மொழியியல் விஷமங்கள்…… 3 கதைகள் – 2 (Post No.10,876)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,876

Date uploaded in London – –    22 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

மொழியியல் விஷமங்கள், விசித்திரங்கள், விநோதங்கள் என்ற தலைப்பில் நேற்று முன் தினம் முதல் பகுதியை எழுதி இருந்தேன். அதில் இலங்கைத் தமிழர்கள் எழுதுவது ஒன்று உச்சரிப்பது வேறு என்று காட்டி இருந்தேன். அவர்கள் மட்டும் அப்படிச் செய்யவில்லை. நானே பழங்கால தஞ்சாவூர் ஜில்லாவின் கீழ்வளூறில் பிறந்தவன்; என் தாத்தா, பாட்டி எல்லோரும் 85 என்ற எண்ணை எம்ளத்தைந்து  என்பர். ஆனால் எழுதும்போது 85 இருக்கும். இதே போல ஆங்கிலத்தில் ஏராளமான சொற்கள் உண்டு. எழுதுவது ஒன்று ; உச்சரிப்பது வேறு .

ஆங்கிலத்தில் இரண்டுமுறை ஈ ஈ e  e எழுத்துக்கள் வரும் சொற்களில் உச்சரிப்பு yar ‘யர்’. ஆங்கில உச்சரிப்பு தெரியாதோர் ஈர் ir என்றே உச்சரிப்பர்

Beer பியர், Engineer என்ஜினீயர், Deer டியர்   என்று உச்சரிக்க வேண்டும். எழுதுவது ஒன்று; உச்சரிப்பது வேறு; இது  போல  cois என்று எழுதினால் (பிரெஞ்சு) swaa  ஸ்வா என்று உச்சரிக்க வேண்டும். Francois = பிரான்ஸ்வா !

இது பற்றி முன்னர் எழுதிய சுவையான கதைகளைத் திரும்பச் சொல்கிறேன். ஏனெனில் இவை அனைத்தும் மொழி இயல் விஷயங்கள்.

இப்பொழுது மணிப்பூர்  மாநில கவர்னராகவுள்ள இல . கணேசன் 40, 45 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் ஆர். எஸ். எஸ் .பிரசாரகாக இருந்தார். நான் மதுரை மாவட்ட R S S ஆர் எஸ்.எஸ். செயலாளர்; அதாவது ஜில்லா கார்யவாஹ் ; இருவரும் ஆர்.எஸ் எஸ் . பரப்புரைக்காக பல இடங்களுக்கு பஸ்ஸிலோ சைக்கிளிலோ செல்வோம். நான் வேலை பார்த்த தினமணி ஆபீசுக்கு அடுத்த ஊர் ஐராவத நல்லூர் என்னும் ஊராகும். ஒரு முறை , அதற்கு நானும் இல. கணேசனும் பஸ்ஸில் சென்றோம். பஸ் டிரைவரிடம் ‘ஐராவத நல்லூருக்கு 2 டிக்கெட் கொடுங்க’ என்றேன். பஸ்  கண்டக்டர் உள்பட பலரும் என்னை ஏற இறங்கப் பார்த்தார்கள் ; யாரடா இந்த புதுப்பிறவி? என்று கேட்டது பார்வையில் தெரிந்தது. என் அருகில் அமர்ந்த கணேஷ்ஜி சிரித்துக்கொண்டே ‘அயிலானூருக்கு 2 டிக்கெட் தாங்க’ என்றார் . ஐராவத நல்லூரை  உள்ளூர் மக்கள் அப்படித்தான் சொல்லுவார்களாம். பக்கத்திலுள்ள தினமணி ஆபீசில் உதவி ஆசிரியராக பல்லாண்டுகள் பணியாற்றியும் எனக்கு அது தெரியவில்லை.

இந்தியாவிலிருந்து லண்டனுக்கு வரும்  அச்சுபிச்சுகளை,  வெள்ளைக்காரர்கள் எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். கிரீன்-வி-ச், நார்-வி-ச், லேய் ‘செஸ்டர்’ என்பர்.; இவை எல்லாம் தவறு கிரீனிச் ,லெஸ்டர் என்று சொல்லவேண்டும் ; அந்த வெள்ளைக்காரப் பயல்களும் அதையேதான் செய்தான் . தஞ்சாவூரை Tanjore டேஞ்சூர் , தூத்துக்குடியை Tuticorin டூட்டிகோரின் , சோழ மணடலத்தை (Coromandel) கோர மோண்டல் என்றெல்லாம் எழுதிவைத்தான். கிரேக்கர்கள் உலகம் முழுதுமுள்ள ஊர்களை சிதைத்தனர். பாடலி புத்திர நகரை பாலி போத்ரா என்றனர்; பாருகச்சத்தை ப்ரூச்Broach  என்றான் ; நான் சுருக்கமாக சொல்ல வருவது இதுதான்– “இலக்கிய ரீதியில் எழுதுவது ஒன்று; பேசுவது ஒன்று” .

