Post No. 10,885
Date uploaded in London – – 24 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
‘கந்தர்வானாம் சித்ரரதஹ’ — பகவத் கீதை 10-26
‘கந்தர்வர்களில் நான் சித்திரதன்’ – கிருஷ்ண பரமாத்மா (B G 10-26)
பகவத் கீதையில் நிறைய மர்மமான , சுவையான, பொருள் விளக்கப்படாத சொற்கள் நிறைய உள . அவைகளை யாரும் கண்டு கொள்வதே இல்லை. ஏனெனில் கீதை என்பது ஒரு ஆன்மீக நூல். அதில் வரக்கூடிய வேறு விஷயங்கள் மற்றும் உவமைகள் பற்றி விளக்கத் தேவை இல்லை என்று பாராமுகமாக இருந்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட சொற்களில் சித்ர ரதன் என்னும் கந்தர்வ மன்னன், உசன கவி என்னும் பழங்காலப் புலவர், உச்சைஸ்ரவஸ் என்னும் குதிரை, ஐராவதம் என்னும் யானை , வாசுகி என்னும் பாம்பு, மிருக ராஜா சிங்கம், பறவை ராஜா கருடன் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்..
இந்தச் சொற்களில் கச்ச தேவயானி போன்ற சில திரைப்படங்களால் சுக்ராசார்யார் அவருடைய தந்தை உசன கவி பற்றி கொஞ்சமாவது வெளி உலகிற்குத் தெரியும். சுக்ராச்சார்யார் அசுரர் குரு என்பதால், தேவர்களும் அசுரர்களும் நம்மவர்களே என்பதும் வெளிநாட்டுப் பறங்கித் தலையர் கூறுவது போல அவர்கள் இந்துக்களின் எதிரிகள்– அதாவது வேற்று இனத்தினர் – என்பது பொய்யென்றும் புலப்படும். மேலும் இந்திரன், அக்கினி, வருணன் , ருத்ரன் முதலிய தெய்வங்களை அசுரர் என்று அழைக்கும் பழைய பகுதிகளும் உலகிலேயே பழைய நூலான ரிக்வேதத்தில் இருப்பதும் கண்கூடு.
மேலும் தமிழர்களுக்கு மிகவும் முக்கியமானவர் உசன கவி; ரிக்வேத காலத்திலேயே இவர் பழங் காலப் புலவர் ஆகிவிட்டார். அவர் மரபில், அதாவது காப்பிய குடியில் வந்தவர்தான் நமது பெருமைமிகு “ஒல்காப் புலவன் தொல்காப்பியன்”, மற்றும் சங்கப் புலவர் காப்பியாற்றுக் காப்பியனானர்.
கவி= காவிய = காப்பிய என்பதை மொழியியல் வல்லுநர்கள் அறிவர்.இவை ஒரு புறமிருக்க இன்றைய தலைப்புக்கு வருவோம்.
சித்திர ரத என்னும் சொல்லே சுவையான சொல். ஏனெனில் இந்த ஸம்ஸ்க்ருதச் சொல் நூற்றுக் கணக்கான இடங்களில் பழைய நூல்களில் வருகிறது எவருமே ஆராயவில்லை. ஆராய்ந்தால் டாக்டர் பட்டம் கிடைக்கும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சங்கத் தமிழ் பாடல்களை இயற்றிய 450 புலவர்களில் ஒருவர் பெயர் பெருஞ் சித்திரனார் ; ஸம்ஸ்க்ருதத்தில் மஹா சித்ரன் . அதே பெயரில் ரிக் வேதத்தில் ஒரு புலவர் இருக்கிறார்; அவர் பெயர் சித்ர மஹா வசிஷ்ட.
