புறநானூற்றில் Drone ட்ரோன் ; ரிக் வேதத்தில் மோட்டார் Car கார்! (Post No.10,832)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,832

Date uploaded in London – –    11 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ரிக் வேதத்தில் டாக்டர் அஸ்வின் தேவர்கள்

புறநானூற்றில் Drone ட்ரோன் ; ரிக் வேதத்தில் மோட்டார் Car கார்!

ரிக் வேதத்தில் இன்று வரை புதிராக இருக்கும் கடவுளர் அஸ்வினி தேவர்கள் (ASVINS) எனப்படும் இரட்டையர் (TWINS) ஆவர். அவர்கள்தான் உலகின் முதல் இரட்டையர்கள் (TWINS) .. அவர்களை பற்றி 2850 ஆண்டுகளுக்கு முன்னரே யாஸ்கர் ஒரு புதிர் போட்டு விடையும் காண முடியாமல் தவித்தார். இன்றுவரை அந்தப் புதிர் நீடிக்கிறது.

முதலில் அவர்களுடைய மருத்துவ அற்புதங்களை காண்போம்:–

அவர்களுக்கு ஒரு மருத்துவர் போல நோய் தீர்க்கும் ஆற்றல் உண்டு என்பதை 1-34-6 உறுதி செய்கிறது.

துதி 8-18-08-லும் மேற்கூறிய மந்திரங்களிலும் அவர்களுடைய ஆற்றலை காணலாம். அவர்கள் இந்த சிகிச்சை ஆற்றலை தண்ணீர், மரங்கள், மூலிகைகளில் வைத்திருந்தனாராம் . (அவர்கள் இயற்கை வைத்தியம் செய்தனர் போலும்).

மண்/பூமி வைத்தியம் பற்றி 1-34-6ல் காண்கிறோம். ‘தொலைவிலுள்ள மருந்தோடு அல்லது பக்கத்தில் கிடைக்கும் மருந்தோடு விரைந்து (8-9-15) வருக’. என்று மற்றொரு புலவர் பாடுகிறார்-

யார் யார் நோயுற்றனரோ அவர்கள் எல்லோருக்கும் உதவுக என்று எல்லோருக்கும் சேர்த்து வேண்டுகிறார் ஒரு புலவர் (8-22-10).

நீங்கள்தான் கண்பார்வையற்றோருக்கும், பலவீனமானவர்களுக்கும் டாக்டர் என்கிறார் இன்னும் ஒரு புலவர் ( 10-39-3 )

விஸ்பலா என்ற பெண்மணிக்கு செயற்கை கால் பொருத்திய செய்தியும் தத்யங் என்பவருக்கு குதிரைத் தலை  பொருத்திய செய்தியும் SURGEONS சர்ஜன்கள் என்ற விஷயத்தை தெளிவாகக் காட்டுகின்றன.

ஒரு பெண்ணுக்கு சுகப் பிரசாவம் நடப்பதற்கான மந்திரத்தில் அஸ்வினி தேவர்களின் உதவி பற்றிய 5 மந்திரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன (5-78-5/10). இதற்கு “கர்ப்ப ஸ்ராவினி உபநிஷத்” என்ற பெயரும் உளது.

விஷ்வக் என்பவரின் மகனைக் கொல்வதற்காக  விஷத்தைப் பயன்படுத்திய செய்தியும் 1-117-16ல் பாடப்பட்டுள்ளது . இது போன்ற  POISONOUS MISSILE விஷக்  கணை தன்னைத் தாக்கக்கூடாது என்றும் ஒரு புலவர் பாடியுள்ளார் (காண்க 6-62-10).

xxx

யாஸ்கர் என்பவர் உலகின் முதல் சொற்பிறப்பியல் அகராதி உருவாக்கியவர். அவர் நிருக்தம் எழுதினார்;  அஸ்வினி  தேவர்கள் என்போர் முன்காலத்தில் வாழ்ந்த இரண்டு நல்ல அரசர்களா ? அல்லது அதிதி என்னும் உலக மாதாவின் புதல்வர்களா ?