துருக்கியில் கி.மு 1380 தேதியிட்ட 30, 40 ஸம்ஸ்க்ருதச் சொற்கள் அடங்கிய கல்வெட்டுகள் கிடைத்தன. இதை அப்படியே அமுக்கி விட்டனர். ஒரு சரித்திர புஸ்தகத்திலும் அப்போது கிடையாது. காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) மட்டும் இதை சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்னரே உபன்யாசங்களில் சொன்னார். இந்தோனேஷியாவின் போர்னியோ தீவில் மனிதர்களே நுழையாத காடு (Virgin Forest) என்று எண்ணி உள்ளே போனால் 1600 ஆண்டுகளுக்கு முந்தைய மூல வர்மன் கல்வெட்டுகள் இருக்கின்றன. இதையும் அவர்தான் உபன்யாசத்தில் சொன்னார். மஹா பாவிகளான வெள்ளைக்கார அயோக்கியர்கள் இதை மறைக்கப் பார்த்தனர் . நான் வரலாற்றுப் படத்தில் எம்.ஏ பட்டதாரி; அதில் கூட இவ்விஷயங்கள வரவில்லை. இப்போது விக்கி பீடியா  முதலிவற்றில் எளிதில் படிக்கலாம். இந்தக் கதையும் மொழியியல் சம்பந்தப்பட்டதே . துருக்கியில்  தசரதன், பிரதர்தனன் முதலிய பெயர்களும், ரிக் வேத இந்திரன், மித்திரன், வருணன், அக்கினி, நாசத்யன் (அஸ்வினி தேவர்கள்) முதலிய பெயர்களும் அடங்கிய கி.மு 1380 தேதி கல்வெட்டு கிடைத்தது. வெள்ளைக்கார புயல்களுக்கு ஒரே ஷாக் SOCK!. அடக்கடவுளே! 200 ஆண்டுகளாக , அதாவது சிந்து வெளி நாகரீக நகர்களைத் தோண்டிக் கண்டுபிடிப்பதற்கு முன்னதாகவே —, நாம் போய் சொல்லி வருகிறோம். ஆரியர்கள் கைபர் கணவாய்கள் வழியாக  உள்ளே வந்தனர் என்று;

துருக்கியிலோ 3400 ஆண்டுகளுக்கு முன்னரே ரிக் வேத மந்திரத்தில் உள்ள அதே ஆர்டரில்- வரிசையில்— வேத கால கடவுளர் பெயர், தசரதன் பெயர்கள் இருக்கிறதே என்று எண்ணி திகைத்தனர் ;  அவர்கள்தான் அயோக்கிய சிகாமணிகள் ஆயிற்றே ; அதில் தொல்காப்பிய சூத்திரப்படி, அல்லது இலங்கை, மலேசிய மொரீஷியஸ் தமிழர்கள் எழுதுவது போல தசரதன் Tushratta Spelling ஸ்பெல்லிங் இருந்தது. பார்த்தீர்களா, இது வேத காலத்துக்கு முந்திய ஸம்ஸ்க்ருதம் . முதலில் இப்படிப் பேசினார்கள். இந்தியாவுக்குள் வந்தவுடன் திராவிடர்களுடன் கலந்து உச்சரிப்பை மாற்றிவிட்டனர் என்று கதையை மாற்றிவிட்டனர்  !

அந்த நாய்களுக்குத் தெரியாது; இன்றும் தமிழர்கள் தசரதனையும் தமயந்தியையும் Tushratta, Tamyanthi, Puana wtc.  T ஸ்பெல்லிங் உபயோகித்து எழுதுகின்றனர் என்று!

“தெரியாது” என்று கூடச் சொல்லக்கூடாது. தெரிந்தும் தெரியதுபோல கட்டுரை எழுதும் ஈனப் பிறவிகள். (KANAGA DURGA)  கனக துர்க்கை அம்மன் கோவில் போர்டுகள் விஜயவாடாவில் என்ன SPELLING ஸ்பெல்லிங் உடன் இருக்கிறது. லண்டனில் என்ன ஸ்பெல்லிங் (KANAKA THURKAI) உடன் இருக்கிறது என்பதை அவர்கள் பார்க்கட்டும்; அதை மூஞ்சியில் விட்டு எறிய வேண்டும் .

அடுத்த கதைக்கு வருகிறேன்.

திருப்பராய்த்துறை

40, 45 ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பராய்த்துறை  என்னும் ஊரில் நடந்த RS S  முகாம் நிறைவு விழாவுக்குப் போனேன். திருச்சி பச ஸ்டாண்டி ல்  நின்று கொண்டு ஒவ்வொரு பசையும் நோட்டம் விட்டேன். பு டீ போர்டில் ஆட்கள் தொங்கிக்கொண்டிருந்த பஸ் வந்தது. ஊர் பெயர் திருப்பராய்த்துறை  என்பதை போர்டில் கண்டேன். முண்டி அடித்துக்கொண்டு பஸ்ஸில் ஏறினேன். இது திருப்பராய்த்துறைக்கு போகுமா என்று கேட்டேன்.இறங்கு, இறங்கு என்றது பஸ் கண்டக்டர் குரல். ஒரே குதியாக வெளியில் குதித்தேன். இந்தியாவில் இரு எதிர் எதிர் திசைகளில் செல்லும் பஸ்கள் ஒரே இடத்தில் நிற்கும் ஆதலால் இப்படிக் கேட்டேன். பத்து நிமிடத்தில் அடுத்த சிட்டி பஸ் CITY BUS  வந்தது. அதே கேள்வி; அதே பதில். இதை எல்லாம் ஒரு முதியவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். தம்பி இங்ககே வா. நீ எந்த ஊர் ? என்றார் . நான் மதுரையிலிருந்து வருகிறேன் என்றேன் . நான் நினைச்சேன்;  இப்படி சுத்தத் தமிழில் இங்கே பேசக்கூடாது. திருப்லாத்துறை அப்படின்னு சொல்லு என்றார் ; அப்போது என் பாட்டி சொன்ன எம்பளத்தைந்து  திருச்சியிலும் உள்ளது என்பதை புரிந்து கொண்டேன். கல்வெட்டுத் தமிழ் வாசகங்களைப் படித்தாலும் இப்படிப்பட்ட விநோதங்கள், விசித்திரங்களைக் காணலாம்..

To be continued

Tags- திருப்பராய்த்துறை, திருப்லாத்துறை, அயிலானூர் , உச்சரிப்பு

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: