Post No. 10,907
Date uploaded in London – – 29 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
அகஸ்தியர் – லோபாமுத்ரா SEXY செக்சி உரையாடல் – 2
இது இரண்டாம் பகுதி ; நேற்று, முதல் பகுதியில், ரிக் வேதத்தின் முதல் மண்டலத்திலுள்ள ஆறு மந்திரங்களைக் கண்டோம். அதில் அகஸ்தியர் பேச்சில் பட்டவர்த்தனமாக SEX செக்ஸ் பற்றிப் பேசியதால் கிரிப்பித் R T GRIFFITH அதை மொழி பெயர்க்க மறுத்தார். லத்தீன் மொழியில் அவர் கொடுத்த அகஸ்தியர் பேச்சின் ஆங்கில வடிவத்தை நான் அளித்தேன். அரைவேக்காடுகளைக் கண்டு வேதம் பயப்படுவதால் அது மர்ம மொழியில் பேசுவது பற்றியும் வேதத்தை விளங்கிக் கொள்ள, புராண இதிஹாசங்களைப் பயில வேண்டும் என்று சொல்லும் சம்ஸ்க்ருத ஸ்லோகத்தையும் நேற்று சொன்னேன்.
XXXX
ரிக்வேதம் 1-179
முதல் மந்திரத்தில் லோபா முத்திரை சொன்னாள் —
“சுவாமி! நாதா! எத்தனை காலம் உருண்டோடிப் போய்விட்டது; அல்லும் பகலும் உமக்கு சேவை செய்துவிட்டேன்.இப்போது களைத்தும் இளைத்தும் போய்விட்டேனே . என் மேனி அழகெல்லாம் பாழாய்ப் போய்விட்டதே ; சமுதாயத்தில் தர்மம் என்று ஒன்று உளதே ; பிள்ளை பெறுவதற்காக, ஒரு பெண், கணவனைக் கட்டிக்கொள்ளலாம் அல்லவா?
XXX
இரண்டாம் மந்திரம்
எல்லா முனிவர்களும் சத்தியத்தையே நாடுகின்றனர்; உண்மையையே விளம்புகின்றனர்; தவம் செய்து, வாழ் க்கையின் இறுதி லட்சியத்தை (மோக்ஷம்) நெருங்குகின்றனர்; ஆகையால் காலத்தை வீணடிக்காமல் கணவனும் மனைவியும் இணைய வேண்டும் அல்லவா ?
XXX
அகஸ்தியர் பதில்- மூன்றாம் மந்திரம்
அன்பே ! ஆருயிரே ! நாங்கள் ஏதோ வெட்டிப் பொழுது போக்க தவம் செய்கிறோம் என்று எண்ணாதே; இதனால் இறைவன் நம்மை எப்போதும் காக்கிறார்; அதுமட்டுமல்ல தவம் மூலம் நமக்கு செல்வம் கிடைக்கிறது; நூறு போர்கள் வந்தாலும் ஜெயிப்போம்; ஒன்றாகச் செயல்படுவோம்.
XXX
நாலாவது மந்திரம் – அகஸ்தியர் பேசுகிறார்:-
லோபாமுத்ரா! தவம் மட்டுமே செய்துவந்த என் மனதில் இப்போது காமம் நுழைந்துவிட்டது. எங்கிருந்து வந்ததோ எனக்கே தெரியவில்லை ; துடியாய்த் துடித்துக் கொண்டிருந்த லோபாமுத்ரா வீரியம் மிக்க அகஸ்தியர் மீது பாய்ந்தாள் ; கட்டி அணைத்து முத்தம் இட்டு ஆழ்ந்த மூச்சு விட்டாள்.
(இப்படித் திடீரென்று கணவனும் மனைவியும் கட்டிப்புரண்டதை ஒரு சிஷ்யன் பார்த்துவிட்டான்; அவன் அவர்கள் சம்பாஷணையைக் கேட்டுவிட்டதால் எட்டிப் பார்த்தான் ; உடனே கடவுளிடம் மன்னிப்பும் கேட்டான் )
XXX
ஐந்தாவது மந்திரம் – சீடன் சொன்னது
ஒருவழியாக நான் உண்மையைச் சொல்கிறேன் ; சோமதேவனே ; செய்ததை ஒப்புக்கொள்கிறேன் சோம தேவனே கருணை காட்டு; மனிதனுக்கு எவ்வளவோ ஆசைகள் இருக்கத்தானே செய்யும்?
