Post No. 10,902
Date uploaded in London – – 28 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
ரிக் வேதத்தில் எட்டே இடங்களில் மட்டும் ‘அகஸ்த்ய’ என்ற பெயர் வருகிறது. அவர் இயற்றிய அல்லது அவரால் காணப்பட்ட துதிகள் ரிக் வேதத்தின் முதல் மண் டலத்தில் உள்ளன. அங்கு அவருடைய துதிகள் என்ற கணக்கில் 27 துதிகள் தொடர்ச்சியாக வைக்கப்பட்டுள்ளன. ( 1-165 முதல் 191 வரை).
அகஸ்தியரின் மனைவி பெயர் லோபாமுத்ரா; பேரழகி; பெரிய பணக்காரி; விதர்ப்ப நாட்டு ராஜகுமாரி. அகஸ்தியரோ உலக மஹா குள்ளன்; உலகிலேயே குட்டையான ஆள் என்ற பெயரில் ‘கின்னஸ் சாதனை’ புஸ்தகத்தில் பெயர் ஏற்றிவிடலாம் அவ்வளவு குள்ளம். அவர் ஆணழகனும் இல்லை. இந்த சூழ்நிலையில் அவருடைய துதிகளில் ஒன்று மிகவும் பிரபலம் அடைந்து விட்டது அது ரிக்வேதத்தின் 1-179 ஆகும். அதில் ஆறு மந்திரங்கள் தான் உள்ளன. அதில் என்ன பெரிய செக்ஸ் இருக்கப்போகிறது என்று நினைக்காதீர்கள். அது பற்றி மஹாபாரதம் பெரிதாக பிரஸ்தாபிக்கிறது.
வேதங்களின் தாத்பர்யத்தை- உட்கருத்தை விளக்க வந்தவைதான் புராணங்கள் மற்றும் இதிஹாஸங்கள். ஏனெனில் வேதத்தின் பிற்பகுதியான பிராஹ்மண நூல்களிலும் மறைமுக மொழியில்தான் விளக்குவார்கள். புராண , இதிஹசங்கள்தான் நமக்குத் புரியும்படி பேசும்..
இதுபற்றி எல்லோரும் அறிந்த ஒரு ஸம்ஸ்க்ருத ஸ்லோகம் உண்டு :-
இதிஹாச புராணாப்யாம் வீதம் ஸமுபவ்ர்ம்ஹயேத்
விபேப் யல்பஸ்ருதாத் வேதோ மாமயம் ப்ரஹரிஸ் யதி
இதன் பொருள்-
வேதத்தைக் கற்போர் இதிஹாச புராணம் மூலம் அதை விளங்கிக் கொள்ளவேண்டும்; ஏனென்றால் கொஞ்சம் படித்தவர்களால் தனக்கு ஆபத்து வரும் என்று வேதம் அஞ்சுகிறது
(எவ்வளவு உண்மை பாருங்கள் ! வெளிநாடுகளைச் சேர்ந்த 60 அரைவேக்காடுகள் வேதங்களை மொழிபெயர்த்தோ விமர்சித்தோ கட்டுரைகள் எழுதியுள்ளனர். அத்தனையும் ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்த கதைதான் !)
இதனால் SEXY DIALOGUE ‘செக்சி’ உரையாடலின் முழு விவரத்தை அறிய மஹாபாரதத்துக்குச் செல்ல வேண்டும்.
அகஸ்தியர் துதிகளில் போற்றப்படும் கடவுளர்: இந்திரன், மருத்துகள் , அஸ்வினி தேவர்கள், வானமும் பூமியும் (த்யவ்ஸ்/DYAUS – பிருத்வி), விச்வே தேவர்கள், அன்னம் / உணவு; ஆப :- தண்ணீர் , அக்கினி , ஆப்ரி, பிருஹஸ்பதி
அகஸ்தியரின் மற்ற பெயர்கள் – மான, மாந்தார்ய , மான்ய என்பனவாகும் ; ரிக் வேத 7-33 ல் அகஸ்தியர் பிறப்பு பற்றிய விஷயம் உள்ளது அதன்படி அவர் மித்ர – வருணன் ஆகியோரின் விந்துவிலிருந்து உருவானவர். வசிஷ்டரும் , அகஸ்தியரும் ஊர்வசி என்னும் அப்ஸரஸ் மூலம் பிறந்தனர் என்றும் அறிகிறோம் .
