Post No. 10,890
Date uploaded in London – – 25 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
பகவத் கீதையில் சுவையான சொல் சித்திரரதன் -2
கட்டுரையின் இரண்டாவது பகுதி இது ; முதல் பகுதியில் பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் “கந்தர்வர்களுள் நான் சித்திரரதன்” என்று சொன்னதையும், ரிக் வேதம் “சிந்து சமவெளியை ஆண்ட சித்ரன் என்ற அரசனே அரசன்; மற்றவர் எல்லோரும் சிற்றரசர்கள்” என்று புகழ்வதையும் கண்டோம்.
இதில் நமக்கு முக்கியமான செய்தி கிடைத்தது. அதாவது சரஸ்வதி- சிந்து நதி நாகரீகத்தில் சித்ரன் என்ற ஒரு வள்ளல் இருந்தான் என்று.
அதைவிட சுவையான செய்தி கிடைத்துள்ளது. கீத்- மெக்டொனால்ட் வெளியிட்ட வேத கால சொல் அட்டவணையில் (Vedic Index வேதிக் இன்டெக்ஸ்):– சோபரி என்னும் கவிஞர் அவரை (சித்ரன்) எலி என்று சொன்னதாகவும் எழுதி இருக்கின்றனர். கேரளத்தை எலி வம்சம் (மூஷிக Mushika Dynasty) ) ஆண்டதை நாம் அறிவோம். அதற்கும் சித்ரனுக்கும் உள்ள தொடர்பை ஆராய வேண்டும்
xxxx
மார்ட்டன் ஸ்மித் (Dates and Dynasties in Earliest India by R Mortan Smith) என்பவர் இந்திய அரசர்களின் காலம் என்ற நூலில் சித்ரரத யாதவ் என்ற மன்னரை கி.மு.1580ல் வைக்கிறார். ஆகவே ‘சித்ர’ என்ற சொல் வரும் இடங்களை இந்திய அறிஞர்கள் மகாநாடு கூட்டி ஆராய வேண்டும் . அது மட்டுமல்ல ; சிந்து–சரஸ்வதி நதி தீர மன்னர் பட்டியலில் உள்ள, பாரி போலவும் ,மாரி போலவும், வாரி வழங்கிய சித்ரனை ஆராய வேண்டும்.
xxx
இனி மஹாபாரதம் சொல்லும் சித்ரரதன் கதைகளைக் காண்போம்.
சித்ரரதன் எண் 1
இவன் கந்தர்வர்கள் தலைவன். பாண்டவர்கள் ஏக சக்ர நகரிலிருந்து, பாஞ்சாலம் (தற்கால பஞ்சாப்) நோக்கிச் சென்றபோது அவர்களைத் தடுத்து நிறுத்தியவன். அர்ஜுனன் , அந்த சித்ரரதனைப் பிடித்துக் கட்டிப்போட்டவுடன் அவனுடைய மனைவி கும்பிநாசி கெஞ்சியதால் சித்ரரதனை விடுவித்தான். அதற்குக் கைமாறாக சில தெய்வீக ஆயுத ரகசியங்களை (Modern Weapons from Alien World) அவன் அர்ஜுனனுக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டு, என்றுமே களைப்பு அடையாத தெய்வீக குதிரைகளையும் பரிசாகத் தந்தான் . புறப்படுவதற்கு முன்னர் ஒரு புரோகிதரை உதவிக்கு நியமித்துக் கொள்ளுங்கள் என்று ஆ லோசனையும் வழங்கினான் சித்ரரதன்.
எனது கருத்து
‘என்றுமே களைப்பு அடையாத’ என்பது குதிரை பொம்மை பூட்டிய நவீன எந்திரங்களாக இருக்கலாம். ஏனெனில் இதற்கு அடுத்து வரும் பகுதி வெளி உலக (Extra Terrestrial) தெய்வீக ஆயுதங்கள் பற்றி இயம்புகிறது .
XXX
சித்ரரதன் எண் 2
இவன் முன் காலத்தில் அங்க தேசத்தை ஆண்டவன் . பிரபாவதியின் சகோதரியான ருசியை மணந்தவன் .
எனது கருத்து
என்ன அதிசயம் பாருங்கள் ! மஹாபாரத யுத்தம் நடந்து 5000 ஆண்டுகள் ஆனதாக இந்துக்கள் நம்புகின்றனர். அவ்வாறே பஞ்சாங்கத்தில் கலியுக ஆண்டுகளை காண்கிறோம். அதற்கு முன்னரும் பெண்களின் பெயர்கள், நதிகளின் பெயர்கள் “வதி” என்னும் பின்னொட்டுகளுடன் (suffix) முடிவதை ரிக்வேதமும் காட்டுகிறது. இன்றும் கூட நாம் பிரபாவதி, ருசி என்று குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுகிறோம். ஆனால் ‘சித்ர’ என்ற பெயர்களை ஏன் விட்டுவிட்டோம் என்று ஆராய வேண்டும்.
XXX
சித்ரரதன் எண் 3
இந்த சித்ரரதன் பாஞ்சால இளவரசன் . அவன் மஹாபாரத யுத்தத்தில் துரோணரால் கொல்லப்பட்டான். அவனுடைய சகோதர்கள் பெயர்கள் – வீரகேது, சித்ரகேது , சுதன்வா , சித்ரவர்மா .
XXX
சித்ர சேன
இந்த மனிதர் பற்றிதான் நீண்ட கதை உள்ளது. ஒருவேளை இவருக்கும் சித்ரரதன் என்னு பெயர் இருந்திருக்கலாம் . மஹாபாரதம் வன பர்வத்தில் வரும் கதை இதோ :-
இவர் கந்தர்வர் தலைவன்.
