Post No. 10,812
Date uploaded in London – – 5 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
கட்டுரையின் மூன்றாம் பகுதி இது
திமில் THIMIL (படகு, கப்பல், மீன், தோணி ), திமிலர்/மீனவர் , திமி-ங்கிலம் THIMIN-GILA, பற்றி நேற்று கண்டோம் .
இத்துடன் தொடர்புடைய சொல் தியாமத TIAMATA என்னும் சுமேரிய தெய்வம் அல்லது பிராணி.
தைமாத TAIMAATA என்னும் அதர்வண வேதச் சொல் என்றும் கண்டோம்.
தை மாத ஒரு பாம்பு என்று அதர்வண வேதம் 5-13-6 கூறுகிறது :
“வில்லின் வில் நாணைப் போல ,எப்போதும் வெற்றி பெறும் கரும்பாம்பு தைமாதன் , பழுப்பு நிற அப்போதகன் ஆகியோரின் கோபத்தை/ விஷத்தை நான் ரதங்களைப் போல விலக்குகிறேன்” — என்பது மந்திரத்தின் பொருள் ஆகும். ரதத்தைப் போன்ற வேகத்தில் என்ற இதே உவமை, ரிக் வேதம் 10-10-4 லும் வருகிறது.
ஆனால் தைமத மட்டுமின்றி இதற்கு அடுத்து வரும் அலிகி , விளிகி போன்ற பாம்புகளின் பெயர்களும் சுமேரிய மொழி புராணக் கதைகளில் உள்ளது. யார் எங்கிருந்து எப்போது கடன் வாங்கினார் என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம். மேலும் கட்டு விரியன் என்றும், நல்ல பாம்பு என்றும், கொம்பு ஏறி மூர்க்கன் என்றும், நாம் பாம்புகளுக்குப் பெயர் இடுகிறோம். இவற்றி ல் சில பாம்பு என்று சொன்னால்தான் நமக்குத் தெரியும் ஏனெனில் அதில் பாம் பு என்ற சொல்லே இல்லை. ‘நல்ல’, ‘கட்டு’, ‘கொம்பு ஏறி’ போன்ற சொற்களை நாம் வேறு இடங்களிலும் வேறு பொருள்களிலும் உபயோகிக்கிறோம். அப்படிப் பார்த்தால் அபோதகன் என்பதற்கு ஆப + உதக (தண்ணீர் +தண்ணீர் ) என்றும் பொருள் சொல்லலாம். மற்ற பாம்புகளின் பெயர்களில் ஸம்ஸ்க்ருத சொல் என்பதற்கு மூலமும், வேரும் இல்லை. ஆகையால் சுமேரியாவிலிருந்து கடன் வாங்கி இருக்கலாம்.
தியமத என்ற சொல் சுமேரியாவில் , கடல் அரக்கி என்ற பொருளில் வருகிறது. இதை தியா மத என்றும் உச்சரிப்பர். அப்படிப் பார்த்தால் சம்ஸ்க்ருதத்தில் தேவ மாதா என்றும் பொருள் சொல்லலாம் அதைவிட முக்கியமானது சுமேரிய கதை ஆகும். இது பாபிலோனிய பிரபஞ்சத் தோற்றக் கதையிலிருந்து வந்த அக்கடியன் மொழிச் சொல் என்று பிரிட்டிஷ் நூலகம் வெளியிட்ட நூல் விளம்புகிறது. தியாமத் என்றால் கடல். நாம் தமிழில் பார்த்த திமில் – உடன் தொடர்புடையது .
ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் கந்தர்வர்கள் , அசுரர்கள் ஆகியோர் முற்காலத்தில் சிந்து வெளி நாகரிக பூமியில் இருந்தவர்கள் என்று புஸ்தகம் எழுதிய மாலதி ஷிங்ட்டே என்பவர் அக்கடியர்கள் சொல்லும் விஷயம் ரிக் வேதம் 10-10-4ல் உள்ள கந்தர்வர்- மனைவி பற்றிய கதை என்றும் சொல்கிறார்.
கதையைக் காண்போம்
“அந்தக் காலத்தில் வானம் என்பதற்கு பெயரே இல்லை; பூமி என்ற பகுதிக்கும் யாரும் பெயர் சூட்டாத காலம் அது” – என்று பிரபஞ்சம் பற்றிய கவிதை துவங்குகிறது.
இது ரிக் வேத பிரபஞ்ச தோற்றக் கவிதைகளை ஒத்திருக்கிறது
கதை மேலும் சொல்கிறது ,
“தியாமத் என்னும் உப்பு நீர்க்கடலுடன், அப்ஸு என்ற தூய நீர்ப் பரப்பும் மட்டுமே இருந்தன. (இதில் அப்ஸு என்ற சொல் ஆப / தண்ணீர் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் ஆகும்). தினமும் பிராமணர்கள் மூன்று வேளையிலும் இந்த ‘ஆப என்ற தண்ணீர்’ மந்திரத்தைச் சொல்லித்தான் சந்தியா வந்தனம் செய்கின்றனர். வீட்டைச் சுத்தப்படுத்தும், தீட்டுகளை போக்கும் புண்யாஹ வசன மந்திரத்திலும் இந்த ‘ஆபோ’ஹிஷ்டா – தண்ணீர் மந்திரம்தான் முக்கியம்.
