Post No. 10,866
Date uploaded in London – – 19 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
“ஐரோப்பியர்களே! உங்களை நான் ஒன்று கேட்கலாமா? எந்த ஒரு நாட்டையாவது நீங்கள் மேல் நிலைக்கு உயர்த்தி இருக்கிறீர்களா? எங்காவது பல்வீனமான இனத்தினரைக் கண்டால் அவர்களைப் பூண்டோடு வேரறுத்திருக்கிறீர்கள். அவர்கள் நிலங்களில் நீங்கள் குடி ஏறி இருக்கிறீர்கள். உங்களுடைய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியுஜிலாந்து, பசிபிக் தீவுகள், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் வரலாறு என்ன? தாம் வாழ்வதற்காக மற்ற அனைவரையும் அழிப்பது ஐரோப்பிய மக்களின் குறிக்கோள் ஆகும்” – சுவாமி விவேகானந்தர் ,பக்கம் 136, எழுமின் விழிமின் (Published by Vivekananda Kendra; compiled by Eknath Ranade)
xxxx
“பாரத தேசம் முழுவதும் எழுந்து நின்று ஹிந்து மஹா சமுத்திரத்துக்கு அடியிலுள்ள எல்லா மண்ணையும் வாரியெடுத்து மேற்கத்திய நாடுகளின் மீது வீசினாலும்கூட, நீங்கள் இன்று எங்கள் மீது சேறு வீசுகிற அளவில் தினையளவுகூடப் பதிலுக்குப் பதில் செய்ததாக ஆகாது.” — பக்கம் 156, சுவாமி விவேகானந்தர் ,
எழுமின் விழிமின் (Published by Vivekananda Kendra; compiled by Eknath Ranade)
மொழியியல் அறிஞர்கள் என்று பெயர் சூட்டப்பட்ட சில விசித்திர, விநோதப் பிறவிகள் விஷமத்தனமான கருத்துக்களை பரப்பி வருகின்றனர் .இந்து மத, சம்ஸ்க்ருத நூல்கள் பற்றி மட்டும் எழுதும் இவர்கள் பிற மொழி பற்றி இவ்வளவு விஸ்தாரமாக எழுதவும் இல்லை. ஸம்ஸ்க்ருதத்துக்குப் பின்பற்றும் அதே விதி முறைகளை பழைய மொழிகளான கிரேக்கம், எபிரேயம், பாரசீகம், சீன, லத்தீன் மொழிகளுக்குப் பின்பற்றவும் இல்லை. முடிந்தவரை விளக்குகிறேன்
ஒரு மொழி ஒவ்வொரு 200 ஆண்டுகளுக்கும் மாறுபடும் என்று சொல்லி மாக்ஸ்முல்லர் ரிக் வேதத்துக்கு கி.மு 1200 என்று தேதி குறித்தார். அவரைப் போன்றே வேத ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் வெகுண்டு எழுந்தனர். உடனே மாக்ஸ்முல்லர் ஜகா வாங்கினார். ரிக் வேதத்துக்கு கி.மு 1500 என்றும் சொல்லலாம்; அல்லது அதற்கு முந்தியும் என்றும் சொல்லலாம். உண்மையில் வேதத்துக்கு யாருமே காலம் கற்பிக்க முடியாது என்று சொல்லிவிட்டு செத்தும் போனார். அவர் இந்தியாவுக்கு வந்ததும் இல்லை; வேத மந்திரத்தைக் கேட்டதும் இல்லை; வேத பண்டிதர்களைப் பார்த்ததும் இல்லை.
மாக்ஸ்முல்லர் சொன்ன ஒரு மொழி 200 ஆண்டுக்கு ஒரு முறை மாறுமென்ற கொளகையை தமிழ் மொழிக்கு பயன்படுத்தினால் திருக்குற ள் அம்போ! சிலப்பதிகாரம் அம்போ! சங்க இலக்கியம் அம்போ! எல்லாவற்றையும் 200 , 300 ஆண்டுகள் தள்ளித் தள்ளி வைக்க நேரிடும் .