அர்ஜுனன் (Divine Weapons) தெய்வீக ஆயுதங்களைப் பெறுவதற்காக வானுலகத்தில் 5 ஆண்டுகள் வசித்தான் . சொர்க்கத்தில் வசித்த சித்திரசேனன், இந்திரன் கட்டளைக்கு இணங்கி அர்ஜுனனுக்கு சங்கீதம், நடனம் ஆகியவற்றைக் கற்பித்தான் . சித்ரசேனனுக்கு அர்ஜுனனை மிகவும் பிடித்துவிட்டது. அர்ஜுனனை மீண்டும் பூமிக்குத் திரும்பிச் செல்லவிடக்கூடாது என்று கருதி, இந்திரனின் அனுமதியுடன் ஊர்வசியை அனுப்பி மயக்கப்பார்த்தான். அர்ஜுனனுக்குக் கோபம் வந்தது; சாபம் கொடுத்தான். உடனே இந்திரன் மூலம், சித்ரரதன் சமாதானம் செய்தான். அந்த சமாதான உடன்பாடிக்கை அர்ஜுனனுக்கு சாதகமாகவே இருந்தது. அர்ஜுனன் ஸ்பேஸ் ஷட்டில் (space shuttle )மூலம் வேற்று உலகத்தில் (Extra Terrestrial Planet) இருந்து பூமிக்குத் திரும்பினான் .
சித்ர சேனனுக்கு அர்ஜுனனை மிகவும் பிடித்துப் போனதால் பூமியில் என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாகக் கவனித்துவந்தான். காட்டில் வசித்தபோதும் பாண்டவர்களைத் தீர்த்துக்கட்ட துரியோதனன் செய்த சதி அவனுக்குத் தெரிந்தது. பூமிக்கு ப் படைகளுடன் வந்து து ரியோதனனைத் தாக்கிச் சிறை பிடித்தான். யுதிஷ்டிரருக்கு நல்ல மனது. வெளி உலக வாசி வந்து , பூமியில் வசிக்கும் நம்மை வசப்படுத்தக்கூடாது என்று எண்ணி, அர்ஜுனா, நீ போய் துரியோதனனை மீட்டு வா என்று அனுப்பினான். எதிரியாக இருப்பவன் சித்திரசேனன் என்பதை அறிந்து அதிர்ச்சி; ஆனால் சித்ர சேனனுக்கோ ஒரே மகிழ்ச்சி. தன்னுடைய பூவுலக நண்பனை இவ்வளவு எளிதில் சந்தித்து வீட்டோமே என்று எண்ணி அகம் மகிழ்ந்தான் ; உளம் குளிர்ந்தான். சண்டையே வேண்டாம்; இதோ கைதி துரியோதனன்; அழைத்துச் செல் என்றான் .
இவர்களைத் தவிர பாண்டிய நாட்டரசி சித்ராங்கதா உள்பட நிறைய “சித்ர” பெயர்கள் மஹாபாரதத்தில் உள்ளன.
எனது கருத்து
கந்தர்வர் என்ற பெயரில் இரு வகை மக்களைக் காண்கிறோம்; ஒரு பிரிவினர் பூலோக வாசிகள்; நன்கு பாடக்கூடியவர்களை கந்தர்வர் என்றும் கந்தர்வ கானம் இசைப்பவர் என்றும் இன்றும் புகழ்கிறோம் . பிரபல இசை மேதை பால கந்தர்வாவுக்கு நாம் தபால்தலையும் போட்டு சிறப்பித்துள்ளோம். இன்னொரு கந்தர்வர் (Ultra Modern Space Weapons) அதி நவீன மாடர்ன் வெப்னஸ் அறிந்தவர்கள். அவர்கள் ஸ்பேஸ் ஷட்டில் (Space Shuttle) முதலிய விண்ணுலக பயண வசதி உடையவர்கள். அர்ஜுனனை மாதலி என்பவன் வேறு உலகத்திற்கு ‘ஸ்பேஸ் ஷட்டிலில்’ அழைத்துச் சென்ற வன பர்வ கதை பற்றி முன்னரே இந்த பிளாக்கில் எழுதியுள்ளேன் (Inter Continental Space Shuttle Travel by Arjuna in Vana Parva of Mahabharata) . மஹாபாரத யுத்தத்தில் பிரம்மாஸ்திரம் என்னும் ஒருவகை அணு ஆயுதம் (Brahmastra= Nuclear weapon) பயன்படுத்தப்பட்டதையும் முன்னரே எழுதியுள்ளேன்.
இப்பொழுது அந்த கந்தர்வர்களை சிந்து சமவெளியுடன் தொடர்பு படுத்தும் குறிப்புகள் கிடைத்துள்ளன. மேலும் மஹாசித்ரன் என்ற புலவரை புற நானூற்றின் பத்து பாடல்களிலும் காண்கிறோம். ரிக் வேதத்திலும் பகவத் கீதையிலும் சித்ரன் உள்ளது. மணிபுர / பாண்டிய நாட்டு அழகி சித்ராங்கதை பற்றியும் நாம் அறிவோம். ஆக பாண்டிய நாட்டு சித்ர மர்மத்தைத் துலக்குவது நம் கடமை.
திருவிளையாடல் புராணமும். சிங்கார வேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி முதலிய நூல்கள் சித்ர என்ற பெயர் அடங்கிய பாண்டிய மன்னர்கள் பற்றியும் தகவல் தருகின்றன.. ஆராய்ச்சியைத் தொடர்வது தமிழர்தம் கடமை.!
–சுபம்–
Tags- சித்ரன், சித்திர ரதன் , சித்திராங்கதா , பாண்டியன், ஊர்வசி , சித்திரசேனன் , கந்தர்வர், வெளி உலகவாசிகள், நவீன, தெய்வீக, ஆயுதங்கள்