XXX
ஆறாவது மந்திரம்
(என் குரு ) குழந்தையைப் பெறுவதற்காக பூமியை ஆழமாகத் தோண்டுவது போல வேலை செய்து கொண்டு இருக்கிறார் ; அவர் பலத்தைப் பெறுவதற்கு முயற்சி செய்கிறார் போலும்; அவர் கடவுளுக்கும் மனிதனுக்கும் உணவு அளிக்கும் சக்தி உடையவர் ; இறைவனின் ஆசி அவருக்குக்
கிடைத்துவிட்டது
இவைதான் ரிக்வேத துதியில் உள்ள ஆறு மந்திரங்கள்; நேற்று நான் எழுதியது GRIFFITH AND WILSON கிரிப்பித், வில்சன் ஆகியோரின் மொழி பெயர்ப்பு. இன்று மேலே தந்திருப்பது அஸ்ஸாம் சம்ஸ்க்ருத அறிஞர் தானேஸ்வர் சர்மாவின் மொழிபெயர்ப்பு.
XXX
இதோ சுவையான மஹாபாரதக் கதை:–
இது 18 பர்வங்களைக் கொண்ட மஹாபாரதத்தில் மூன்றாவது பர்வமான ஆரண்ய/ வன பர்வத்தில் உள்ளது.
தவம் செய்து, ,பழுத்த பழமாக,ப் போன அகஸ்தியர் ஒருநாள் ஜாலியாக WALKING வாக்கிங் போனார். ஒரு பெரிய பள்ளத்திலிருந்து ஒரே கூச்சல்; எட்டிப் பார்த்தார்; அவருடைய தாத்தா, கொள்ளுத் தாத்தா,பாட்டன், பூட்டன் எல்லோரும் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தனர்.
அடக்கடவுளே ! உங்களுக்கு எல்லாம் என்ன ஆயிற்று? என்றார்.
அவர்கள் சொன்னார்கள்; நாங்கள் எல்லோரும் ‘புத்’ (PUTH) என்னும் நரகத்தில் தொங்கிக் கொண்டு இருக்கிறோம். இதிலிருந்து மீள உமக்கு ஒரு புதல்வன் பிறக்கவேண்டும். அல்லது எங்களுக்கு விடுதலை இல்லை என்றார்கள்.
அகஸ்தியர் உடனே விரைந்தார்; கல்யாணம் கட்ட ஆசை; ஆனால் உலக மஹா அழகி வேண்டும் என்று எதிர்பார்த்தார். இதை உணர்ந்த தேவர்கள், அவருடைய தவத்தை மெச்சி, உலக மஹா அழகி களின் சிறந்த உறுப்புகளை எல்லாம் எடுத்து பூலோகத்துக்கு அனுப்பினார்கள். அவள் விதர்ப்ப நாட்டு மன்னனின் மகளாக லோபா முத்ரா என்னும் பெண் பிள்ளையாகப் பிறந்தார். நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மலர்ந்தாள் ; வளர்ந்தாள் ; அகஸ்தியர் தான் எதிர்பார்த்த MISS WORLD மிஸ் வோர்ல்ட் விதர்பாவில் இருப்பதை அறிந்து விரைந்தார்.