XXXX

யாஸ்கர், கடவுளர்களை மூன்று வகையாகப் பிரிக்கிறார்.

1.தியுஸ்தநீய /வானுறையும் கடவுள்கள்

2.அந்தரிக்ஷீய / காற்று மண்டல கடவுள்கள்

3.பிருத்வீ / பூ மண்டல கடவுள்கள்

அஸ்வினி தேவர்கள் பற்றிப் பேசும்போது இதிஹாஸ / வரலாற்று (History) கருத்துகளைத் தெரிவிக்கிறார்.

வானுறையும் தெய்வ வரிசையில் அஸ்வினி தேவர்களை வைத்துவிட்டு சில கேள்விகளை எழுப்புகிறார்.

யார் இந்த அஸ்வினி தேவர்கள் ?

1.அவர்கள் பூமியையும் வானத்தையும் குறிப்பதாக சிலர் சொல்லுகின்றனர்.

2.பகலையும் இரவையும் குறிப்பதாக சிலர் சொல்லுகின்றனர்.

3.அவர்கள் புகழ்மிகு இரண்டு அரசர்கள் என்று இதிஹாஸ / வரலாற்று அறிஞர்கள் சொல்லுகின்றனர்.

யாஸ்கருக்கும் முன்னதாக 30 சொற் பிறப்பியல் ஆராய்ச்சி அறிஞர்கள் வாழ்ந்ததால் அவருக்குப் பலருடைய கருத்துக்களும் கிடைத்திருக்கின்றன.

பூமியில் தர்ம ஆட்சி செய்ததால் அவர்கள் கடவுள் நிலைக்கு உயர்த்தப் பட்டார்கள்.

ரிக் வேதத்தில் உள்ள அற்புதங்களில் அதிகமான அற்புதங்கள் அஸ்வினி தேவர்கள் பெயர்களில்தான் உள்ளன .

ரிக்வேதப் புலவர்கள் பலரும் தேவ என்று  குறிப்பிடுவதால்  அஸ்வினி தேவர்களை தெய்வமாகவே அவர்கள்,கருதியுள்ளனர். தேவ லோகத்தின் மருத்துவர்கள் / டாக்டர்கள் என்று  அவர்கள் அறியப்பட்டுள்ளனர் .அவர்கள் சாவா நிலை எய்தியோர் என்றும், தெய்வீக சக்தியுடையோர் என்றும், புராண (பழமையான) புருஷர்கள் என்றும் ரிஷிகள் பாடியுள்ளனர் . பெரும்பாலும் விஸ்வே தேவர்கள் துதிகளில்தான் அவர்கள் பெயர்கள் வருகின்றன. தனியாகவும் அவர்கள் பெயர்களில் கவிதைகள் இருக்கின்றன. இந்திர , வருண , அக்னீ ,ரிபு, மித்ர, மருத், விஷ்ணு  முதலிய  தேவர்களுடன் (கடவுளருடன்) பேசப்பட்டாலும் சில அடைமொழிகள் குறிப்பிடத் தக்கன .’இந்திரன் போன்றவர்’, ‘மருத் போன்றவர்’ என்ற பாராட்டுதலும் காணப்படுகின்றன.

மலட்டுப் பசுவை பால்கறக்கும் மாடுகளாக மாற்றிய செய்தி ரிக் 1-112, 1-180 துதிகளில் வருகிறது.

தேவாரத்திலும் காய்க்காத பனை மரத்தை திருஞான சம்பந்தர் காய்க்கவைத்த செய்தி வருவதால் இதை உண்மையென்றே நம்பவேண்டும்.

வலன் என்னும் அரக்கனின் குகையிலிருந்து பசுக்களை விடுவித்த செய்தியும் 1-112 துதியில் கிடைக்கிறது.