பிற்கால இலக்கியங்களில் அகஸ்தியரின் சாதனைகள் பற்றி நிறைய உள்ளன வாதாபி என்ற அரக்கனைக் கொன்றது, நஹுஷனை மட்டந்தட்டியது ,விந்திய மலையின் மேல், ரோடு ROAD ROUTE போட்டு அந்த ப் பாதை மூலம் தென்னாட்டுக்கு வந்தது, கடல் நீரைக் குடித்தது (அதாவது கடல் வழிப்பாதை மூலம் தென் கிழக்காசியாவில் இந்து நாகரீகத்தை நிலை நாட்டியது) , காவிரி நதியைத் திசை மாற்றி ஓடுவதற்கு அணை கட்டியது , தமிழ் மொழிக்கு இலக்கணம் வரைந்தது என்று பெரிய பட்டியல்!!
தமிழுக்கு அவர் இலக்கணம் இயற்றியதை பாரதி, கம்பன், பரஞ்சோதி முனிவர், சிவஞான முனிவர் முதலியோர் பாடியுள்ளனர். இவர்கள் எல்லோருக்கும் முன்னதாக கவி காளிதாசன், பாண்டிய மன்னனையும் அகத்தியனையும் இணைத்து ரகு வம்ச காவியத்தில் பாடியதுதான் 2100 ஆண்டுகளுக்கு முந்தைய முதல் குறிப்பு!!!
முதலில் உரையாடலைக் காண்போம் ; பின்னர் மஹாபாரதத்தைக் காண்போம்; பின்னர் அறிஞர் கருத்துக்களைக் காண்போம் :-
அகஸ்தியர் துதிகள் பற்றி சாயனர், வேங்கட மாதவா ஆகியோர் உரை எழுதியுள்ளனர் .
xxx
இதோ 1-179- 1/2 துதி
லோபா முத்ரா
நான் பல்லாண்டுக் காலமாக அல்லும் பகலும் அனவரதமும் உமக்கு பணிவிடை செய்தேன் ; களைத்தும் போனேன் ; முதுமை என்னுடைய மேனி அழகைப் பாதிக்கிறது இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? கணவர்கள், அவர்களுடைய மனைவியுடன் இன்புற்று இருப்பார்களாகுக
(இந்து மதத்தில் பெண்கள் பகிரங்கமாக ‘செக்ஸ்’ sex பற்றிப் பேச மாட்டார்கள்; ஆனால் குறிப்பால் உணர்த்துவார்கள் ; அதே போல லோபாமுத்ராவும் எல்லோரும் கணவனுடன் கூடிக் குலவட்டும் என்று பொதுப்படையாகப் பேசுகிறார்)
ரிஷிகளும் தேவர்களும் சத்தியத்தைக் கடைப்பிடித்தார்கள். அவர்கள் காலத்தால் அழியாத சட்ட திட்டங்களை வகுத்தார்கள் ; அவர்கள் சொன்னார்கள்; செய்யவில்லை .கணவர்கள், அவர்களுடைய மனைவியுடன் இன்புற்று இருப்பார்களாகுக
அகஸ்தியர் பதில்
(அகத்தியர் பதிலை கிரிப்பித் R T GRIFFITH மொழி பெயர்க்க மறுத்துவிட்டார். ரொம்ப ‘செக்சி’ என்று கருதினார் போலும். அதை ஜம்புநாத அய்யர் மேம்போக்காக மொழிபெயர்த்துள்ளார். திருக்குறளின் காமத்துப் பாலையும் மொழிபெயர்க்க பறங்கித் தலை பாதிரிமார்கள் அஞ்சினர்; திருக்குறளை முழுக்க மொழிபெயர்த்தால் தமிழன் பெயர் ‘ரிப்பேர்’ ஆகி விடும்; மானம் ‘விமான’த்தில் ஏறிவிடும்; தமிழன் கதி ‘சகதி’ ஆகிவிடும் என்று கிறிஸ்தவ மதத்தைப் பரப்பவந்தோர் அஞ்சினர். ரெவரென்ட் ஜி.யூ போப் மட்டும் அதைத் தைரியமாகப் படித்துவிட்டு இதில் என்ன தவறு இருக்கிறது? என்றார். இரண்டு மந்திரங்களை லத்தீன் மொழியில் கொடுத்துள்ளனர்.)
