Post No. 10,858
Date uploaded in London – – 17 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
பெண்களைத் திட்டுவோர் ஒரு அமங்கலமான வாக்கியத்தைச் சொல்லி திட்டுவார்கள். பொதுவாக நாம் அதை எழுதுவதில்லை. தற்காலத்தில் திராவிடக் கழகப் பத்திரிகைகளில் மட்டுமே அதை XXXXXX அறுப்பது பற்றி கொட்டை எழுத்துக்களில் போடுவார்கள்; பொதுக் கூட்டங்களில் பேசுவார்கள். கம்பனும் அந்த வசவை ஒரு பாட்டில் நாசூக்காக சொல்கிறான் . நேரடியாகச் சொல்லவில்லை.
அதற்கு முன்பாக இன்னொரு சுவையான விஷயம். வேத மந்திரத்திலோ — குறிப்பாக ரிக் வேத கல்யாண மந்திரத்திலோ– தாலி பற்றி மந்திரம் கிடையாது. தர்ம சாஸ்த்திர நூல்களிலும் தாலி கட்டுதல் பற்றி இல்லை. தற்காலத்தில் பிராமணர் கல்யாணங்களில் சொல்லும் ‘மாங்கல்யம் தந்து நானே’ என்பதெல்லாம் புதிதாகச் சேர்க்கப்பட்ட மந்திரங்களே. இதை அடிப்படையா க வைத்து, சிலர் தாலி கட்டும் வழக்கமே தமிழர் உடையதுதான். அதைப் பிற்காலத்தில் பிராமணர்களும் ஏற்றுக் கொண்டனர் என்று சொல்லுவார்கள். கல்யாணத்தில் தாலி கட்டும் குறிப்பு சிலப்பதிகாரத்தில் கூட இல்லை. வேதம் ஓதும் ஐயர்கள் முன்னிலையில் கண்ணகி – கோவலன் கல்யாணம் நடந்தது. தீயை வலம் வந்து அக்கினி சாட்ச்சியாக கல்யாணம் நடந்ததாக சிலப்பதிகார இளங்கோ பாடுகிறார். அங்கும் கூட தாலி கட்டின விஷயம் இல்லை. பல இடங்களில் வரும் “இழை” என்ற குறிப்பை வைத்தே இதை ஊகிக்க வேண்டி இருக்கிறது. கம்பன் போன்ற பிற்காலப் புலவர்களே இதை வெளிப்படையாகப் பாடியுள்ளனர்
இனி கம்பனின் வசவுப் பாடலில் கைகேயியை தசரதன் எப்படி வசைபாடுகிறான் என்பதைப் பார்ப்போம். முன்னர் எழுதிய ஒரு கம்பன் கட்டுரையிலும் தாலி பற்றி இருப்பதால் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வழக்கம் இருந்ததை உறுதியாக அறிய முடிகிறது
விழிக்கும் கண் வேறு இல்லா, வெங்கான் , என் கான் முளையைச்
சுழிக்கும் வினையால் ஏகச் சூழ்வாய்; என்னைப் போழ்வாய்;
பழிக்கும் நாணாய்; மாணாப் பாவி! இனி,என் பல? உன்
கழுத்தின் நாண்,உன் மகற்குக் காப்பின் நாண்ஆம்’ என்றான்.
—அயோத்தியா காண்டம், நகர் நீங்கு படலம், கம்ப ராமாயணம்
பொருள்
இராமனாகிய கண்களைத் தவிர வேறு திறந்து பார்க்கின்ற கண்கள் இல்லாது குருடனாக விளங்கும் எம் மகனை , இராம பிரானை, உன் கப டச் செயலால் காட்டிற்கு அனுப்பிவிட்டாய் ; அதன் மூலம் என் உயிரையும் பிளப்பவளே ! பாவத்துக்கு வெட்கப்படாதவளே! பெருமை என்பதே சிறிதும் இல்லாத பாவியே! உன் கழுத்திற்கு நான் கட்டிய மங்கள நாண் , உன் மகனாகிய பரதனுக்கு திரு முடி சூட்டும்போது கையில் கட்டக்கூடிய காப்புக்கயிறாக விளங்கட்டம் — என்று தசரதன் சொல்கிறான்.
அதாவது கழுத்தை அலங்கரிக்கும் மஞ்சள் கயிறு காப்பு கட்டும் மஞ்சள் கயிறு ஆகி விடும். இதிலிருந்து எந்த ஒரு சடங்கிற்கும் முன் காப்பு கட்டும் வழக்கமும் தெரிய வருகிறது. பிராமணர் வீட்டுச் சடங்குகளில் இந்த காப்புக் காட்டும் வழக்கம் இன்றும் பின்பற்றப்படுகிறது.