“மன்னர் மன்னவா ! உமது மகளை எனக்குக் கல்யாணம் செய்து வை என்றார்; இது என்னடா, சோதனை ; உலக மஹா குள்ள முனிவன் வந்து என் மகள் பேரழகி, ராஜ குமாரியைக் கைப்பிடிக்க ஆசைப்படுகிறாரே ; என்ன செய்வது என்று கையைப் பிசைந்து கொண்டு நின்றார். அந்தக் காலத்தில் சாமியார்கள் தாம் செய்த தவ வலிமையால் சேமித்து வைத்த விந்துவை (SPERM) வீணடிக்காமல் யாராவது ஒருவருக்குக் கொடுத்து பிள்ளையை உண்டாக்குவார்கள் ; இந்த செயற்கை முறை TEST TUBE BABY டெஸ்ட் ட்யூப் பேபி பற்றிச் சொன்னால், பாமர மக்களுக்குப் புரியாது என்பதற்காக “இலையில் விந்து விழுந்தது; அது கர்ப்பமாயிற்று —என்றெல்லாம்” மறைமுக மொழியில் கதைப்பார்கள்; உண்மை என்ன வென்றால் அவர்கள் SEX செக்ஸ் இன்பத்துக்காக ஒரு பெண்ணை அணுகவில்லை ; அதி சக்தி வாய்ந்த விந்து SPERM வீணாக்கக் கூடாது என்பதற்காக இப்படிச் செய்வார்கள்; இதை காளிதாசனும் உறுதி செய்கிறான் ரகு வம்ச அரசர்களின் சிறப்புகள் என்ன என்ன என்று வரிசையாகப் பட்டியல் இடுகையில் செக்ஸுக்காக இல்லாமல் வம்ச விருத்திக்காக, குலக்கொடி தழைப்பதற்காக, பிள்ளை பெறுவோர் ராமனின் முன்னோர் (ரகுவம்சம்) என்று பாடுகிறார். பிள்ளை பெற்றால்தான் விடுதலை என்பதை மனுவும் விளக்குகிறார். “புத்” என்னும் நரகத்தில் விழாமல் “த்ர” = காப்பாற்றுவதால் ஆண்பிள்ளைக்கு “புத்ர” என்று பெயர் வந்தது என்கிறார் மநு . இது புறநானூற்றிலும் உளது.
கோப்பெருஞ் சோழன் வட திசை நோக்கி அமர்ந்து சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து செத்தார்; அப்போது பொத்தியார் என்ற புலவர் வந்து நானும் உண்ணா விரதப் போராட்டத்தில் கலந்து கொள்கிறேன் என்றார் .
“சீ, சீ; வீட்டுக்குப் போ; இப்பதான் கல்யாணம் கட்டின; பிள்ளை பெறாமல் சாகக் கூடாது ; “புகழ் சால் புதல்வன் பிறந்த பின் வா|” என்று பொத்தியாரைத் திருப்பி அனுப்புகிறான் சோழ மன்னன் (காண்க புறம் 222)
புத்ர= புதல்வ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லை சோழன் பயன்படுத்தியது அகஸ்தியர் கதையை உறுதி செய்கிறது
xxx
அகஸ்த்யர் கதைக்குத் திரும்பி வருவோம்
உலக மஹா அழகியை உலக மஹா குட்டையன் SHORTEST MAN விரும்பிய செய்தி விதர்ப்ப நாட்டு ராணியின் காதில் விழுந்தது; அவளும் திகைத்தாள்; முனிவரின் சாபம் வந்தால் குலம் வேரறுந்து போகும். முனிவரிடம் அழகியை ஒப்படைத்தாலோ நல்ல பிள்ளை கிடைக்கும் ; அம்மாவும் அப்பாவும் தவியாய்த் தவிப்பதை பார்த்தாள் பொன்னழகி, பெண்ணரசி லோபா.
((எனக்கு அமெரிக்க மாப்பிள்ளை வேண்டும் அவன் அமிதாப் பச்சன் போல இருக்கவும் வேண்டும்; அம்பானி , அதானி போல பணமும் இருக்கனும்; என்னை சமைக்கவும் சொல்லக்கூடாது; சரவண பவன் சாப்பாடு தினமும் வேண்டும்; வார இறுதியில் சென்னை கிழக்குக் கடற்கரை சாலை விடுதிகளில் பிரண்ட்ஸ் FRIENDSகளுடன் ஜாலியாக இருந்துட்டு வருவேன்; முகம் சுழிக்கக் கூடாது; ஏதோ ஒரு நாள் வேணா. படுக்கை அறைக்குள். வரலாம்; மத்த நாள் எல்லாம் எனக்குத் ‘தலை வலி’ன்னு சொல்லுவேன்; புரிஞ்ச்சுக்கிட்டு படுக்கை அறைக்குள் வராமல் நீங்க தனியா ப்படுங்க; மேலும் உங்க அம்மா அப்பாவ கூட்டி வச்சு EXTRA LUGGAGE எக்ஸ்டரா லக்கேஜ் ஏற்றக்கூடாது – என்றெல்லாம் கண்டிஷன் போடாம))
, லோபா முத்ரா சொன்னாள் :- அம்மா ஒரு கவலையும் படாதே ; நான் அகஸ்தியரைக் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்றாள்.