உலகில் வேறு எந்த மொழிக்கும் மாக்ஸ்முல்லரின் அயோக்கியக் கொளகையை பயன்படுத்தவில்லை ; பயன்படுத்த முடியாது
இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள அதில் நம்பிக்கை இருக்க வேண்டும்; இரண்டாவது அதைப் பின்பற்ற வேண்டும் ; மேலும் ஏற்கனவே தான் பிடித்த விஷயத்தை — பிடிவாதத்தை விட்டு— நடு நிலையில் நின்று ஆராய வேண்டும். இது மாக்ஸ் முல்லர் கும்பலுக்கும், மார்க்சீய கும்பலுக்கும் கால்டு வெல்டு கும்பலுக்கும் கிடையாது ; இந்த மூன்று கும்பல்களும் அயோக்கிய சிகாமணிகள். அவர்கள் நம்பியது :கிறிஸ்தவ மதமே உயர்ந்தது; மற்றவை எல்லாம் மதமே இலலை; மார்க்சீயர்களுக்கு மதம் ஒரு அபினி (opium) என்பது கருத்து . இந்த மூன்று கும்பல்களும் ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து வந்தனர்; தமிழர், மத்திய தரைக்கு கடல் பகுதியில் இருந்து வந்தனர் என்று எழுதினார்கள்.
இந்த மூன்று கும்பல்களும் இந்திய வரலாறு (600 BCE) கி.மு 600-ல்தான் துவங்கிறது என்று புஸ்தகம் எழுதி, அதை இந்தியாவில் சிலபஸில் சேர்த்துவிட்டு எகிப்து, பாரசீகம், தென் அமெரிக்க மாய, சீன, கிரேக்க நாகரீகங்களுக்கு அதற்கும் (3000 BCE) முந்தைய காலத்தை கொடுத்தது.
அருமையான புஸ்தகம்
1930ம் ஆண்டில் டில்லி பல்கலைக் கழக ஸம்ஸ்ருத விரிவுரையாளர் லச்சுமி தார் கல்லா ஆரியரின் தாயகம் ( The Home of Aryans by Pandit Lachhmi Dhar Kalla) என்ற ஆங்கில நூலை எழுதினார். அந்தக் காலத்திலேயே அத்தனை மொழியியல் பிரச்சினைகளுக்கும் உதாரணங்களுடன் பதில் கூறியுள்ளார். தில்லி பல்கலைக் கழகமே 2002-ல் அதை மீண்டும் வெளியிடும் அளவுக்கு அதில் சிறப்புகள் உண்டு.
அவர் சொன்ன கருத்துக்கள் (SINS OF PHILOLOGY )
மொழியியலின் பாவங்கள் (Sins of Philology) என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.
1. மொழியியல் அறிஞர்கள் இலக்கியமே இல்லாத, எழுத்து/ லிபி இல்லாத பல மொழிகளை ஸம்ஸ்க்ருததோடு ஒப்பிடுகிறார்கள். இது தவறு. வேத கால மொழியை அதற்கு சம கால மொழியோடு ஒப்பிட வேண்டும் .
2.. சம்ஸ்க்ருதத்தில் உள்ள இலக்கண விதி முறைகளை அந்த மொழிகளின் பிரயோகத்துக்குப் பயன்படுத்துகிறார்கள் அது தவறு. உலகில் ஆங்காங்கு புழங்கிய மொழிகளின் இலக்கணப்படி அந்த மொழிகளை ஆராய வேண்டும்
3. மேலும் ஒரு மொழியில் ஏற்படும் மாற்றங்களுக்கு வெளிநாட்டு மொழியின் தாக்கம் மட்டுமே காரணம் இல்லை. தாமாகவே மொழிகள் மாற்றத்தைக் கொண்டு வருகின்றன.
4. ஆரியர்கள் வெளியில் இருந்து இந்தியாவுக்குள் வந்தனர் என்று நம்பிக்கொண்டு ஆராய்கின்றனர். இதுவும் தவறு.
