Compiled BY KATTU KUTTY , CHENNAI
Post No. 10,896
Date uploaded in London – – 27 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
ஞான மொழிகள் – 41
Kattu Kutty
மனிதனிடம் பக்தி கலக்கும்போது
உணவு……………… பிரசாதமாகிறது.
பட்டினி………………விரதமாகிறது.
தண்ணீர்…………….தீர்த்தமாகிறது.
இசை…………………கீர்த்தனையாகிறது.
இதயம்……………….கோவிலாகிறது.
செயல்………………..சேவையாகிறது.
பயணம்……………….யாத்திரையாகிறது.
மனிதன்………………புனிதனாகிறான்.
வார்த்தைகளில் ஏமாந்து போகாதீர்கள்,
காரணம் சொற்கள், ஞானம் பெற்றவர்களினால்
உருவாக்கப்பட்டவை அல்ல………
Xxxxx
சப்பாத்திக்கும், Naan க்கும் நடந்த ஓட்டப் பந்தயத்தில்
சப்பாத்திதான் ஜெயிச்சது.
ஆனா naan க்குத்தான் பரிசு கொடுத்துட்டாங்க…….
யாரு ஜயிச்சாங்கன்னு கேட்டப்ப சப்பாத்தி ‘நான்’னு
சொல்லிச்சு !!!
Xxxxxx
விளம்பர அதிகாரி – உங்க புருஷனை காணலைன்னு சொல்றீங்க
ஆனா உங்க போட்டோவ போட்டு காணலேன்னு விளம்பரம்
கொடுக்கச் சொல்றீங்க???
பெண் – நான் காணாம போய்ட்டேன்னு தெரிஞ்சா என் புருஷன்
தன்னால வீட்டுக்கு வந்துடுவார் சார்!!!
xxxx
பரமசிவனுக்கு ஆபரணமாக விளங்கும் பாம்பைக் கண்டால்
அடிச்சே கொன்னுடறோம்.
விநாயகர் வாகனமாக இருக்கும் எலியை விஷம் வைச்சே
கொன்னுடறோம்
முருகன் கொடியில் விளங்கும் சேவலை மொத்தத்தையும்
விடறதில்லை.
இப்டி கடவுளர்களின் வாகனத்தையெல்லாம் ‘துவம்சம்’பண்ணிட்டு,
கடவுள் கிட்ட போய் நான் ஒரு ஈ எறும்புக்குக்கூட தீங்கு
நினைச்சதில்லன்னு பொய் வேற………
–subham—
tags- ஞான மொழிகள் – 41