Post No. 10,822
Date uploaded in London – – 8 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
Palli = ville = village, town
பள்ளி = வில் ; வில்லி ; வில்லேஜ்
‘பள்ளி’ சொல் ஆராய்ச்சியைத் தொடர்வோம் :-
வ= ப மாற்றங்களுக்கு நூற்றுக்கணக்கான உதாரணங்கள் கொடுத்துள்ளேன் (குறள் , புறநானூறு – தபஸ்= தவம்; அஸ்வ/ ரிக் வேதம் = அஸ்ப /அவஸ்தன் மொழி.
தமிழ் ‘பள்ளி’ உலகம் முழுதும் வில்லி (வ=ப) என்ற பெயரில் இன்றும் உள்ளது. திரிச்சிராப்பள்ளி, பெங்களூர் திப்பிக்கொண்டன ஹல்லி மட்டும் அல்ல. அமெரிக்காவிலும் உண்டு; பிரான்சிலும் உண்டு
Ville
From Wikipedia, the free encyclopedia
This article is about the French word and associated English suffix. For other uses, see ville
Ville (French pronunciation: [vil]) is the French word nowadays meaning “city” or “town“, but its meaning in the Middle Ages was “farm” (from Gallo-Romance VILLA < Latin villa rustica) and then “village”. The derivative suffix -ville is commonly used in names of cities, towns and villages, particularly throughout France, Canada and the United States.
Notable -ville cities in the United States
- Amityville, New York.
- Argusville, North Dakota.
- Asheville, North Carolina.
- Barbourville, Kentucky.
- Barhamsville, Virginia.
- Beattyville, Kentucky.
- Belleville, Illinois.
- Bennettsville, South Carolina.
சங்க இலக்கியத்தில் பள்ளி
பெரும்பாலும் படுக்கை, துயில் கொள்ளுதல் என்ற பொருளிலேயே வருகிறது. இன்றும் சயன நிலையிலுள்ள பெருமாள் கோவில்களில் பள்ளிகொண்ட பெருமாள் என்ற தூய சங்க காலச் சொல் பயன்படுகிறது.
இவற்றில் சில குறிப்புகளை மட்டும் காண்போம்
பள்ளி – தொல் 1-100, 1-102- இடம் என்ற பொருளில் வருகிறது
நற் .98, 386, இடம், வளை
குறுந் .46, 328 இடம்
ஐங்கு . 63 துயிலும்/ படுக்கும்,
அகம்.93/ படுக்கை, 197/ படுத்துக்கிடக்கும்
புறம் 33/ சாலை ROAD, 246/ படுக்கை, 375/ படுக்கை BED
குறள் -840 படுக்கை PATUKKAI/ BED
பள்ளி கொள்ளும் – நற்றிணை 195 படுத்துக்கிடக்கும்
படுத்த நிலையில் இறைவன் காட்சி தரும், பெருமாள் கோவில்களில் , பள்ளிகொண்ட பெருமாள் என்று சொல்கிறோம்.
பள்ளிப் பாயல் – சிறு.46, புறம் 245 படுக்கை
பள்ளி புக்கது -கலி 121
பள்ளியறை – சிலப். 24-10
பள்ளி யானை – நற் .253, குறுந் 142, 359, அகம்-302 படுத்து உறங்கும் யானை
XXX
கீழ்கண்ட பத்துப்பாட்டு நூல்களில் இடம், இடைச் சேரி, துயில், படுக்கை என்ற பொருளில் வருகிநிறது
பள்ளி கொள்ளான் – நெடு.186 உறங்காத
பெரும் .89, 373/ பாம்பு அணை பள்ளி அமர்ந்தோன் = காஞ்சியில் திருவெஃகாவில் சேஷ சயனத்தில் அமர்ந்த பெருமாள்
முல்லை. 64, 75
மதுரைக் . 169, 310, 467, 474, 623
நெடு . 48, 61, 105
மலைபடு.300, 419, 451
சிலப்பதிகாரம், மணிமேகலையில் சுமார் 30 இடங்கள்
Xxxx
இப்பொழுது விஸ்டம் லைப்ரரி இணைய தளத்துடன் ஒப்பிட்டால் அவை ஸம்ஸ்க்ருதத்திலும் ஏறத்தாழ இதே பொருளில் வருவது தெரிகிறது. ஒரே ஒரு குறை; எது முதல், எது பிந்தியது என்பதைக் காண இந்த சொற்களை கால வரிசைப்படுத்த வேண்டும் ;அதற்கு நீண்ட ஆராய்ச்சி தேவை..