5. ஸம்ஸ்க்ருதாத்துப் புகழ் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஒரு கற்பனைத் தாய் மொழியை செயற்கையாகப் படைத்து, (Proto Indo European) அதிலிருந்து ஐரோப்பிய மொழிகள் வந்ததாகக் கூறுவதும் தவறு
6.மேலும் உலகம் முழுதும் சென்று உன்னத கருத்துக்களைப் பரப்புங்கள் என்று ரிக் வேதமும், அதர்வண வேதமும் கட்டளை இடுகின்றன. இதை தலை மேற்கொண்டு, வேத கால இந்துக்கள் வெளிவநாடுகளுக்குச் சென்று கலாசாரத்தைப் பரப்பினர்.
7. காஷ்மீரில் பூகம்பமும், இயற்கை உத் பாதங்களும் நடந்த பொழுது ஒரு பெரிய குழு வெளிநாடுகளுக்குச் சென்றது என்று லச்சுமி தார் கல்லா எழுதியுள்ளார்.
xxx
எனது கருத்துக்கள்
கல்லா சொன்ன எல்லா விஷயங்களும் நல்லாவே இருக்கு.
இதோ நான் தரும் உதா ரண ங்கள்
சங்க காலத்தில் பூசை என்று சொன்னார்கள்; இன்று நாம் அதை பூனை என்று மாற்றிவிட்டோம் .
சங்க காலத்தில் யான் என்று சொன்னார்கள்; இன்று நாம் அதை நான் என்று மாற்றிவிட்டோம் .
சங்க காலத்தில் பாண்டில்/ பண்டி என்று சொன்னார்கள்; இன்று நாம் அதை வண்டி என்று மாற்றிவிட்டோம்
இது போல நூற்றுக் கணக்கான சொற்களைக் காட்ட முடியும். காலப்போக்கில் வெளியார் தலையீடு இன்றி, மொழிகள் வேறு பல காரண ங்களால் மாறுபடுவதும் உண்டு என்பதை இவை காட்டுகின்றன.
வெளிநாட்டுத் தலையீடும் மாற்றத்தை உண்டாக்கும்; பிரெஞ்சு மொழியின் ஆட்சிக்கு உட்பட்ட தமிழர்கள் அவர்களுடைய பெயர்களை எழுதப் பயன்படுத்தும் ஸ்பெல்லிங் spelling குகளைப் பார்த்தால் இது தெரியும் . அது மட்டுமல்லாமல் இலங்கைத் தமிழர்கள் யார் தலை ஈடும் இன்றியே புதுப் பிரயோகங்களை செய்கின்றனர்.
இது ஒரு புறம் இருக்க, உச்சரிப்பு (Pronunciation) என்பது இன்றுபோல் அன்று இருந்ததும் இல்லை. வேதத்தை வட இந்தியர்கள் சில இடங்களில் மாறி உச்சரிப்பர். இது தென் இந்திய வேத பிராமணர்களுக்கு எரிச்சலை உண்டாக்கும் இது பற்றி உரையாற்றிய மஹா மேதையான காஞ்சிப் பெரியவர் வட இந்தியர்கள் தப்பு செய்யவில்லை என்றும் அவர்கள் பிராதிசாக்யம் (Pronunciation Guide) என்னும் உச்சரிப்பு புஸ்தக ப்படியே செயல்படுகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.