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நின்று போன மூச்சு திரும்பி வந்தது ; கல்யாண மேளம் கொட்டியது டும்……. டும் ……
இதெல்லாம் ரிக் வேதத்தில் இல்லை மஹாபாரத வன பர்வத்தில் வருகிறது
இன்னொரு விஷயமும் மஹாபாரத வன பர்வத்தில் வருகிறது
மிஸ் லோபா சொல்கிறாள்
“அன்பரே! விரைந்து படுக்கை அறைக்குள் வாரும் ; மாதவிலக்கு முடிந்து சில நாட்கள் ஆகிவிட்டன. சீக்கிரம், சீக்கிரம் ; பிள்ளை பெற அருமையான சந்தர்ப்பம்.
பிள்ளை பெற , லோபா அழைத்தவுடன் எனக்கும் கூட ஒரு மாதிரி பீலிங் FEELING வந்துவிட்டது என்று நுழைந்து இருவரும் கட்டி அணைத்து முத்தமிட்டதை ரிக் வேதத்தில் கண்டோம். ஆனால் மஹாபாரதம் வேறு ஒரு கதையை நுழைக்கிறது.
அது என்ன கதை? எல்லா பெண்களையும் போல, மிஸ் லோபாவும் ஒரு கண்டிஷன் CONDITION போடறாள் :–
மண மகனே! மண மகனே ! வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
வைர நெக்லஸ், வைரத் தோட்டுடன் உள்ளே வா வா
பெரிய ஆசையுடன் காத்திருந்த அகஸ்தியருக்கு பெரிய ‘ஷாக்.’ SHOCK!!
WHAT வாட், வாட் வாட் வாட் WHAT DID YOU SAY டிட் யூ சே? என்று பதறினார்.
லோபா சொன்னாள் :- ஐயா நான் விதர்ப்ப நாட்டு ராஜ குமாரி. தங்கக் கட்டிலில் படுத்து உறங்கிய என்னை மணம் முடித்தீர். என் அம்மா, அப்பாவுக்கும் விதர்ப்ப நாட்டுக்கும் தீங்கு வரக்கூடாது என்று நான் உம்மை மணக்க முடிவு செய்தேன்
சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பது போல எனக்கு ஒரு CONDITION கண்டிஷன் போட்டீர் ; எனது காஞ்சீபுரம் பட்டுப்புடவை , தங்கக் காசுமாலை, வைர அட்டிகை, மரகத மூக்குத்தி, மாணிக்க ஒட்டியாணம், முத்துச் சலங்கை எல்லாவற்றையும் அம்மாகிட்ட கொடுத்துட்டு முனிவர் மனைவி போல தழை உடையும் மான் தோலும் அணிய வேண்டும் என்று கண்டிஷன் போட்டீர்கள்.
நானும் செவிமடுத்தேன்; செயலாற்றினேன் ; இப்போது என் கண்டிஷன் இதோ!! நான் ராஜ குமாரியாக இருந்த காலத்தில் அணிந்த நகைகளுடன் வருக. என்னை அலங்கரித்து அனுபவிக்க!!! என்று போட்டாளே ஒரு போடு.
இது மஹாபாரத வன பர்வத்தில் உள்ளது. அகஸ்தியர் சத்ய சீலன்; தனக்கொரு நீதி மனைவிக்கு வேறு ஒரு நீதி என்று கருதாததால் ‘சரி, அம்மா; அப்படியே செய்கிறேன்’ என்று புறப்பட்டார்.
ரிக் வேத ஆறு மந்திரத்தில் ஒரு மந்திரம் ‘’தவ சக்தியால் செல்வம் கிடைக்கும்’ என்று கூறியது; அதைக் கூறிய அகஸ்தியருக்கு செல்வத்தைச் சேர்க்க முடியும் என்று நம்பிக்கை இருந்தது.
லோபா டார்லிங், ஸீ யூ ஸூன் LOBA DARLING ! C U SOON என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.
இதற்குப் பின்னர் மஹாபாரதம் இன்னும் சுவையான விஷயங்களைச் சொல்கிறது . அது என்ன கதை?
தொடரும் ……………………………….
TAGS– மஹாபாரதம், லோபா முத்ரா, அகஸ்தியர், SEXY, செக்சி உரையாடல் 2 , RV HYMN 1-179