பெருஞ் சித்ரனார் பாடிய பாடல்கள் புறநானுற்றில் இருக்கின்றன; அவை கடை ஏழு வள்ளைகளைப் புகழ்வதால் சங்க கால இறுதியில்- அதாவது 1700 ஆண்டுகளுக்கு முன்னர் — வாழ்ந்திருக்க வேண்டும். அவர் மன்னர்களின் வள்ளன்மையைப் புகழும்போது மழை போலப் பொழிகிறார்கள் என்பார். இதுவும் ரிக் வேத உவமை.
புறநானூ ற்றில் பெருஞ் சித்திரனார் (மஹா சித்ரன்) பாடிய பாடல்கள் :- 158 முதல் 163 வரை; 207, 208, 237, 238
xxx
ரிக் வேத மன்னன் ஒருவன் பெயர் சித்ரன். அவரைப் பற்றிக் காண்பதற்கு முன்னதாக ‘சித்ர’ என்ற சொல் பற்றிய சுவையான விஷயங்களைச் சொல்கிறேன் :-
தமிழர்களுக்கு முதல் முதலில் என்சைக்ளோபீடியா உண்டாக்கியவர் சிங்கார வேலு முதலியார். அவர் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் ‘அபிதான சிந்தாமணி’ என்ற பெயரில் இதை அச்சி ட்ட்டார் .
(இங்கு லண்டனில் எனது டேபிளில் எப்போதும் இருக்கும் நூல்களில் இதுவும் ஒன்று)
xxxx
அபிதான சிந்தாமணியில் 50-க்கும் மேலான ‘சித்திர’ — சொற்களைக் காணலாம். பல நதிகள், மலைகள், ஓவியங்கள், கவிகள்/பாடல்கள் முதலியவற்றுடன் சித்ர முன் ஓட்டாக (Prefix) வரும். அவற்றில் இன்றைய தலைப்பில் உள்ள சித்திர ரதன் கீழ் 15 விளக்கங்கள் உள . அவர்களில் பகவத் கீதையில் கண்ணன் சொன்ன சித்திரதன் யார் என்பதை ஆராயவே இக்கட்டுரை. மர்மத்தைத் துலக்க முயற்சிக்கிறேன் .
ஒரு எச்சரிக்கை !
அகஸ்தியர், வசிஷ்டர் போன்ற பெயர்கள் வரும் போது எந்த அகஸ்தியர் என்று அறிய வேண்டும். இந்திரன் என்ற பெயரில் ஆயிரத்துக்கும் மேலான மந்திரங்கள் ரிக் வேதத்தில் உள்ளன; வெள்ளைக்காரப் பயல்களையும், மார்க்சீய, திராவிடக் கும்பல்களையும் திணறடித்து உளரவைத்த சொல் இந்திரன்; காஞ்சி பரமாசார்ய சுவாமிகளின் (1894-1994) உபன்யாசங்களைப் படித்தோருக்கு இந்திரன் என்பது ஒரு ஆள் அல்ல. அது போப்பாண்டவர், சங்கராசார்யார், தலாய் லாமா , முதலமைச்சர், பிரதம மந்திரி என்பது போல ஒரு டைட்டில் Title என்பது.
போப்பாண்டவர்களில் (இலங்கைத் தமிழில் பாப்பரசர் ) 23 பேருக்கு ஜான் John என்று பெயர்; எகிப்திய மன்னர்களில் 11 மன்னர் பெயர்கள் ராம் செஸ் Rameses (ரமேஷன் அல்லது ராம சேஷன்). தச ரதர் என்ற பெயர்களில் 5 மன்னர்கள் உண்டு. ஒருவர் அசோக சக்ரவர்த்தியின் பேரன். ராமாயண தசரதனை நாம் எல்லோரும் அறிவோம் . துருக்கியை கி.மு 1400-ல் ஆண்ட தசரதனின் கடிதங்கள் எகிப்தில் அமர்னா கடிதங்கள் (Amarna Letters) என்ற பெயரில் உள்ளன ; இந்த 5 பேருடன் என் விருதுநகர் நண்பர் தசரத நாடாரென்பவரையும் சேர்த்துக்கொள்ளலாம் . வெளிநாட்டுக்கார்கள் புத்திசாலிகள் .தற்காலத்தில் புஸ்தகம் எழுதும் போது ஜான்-11, ஜான் 23 என்று கைதி போல நம்பர் போட்டு விடுகின்றனர். நாம் அகஸ்தியர் 27 என்று நம்பர் போடாமல் எழுதியதால் மஹா குல , குள , குய ……… குழப்பம் !!!!
