WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,843
Date uploaded in London – – 14 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
தமிழ் என்னும் விந்தை!
ச.நாகராஜன்
சித்திர கவியில் ஒரு சுவையான வகை பிரிந்தெதிர் செய்யுள்.
இதைப் பற்றிய மாறன் அலங்காரம் தரும் சூத்திரம் இது:
பிரிந்தெதிர்வனவே பிரிந்தெதிர் செய்யுள்
அதாவது ஒரு செய்யுள் முடிந்து விட்ட நிலையில் அதன் கடைசி எழுத்தை முதலாகக் கொண்டு தலைகீழாக வந்தால் (Reverse order) இன்னொரு செய்யுள் அமையும்.
அது தான் பிரிந்தெதிர் செய்யுள்.
எடுத்துக்காட்டாகா மாறன் அலங்காரம் தரும் செய்யுள் இது:
நீரநாகமா
தாரமாகமே
வாரமாகமா
ணாரணாககா
இந்தச் செய்யுளில் நான்காம் அடியில் கடைசெ எழுத்து ‘கா’
இந்த கா என்ற எழுத்தை முதலாகக் கொண்டு அப்படியே தலைகீழாகச் செய்யுளைப் பார்ப்போம்.
காகணாரணா
மாகமாரவா
மேகமாரதா
மாகநாரநீ
இப்படி ஒரு செய்யுளே பிரிந்து இன்னொரு செய்யுளாக மாறுவது பிரிந்தெதிர் செய்யுள் ஆகும்.
இப்பாடலின் பொருள் :
நீர நாக – நல் குணத்தவனே! அனந்த சயனத்தவனே!
மா தாரமாக – திருமகளைப் பாரியாக
மேவாரமாக – பொருந்துமாரங்கிடக்கும் மார்பனே!
மாணாரணாக – பெருமையை உடைய வேத சொரூபனே!
கா – என்னைக் காப்பாயாக!
பாடலைத் திருப்பிப் போடும் போது வரும் செய்யுளின் பொருள்:
மாகமாரவாம் – துறக்கத்துள்ளார் பெருக விரும்பும்
நார – நற்குணத்தை உடையவனே
மேகமாக – மேகத்தைப் போன்ற திருமேனியை உடையவனே!
மா ரதா – எதிரிகளை வெல்லும் முழு வீரனே!
நாரணா – நாராயணன் என்னும் திரு நாமத்தை உடையவனே!
நீ கண் – நினது சொரூப ரூப குண விபூதிகளை மயக்கமற அறிவதற்கு நீயே எமக்கு ஞானக் கண் ஆனதால்
கா – எம்மைக் காப்பாற்றுவாயாக!
இந்த இரு பாடல்களும் வஞ்சித் துறை என்னு வகைப் பாடல்களாகும்.
துறை : கடவுள் வாழ்த்து
அநுலோமம் , பிரதிலோமம் என்று இதனை வடமொழியில் வழங்குவர்.
இது போன்ற பாடல்கள் ஏராளம் தமிழில் உண்டு.
***
Tags- மாறன் அலங்காரம், பிரிந்தெதிர் செய்யுள்