கோவில் விழாவுக்கான கொடி ஏறியவுடன் ஊரை விட்டு மக்கள் வெளியேற மாட்டார்கள். அது போல காப்புக் கட்டிய பின்னர் வீட்டோடு இருந்து சில விதி முறைகளைப்ப பின்பற்றுவது அந்தக் காலத்தில் மூன்று வருணத்தாருக்கும் இருந்தது.
“கா” என்ற வினைச் சொல் காப்பாற்றுதல் என்ற பொருளைத் தரும். குழந்தைகளுக்கு காப்பிடும் சடங்கும் இந்துக்களுக்கு உண்டு. இது தவிர அரை நாண் கயிறு கட்டுதலும் அதில் ஐம்படைத்தாலியைத் தொங்க விடுவதும் உண்டு.
xxxx
என்னுடைய பழைய கட்டுரையைக் கீழே கொடுத்துள்ளேன்
தாலி பற்றி கம்பன் (Post No.4185) Sept.5, 2017
தாலி பற்றி அடிக்கடி சர்ச்சையை உண்டாக்கும் ஒரு முட்டாள் கூட்டம் தமிழ்நாட்டில் அவ்வப்பொழுது தலைதூக்கும் என்பது கம்பனுக்கும் கூட ஞான திருஷ்டியில் தெரிந்துள்ளது. ஒரு அழகான பாடல் சுந்தர காண்டத்தில் வருகிறது:
மண்ணில் கண்ட வானவரை வலியின் கவர்ந்த வரம் பெற்ற
எண்ணற்கு அரிய ஏனையரை இகலின் பறித்த தமக்கு இயைந்த
பெண்ணிற்கு இசையும் மங்கலத்தில் பிணித்த கயிறே இடை பிழைத்த
கண்ணில் கண்டவன் பாசம் எல்லாம் இட்டுக் கட்டினார்
-பிணி வீட்டு படலம், சுந்தர காண்டம்
அனுமன் வாலில் பிரம்மாஸ்திரம் இருக்கும்போது தீ வைப்பது முறையன்று என்று எண்ணி, அனுமனை பிரம்மாஸ்திரத்தினில் இருந்து விடுவித்தான் இந்திரஜித். அப்போது வரும் பாடல் இது:–
பொருள்:
“இராவணன் நிலவுலகில் திக்விஜயம் மேற்கொண்டபோது அங்கிருந்து கொண்டுவரப்பட்ட கயிறுகள், தேவர்களிடமிருந்து வலியப் பறித்த கயிறுகள், வரத்தின் மூலம் பெற்ற கயிறுகள், எண்ணமுடியாத அசுரர் முத்லியவர்களோடு போரிட்டுப் பெற்று வந்த கயிறுகள், இன்னும் இவ்வாறான கண்ணில் பட்ட வலிய கயிறுகளை எல்லாம் கொண்டுவந்து அனுமானைக் கட்டினார்கள். தத்தமக்கு ஏற்ற பெண்களின் கயிற்றில் அவர்கள் கட்டியிருந்த தாலிக் கயிறுகள் மட்டுமே அச்சமயத்தில் கவரப்படாமல் தப்பித் தங்கின”
இதிலிருந்து தெரிவதென்ன?
இராக்கத பெண்களுக்கும் தாலிக் கயிறுகள் உண்டு:
அது புனிதமானதால், அசுரர்களும் அதை மதித்துப் போற்றினர்.
அனுமானைக் கட்ட உலகிலுள்ள எல்லாக் கயிறுகளும் பயன்படுத்தப்பட்டன; ஆனால் தாலிக் கயிறு பயன்படுத்தப் படவில்லை.
தமிழ்நாட்டில் சில போலி சக்திகள் அவ்வப்போது தலைவிரித்தாடி ஆடி ஓய்ந்து விடும் என்பது கம்பனுக்கும் தெரியும்.
தமிழகத்தில் சில போலித் தமிழர்கள் பிறப்பர்; அவர்களுக்குச் செமை அடி கொடுக்க வேண்டும் என்று சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் கம்பன் எழுதிய பாடல் இது.
இராக்கதர்களுக்குக் கூடத் தெரிந்த தாலியின் புனிதம், சில திராவிட அந்தகர்களுக்குத் தெரியாதது வருந்தத்தக்கது.
தாலி பற்றி கம்பன் (Post No.4185) | Tamil and Vedas
https://tamilandvedas.com › தால…
·
5 Sept 2017 — Written by London Swaminathan Date: 5 September 2017 Time uploaded in London- 14-36 Post No. 4185 Pictures are taken from various sources; …
https://tamilandvedas.com › tag › த…
18 Jun 2014 — பெண்கள் மங்களச் சின்னங்கள் அல்லது கடவுளரின் திருவுருவங்கள் பொறித்த தாலிகளை …
Tags—தாலி, கட்டுதல், மஞ்சள் கயிறு , காப்பு, கம்பன் , வசவு, கைகேயி