WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,855
Date uploaded in London – – 17 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
தமிழ் என்னும் விந்தை
பிறிதுபடு பாட்டு! – 2
ச.நாகராஜன்
பிறிதுபடு பாட்டு வகையிலான இன்னும் பாடல்கள் கீழே தரப்படுகின்றன.
கட்டளைக் கலித்துறை
அரிபிர மேந்திர ரன்புட னேத்து மணிநகுலைப்
பரியமர் வான்கங்கை பொங்கிளந் திங்கள் பொலிசடையான்
விரிமறை யேயுரு வாய்வரு வான்றன் மிளிரடியைப்
பரிவுட னெண்ணுநர் பாறாப் பரகதிப் பாங்கரன்றே
கட்டளைக் கலித்துறையில் அமைந்துள்ள பாடல் நேரிசை ஆசிரியப்பாவாக இப்படி ஆகிறது பாருங்கள்:
நேரிசை ஆசிரியப்பா
அரிபிர மேந்திர ரன்புட னேத்து
மணிநகுலைப் பரியமர் வான்கங்கை
பொங்கிளந் திங்கள் பொலிசடை யான்விரி
மறை யேயுரு வாய்வரு வான்றன் மிளி
ரடியைப் பரிவுட னெண்ணுநர்
பாறாப் பரகதிப் பாங்கரன்றே
ஆக அடி, தொடைகளை வேறு படுத்துவதால் முந்தைய நிலை மாறி இன்னொரு செய்யுளாக ஆகும் படி பாடுவது பிறிதுபடு பாட்டு எனப்படுகிறது.
இன்னொரு எடுத்துக்காட்டை இங்கு பார்ப்போம்:
கட்டளைக் கலித்துறை
தாங்கி யெனைக்காத்த றப்பாது நின்பாரந் தாங்கிலையே
னீங்கிச் சரணென்று பாங்காகி யாரை நிலைக்களமா
யாங்குப் புகல்செய்வ னேர்கொள் விடையா யிசைநகுலைப்
பூங்கமழ் சோலை புடையார் சினகரப் புங்கவனே
இந்தக் கட்டளைக் கலித்துறையில் அமைந்த பாடலை எடுத்துக் கொண்டு அதில் வரும் இசை என்பதை நான்காம் அடியில் கடைசிச் சொல்லாக (ஈற்றுச் சொல்லாக) வைத்துப் பாடலைப் பார்த்தால் அது ஒரு நேரிசை வெண்பா பாடலாக ஆகி விடுகிறது!
நேரிசை வெண்பா
தாங்கி யெனைக்காத்த றப்பாது நின்பாரந்
தாங்கிலையே னீங்கிச் சரணென்று – பாங்காகி
யாரை நிலைக்களமா யாங்குப் புகல்செய்வன்
ஏர்கொள் விடையா யிசை
மேற்கூறிய இரு பாடல்கலும் விநோத விசித்திரப் பூங்கொத்து என்னும் நூலில் 105 மற்றும் 106 பாடலாகத் தரப்பட்டுள்ளது.
***
TAGS– விநோத விசித்திரப் பூங்கொத்து, பிறிதுபடு பாட்டு – 2