WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,887
Date uploaded in London – – 25 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
இந்தோனேஷியாவில் சப்தபலோன் கொடுத்த சாபம்! – 1
ச.நாகராஜன்
ஆச்சரியம்! ஆனால் உண்மை!!
இது உண்மையில் நம் முன்னே இப்போது நடக்கும் சம்பவம்.
23-10-2021 அன்று திவாகர் தத்தா ஹோம் நியூஸ் ரிபோர்ட்ஸ் வோர்ல்ட் – இல்
தரும் செய்தி இது. (Dibakar Dutta writes in Home News Reports World on 23 Octobeer 2021)
மஜபஹித் சாம்ராஜ்யத்தின் மன்னனான ஐந்தாம் ப்ரவிஜயன்(King Brawijaya V of the Majapahit Empire). 1478ஆம் ஆண்டு ஹிந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினான். அப்போது ஹிந்து குருவான சப்தபாலன் ( Hindu Priest Sabdapalon) அது பொறுக்க மாட்டாமல் ஒரு சாபம் கொடுத்தார். தானே 500 வருடங்கள் கழித்து வந்து ஹிந்து தர்மத்தின் புகழை நிலை நிறுத்துவதாக அவர் கூறினார்.
2021 அக்டோபர் 26ஆம் தேதி.
இந்தோனேஷியாவில் பாலியில் சுக்மவதி சுகர்ணோபுத்ரி இஸ்லாமிலிருந்து ஹிந்து மதத்திற்குத் திரும்பப் போவதாக அறிவிப்பு வெளியானது..
சுக்மவதி சுகர்ணோபுத்ரி இந்தோனேஷியாவை நிறுவிய ஸ்தாபகரான சுகர்ணோவுக்கும் சுகர்ணோவின் மூன்றாவது மனைவியான பத்மாவதிக்கும் பிறந்தவர்.
அவர் இந்தோனேஷியாவின் ஐந்தாவது ஜனாதிபதியான மேகவதி சுகர்ணோபுத்ரியின் சகோதரியும் ஆவார்.
இந்தோனேஷியானின் ஆட்சிபீட அதிகாரத்தில் சக்தி வாய்ந்த குடும்பத்தில் ஒருவராக அமையும் சுக்மவதியின் இந்த தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சி மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
பாலியைச் சேர்ந்த அவரது பாட்டியார் இடா ஆயு ந்யோமன் ராய் ஸ்ரிம்பென் அவர்களின் ஊக்குவிப்பே இதற்குக் காரணமாகும்.
இதற்கு முன்னரே சுக்மவதி பல ஹிந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்; ஹிந்து மடாதிபதிகள் பலருடனும் பேசியுள்ளார்.
இப்படி அவர் ஹிந்துவாக மாற அவரது சகோதரர்களான குண்டூர் சோயகர்ணோபுத்ர மற்றும் குரு சோயகர்ணோபுத்ர ஆகியோரும் சகோதரியான மேகவதி சுகர்ணோபுத்ரியும் ஆதரவு தந்துள்ளனர்.
அவரது மகன் மற்றும் மகளான முஹம்மத் புத்ர பெரிவிரா உடாமா, இளவரசர் ஹர்யோ பாண்றஜர்னா சுமத்ரா ஜிவானெகரா மற்றும் குஸ்தி ரடன் ஆயு புத்ரி சினிவதி ஆகியோரும் இதற்கு ஆதரவாக உள்ளனர்.
சுகர்ணோ மையம் பாலியிலிருந்து இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இன்று இந்தோனேஷியா தான் மிகப் பெரிய இஸ்லாமிய நாடாக உள்ளது. முன்னொரு காலத்தில் இந்த தீவில் ஹிந்து மதம் செல்வாக்குள்ள ஒரு மதமாகத் திகழ்ந்தது.
கி.பி.முதல் நூற்றாண்டில் ஜாவா, சுமத்ரா ஆகியா தீவுகளில் ஹிந்து மதம் பரவியது. 15ஆம் நூற்றாண்டு வரை இதன் புகழ் மங்கவில்லை.
இஸ்லாமின் வருகையை ஒட்டி ஹிந்து மதம் க்ஷீணமடையத் தொடங்கியது.
இந்த நாடும் இஸ்லாமியர் அதிகமுள்ள நாடாக மாறியது.
இன்று இந்தோனேஷியாவில் உள்ள ஹிந்துக்கள் அவர்களின் முன்னோர்களான மன்னன் ஜயபய மற்றும் குரு சப்தபாலனின் தீர்க்கதரிசன வாக்கைப் பெரிதும் நம்புகின்றனர்.