இவ்வளவு பீடிகை எதற்கென்றால் கிருஷ்ண பரமாத்தமா பகவத் கீதையின் பத்தாவது அத்தியாயத்தில் சொன்ன சித்திரரதன் யார் ?
இந்த மர்மத்தைத் துலக்க கீழ்கண்ட ரிக் வேத மந்திரம் உதவுகிறது. இது என் ஆராய்ச்சி!! பகவத் கீதைக்கு உரை எழுதிய மஹாத்மா காந்தியோ, வினோபா பாவேயோ , பால கங்காதர திலகரோ, திருப்பராய்த்துறை சுவாமி சித்பவானந்தரோ ராமகிருஷ்ணமடத்தின் அறிஞர் அண்ணாவோ , இன்னும் நூற்றுக்கணக்கான சாமியார்களோ சொல்லவில்லை ; ஏனெனில் அவர்களெழுதியது ஆன்மீக உரை.
இதோ ரிக்வேத வரிகள் :-
8-21-17
பகைவனுக்கு இந்திரனா இத்தனை பெருஞ் செல்வத்தைத் தந்தான்? செளபாக்கியவதியான சரஸ்வதியா செல்வத்தைத் தந்தாள்? அல்லது சித்திரனே , நீயா?
8-21-18
சித்திரனே அரசன் ! ஸரஸ்வதி நதியின் கரையில் வசிக்கும் மற்றவர்கள் எல்லாம் சிற்றசர்களே . அவன் எல்லையற்ற ஆயிரக்கணக்கான தானங்களால் , மழையால் இன்புறுத்தும் பர்ஜன்யனைப் போல, இந்த நிலவுலகத்தை ஆனந்தத்தில் ஆழ்த்தினான்.
இதில் ‘சித்ரன்’ என்றே உளது; ஆனால் ‘சித்ர ரதன்’ என்பதை நாம் ஊகித்தறியலாம் . அது சரி, பகவத் கீதையில் கிருஷ்ணன் ‘கந்தர்வர்களில் நான் சித்திர ரதன்’ (ப.கீ. 10-26) என்றல்லவா சொல்கிறார். இங்கு ‘கந்தர்வர்’ என்பதும் இல்லையே? என்பர் சிலர்.
இதில் மேலும் ஒரு சுவையான செய்தி வருகிறது. சிந்து சமவெளி நாகரீகம் என்பது சரஸ்வதி உள்ளிட்ட ஏழு நதிகளின் பூமி (சப்த சிந்து) என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள். அது ஒருகாலத்தில் கந்தர்வர் கீழே இருந்தது. அங்கு பாரத நாட்டியம் ஆடும் பெண்மணியின் சிலையும் நமக்கு கிடைத்துள்ளது. ராமாயண லவ, குசர்கள் சிந்துவெளியையும் தம் வசமாக்கிய செய்தியும் நமக்குத் தெரியும் (சிந்து சமவெளி பற்றிய எனது 25 ஆராய்ச்சிக் கட்டுரைகளை படிக்கவும்)
சரி யார் இந்தக் கந்தர்வர்கள்? சித்திர ரதன் கதை என்ன ?
வெள்ளித் திரையில் காண்க !!!
— தொடரும்
tags- ரிக் வேத மன்னன், சித்ரன், கந்தர்வர்கள், சித்திர ரதன், பகவத் கீதை, 10-26