Post No. 10,815
Date uploaded in London – – 6 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
நாரத்தங்காய் = நாரங்க= ஆரஞ்சு ???
Nāraṅga (नारङ्ग).—m. An orange tree, [Suśruta] 1, 209, 6.
ஆரஞ்சுப் பழம் தமிழ் சொல் என்றும் உலகம் முழுதும் இதை அராபியர்கள் பரப்பினர் என்றும் இதுவரை கருதப்பட்டது. அது தவறு என்னும் வகையில் விஸ்டம் லைப்ரரி wisdomlibrary.com குறிப்புகள் இருக்கின்றன. அதன்படி 2600 ஆண்டுகளுக்கு முன்னரே, அதாவது தமிழ் எழுத்துக்கள், தமிழ் இலக்கியம் துவங்குவதற்கு முன்னரே அது சம்ஸ்க்ருதத்தில் உள்ளது புலப்படுகிறது
டாக்டர் ஆர். பி. சேதுப்பிள்ளை ‘சொற்களும் அதன் சிறப்பும் என்ற WORDS AND THEIR SIGNIFICANCE புஸ்தகத்தை சென்னை பல்கலைக்கழக மூலம் 1952-ல் வெளியிட்டார் அதில் இது தமிழ் சொல் என்று காட்டுகிறார்.
அராபியர்கள் கேரளத்துடன் வணிகம் செய்த காலத்தில் இதை வெளிநாடுகளுக்கு கொண்டு சென்றதாகவும் நாரங்க என்ற சொல் பல மொழிகளில் இருப்பதாகவும் காட்டுகிறார். ஆரஞ்சுப் பழம், எலுமிச்சை, நாரத்தங்காய் என்று பல வகைப் பழங்களாக கிடைக்கும், புளிப்புச் சுவை பழங்கள், அனைத்தும் தாவர இயல் ரீதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை .
சம்ஸ்க்ருதத்தில்- நாரங்க, நாகரங்க
மலையாளத்தில் நாரன்ன
பாரசீக மொழி – நாரங்
அராபிய மொழி- நாரஞ்
இத்தாலிய மொழி- நாரன்சியா
போர்ச்சுகீய மொழி – லாரஞ்சா LARANJA
ஆங்கிலத்தில் – ஆரஞ்சு ORANGE
பிரஞ்சு மொழி- ஆரஞ்சு
பாரசீக மொழி அல்லது அராபிய மொழி மூலமாக இது இத்தாலிய மொழிக்குச் சென்று ஐரோப்பாவில் பரவியதாக டாக்டர் சேதுப்பிள்ளை எழுதியுள்ளார்.
நாரும் சுளையும் உள்ள பழம் நாரத்தை என்று சொல்லலாம். ஏனெனில் சம்ஸ்க்ருத சொற்பிறப்பியல் மூலம் இதற்கு விடை காண முடியவில்லை. அதாவது மூலம் = வேர்ச்சொல் = தாது ROOT இல்லை.
ஆனால் மலையாள மொழி அகராதி தயாரித்த டாக்டர் குண்டெர்ட் (GUNDERT’S MALAYALAM DICTIONARY ) இது திராவிட மொழிச் சொல்லாக இருக்கவேண்டும்; ஏனெனில் நாரத்த என்பது நாற்றம் = மணம் (HOLDING FRAGRANCE) மிக்க பழம் என்ற பொருளுடைத்து என்கிறார்.
Nāraṅga (नारङ्ग).—m. An orange tree, [Suśruta] 1, 209, 6.
CITRUS AURANTIUM (Botanical Term)
ஆனால் எல்லா ஸம்ஸ்க்ருத்ச் சொற்களுக்கும் விளக்கம் தரும் விஸ்டம் லைப்ரரி வெப்சைட் இது சுஸ்ருதர் எழுதிய சம்ஸ்க்ருத மொழி நூலில் இருப்பதாக குறிப்பும் தருகிறது. சுஸ்ருதர் உலகில் முதல் முதலில் மருத்துவ நூல் எழுதியவர். அவரது காலம் கிமு. ஆறாம் நூற் றாண்டு ; ஏறத்தாழ புத்தர் காலம்.
ஆனால் எந்தெந்த மொழியில் இந்தச் சொல் வந்தது என்று கால வரிசைப்படுத்திப் பார்க்க வேண்டும். சங்க இலக்கியத்தில் நாரத்தை, நார்த்தங்காய் என்ற பெயரில் இது காணப்படவில்லை. ஆரஞ்சு என்பது ஆங்கில மொழி வழக்கு என்பதை அறிவோம் ..
மொழியியல் ஆராய்ச்சி செய்பவர்களுக்கு சுவையான விஷயம் உளது. ‘நார’ என்பதில் ‘நா’ என்பது ஏன் ‘ஆ’ ஆனது ? போர்ச்சுகீசிய மொழியில் அது எப்படி ‘லா’ ஆக மாறியது? என்ன காரணம் ? ஒரு எழுத்து மாறியவுடன் விளக்கம் சொல்லி ஆய்வுக்கட்டுரை எழுதும் மொழி இயல் ஆராய்சசியாளர்களின் முழி பிதுங்க வைக்கும் மாற்றங்கள் இவை.
ஒரே நாய் குரைப்பதை பத்து ஐரோப்பிய மொழிகள் வெவ்வேறு விதமாக எழுதுகின்றனர் . தமிழில் நாய் ‘லொள் லொள்’ என்று குரைத்ததாக கதைகளில் படிக்கிறோம். ஐரோப்பிய மொழிகளில் இது வினோதமான முறையில் மாறுகிறது. சொல்லப்போனால் நாய்கள், மொழி இயல் ஆராய்ச் சியாளர்களைப் பார்த்து கேலி செய்கின்றன .
–subham—
TAGS– ஆரஞ்சு , நாரங்க, தமிழ் சொல், ஆர். பி. சேதுப்பிள்ளை, நாரத்தங்காய்