பெரியவா புளுகினா, பேப்பர்ல போடுவா! சின்னவா புளுகினா….. (Post.10,906)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,906

Date uploaded in London – –   29 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

கடி ஜோக்ஸ்:ஞான மொழிகள் – 44

Compiled by Kattukutty

கடி ஜோக்ஸ்

1 ஒருத்தன் ஆப்பத்தை சாப்பிடும்போது காதை மூடிக்கொண்டு

சாப்பிட வேண்டும். ஏன்????

2.ஒருத்தன ஓட்டலுக்கு போய் தோசை இட்லி order பண்ணினான்.

ஆன்னா எதுவுமே சூடா இல்லை. …..ஏன்???

3.ஒருத்தன் கேக்கை order பண்ண பேக்கரிக்கு போனானா, அங்கே

அவன் கிட்ட பாஸ் போர்ட் கேட்டாங்களாம்….ஏன்???

4.ஒரு school ல்லே நாளைக்கு exam ம்ன்னு சொன்னாங்களாம்.

ஆனா எல்லோரும் uniform க்கு பதில் கலர் டிரஸ் போட்டுட்டு

வந்தாங்களாம்…..ஏன்???

5.ஒருத்தன் கடைலேர்ந்து காய்கறி வாங்கிட்டு வந்து கீழ் எடுத்து வச்சி

கிச்சு, கிச்சு மூட்டினானாம்……..ஏன்???

6.ஒரு கொத்தனார் இட்லியால வீடு கட்டினானாம்……ஏன்???

7.ஒருத்தன் நகை கடைக்கு போய் மோதிரத்தை வாங்கி கால்லே

போட்டுக்கிட்டானாம்……ஏன்.???

8.ஒருத்தன் பக்கெட்ல தண்ணி புடிச்சானாம், ஆனா பக்கெட்

நிறையவே இல்லையாம் …… ஏன்???

9.103 க்கும் 105 க்கும் நடுவுல என்ன இருக்கு……???

(விடை. 104 இல்லை. )

10.ஆசிரியர் உன் பேரு என்னன்னு கேட்டாரு, அதுக்கு பையன் பசுவுக்கு உடம்பு

சரியில்லைன்னு சொன்னானாம்…..ஏன்???

‘திங்க்’ பண்ணி பாத்தீங்களா??? 

xxxxx

இதோ விடைகள்

1.ஏன்னா அது இடியாப்பம்!!!

2.அந்த ஓட்டல் பெயர் ஆரிய பவன்

3.ஏன்னா அது ப்ளேன் கேக்காம்

4.ஏன்னா அது model exam மாம்!!!

5.ஏன்னா காய்கறி அழாம இருக்கணுமாம்

6.ஏன்னா இட்லி கல்லு மாதிரி இருந்துச்சாம்……

7.ஏன்னா அது கால் பவுன் மோதிரமாம்….

8.ஏன்னா அவன் பக்கெட்ட கவுத்து வச்சு புடிச்சானாம்

  • ‘0’ தான் இருக்கும்!!!

10.ஏன்னா அவன் பெயர் ‘கெள’ சிக் ஆம்!!!

xxxxxx

பிரியாணியும் வாழ்க்கை மாதிரிதாங்க ……..

‘பீஸ்’ புல்லா இருந்தாதான் நல்லா இருக்கும்

படித்தால்தான் வேலை, கை நிறைய சம்பளம்,

என்று சொல்லித் தரும் சமூகம், விதைத்தால் தான்

சோறு என்று சொல்லித் தர மறந்து விட்டது……!

Xxx

ஏங்க ‘புக்’ பண்ணிடவா?

என்னத்தே?

அதாங்க ஆன்லைன்ல, ஒருசதுர அடிக்கு 5 ரூபாய்

வீதம் புக் பண்ணினா, விடியக்காலை 5 மணிக்கெல்லாம்

வாசல் தெளிச்சு, மார்கழி மாத கோலம் போட்டுட்டு போய்டுவாங்களாம்

xxxxxx

ஞான மொழிகள் – 43

Kathukutty

பெரியவா புளுகினா

பேப்பர்ல போடுவா……

சின்னவா புளுகினா

சிறையிலே தள்ளுவா……

xxx

சிந்திப்பதானால் அமைதியாக சிந்திக்கவும்,

செயல்படுவதானால் உறுதியாக செயல்படவும்,

விட்டுக் கொடுப்பதனால், பெருந்தன்மையோடு

விட்டுக் கொடுக்கவும்.

Xxxx

காகம் தலையில் எச்சம் இட்டதற்காக

எரிச்சல் அடையாதீர்கள்.

எருமைக்கு பறக்கும் சக்தியை

கொடுக்காத கடவுளுக்கு நன்றி

சொல்லுங்கள்!!!

இப்படித்தான் வாழ்க்கையை பாஸிடிவா

எடுத்துக்கணும்.

xxxx

ஒருத்தன் தன்னை அடிக்க வந்தானே

என்று வருத்தப்படுவதை விட்டு

அடிக்காமல்விட்டானே என்று

சந்தோஷப்படவேண்டும்.

இதுதான்டா வாழ்க்கை !!!

xxxx

வாழ்க்கையில் யாரிடமும் விவாதம் செய்யாதீர்கள்……

அதில் நீங்கள் தோற்றால் ஒரு நண்பனை இழப்பீர்கள்.

ஜெயித்தால் ஒரு எதிரியை பெறுவீர்கள்.

Xxx

ஏன்டா உன்ன பிரின்ஸ்பால் திட்றாரு??

அவரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல போடச்சொன்னாரு

நான் பிரின்ஸ்பால் நாயைக் காணோம்ன்னு

நியூஸ் கொடுத்துட்டேன்???

Xxxx

புருஷன் மனைவியிடம்

அம்மா அப்பாதான் எங்களுக்கு முதல்ல சாமி,

அப்புறம் தான் நீயெல்லாம்…….

மனைவி

அப்டீன்னா அந்த சாமியையே விட்டுட்டு

உங்கள நம்பி வரோமே நாங்க யாரு???

xxxx

CLASS TEST

question – ‘star mark’ (*) the SMALLEST numbers.

1 *39, 42, 67. Wrong

2 *17, 71,17. Wrong. Mark – 0/3

3 *90, 60, 86. Wrong

அப்பா பையனிடம் – மகனே revaluation க்கு அனுப்பு.

கொய்யால, யார் தப்புன்னு பாத்துடுவோம்

Xxxxxx  subham  xxxxx

tags–  ஞான மொழிகள் – 43, ஞான மொழிகள் – 44

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: