WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,874
Date uploaded in London – – 22 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
நடைமுறைச் சித்திரம்!
கோவிட் சீன்ஸ்!
ச.நாகராஜன்
“ஹலோ! எப்படி இருக்கே?”
“எப்படி இருக்கேனா? பயந்துண்டிருக்கேன். வீட்டை விட்டு வெளியிலேயே போறதில்லை.”
“குட்! அது தான் நல்லது. வெளிலே போகவே போகாதே! எதையும் வெளிலே வாங்கி சாப்டாதே! ட்விகி, ஏ7பின்னு எதையாவது அவங்ககிட்ட ஆர்டர் பண்ணி சாப்டாதே. சாப்ட்டா அவ்வளது தான். ஆள் குளோஸ்”.
“தேங்க்ஸ். உன்னை மாதிரி அட்வைஸ் பண்ண யார் இருக்கா எனக்கு… அது சரி, அங்க என்ன சத்தம். சீக்ரம் கொண்டா, பில்லு, கில்லுன்னு காதுல விழுதே.”
“ஓ! அதுவா! அர்ஜெண்டா சரவணாவுக்கு வந்தோம். இங்க மெதுவடையும் குலோப்ஜாமூனும் நன்னா இருக்குமோன்னோ.
ஹி. ஹி. அதான்.. சாப்டிண்டிருக்கோம். பக்கத்து டேபிள்ள இருக்கறவர் பில்லுக்கு சத்தம் போடரார்.
அது சரி நான் சொன்னதை நன்னா கேட்டுண்டியோன்னோ?!”
“ஆஹா! வெளிலே போகக்கூடாது. எதையும் வெளிலே சாப்டக்கூடாது. ஆர்டர்கூட பண்ணி வாங்கக் கூடாது. அவ்வளவு தானே! செஞ்சுடறேன். உங்கள மாதிரி இருக்கறவா சொன்னா அதில பொய் ஏதாவது இருக்குமாங்கறேன். தேங்ஸ்!”
***
“ஹலோ! எப்படி இருக்கே!”
“எப்டி இருக்கேனாவது! ஒரே சோகம். மச்சினனுக்கு சஷ்டி அப்த பூர்த்தி. கும்பகோணத்துலே. போகல. ஃபிரண்டு பொண்ணுக்கு நிச்சயதார்த்தம் சென்னைலே.. போகலே!”
“போகாதே. போகாதே. போனா உன்னையும் பொட்லமா கட்டி புதைகுழிலே இறக்கிடுவாங்க, தெரியுதா?”
“தேங்ஸ் ஃபார் யுவர் அட்வைஸ். பங்களூரில அரை மைல் தூரத்துல ஒய்ட்ஃபீல்டுல ஒரு ஃபங்ஷன். நெருங்கின நண்பர் வீட்ல. போக பயமா இருக்கு,”
“போகாதே, போகாதே! டபக்னு கொரானா பிடிச்சிக்கும். மூச்சு திணரும். வெண்டிலேட்டர் கிடைக்காது. உஸ். உஸ்..டுஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!.”
“ஐயையோ, மூச்சு திணற மாதிரி நீங்க சொல்ற போதே எனக்கு மூச்சு நின்னுடும் போல இருக்கு… அது சரி, அது என்ன ஸ்டேஷன் பிளாட்பாரம் போல ஒரு இரைச்சல் கேக்கறது? எங்க இருந்து பேசற?”
“ஓ! அதுவா, சென்னைலேர்ந்து மதுரை போயிண்டிருக்கேன். திருச்சி ஜங்ஷன்ல வண்டி வந்து நிக்கறது. அதான் ஒரே கூப்பாடு.
மதுரைலே கொஞ்சம் வேலை. ப்ரண்டு ஒரு நாடகம் போடப் போறான். வரானா, கொரானானுன்னு ஒரு பாட்டு !ஒத்திகைக்கு வரச் சொன்னான். தட்ட முடியல. அதான் போயிண்டிருக்கேன். அது இருக்கட்டும், நான் சொன்னதல்லாம் மனசில ஆச்சா?”
“ஆச்சாவாவது. கல்லுல செதுக்கின கல்வெட்டு மாதிரி இருக்கு, எங்கயும் வெளிலே போகக் கூடாது. போனா கொரானா டபக்னு பிடிச்சிக்கும். பொட்லம் கட்டிடுவாங்க. அப்டியே நடக்கறதை வாழ்ந்து காண்பிச்சு உங்கள மாதிரி சொல்ல இனிமே ஒரு ஆளு பிறந்து தான் வரணும்…”
“ஹி ஹி ஹி!”
*
“என்ன அங்க சத்தம்?”
“டிவி பாக்கறேங்க. தமிழ் நியூஸு. மெய் வளர்ப்போர் கழக தலைவர் மெய் நிதி பேசராறு!”
“என்ன சொல்ராறு தலைவரு!”
“கொரானா வேகமா பரவுது. கழகக் கண்மணிகளே ஜாக்கிரதை. மக்களே ஜாக்கிரதை. ஆறு அடி இடைவெளியைக் கடைப்பிடியுங்க! ஒருவருக்கும் இன்னொருவருக்கும் குறைந்தபட்சம் ஆறு இடைவெளி அவசியம். உங்கள் தும்மல் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் போகுது..மாஸ்க் போடுங்க.”
“அடடா, என்னமா பேசராரு பாரு! தலைவர் பேரு கார்ல் மாக்ஸுங்கறதை நிரூபிக்கிற மாதிரி அறிவியல் ரீதியாக மெய்யான விஷயங்களைச் சொல்ராறு பாரு. அந்த புதிய வழிமுறை சேனல் ரிபோர்ட்டர் என்னமோ சொல்ராரு பாரு என்ன அது?”
“ஓ! அதுவா! புதிய வழிமுறை ரிபோர்ட்டர் அறிவு நிதி வர்ணிக்கிறாரு கூட்டத்தை. இரண்டாயிரம் பேரு மட்டுமே கொள்ளும் ஹாலிலே நாலாயிரம் பேரு கூடிட்டாங்களாம். பாருங்க, இப்படி இடிச்சுட்டு நின்னு அன்பைக் காண்பிக்கிறாங்க மக்கள்… இது கழகத்திற்கும் சேனலுக்கும் கிடைத்த வெற்றியாம்…. மக்கள் தலைவர் கார்ல் மாக்ஸையும் அவர் பையன் புரட்சி நிதியையும் உண்மை சொல்லி வழி நடத்தறுதுக்கு ஒரு பாராட்டு விழா கடற்கரைலே நடக்கப் போகுதாம்… அங்க சுகாதார அமைச்சர் கீதாகிருஷ்ணன் இவர்களைப் பாராட்டி பொற்குவியல் தரப்போராறாம்!”
“அடடா! மக்களுக்குத் தான் என்ன அன்பு பாரு!”
நாம எப்படி வளர்கிறோம் பாரு!”
*
“மோடிஜி! நமஸ்தே! என்ன இப்படி இந்த எளிய தமிழ்நாட்டு ஏழை எழுத்தாளனை அவசரமா பேட்டி குடுக்க கூப்டிட்டு இருக்கீங்க.”
“ஒரே சோகமா இருக்கேம்பா?”
“எதையும் இரண்டு மூணு வார்த்தைலே பளிச் பளிச்னு சொல்வீங்களே, சொல்லுங்க என்ன சொல்ல வர்ரீங்க?” டக்னு சொல்லுங்க!”
“இவங்களைத் திருத்தவே முடியாதுப்பா!”
******
tags – கோவிட் சீன்ஸ்!