முதலில் அதர்வண வேத மந்திரத்தில் வந்த இந்த ‘ஆப உதக = தண்ணீர் தண்ணீர்’ என்பதை அப்போதகன் என்ற பாம்பு என்று எழுதிவிட்டு இது இனம் கண்டறியப்படாத புதுவகைப் பாம்பு என்றும் கிரிப்பித் (R T Griffith ) உளறியுள்ளார்.
சுமேரியக் கதையிலும் ‘அப்ஸு = சுத்த நீர்’ Abzu என்ற பொருளில்தான் வருகிறது.
இதற்குப் பின்னர் வரும் கதையும் இந்து மத புராணத்தை ஒட்டியே வருகிறது.
தியாமத் பெண் என்றும் அப்ஸு ஆண் என்றும் இரண்டு கடல்களும் கலந்து அரக்கர்களையும் தெய்வங்களையும் உண்டாக்கியதாகவும் அவற்றி ன் சப்தம் பொறுக்காதபடி அவர்களைக் கொல்ல நினைத்தனர் என்றும் மார்டுக் Marduk என்னும் தெய்வம் தைமத / தியாமதவின் தலையைப் பிளந்து ஒரு பகுதியை பூமியாகவும், மறு பகுதியை வானமாகவும் செய்ததாகவும் கதை நீளு கிறது . அந்த பெண்ணின் முலைகள் மலைகளாக மாறின; கண்களில் இருந்து டைக்ரிஸ், யூப்ரதீடீ ஸ் நதிகள் ஆறாக ஓடின என்றெல்லாம் கதை போகிறது. (2 கடல்களும் கலந்து அ ரக்கர்களை உருவாக்கியது, கடல் கடைந்து அமிர்தம் எடுத்த புராணக் கதையை நினைவுபடுத்துகிறது. அதிலும் அரக்கர்- தேவர் பணியும் 14 பேர் தோன்றிய கதையும் வருகிறது )
இந்துக்களும் தேவியின் உடல் பகுதி விழுந்த பகுதிகள் சக்தி பீட க்ஷேத்திரங்கள் ஆயின,; சிவன் தலையிலிருந்து கங்கை வந்தது என்றெல்லாம் சொல்கிறோம்.
ஆக தண்ணீர் என்பதிலும், கடல் என்பதிலும் தியாமத் = தை மாத சொற்கள் பொருந்துகின்றன ; தமிழ்ச் சொல்லான திமில், திமிலை (ஒரு வகை மீன்) ஆகியனவும் இதற்கு நெருங்கி வருகிறது . 2400 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினி இலக்கணத்துக்கு குறிப்பு எழுதிய வரருசி திமிங்கிலம், திமிங்கிலத்தை உண்ணும் திமிங்கிலகிலம் பற்றியெல்லாம் பேசுகிறார். கி.மு. முதல் நூற்றாண்டில் ரகு வம்ச காவியம் எழுதிய காளிதாசனோ திமிங்கிலம் மூச்சு விடும்போது எழும் தண்ணீர் கம்பம் பற்றிப் பாடுகிறார். வால் மீகி ராமாயணமோ அனுமன் சந்தித்த மூன்று கடல் அரக்கிகள் பற்றிப் பேசுகிறது..
பாமர மக்களுக்கு பெரிய பூகோள/புவிஇயல், வான சாஸ்திர/ விண்வெளி விஷயங்கள் புரியாது என்பதற்காக இப்படிச் சொன்ன கதைகள் காலப் போக்கில் பொருள் விளங்காது போய் ‘ஆப உதக’ என்பது அப்போதன் என்ற இனம் தெரியாத பாம்பு என்று வந்து விடுகிறது. அதாவது அதர்வண வேதப் புலவர் பாம்பு மந்திரத்தில் இதை உபயோகித்தாலும் அது சிலேடைப் பொருளில் வருவது சுமேரிய புராணங்களை படித்தவர்களுக்கே தெரியும். ஹாம்ப்டன் பிரிட்ஜ் Hampton Bridge in Chennai என்னும் பாலம் சென்னையில் அம்பட்டன் வாராவதி ஆன கதைதான் !
திமில் = திமிங்கில = தியமத =தை மாத தொடர்புகளைக் கண்டு உணர்க.
இது ஒரு சொல் மட்டுமல்ல. டாக்டர் வட்டல் (Dr Waddell) என்பவர் சுமார் 100 சுமேரிய சொற்கள், சம்ஸ்க்ருதச் சொற்கள் என்று பட்டியலிட்டுள்ளார்..
–SUBHAM–
tags- தியா மத , தைமத , சுமேரிய, அக்கடிய , சம்ஸ்க்ருத, தமிழ், திமில் , திமிங்கிலம்