xxx
நான் வேறு சில உதாரணங்களைக் காட்டுகிறேன்
லண்டன் வாழ் இலங்கைத் தமிழர்கள் KANGA கனக, DURGA துர்க்கை முதலிய சொற்களை இந்தியத் தமிழர்போல உச்சரிக்காமல் தமிழ் மயப்படுத்தி KANAKA, THURKAI உபயோகிப்பர். தDHA ர்மர், தDHAமயந்தி, துDUர்கா போன்ற எழுத்துக்களை தமிழில் உள்ள த THA போல (THARUMAR, THAMAYANTHI, THURKA) பயன்படுத்துவர். க, ச, ட , த, ப என்ற எழுத்துக்களுக்கு தமிழைவிட 3, 4 எழுத்துக்கள் சம்ஸ்க்ருதத்தில் கூடுதலாக உள்ளன. இது தமிழில் இல்லாததால் பல மாற்றங்கள் ஏற்படும்
மேலும் ஈரான் முதல் ஜெர்மனி வரை- தமிழ் நாடு உள்ப ட சில சீரான ஏமாற்றங்களை உலகம் முழுதும் காண்கிறோம்.
ப- வ B=V மாற்றங்கள் ர-ல R=L மாற்றங்கள் முதலியன உலகெ ங்கும் காணப்படுகின்றன. அப்படி உலக மொழிகளுக்கு எல்லாம் பொதுவான இலக்கணம் எதுவும் இருந்ததில்லை (அஸ்வ/ அஸ்ப பாதர் – வாதர் என்று ஏராளமான எடுத்து காட்டுகளை அடுக்க முடியும்
Asva= Aspa (Avestan) – horse
Pitha = Vater (German)- father
Tapas= Tavam (Tamil) – penance
எழுதுவதும் உச்சரிப்பதும் வேறு வேறு. இலங்கைத் தமிழர் எண்ணிக்கை. முப்பது லட்சம் தான்; தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டுமே 70 மில்லியன்; அதாவது 7 கோடி.! பக்கத்தில் வாழும் இலங்கைத் தமிழர்கள் பல சொற்களின் பொருளை மாற்றிப் பயன்படுத்துகின்றனர்
BRENT பிரென்ட், CRICKET கிரிக்கெட், BOMBAY பம்பாய், NORWAY நார்வே என்பதை எல்லாம் எழுதுவதோ உச்சரிப்பதோ வேறு விதமாக உள்ளது. இதற்கு வெளியார் தலையீடு காரணமில்லை.
பம்பாயை மலையாளத்தான் போல போம்பே BO என்பர்.
நார்வேயை நொர்வே NO என்பர்
போலீசை பொலிஸ் PO என்பர்
கிரிக்கெட்டை கிறிக்கெற் CRICKERR என்றும் நான் லண்டனில் வாழும் பிரென்ட் பகுதியை பிரென்ற் BRENRR என்றும் எழுதுவர் ; உசசரிக்கும் போது டி brenT வரும்.
தொல்காப்பியரே 12 கொடுந்தமிழ் நாடுகள் பற்றி பேசுகிறார். உரைகாரர்கள் இதற்கு ஏராளமான உதாரணங்களைத் தந்துள்ளனர்
எல்லா தமிழர்களும் நன்றி என்று எழுதிவிட்டு உச்சரிக்கும்போது nanDri நன்ட்றி என்று உச்சரிக்கிறோம்
நற்றிணை என்று எழுதிவிட்டு உச்சரிக்கும்போது naTrinai நட்றிணை என்று உச்சரிக்கிறோம்
ஆங்கிலம், இத்தாலிய , பிரெஞ்ச்சு மொழிகளிலும் இது உண்டு
பிட்ஸா pizza = piTza , கிரீனிச் green(W) ich நாட்ஸி nazi= naTzi , நாரிச் Nor(W)ich , பிரான்ஸவா Francois மித்தரன் Mitterand, டேராடூன் Dehra Dun , சைக்காலஜி (P)sychology நாலெட்ஜ் (K)nowledge என்று அடுக்கலாம்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஒவ்வொரு மொழியிலும் விநோதங்கள், விசித்திரங்கள் உண்டு. இவைகளை வைத்து விஷமம் செய்வோர் மொழி இயல் விஷமிகள் (charlatans) !!
