WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,891
Date uploaded in London – – 26 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
இந்தோனேஷியாவில் சப்தபலோன் கொடுத்த சாபம்! – 2
ச.நாகராஜன்
ஜயாபயா என்ற பெயருடைய மன்னன் கிழக்கு ஜாவா பேரரசில் கேதிரி அரசை கி.பி. 1135 முதல் 1157 முடிய ஆண்டு வந்தான். அளவற்ற வளத்தையும் செல்வத்தையும் கொண்டு அவன் அரசாண்டான். அவனை புகழ் மொழியான ‘ரது அடில்’ (இவனே அரசன்) என்று கூறி அனைவரும் புகழ்ந்தனர்.
ஒரே குழப்பமயமாக இருந்த காலத்தில் தனது நிர்வாகத் திறமையால் சட்டம் ஒழுங்கை அவன் சீர்படுத்தினான். அவனது சீர்திருத்தங்கள் இன்றும் கூட இந்தோனேஷிய பண்பாட்டில் எதிரொலிக்கிறது.
ஜயாபயா ஹிந்து இலக்கியங்களையும் போற்றி ஆதரித்தான். எம்பு பனுலு மற்றும் எம்பு சேடா ஆகிய கவிஞர்களை அவன் ஆதரித்தான்.
அவனது அரசாட்சியைக் கண்ட மக்கள் அவன் விஷ்ணுவின் அவதாரமே தான் என்று கருதினர். அவனும் அப்படி தான் கடவுளின் அவதாரம் என்று சொல்லப்படுவதை நம்பினான்.
பல்வேறு வரலாற்று புத்தகங்களின் படி அவன் பிரம்மாவின் பேரனுக்குப் பேரனுக்குப் பேரன் என்று கருதப்பட்டான்.
பல தீர்க்கதரிசன (ஜோதிட) கூற்றுக்களை அவன் தனது ‘செரட் ஜயாபயா’ என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறான்.
அது வாய்மொழியாக பரம்பரை பரம்பரையாக வழங்கப்பட்டு வந்தது. 1835இல் அது எழுத்து வடிவில் எழுதப்பட்டது. அந்த பழைய பிரதி இன்றும் உள்ளது.
அவனது ஜோதிட தீர்க்கதரிசனக் கூற்றுகளில் ஒன்று ஜாவா வெள்ளைத் தோல் உடையவரால் நெடுங்காலம் ஆளப்படும் என்பது.
அவன் இறந்த 400 ஆண்டுகளுக்குப் பின்னர், 1595இல் டச்சுக்காரர்கள் பிடியில் ஜாவா சிக்கியது.
வெள்ளையரிடமிருந்து மஞ்சள் தோலை உடையவர்கள் ஜாவாவை மீட்டு தாங்கள் ஆளத் தொடங்குவர் என்றும் அவன் குறிப்பிட்டிருக்கிறான்.
அது அப்படியே உண்மையானது.
ஜப்பானியர்கள் இரண்டாம் உலகப் போரின் போது ஜாவா மீது படை எடுத்தனர்; டச்சுக் காலனி ஆதிக்கத்திற்கு ஒரு முடிவைக் கொண்டு வந்தனர்.
ஒரு சோளக்கருதின் ஆயுளை விட மிகக் குறுகிய காலமே அந்த மஞ்சள் தோல்காரர்கள் ஆள்வர் என்பதையும் அவன் குறிப்பிட்டிருக்கிறான்.
இந்த சோளக்கருதின் ஆயுள் காலம் என்பது நடக்கவில்லை என்றாலும் இதர இரண்டு ஜோதிடக் கூற்றுகளும் அப்படியே நடந்துள்ளன.
ஆகவே அவன் விஷ்ணுவின் அவதாரமே தான் என்று இந்தோனேஷிய மக்கள் இன்றும் நம்புகின்றனர்.
ஆதாரம் : Kolkata Weekly Truth – Volume 89 No 30 Dated 19-11-2021
நன்றி : Truth
மேற்கண்ட கட்டுரையைப் படித்த பின்னர் நமக்குத் தோன்றுவது இந்தோனேஷியாவின் வரலாறு புதிதாக எழுதப்படும் என்பது தான். அதன் புகழோங்கிய ஹிந்துப் பண்பாட்டின் அடிப்படையிலான பண்டைய காலத்தை அது மீண்டும் பெறப் போகிறது.
வாழ்த்துவோம் ஹிந்து பண்பாடு செழிக்க இருக்கும் இந்தோனேஷியாவை!
**
Tags- சப்தபலோன் சாபம்! – 2