WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,881
Date uploaded in London – – 23 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
எனக்கு திருச்சி பஸ் நிலையத்தில் நடந்த கஷ்ட நஷ்டங்களை திருப்பராய்த்துறை (திருப்லாத்துறை) ஆர்.எஸ்.எஸ். முகாமிலுள்ள சுவயம்சேவகர்களுடன் பகிர்ந்து கொண்ட போது அவர்களும் சிரித்துக்கொண்டே எங்கள் கன்யாகுமரி ஜில்லாவிலும் அழகான ஆரல்வாய் மொழி என்ற ஊரை ஆராம்பொலி என்றுதான் சொல்லுவார்கள் என்றார்கள்.
அடுத்த கதைக்கு வருகிறேன்
ஆங்கிலத்தில் முதல் எழுத்தான ஏ ‘A’ என்பதை எப்படியெல்லாம் உச்சரிக்கின்றனர் என்று பார்த்தால் அவர்கள்தான் இவ்விஷயத்தில் மிக மோசமான பேர்வழிகள் என்பது புரியும் ஸம்ஸ்க்ருதம் – தமிழ் இரண்டிலும் ம் +அ = “ம” என்றே சொற்களில் வரும்; ஆங்கிலத்திலோ இது வெவ்வேறு உச்சரிப்பில் வரும். இது போல நூற்றுக் கணக்கான எடுத்துக் காட்டுகளைத் தர முடியும்
Machine ,Machette, Mall, Mark,Mate , Make
XXXX
முன்னரே எழுதிய கதைதான். ஆகவே சுருக்கமாகச் செப்புகிறேன்
இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்ட காலம் :-
ஸ்கூலுக்கு இன்ஸ்பெக்ஷனுக்கு (SCHOOL INSPECTION) ஜில்லா கல்வி அதிகாரி DISTRICT EDUCATION OFFICER வந்தார்; அதற்கு முன் பள்ளியில், ஒரே தட புடல்; பள்ளி எல்லாம் சுத்தப்படுத்தப்பட்டது. ஆசிரியர் எல்லாம் சரியான டய (Time) த்துக்கு சரியான — டீக்கான – உடையில் வந்தனர். அதிகாரி வரும்போது என்ன பாடம் நடத்த வேண்டும்; திறமையைக் காட்டுவதற்காக எந்தப் பையனிடம் என்ன கேள்வி கேட்க வேண்டும் என்பதை எல்லாம் பத்து நாள் Rehearsal ரிஹர்சல் செய்தனர்; ஒத்திகை பார்த்தனர் .
வந்தார் அதிகாரி ; ஆங்கிலப் பாடம் நடக்கும் ஒரு வகுப்பில் திடீர் என்று நுழைந்தார் ; ஆசிரியர்க்கு ஒரே நடுக்கம்; இருந்த போதிலும் தனது கற்பிப்பதன் திற்த்தைக் காட்ட முன்னரே நிச்சயித்து இருந்த மாணவனை எழுப்பி ‘டேய் பையா! KVANOWLEDGE க்வானாலெட்ஜ் (KNOWLEDGE) என்ற சொல்லை எப்படி உச்சரிப்பாய் ? சொல், பார்ப்போம் என்றார் .
அவன் பயத்தில் நடுங்கிக் கொண்டே சொன்னான் “I DON’T KKUNOW ஐ டோன்ட் க்னோ (KNOW) ஸார்”
ஜில்லா கல்வி அதிகாரி சொன்னார் :-
போத் ஆப் யூ ஆர் (WRONG) உராங் BOTH OF YOU ARE WURONG
இந்த மூன்று ஆங்கிலச் சொற்களிலும் முதல் எழுத்துக்கு உச்சரிப்பு இல்லை. ஆனால் மூவரும் அதை தவறாக உச்சரித்தார்கள் இப்படிப் பல விநோதங்கள்.
இந்தியர்கள் உலகில் உள்ள எந்த மொழியியல் கொள்கைகளையும் காலில் போட்டு மிதித்துத் துவைத்து குப்பைத்தொட்டியில் தூக்கி எறிய முடியும். ஏனெனில் எல்லா இந்திய மொழிகளிலும் பேச்சு வழக்கு வேறு; எழுத்து வழக்கு வேறு DIGLOSSIA இதனால் சொற்கள் கன்னாபின்னா என்று உரு மாறும்; ஒலிக்கும்.உலகில் வேறு எந்த மொழித் தொகுதியிலும் இவ்வளவு மாற்றங்களைக் காண முடியாது. இதற்கு வெளிநாட்டினர் தொடர்ப்பு அல்லது கலாசாரத் தாக்கம் என்பது காரணமல்ல. மொழியின் இயற்கைப் போக்கு அது.
வெளித் தொடர்பினாலும் மாற்றங்கள் வரும். உலகின் முதல் இலக்கிய கர்த்தாவான பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னரே ர= ல, ப=வ மாற்றங்களை சூத்திரத்தில் செப்பி விட்டான். அப்போது கிரேக்க மொழியோ தமிழ் மொழியோ உலகில் இல்லை. கிரேக்கமும் எபிரேயமும் அப்போதுதான் துளிர்விடத் துவங்கின ; ஏனெனில் பாணினி சொன்னது புதிது அல்ல. அவனுக்கும் முந்தைய 64 இலக்கண அறிஞர்கள் சொன்னதோடு அவன் சிலவற்றைச் சேர்த்தான்.
ஏற்கனவே இது பற்றி ஆங்கிலத்தில் நிறைய எழுதியுள்ளேன்
கார்ன் CORN என்றால் அதை, மொழியியல் ரீதியில், தமிழில் குறுணை அல்லது சோளம் என்று சொல்ல முடியும் ; அதே கார்ன் CORN என்ற சொல்லுக்கு வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு அர்த்தம். தமிழில் பொன் என்பதை எப்படியெல்லாம் அர்த்தம் செய்யலாம் என்பதை முன்னரே காட்டிவிட்டேன்
பசு என்ற சொல்லுக்கு நெருங்கிய சகோதர COGNATE சொற்களை இந்திய ஐரோப்பிய மொழிகளில் காணலாம். ஆனால் பால் MILK என்பதற்கு வேறு வேறு சொற்கள்!
காளை மாட்டு முத்திரையை சிந்து வெளியில் காணலாம். ஆனால் 4000 முத்திரைகளில் ஒரு பசு மாடும் கிடையாது. சங்க இலக்கியத்தில் பரத்தையர் பாடல்கள் அதிகம்; 300 பாடல்களில் சங்கத் தமிழர்கள் தமிழன் போன தேவுடியாள் / பரத்தை பற்றிப் பாடியுள்ளான் ; இதற்காக தமிழனை எவரேனும் தரக்குறைவாகப் பார்க்க முடியுமா? எழுத்தை வைத்து எவனையுமே எடை போடாதே ; வெள்ளைக்காரன் சொல்லுவதை நம்பாதே என்பதுதான் இதிலிருந்து கிடைக்கும் நீதி.
மல்லி விலை | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ம…
5 Dec 2020 — tamilandvedas.com, swamiindology.blogspot.com … திருப்பராய்த் துறை – திருப்ளாத்துறை.
tags- ஜில்லா கல்வி அதிகாரி, பரத்தை, பாடல்கள், ஆரல்வாய் மொழி