இதோ ஒரு எடுத்துக் காட்டு
துருக்கியில் போகஸ்கொய் என்னுமிடத்தில் கி,மு 1400 தேதியிட்ட கியூ னி பார்ம் லிபி கல்வெட்டில் 30, 40 ஸம்ஸ்க்ருத்ப் பெயர்கள் கிடைத்தன.அந்தச் செய்தியை அப்படியே அமுக்கிவிட்டனர். இந்தியாவில் எந்த புஸ்தகத்திலும் 10, 20 ஆண்டுகளுக்கு முன்னர் கூட இல்லை. காஞ்சி பராமசாரிய சுவாமிகள் மட்டும் அது பத்திரிக்கிகையில் வந்த காலத்திலேயே — சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்னரே – பேசியுள்ளார். இப்போது அதிலுள்ள தசரதன் TUSHRATA முதலிய பெயர்கள் பற்றி நீண்ட ஆரய்ச்சிக் கட்டுரைகள். அதிலும் கூட, கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை பாருங்கள், என்ற கதையாக எழுதுகின்றனர், ஆனால் இன்றும் கூட இலங்கை, மலேசிய மொரீஷஸ் , செஷெல்ஸ் தமிழர்கள் அந்தக் கல்வெட்டில் உள்ளது போலத்தான் THASARATHAN தசரதன் முதலீய பெயர்களை எழுதுகின்றனர்
அவர்களுக்கு– வெள்ளைக்காரர்களுக்கு — ஸம்ஸ்க்ருதத்துக்குப் புகழ் வந்து விடக் கூடாது என்பதற்காக புதிய தியரிகளை அடுக்கினார்கள் ஆனால் பிராஹுய் BRAHUI மொழி பற்றி இன்று வரை அயோக்கியக் கயவர்கள், ஒடு காலிகள் (SCOUNDRELS, RASCALS , பொய்களைப் பரப்பிவருகின்றனர் அது தமிழுடன் தொடர்புடைய திராவிட மொழி என்று சொல்லுவோருக்கு 5 தமிழ்ச் சொற்களைக் கூட காட்ட முடியவில்லை. வடிகட்டிய அயோக்கியர்கள் ( PUKKA SCOUNDRELS) வெள்ளைக்காரர்கள் ; இந்தியாவை பிரித்தாளும் சூழ்ச்சியில் பிறந்தது இந்த பிராஹுய் – திராவிட கொஞ்சல்!!
எவனாவது பிராஹுய் BRAHUI மொழி பற்றிப் பேசினால் அதிலுள்ள 10 தமிழ் சொற்களைச் சொல்லச் சொல்லுங்கள்; ஓடி ஒளிந்து கொள்வான்; உங்கள் முன்னிலையில் வரவே மாட்டான்
திராவிடர்களும் ஆரியர்களும் வெளிநாட்டிலிருந்து வந்ததாகக்கூறும் கால்டு வெல் கும்பலையும் மாக்ஸ்முல்லர் கும்பலையும் மார்க்ஸீயக் கும்பலையும் அயோக்கியர்கள் , கயவர்கள் (SOUNDRELS, RASCALS) என்று கூறுவதில் தயக்கம் கூடாது ;மஹாத்மா காந்தி, அம்பேத்கார், காஞ்சி சுவாமிகள் போன்றோர் மிகவும் மரியாதையுடன் சொன்னார்கள். நான் சுவாமி விவேகாநந்தா போல கடுமையாகச் சொல்கிறேன். இந்து மஹா சமுத்திரத்தின் அடியிலுள்ள சகதி, சேறு அனைத்தையும் வெளிநாட்டினர் மீது வீசுங்கள்; அப்படியும் கூட அவர்கள் இழைத்த கொடுமைக்கு பதிலடி கொடுத்ததாகாது
பண்டிட் லச்சுமி தார் கல்லா போலவே பி.எல்.பார்கவா P L BHARGAVA என்ற அறிஞர் எழுதிய நூலிலும் அற்புத விஷயங்களை சொல்கிறார் :-
தொடரும்…..
அயோக்கியர் , கயவர், மொழியியல் , கும்பல், லச்சுமி தார் கல்லா, இலங்கைத் தமிழ்