Sanskrit dictionary
https://www.wisdomlib.org/definition/palli
Palli (पल्लि) or Pallī (पल्ली).—f.
1) A small village; पल्लीघोषान् समृद्धांश्च बहुगोकुलसंकुलान् (pallīghoṣān samṛddhāṃśca bahugokulasaṃkulān) (apaśyat) Mb.12.325.2; also a settlement of wild tribes.
2) A hut.
3) A house, station.
4) A city or town (at the end of names of towns); as त्रिशिर- पल्ली (triśira- pallī) (Trichinopoly).
குடிசை, ஊர், இடம்
5) A house-lizard. பல்லி
6) A creeping-plant.
கொடி வகைத் தாவரம்; இதை வள்ளி என்றும் கூறுவர் ; ப= வ மாற்றத்துக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு
Derivable forms: palliḥ (पल्लिः).
Source: Cologne Digital Sanskrit Dictionaries: Shabda-Sagara Sanskrit-English Dictionary
Palli (पल्लि).—f.
(-lliḥ) 1. A small village. 2. Any village. 3. A house. 4. A number of houses. 5. Any place or station. 6. A house-lizard: see palla.
Palli can also be spelled as Pallī (पल्ली).
Source: Cologne Digital Sanskrit Dictionaries: Cappeller Sanskrit-English Dictionary
Palli (पल्लि).—[feminine] a small village, [especially] a settlement of wild tribes.
சிற்றூர் ; பழங்குடி மக்களின் உறைவிடம்
Source: Cologne Digital Sanskrit Dictionaries: Monier-Williams Sanskrit-English Dictionary
1) Pallī (पल्ली):—[from palla > pall] a f. See below.
2) Palli (पल्लि):—[from pall] a f. a small village, ([especially]) a settlement of wild tribes, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]
3) [v.s. …] a hut, house, [ib.]
4) Pallī (पल्ली):—[from pall] b f. a small village etc. (= palli), [Kathāsaritsāgara]
5) [v.s. …] a hut, house, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]
6) [v.s. …] a city ([especially] ifc., in Name of towns e.g. triśira-p, = Trichinopoly)
ஊர்ப் பெயர் ; உ.ம். திருச்சிராப்பள்ளி
7) [v.s. …] a [particular] measure of grain, [Kātyāyana-śrauta-sūtra [Scholiast or Commentator]]
தானிய எடை அளவு
8) [v.s. …] a small house-lizard, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]
9) Palli (पल्लि):—b pallī See under √pall.
Source: Cologne Digital Sanskrit Dictionaries: Yates Sanskrit-English Dictionary
Palli (पल्लि):—(lliḥ) 2. f. A small village; a house; a place; a house lizard.
Source: DDSA: Paia-sadda-mahannavo; a comprehensive Prakrit Hindi dictionary (S)
Palli (पल्लि) in the Sanskrit language is related to the Prakrit word: Palli.
மலை இடுக்குகளில் மிருகங்கள் தங்கும் இடத்திற்கும் பள்ளி (DEN, ROCK SHELTERS) பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை சமணர் தங்கிய மலைக் குடை வரைப் பகுதிகளுடன் ஒப்பிடலாம். சுருக்கமாகச் சொல்லின் வசிப்பிடம் என்பதே பள்ளி (PLACE). பின்னர் படுக்கும் இடத்துக்கும் படுக்கைக்கும் (BED, BED ROOM) பெரும்பாலும் பயன்பட்டது. ஸ்கூல்/பள்ளிக்கூடம் என்பது மிகவும் பிற்காலத்தியது!!!
-SUBHAM-
TAGS– பள்ளி, இடம், படுக்கை, துயில், சங்க இலக்கியம், விஸ்டம் இணைய தளம், ville, village, வில், வில்லி , ஹல்லி