கெளதம ரிஷியின் ஆயிரக்கணக்கான பசுக்களுக்கு,  குடிப்பதற்குத் தண்ணீர் கிடைப்பதற்காக கிணறு உண்டாக்கிய செய்தியும் 1-116 துதியில் பேசப்படுகிறது.

பூமியின் ஆழத்தில் இருந்த தண்ணீரை மேலுக்குக் கொண்டுவந்து கெளதமருக்கு உதவிய செய்தி அதே துதியில் காணப்படுகிறது .

தண்ணீரிலிருந்து செல்வம் கொண்டுவந்த சுவையான  செய்தி 1-181ல் பாடப்படுகிறது. தண்ணீர் என்பதை கடல் வாணிபத்தில் இருந்து என்று பொருள் கொள்ள வேண்டும் .

குதிரையின் குளம்பிலிருந்து 100 பானை சுரா பானம் அல்லது இனிப்பான பானம் எடுத்த செய்தி 1-116 மற்றும் 1-117ல் கிடைக்கின்றன.

ரஸா (Rasa) என்ற பெயரில் ஒரு மர்மமான நதி வேதம் முழுதும் குறிப்பிடப்ப்டுகிறதது ; இது எங்கு இருக்கிறது என்று யாராலும் கண்டு பிடிக்கமுடியவில்லை. அஸ்வினி தேவர்களைப்போலவே இதுவும் புதிர் போடுகிறது. இந்த நதியை வெள்ளப்பெருக்கெடுத்து ஓடச் செய்ததாகவும். இனிய நீர்ப்பெருக்கு  உடையதாகச் செய்ததாவும் 1-112ல் படிக்கிறோம். அதே துதியில் குதிரைகள் இல்லாத ரதத்தை ஒட்டி தேர் பந்தயத்தில் வெற்றி பெற்ற செய்தியும் வருகிறது.

XXX

எனது கருத்துக்கள்

புறநானூற்றில் (பாடல் 27) ட்ரோன் Drone ; ரிக் வேதத்தில் Mechanical Car மோட்டார் கார்

‘குதிரையின் குளம்பிலிருந்து சுரா பானம்’ , ‘நீரிலிருந்து செல்வம்’ என்பதெல்லாம் மறைமுகமான மொழி (enigmatic language). சந்திர சூரியர்களை பாம்புகள் விழுங்குகின்றன என்று கிரஹணத்தை சொல்லுவது போல இது ஒருவகை MYSTERIOUS  மொழி. இது சங்க இலக்கிய காலப் பாடல்களிலுமிருக்கின்றன. ஆனால் அதற்கு முன்னரே அவர்கள் கிரஹணங்களைக் கணக்கிட்ட செய்தி ரிக் வேதத்தில் அத்ரி மகரிஷி அற்புத துதிகளிலும், மஹாபாரதம் ஜயத்ரதன் மண்டை தூள்தூளான கதையிலும் வந்துவிட்டன. இதே போல அகஸ்தியர் கடல் நீரைக் குடித்தார் என்பது, முதல் முதலில் அவர் கடல் வழியாக தென்கிழக்காசியாவுக்கு பாண்டியர் படைகளைக் கொண்டு சென்று வியட்நாம் என்னும் சம்பா பிரதேசத்தை ஆளச் செய்தார் என்பது இப்போது புரிகிறது. விந்திய மலையை அவர் மட்டம்தட்டி ‘கர்வ பங்கம்’ செய்தார் என்பது அகத்தியர்தான் ராம , லெட்சுமண சீதைக்காக முதல் முதலில் ரோடு (road Route via Vindhya forests) போட்டுக்கொடுத்தார் என்பதும் இப்போது தெரிகிறது. இந்த மர்ம மொழிப் பேச்சு (MYSTERIOUS, ENIGMATIC) ரிக் வேத காலத்திலேயே வந்துவிட்டது. இதை அஸ்வினி தேவர் என்னும் இரட்டையர் அதிசயங்களில் அதிகம் காண்கிறோம்.