XXX
அகஸ்தியர் (RV 1-179-3)
நான் தவத்தை இயற்றுவதில் காலத்தைச் செலவிட்டேன். நாம் நம்முடைய விருப்பங்களை இப்போது அனுபவிப்போம். இருவரும் சேர்ந்து செயல்பட்டால் வெற்றி பெறலாம்.
(குழந்தை பெறுவதற்கு இணையலாம் என்பதை பகிரங்கமாகக் கூறுகிறார். இதன் விளக்கம் விரசம் இல்லாமல் மஹாபாரதத்தில் சொல்லப்பட்டுள்ளது அதையும் காண்போம்.)
RV 1-179-4
அகத்தியர் தொடர்ந்து பேசுகையில் ஜெபத்திலும் இந்திரியக் கட்டுப்பாட்டி லும் இருந்தபோதும் காம எண்ணம் வந்தது ஆகையால் லோபாமுத்ரா கணவனுடன் சேருவாளாகுக.
RV 1-179- 5/6
கடைசி இரண்டு மந்திரங்கள் இருவரின் உரையாடலைக்கேட்டு யாரோ (சீடன்??) எழுதியது போல அமைந்துள்ளது
அந்த சீடன் சொல்கிறான்:
மனிதர்கள் எல்லோரும் காமத்தின் வசப்பட்டவர்கள். இதோ என் அருகிலுள்ள சோம லத்தை செடியிடம் சொல்கிறேன். நான் செய்த பாவங்களை எல்லாம் அகற்றி விடுங்கள்
கடைசி மந்திரத்தில் அகஸ்தியர் தீவிரமாக குழந்தை பெறும் பணியில் இறங்கினார் . என்று வருகிறது
இது பற்றி மகாபாரதம் மேல் விவரம் தருகிறது. அதையும் வெளி நாட்டார் கருத்தையும் பார்ப்போம்.
இந்த துதி வரிசைக் கிரமப்படி இல்லாமல் கடைசியில், ரதி என்ற தலைப்பில், பிற்சேர்க்கைப் பகுதியில் வைக்கப்பட்டது. லத்தீன் மொழியில் உள்ள இரண்டு மந்திரங்களை ஆங்கிலத்தில் பின்னர் கொடுத்துள்ளேன் . தமிழ் சினிமா பாடல்கள் போல இரண்டு அர்த்தத்தில் இவை எழுதப்பட்டுள்ளன. லோபாமுத்ரையும் அகஸ்தியரும் குழந்தை பெறும் முயற்சியில் இறங்கினார்கள் என்பதே பொருள்.
The labour which the gods favour is not unprofitable: we conquer all our rivals and rivals.
We must overcome in this battle of a hundred trades, in which we move our two sides together, on both sides.
4 Cupid took me by that bull [the man] who despises me, whether he was born on either side, or on the other, on any side.
Lopamudra denies the bull [her husband] to him: that fool swallows the wise man gasping for breath.
செல்க்ஸ் பற்றிய கவிதை என்பதால் வெள்ளைக்காரப்பயல்கள் ஆயிரக்கணக்கில் இது பற்றி கட்டுரைகள் எழுதியுள்ளனர் ஆனால் மஹாபாரதத்தில் முழுக் கதை உள்ளது; இதை ஸ்லோகம் வாரியாக தானேஸ்வர் சர்மா என்பவர் கொடுத்துள்ளார். இதோ அந்த ஸ்லோகங்க ளின் மொழிபெயர்ப்பு :–
தொடரும்…………………………………………….
tags – அகஸ்தியர் , லோபாமுத்ரா, Sexy , செக்சி, உரையாடல் , ரிக்வேத, 1-179,