சப்த பாலனின் தீர்க்கதரிசன வாக்கு
சப்தபாலன் மன்னன் ஐந்தாம் ப்ரவிஜயனின் அரசவையில் செல்வாக்குள்ள ஒரு ராஜகுருவாக இருந்தார். 1478ஆம் ஆண்டு அந்த நாடு இஸ்லாமியரிடம் வீழ்ச்சி அடையும் சமயம் அவர் இஸ்லாமுக்கு மாறினார்.
சப்தபாலன் மன்னனுக்கு சாபம் அளித்தார்.
தான் இன்னும் 500 ஆண்டுகளில் அரசில் லஞ்சம் தாண்டவமாடும் போது, இயற்கை சீரழிவுகளின் போது மீண்டும் வருவதாக சபதமிட்டார்.
இஸ்லாமின் பிடியிலிருந்து இந்தோனேஷியாவை விடுவிப்பதாக அவர் சபதமிட்டதோடு மீண்டும் பழைய புகழுடன் ஹிந்து மதத்தை நிலைநாட்டப் போவதாகவும் அறிவித்தார்.
கல்பவிருக்ஷத்தின் படி சப்தபாலனின் கூற்று இது தான்:
ஜாவா நாட்டில் டான் ஹ்யாங் (தேவர்களுக்கும் ஆவிகளுக்கும்) மற்றும் ராணிக்கும் ஊழியன் நான். விகௌ மனுமானஸா, சகுட்ரம், பம்பாங் சக்ரி தொடங்கி பரம்பரை பரம்பரையாக இன்று வரை நான் ஜாவா அரச குடும்பத்தின் ஊழியனாவேன். 2000 ஆண்டுகளாக இன்று வரை ஒன்றும் இங்குள்ளோரின் மதத்தில் எதுவும் மாறவில்லை. ஜாவானிய அரச வமிசத்தாருக்கு நான் ஊழியம் செய்யவே உள்ளேன். இதோ, இன்று நான் விடை பெறுகிறேன். எனது மூலத்திற்கு நான் திரும்புகிறேன். ஆனால் நமது அரசருக்கு ஒன்று மட்டும் நினவில் இருக்கட்டும், 500 வருடங்கள் கழித்து நான் மீண்டும் நம் மதத்தை நிலை நாட்டுவேன்.”
சப்தபாலன் தீர்க்கதரிசனவாக்காகக் கூறியது “ எனது அரசனே! நீங்கள் இஸ்லாமுக்கு மாறினால் உங்கள் வம்சம் அழிந்து படும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஜாவானியர்கள் ஜாவாவை விட்டுச் செல்வர். ஜாவானியர்கள் மற்ற நாடுகளைப் பின்பற்ற வேண்டி வரும்.
ஆனால் வருங்காலத்தில் ஒரு நாள் உலகம் ஜாவானியர்களால் வழி நடத்தப்படும்.
தான் மறையும் முன்னர் சப்தபாலன் ஒரு எச்சரிக்கையை விடுத்தார்:
“ 500 வருடங்கள் கழித்து நான் வந்து ஆன்மீகத்தை ஜாவாவெங்கிலும் மீண்டும் புனருத்தாரணம் செய்வேன். இதை மறுப்பவர்கள் அழிந்து படுவர். அவர்கள் அரக்கர்களுக்கு இரையாவர். அவர்கள் அனைவரும் ஒழிந்துபடும் வரை நான் திருப்தி அடைய மாட்டேன்.”
அவர் ஜனங்களை நோக்கி தன் வருகை குறித்தும் கூறினார்:
“ மவுண்ட் மெராபி பொங்கி எரிமலைக் குழம்பு தென்மேற்கில் பரவி கோரமான நாற்றத்தைத் தரும் போது நான் வருவதற்கான அறிகுறி அது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.”
இதை மெய்ப்பிக்கும் வகையில் 1978ஆம் ஆண்டு ஹிந்து கோவில்கள் இந்த தீவில் கட்டப்பட்டன. ஏராளமான முஸ்லீம்கள் தாய்மதமான ஹிந்து மதத்திற்கு திரும்பினர். மவுண்ட் செமெருவும் பொங்கி வழிந்தது.
இதுவே சப்தபாலன் வருவதற்கான அறிகுறி என அனைத்து ஹிந்துக்களும் நம்பலாயினர்.
***
தொடரும்
TAGS- இந்தோனேஷியா, சப்தபலோன், சாபம், சப்தபாலன், சுக்மவதி , மேகவதி சுகர்ணோபுத்ரி