‘குதிரை பூட்டாத ரதம்’ என்பது மோட்டார் கார் (Mechanical Motor Car/t) போல அந்தக்காலத்திலேயே ‘மெக்கானிக்கல் வண்டி’ இருந்ததைக் காட்டுகிறது . புறநானூற்றில் (Pilotless Plane) வலவன் ஏவா வானவூர்தி ((பாடல் 27)  என்பது DRONE ட்ரோன் என்பது (OR STEALTH PLANE) நமக்கு இப்போதுதான் தெரிகிறது.

Xxx

Safety Match Box

வேத காலத்திலும் சங்க காலத்திலும் இரண்டு கட்டைகளை வைத்து தீ உண்டாக்கினார்கள். இதற்கு அரணிக்கட்டை  என்று பெயர். அஸ்வினி தேவர்கள் இவை இல்லாமலேயே தீயை உண்டாக்கினர் என்று ஒரு புலவர் ( 10-184-3) பாடுகிறார். தங்க குச்சிகளால் தீயை உண்டாக்கினாராம். இப் போது நாம் தீக்குச்சிகளை வைத்தும் சிக்கிமுக்கிக் கல் உடைய Gas Lighter கேஸ் லைட்டர் மூலமும்  தீயை உண்டாக்குகிறோம். அஸ்வினி தேவர்களும் கோயமுத்தூர்  ஜி.டி நாயுடு G D Naidu, அமெரிக்காவின் தாமஸ் ஆல்வா எடிசன் Thomas Alva Edison போல நூற்றுக் கணக்கான கண்டுபிடிப்புகளைச் செய்தனர் போலும்.

அஸ்வினி தேவர்கள் பற்றிய முக்கியமான கதை ‘மது வித்தை’ எனப்படும் ரகசிய வித்தையை சொல்லிக்கொடுத்த ததீசி முனிவருக்கு குதிரைத் தலை பொருத்தியாதாகும் அவர்கள் வேதகாலத்தில் இருந்த மிகப்பெரிய சர்ஜன்கள் / அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் என்பதை  இது காட்டுகிறது இந்த விஷயம் மந்திரம் 1-116ல் உள்ளது.

கதை என்னவென்றால் ,

தத்யங் அதர்வண (Dadhyan Adharvana) என்ற மகரிஷிக்கு இறந்தோரை உயிர் ப்பிக்கும் அபூர்வ ‘மது வித்யை’ தெரியும். “இதை வேறு யாருக்கும் சொன்னால் உம் தலையை இழக்க நேரிடும்”– என்று இந்திரன் எச்சரித்திருந்தான். அஸ்வினி தேவர்கள் வந்து,, வித்தையைச் சொல்லிக்கொடுக்க வேண்டிய போது இந்திரனின் எச்சரிக்கையை  நினைவுபடுத்தினார். “அதற்கு என்ன? நாங்கள், குதிரைத் தலையைப் பொருத்திவிட்டு மந்திர உபதேசத்துக்குப் பின்னர் ஒரிஜினல் Original தலையைப் பொருத்திவிடுகிறோம்” என்றனர். அதன்படியே நடந்தது . அஸ்வ என்றால் குதிரை. இதனாலும் அஸ்வினி தேவருக்கு குதிரை பெயர் வந்திருக்கலாம்.

அஸ்வினி தேவர்களையும் மூலிகைகளையும் தொடர்புபடுத்தும் ரிக் வேத மந்திரங்கள் அவர்களை தேவ லோக டாக்டர்கள் என்பதைக் காட்டும். (காண்க:– ரிக்வேத மந்திரம் 1-34-6; 1-116-16; 1-157-6;8-18-8; 8-86-1;8-9-5; 10-39-5).

-subham–

TAGS-  அஸ்வினி தேவர்கள், மருத்துவர்கள், அற்புதங்கள்,  டாக்டர்கள், ட்ரோன் மோட்டார் கார்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: