WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,859
Date uploaded in London – – 18 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
ச.நாகராஜன்
நாத்திக, கிறிஸ்தவ மத மாற்றத்திற்கான ஆதரவு அரசுகளின் செயல்பாடுகள் நம்மைத் திடுக்கிட வைக்கிறது.
ஆம் பல காலமாக பஜனைகளும் ஆன்மீகச் சொற்பொழிவுகளும் நடந்த பிரசித்தி பெற்ற மாம்பலம் அயோத்யா மண்டபம் மூடப்பட்டதாம் தமிழக அரசினால்.
இதை எதிர்த்து பாரதீய ஜனதா கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
விசித்திரமாக இல்லை? ஒரு ஹிந்து நாட்டில் ஹிந்து கோவில்கள் மூடப்படுகின்றன, சிலைகள் திருடப்படுகின்றன, பஜனை மடங்கள் மூடப் படுகின்றன.
ஆனால் லீஸ் முடிந்தாலும் லயோலா காலேஜ் அந்த இடத்தை விட்டு அகல மாட்டேன் என்று சண்டித்தனம் பிடிக்கிறது.
கேட்க ஆள் இல்லை.
என்ன அநியாயம் இது?!
ஹிந்துக்கள் ஒற்றுமையாக இல்லை – அது தான் காரணம்.
இப்படிப்பட்ட நாத்திகப் பொறுக்கிகளை ஓட்டுப் போட்டு அதிகாரம் பெறச் செய்த ஹிந்துக்களைத் தான் குறை சொல்ல வேண்டும்.
அடுத்தது கோவிந்தா.. கோவிந்தா.. கோவிந்தனுக்கே கோவிந்தா!
வெங்கடாசலபதிக்கே லட்டு கொடுக்க முனைகிறது ஜகன் மோகன் ரெட்டியின் ஆந்திர அரசு.
விஷயத்திற்கு வருவோம்.
திருப்பதி கோவில் வெள்ளிக்கிழமை மூடப்பட வேண்டுமாம்?
ஏன், நமாஸ் செய்வதற்கு இடைஞ்சலாக இல்லாமல் இருப்பதற்காக!
இது என்னடா புது விஷயம் என்று அதைப் பற்றிக் கேட்கப் போனால் .. வண்டி வண்டியாக வருகிறது பயங்கரச் செய்திகள்!
திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை பார்க்கும் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் வெள்ளிக்கிழமை கோவில் மூடப்பட வேண்டும், தங்கள் தொழுகைக்கு இடைஞ்சல் இல்லாமல் இருப்பதற்காக என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்களாம்!
எந்த ஒரு ஹிந்து கோவிலிலும் ஹிந்துக்களே வேலை பார்க்க வேண்டும் என்பது விதி.
ஒரு மசூதியில் ஹிந்து வேலை பார்க்க முடியாது. ஒரு சர்ச்சில் ஹிந்து வேலை பார்க்க முடியாது.
ஆனால் திருப்பதி தேவஸ்தானத்திலேயே ஹிந்து அல்லாத கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் வேலை பார்க்கின்றனர்.
இது எத்தனை பேருக்குத் தெரியும்?!
அது தான் ஹிந்து சமுதாயத்தின் இன்றைய அவல நிலை.
சிரஞ்சீவி பட் என்பவர் HOSA DIGANTHA என்ற கன்னட செய்தி பத்திரிகையில் தனது கட்டுரையில் குறிப்பிடும் விஷயங்கள் இவை:
- TTD யின் புது தலைவராக புட்டா சுதாகர் யாதவ் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
பெயரைப் பார்த்தவுடன் இவர் யாதவ சமூகத்தைச் சேர்ந்தவர் என்று யாரும் எண்ணி ஏமாந்து விடக் கூடாது.
சுதாகர் ஒரு கிறிஸ்தவர் என்று கூறப்படுகிறது.
இதை நிரூபிக்கும் வகையில் அவர் பல கிறிஸ்தவ மத சம்பந்தமான நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவது சுட்டிக் காட்டப்படுகிறது. அவர் கிறிஸ்தவம் பற்றியும் ஏசு பற்றியும் எங்கும் பேசி வருவதும் சுட்டிக் காட்டப்படுகிறது.
அதாவது இவர் ஏசுவின் செய்தியை எங்கும் பரப்பி வருபவர்.
இவர் திருப்பதி தேவஸ்தான தலைவர்!
இதனால் என்ன ஆயிற்று தெரியுமா?
வெங்கடாசலபதி திம்மப்பா ஆகி விட்டார்.
சில மந்திரங்களை ஏசு பெயருடன் சேர்த்துக் கூறி வெங்கடாசலபதி ஏசுவின் அவதாரம் என்று கூற ஆரம்பித்து விட்டது மிஷனரி!
தலைவர் மட்டும் கிறிஸ்தவர் அல்ல; திருப்பதி தேவஸ்தானத்தில் இன்னொரு கிறிஸ்தவரும் உண்டு.
ஆந்திரா எம்.எல்.ஏ வங்கலபுடி அனிதா என்ற பெண்மணி டிரஸ்டில் ஒரு அங்கத்தினராக இருக்கிறார்.
2014ஆம் ஆண்டில் ஒரு டிவி சேனலுக்கு இவர் கொடுத்த பேட்டியில் , “நான் ஒரு கிறிஸ்துவர். என் வானிடி பேக்கிலும் காரிலும் பைபிள் இல்லாமல் எனது வீட்டிலிருந்து படி இறங்க மாட்டேன் (Vangalapudi Anita : “I am a Christian. Without a Bible in my vanity bag and car, I never step out of my home). என்று கூறி இருக்கிறார்.
இந்தப் பெண்மணி, தான் வெங்கடாசலபதியின் பக்தை என்று இப்போது கூறுகிறார்.
2014இல் காரிலும் வேனிடி பேக்கிலும் (இரு பைபிள்கள்) இல்லாமல் வீட்டுப் படி இறங்க மாட்டேன் என்று சொன்ன இந்தப் பெண்மணி 2018இல் “ஹிந்துவாக” மாறி TTD உறுப்பினராக ஆகி விட்டாரா?
இது மட்டுமல்ல, இன்னொரு செய்தியைச் சொன்னால் அனைவரும் விக்கித்துப் போய் விடுவர்.
இங்கு 44 கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் TTD STAFF ஆக -திருமலா திருப்பதி தேவஸ்தான ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.
சரி TTD யின் அதிகார பூர்வமான விதிகள் என்ன சொல்கின்றன அதைப் பார்ப்போம்.
( அடுத்த கட்டுரையுடன் முடியும்)
நன்றி : Kolkata weekly Truth Vol 89 Issue No 50 dated 8-4-22)
***
tags– வெங்கடாசலபதி