Post No. 10,828
Date uploaded in London – – 10 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
திரைச் சீலையில் வரும் ‘சீலை’, பெண்கள் அணியும் ‘சேலை’ தமிழ்ச் சொற்கள் அல்ல. அவை ஸம்ஸ்க்ருதச் சொற்கள்; அதுமட்டுமல்ல. மொழியியல் வல்லுநர்கள் தலையில், குட்டு வைக்கும் சொற்கள். ஆரியர்கள், இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன்னர் ‘ட , டா , டி’ என்பதை பயன்படுத்தியதாகவும் சிந்து, சரஸ்வதி நதிக்கரைக்குள் நுழைந்து அங்குள்ள மக்களுடன் கலந்தவுடன் ‘ல, ள , லா’ என்று மிருதுவாகப் பேசியதாகவும் சில அசட்டுப் பிசட்டுகள், அரைவேக்காடுகள் மொழியியல் கட்டுரைகள் எழுதி இருந்தன. அந்த ‘முக்காடு’களுக்கு நல்ல அடி கொடுப்பது ‘ஸாரி’, ‘சாடி’ , ‘சேலா’, ‘சேலை’ என்ற சொற்களாகும்.
ரமலான் RAMALAN – ரமதான் RAMADAN – ரம்ஜான் RAMJAN/RAMZAN
உத்கல – ஒரிஸ்ஸா- ஒடிசா UTKALA- ORISSA- ODISAH
சோழ CHOZA – சோடCODA- கோர (மண்டல COROMANDAL COAST)
ஸாரி -சாடி -சேலா – சீரை -சேலை SAREE/SARI- SELA- SADI
கருடன் – கலுழன் (ஆழ்வார் பாடல், கம்ப ராமாயணம்)
நாடி – நாழி-நார் -(நரம்பு) NADI- NAZI- NAR- NERVE- NARAMBU
திகடச் சக்கர = திகழ் +தசக்கர (கந்தபுராண முதல் பாடலும் இலக்கண சர்ச்சையும்)
ராஜ – ராயல் – ரெக்னல் – ரீகல் – ராவ் – ராயர் RAJA-ROAYAL -REGAL- REGNAL-RAO-RAW
மேற்கூறிய மாற்றங்களில் மிகவும் முக்கியமனது சோழ மன்னர்கள் பற்றிய சொல்லாகும். ட/D என்பது தமிழ்நாட்டில் மட்டுமே ழ/ZA ஆனது . அசோகர் கல்வெட்டுகள், அதற்குப்பின்னார் வந்த தெலுங்கு சோட மன்னர்கள் அசோகருக்கும் முன்னர் பாணினி சூத்திரத்துக்கு வார்த்திக என்னும் குறிப்புரை எழுதிய காத்யாயன வரருசி ஆகியோர் சோட CODA என்றே சொன்னார்கள்.
நான் சொல்லவரும் விஷயம் இதுதான். ட = ழ D=L என்பதற்கு இரண்டு இனங்கள் கலந்தது காரணம் அல்ல என்பதற்கு மேற்கூறிய சோழ , கலுழ , ரமலான் உதாரணங்களே போதும் ; கருட என்ற ரிக் வேத சொல்லை ஆழ்வார்கள் ஏன் கலுழ என்று மாற்றினார்கள் ? அதாவது ட/D என்பதை ழ/L ஆக மாற்றினார்கள் ? ஆக ரிக் வேதத்தில் உள்ள முதல் மந்திரமான அக்னி மீளே புரோகிதம் என்பதை எவரேனும் அக்னி மீடே என்று உச்சரித்து இருந்தால் அதற்கு இனக் கலப்பு காரணம் அல்ல . இயற்கை ஒலி மாற்றமே காரணம்.
இதே முறையில் தான் சேலா SELA என்ற சொல் தமிழில் சேலை SELAI, ஆங்கிலத்தில் ஸாரி SAREE/SAARI , இந்தியில் சாடி SAADI , தெலுங்கிலும் கன்னடத்திலும் சீரே, சீரா என்றும் வழங்கப்படுகிறது.
சேலை என்பதிலும் ட = ல = ர D/L/R மாற்றத்தைக் காண்கிறோம்.
உலகம் முழுவதும் எல்லா மொழிகளிலும் , சிறு குழந்தைகளின் மழலைப் பேச்சிலும் ல= ர L= R மாற்றத்தைக் காணலாம்
சங்க இலக்கியமான திருமுருகாற்றுப் படையில் சீரை என்றுள்ளது கம்பனும் சீரை என்ற சொல்லை பயன்படுத்துகிறான்.
சீரை – திரு முருகாற்றுப் படையில், ‘மரவுரி’ உடை என்று உரை கூறுகிறது
சீரை தைஇய உடுக்கையர் – திருமுருகு 126
சீரை சுற்றிய திருமகள் பின் சேலை – கம்ப. நகர் நீங்கு 234
சோலி CHOLI , பட்டு நூல் ஜாதியான சாலியர் SALIYAR /WEAVER CASTE IN SOUTH INDIA ஆகிய சொற்களும் COGNATE WORDS தொடர்புடைய சொற்களே
FROM WISDOM LIBRARY
Marathi-English dictionary
[«previous (S) next»] — Sela in Marathi glossary
Source: DDSA: The Molesworth Marathi and English Dictionary
śēlā (शेला).—m ( H) A sort of scarf, a cloth composed of four breadths depending from the shoulders loosely over the body. Pr. sarakāracēṃ tēla śēlyāvara ghyāvēṃ Accept the gifts or honors of the great at whatever damage or cost.
சீலை (திரைச் சீலை) என்றா சொல் சங்க காலத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் இல்லை. சேலை என்பதும் இல்லை. சீரை மட்டுமே ஒரே இடத்திலுள்ளது.
மராத்தி மொழியில் உடை/ ஆடை என்ற பொருளில் உளது.
ஸம்ஸ்க்ருதத்தில் ‘சாடிகா’ என்ற சொல் இருப்பதாகக் கூறுவார்கள். ஆனால் எந்தக் காலத்தில் எந்த நூலில் எந்தப் பொருளில் அது ப்யன்படுத்தப்பட்டது என்று ஆராய வேண்டும்
சங்க இலக்கியத்தை முதல் மூன்று நூற்றாண்டுகளில் வைக்கிறோம். பெரும்பாலோர் அதை ஏற்றுக்கொள்ளுவர்
சொற்களை மட்டுமே இங்கு கண்டோம். 2300 ஆண்டுகளுக்கு முந்திய சிற்பங்களில் உள்ள உடைகளை ஆராய்ந்தால் புதிய விஷயங்கள் கிடைக்கும் . தோள் முதல் கால் வரை பரவும் ஆடைகள் உண்டு. அவற்றின் பெயரை நாம் ஊகிக்கலாம் .
–SUBHAM–
tags – சீலை, சேலை, சீரை, சேலா, ஸாரி , சாடி , சேரா