WRITTEN BY KATHUKUTTI, CHENNAI
Post No. 10,845
Date uploaded in London – – 14 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
COMPILED BY கத்துகுட்டி
கடனோடு காலை எழுவதைவிட பட்டினியோடு இரவில் படுப்பதே மேல்- ஞான மொழிகள் 33 (Post .10,845)
பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியவைகள்
1.நல்ல புத்தகங்கள்.
2.நல்ல நண்பர்கள்.
3.நல்ல செயல்கள்.
XXX
தன் உடம்பை கருவியாக்கிக் கொண்டு ஆண்களை கவர்கிற பெண்கள் அடிமையாக வாழ நேரிடும்.
தன் உள்ளத்தை கருவியாக்கிக் கொண்டு ஆண்களை கவர முடியுமானால், ஒத்த உரிமையோடு வாழ முடியும். மு. வ.
XXX
நட்பு
காய்ந்த இரும்பில் நீர் விழுந்தாற் போல ………………..அதமன்
தாமரை இலையில் நீர் விழுந்த முத்து போல……….மத்யமன்
முத்துச் சிப்பியில் நீர் விழுந்து முத்தாவது போல…உத்தமன்
XXX
தயவு செய்து சமரசம் செய்து கொள்ளுங்கள்………….
சட்டத்திற்கு நேரமும் அதிகம், விலையும் அதிகம்!!!
XXX
எந்தக் கட்சியும் அதன் தலைவர்களைப்போல் மோசமாக
இருப்பதில்லை………. .வின்ஸன்ட் சர்ச்சில்
XXX
மற்றவர்கள் சராசரியாக செய்கிற வேலையைக் காட்டிலும் நீங்கள் அதிகமாய் வேலை செய்வதாய் நினைப்பீர்களானால்,
நீங்கள் சராசரி வேலையைத் தான் செய்கிறீர்கள் என்று அர்த்தமாம்!!!
XXXX
ஒவ்வொருவனும் நீண்ட காலம் உயிர் வாழ ஆசைப்படுகிறான்.
ஆனால் யாரும் கிழவனாக இருக்க விரும்புவதில்லை…………
XXXX
பணத்தை அதிகமாக மதித்து கெட்டுப்போன
முட்டாள்கள் எத்தனையோ பேர்……………
பணத்தை குறைவாக மதித்து சீரழிந்த
அறிவாளிகள் எத்தனையோ பேர்…………..
XXX
ஒரு சராசரி் மனிதனின் புலம்பல்……….
செருப்பு காலைக் கடிக்குது…….
செலவு கையை கடிக்குது…………
பசி வயிற்றைக் கடிக்குது…………
வீட்டுக்குப் போனால் மனைவி கடிக்கிறாள்………
ஆபீஸுக்கு போனால் மேனேஜர் கடிக்கிறார்…….
இதையெல்லாம் மீறி பார்க்குக்கு போனால் எறும்பு கடிக்குது!!!!
XXX
மரணம் எந்த விதமாகவும் வரலாம்,
ஆனால் காரணம் மட்டும் கெளரமாக இருத்தல் வேண்டும்.
XXX
கடனோடு காலை எழுவதைவிட பட்டினியோடு இரவில் படுப்பதே மேல் !!!
XXX
தன் குரலை கேட்டுத்தான் சூரியன் எழுகிறது என நினைக்கிறதாம் காக்கை!!!
அது போலவே சில மனிதர்களும்………..
XXX
உலகமே என்னுடைய வீ டு,
மனித சமுதாயமே எனது தோழன்.
பிறருக்கு நன்மை செயவதே என் மதம்
என் மனமே எனது கோவில். ஸ்வாமி விவேகானந்தர்
XXXX subham xxxx
tags-கடனோடு, காலை இரவில், படுப்பதே மேல்- ஞான மொழிகள் 33