. பலரும் இதைப் பட்டியலிடத் தவறிவிட்டனர்.
வடு – ஐங்குறு நூறு பாடல் 14, 213
பிற்காலத்தில் ‘மா’வடு’ என்னும் சொல்லுடன் இது இணைந்து வருகிறது- இளம் பிஞ்சு .
‘மாவடு வகிரன்ன கண்ணி பங்கா’ என்று உமா தேவியின் கண்களை வருணிக்கும் பாடல் திருவாசகத்தில் உளது. தேவாரப்பாடல்களிலும் இதைக் காணலாம்
அப்பர் பாடல்
ஏவடு சிலையி னானே புரமவை யெரிசெய் தானே
மாவடு வகிர்கொள் கண்ணாண் மலைமகள் பாகத் தானே
ஆவடு துறையு ளானே யைவரா லாட்டப் பட்டேன்
கோவடு குற்றந் தீராய் கோடிகா வுடைய கோவே.
பொழிப்புரை :
அம்பை இணைத்த வில்லைக் கொண்டு மும்மதில்களையும் தீக்கு இரையாக்கியவனே ! மாவடுவின் பிளப்பைப் போன்ற கண்களை உடைய பார்வதி பாகனே ! ஆவடுதுறையில் உறைபவனே ! கோடிகா உடைய தலைவனே ! ஐம்பொறிகளாலும் யான் அவை விரும்பியவாறு செயற்படுத்தப்பட்டுள்ளேன் . பசுக்கொலைக்கு ஒப்பாகிய என் குற்றங்களைப் போக்குவாயாக .
தமிழில் பிற்காலத்தில் மட்டும் ‘வடு’ அதிகம் புழங்குவதால் இது ஸம்ஸ்க்ருதத்திலிருந்து கடன் வாங்கப்பட்ட சொல் என்பதைக் உறுதி செய்கிறது
XXXX
AKKADIAN LINK
இதில் வியப்பான விஷயம் பதுலு / படுலு BATUULU OR BADUULU என்றால் அக்கடியன் AKKADIAN LANGUAGE மொழியிலும் இளைஞன் என்பதாகும்
படுசு BATUSSU என்றால் இளம் நங்கை. YOUNG WOMAN
மராத்தி மொழியில் படகி என்றால் வேலைக்காரி SERVANT MAID
இதிலிருந்து பெரிய உண்மைகள் வெளிப்படுகின்றன
ப= வ B= V மாற்றம் சங்க இலக்கியம் முழுதும் உளது (Eg. தபஸ் =தவம் )
அஸ்வ- அஸ்ப என்ற அவஸ்தன் (AVESATAN) மொழியில் இருப்பதையும் முன் ஒரு கட்டுரையில் கண்டோம் .
இப்பொழுது அதற்கு முந்தைய அக்கடியன் (AKKADIAN) மொழியிலும் காணுகிறோம்.
ஆக ப= வ மாற்றம் ஈரான் முதல் கன்யாகுமரி வரை 3000 ஆண்டுகளுக்கு முன்னரே உளது. யார் இதற்கான இலக்கண புஸ்தகத்தை உருவாக்கினார்?
யாரும் உருவாக்க வில்லை. இது இயற்கையானது .
கால்டுவெல்களையும் , பர்ரோக்களையும், எமனோக்களையும் (CALDWELL, BURROW, EMENAU ) புரட்டிப் புரட்டி அடிக்கும் உண்மை.
பதுலு என்பதன் பெண்பால் சொல் (VATHUVAI ) ‘வதுவை’ (மணப்பெண்) ஆக வந்திருக்கலாம். இந்த ரிக் வேத சொல்!! சங்க இலக்கியம் முழுதும் விரவிக்கிடக்கிறது .
இலங்கையில் பொடியன் YOUNGSTER என்பர் . அதுவும் படுலு , வடு என்ற மூலத்திலிருந்து வந்திருக்கலாம்
Xxx
SUMERIAN LINK
திமில் என்பது மிகவும் ஆராய்ச்சிக்குரிய சொல்.
அகராதியில் இதன் பொருள்-
திமி – சமுத்திரம் , திமிங்கிலம் WHALE
திமிங்கிலம் – யானையை விழுங்கக்கூடிய மீன் BLUE WHALE
திமிதிமிங்கிலம் – திமிங்கிலத்தை விழுங்கும் மீன் KILLER WHALE
திமில் – தோணி, மரக்கலம், படகு, கப்பல் BOAT, SHIP
திமிலர்- நெய்தல் நிலக்காரர் FISHERMEN
திமிலை – கடல் மீன் வகை, திமிங்கிலம்
எல்லா சொற்களும் கடல், படகு, திமிங்கிலம் தொடர்பானவை
xxx
சங்க இலக்கிய நூல்களில் அகநானூறு , புறநானூறு, நற்றிணை உள்பட பல நூல்களில் முப்பதுக்கும் மேலான இடங்களில் வருகிறது . சில இடங்கள்-
புறம் – 24, 60, 303
அகம் .10, 60, 65, 70, 190, 210, 240, 260, 330, 340, 350
XXX
SUMERIAN CONNECTION
இதற்கெல்லாம் மூலம் 2700 ஆண்டுகளுக்கு முன் பாணினி எழுதிய அஷ்டாத்யாயீ என்னும் இலக்கண நூலில் உளது 6-3-70.
அதற்கு சுமார் 300 ஆண்டுகளுக்குப் பின்னர் எழுந்த வார்த்திகாவில் கிலகில , திமிங்கில விளக்கங்கள் உள.
இதில் வியப்பான விஷயம் சுமேரிய மொழி TIAMATA தைமத- வுடன் உள்ள தொடர்பு ஆகும். அது அதர்வண வேதத்தில் TAIMAATA உள்ள சொல் !!
இதோ அதன் விளக்கம் :—–
தொடரும்……
அக்கடியன், சுமேரியன், தமிழ், சம்ஸ்க்ருதம், வடு , மாவடு, திமில், திமிங்கிலம்