compiled BY KATTU KUTTY , CHENNAI
Post No. 10,888
Date uploaded in London – – 25 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
ஞான மொழிகள்- 38 contd…..
கண்ணால் கெடுவது விட்டில்,
காதால் கெடுவது மான்,
நாவால் கெடுவது மீன்,
மூக்கால் கெடுவது வண்டு,
ஸ்பரிசத்தால் கெடுவது யானை,
ஐம்புலன்களினாலும் கெடுவது மனிதன்
xxxx
படுத்தே இருப்பவர்க்கு பாயும்,
பேசியே திரிபவர்க்கு வாயும்,
பகையாகும்.
ஆரோக்யத்திற்கு பாயையும்,
ஆனந்ததிற்கு வாயையும்
சுருட்டுதல் நலமாகும்.
Xxxx
முயலின் வெற்றி அதன் காலில்,
பெண்ணின் வெற்றி நடத்தையால்,
மனிதனின் வெற்றி அவன் பெருந்தன்மையால்!!!
தீப்பெட்டித் தொழிலில் வேலை பார்க்கும் சிறுவனே!
நீ சிலுவையைச் சுமக்கும் சின்ன ஏசு!!!
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்,
கருணையுள்ள நெஞ்சிலே கோவில் கொள்கிறான்!!!
XXXX
ஞான மொழிகள்-45
Kattu kutty
ஸ்மார்ட் மொழிகள்!
பழமொழி படித்திருப்பீர்கள் முதுமொழி படித்திருப்பீர்கள்
ஆனால் smart மொழி படித்திருக்க மாட்டீர்கள்
1 . அகத்தின் அழகு status இல் தெரியும் .
2 . like இட்டவரை உள்ளளவும் நினை .
3 . இக்கரை மாட்டுக்கு அக்கரை google maps
4 . அழுத பிள்ளை games விளையாடும் .
5 . block பண்ணின பூனை chat இனை நாடாது .
6 . பல நாள் திருடன் cctv இல் அகப்படுவான்
7 . iphone apple சாப்பிட உதவாது
8 . பழகப் பழக PUBG உம் விளங்கும்
9 . ஓசி wifi உள்ள போதே download பண்ணிக் கொள்
10 . சீனா தேசம் சென்றாலும் ஊர் roaming ஐ வைத்துக் கொள்
.
11 . அன்பான சினேகிதனை wifi hotspot இல் அறியலாம் .
12 . இறக்கப் போனாலும் selfie எடுத்துட்டு போ .
13 . unlimited data என்றால் பிணமும் வாய் பிளக்கும் .
14 . சொறி பிடித்தவன் கையும் smartphone பிடித்தவன் கையும் சும்மா இருக்காது .
15 . comments மேல் comments அடித்தால் post உம் நிறையும் .
16 . 20’s kids கு தெரியுமா 90’s kids இன் அனுபவங்கள் .
17 . முற்பகல் post செய்யின் பிற்பகல் viral ஆகும் .
18 . i phone 11 pro கு கொட்டாவி விடாதே .
19 . 4G இல் download ஆகாதது 2G இல் download ஆகுமா ?
20 . திக்கற்றவனுக்கு Google maps ஏ துணை
***
TO BE CONTINUED……………………
tags- காதால் கெடுவது மான், நாவால் , மீன், ஞான மொழிகள், ஸ்மார்ட் மொழிகள்!