Compiled BY KATTU KUTTY , CHENNAI
Post No. 10,919
Date uploaded in London – – 1 MAY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
ஞான மொழிகள் – 51
Compiled by Kattukutty
படித்ததில் பிடித்தது | ||
தர்மம் செய்ய 10 ரூபாய் பெரியது
ஷாப்பிங் போக 1000 ரூபாய் ரொம்ப சிறியது
ஒரு பக்கம் கீதையை படிக்க அலுப்பு
100 பக்க வார இதழ் படிக்க ஆர்வம்
1 மணி நேரம் கடவுளை வணங்க சலிப்பு
3 மணி நேரம் சினிமா விருப்பம்
பத்திரிக்கை செய்திகளில் எந்த சந்தேகமும் இல்லை
வேத வார்த்தைகளில் ஆயிரம் சந்தேகம்
மந்திரம் ஓதுகையில் வார்த்தைகளின் தடுமாற்றம்
புறம் பேசுகையில் ஒரு வார்த்தை கூட தடுமாறுவதில்லை
பொழுது போக்க முதல் வரிசை
கோவிலுக்கு வந்தால் கடைசி வரிசை, அதுவும் கதவின் வெளியே
அனாவசியம்மா பேச பல மணி நேரம் சலிப்பேயில்லை
இருபது நிமிட தியானம் கசக்கிறது
மண்டியிட்டு 2 நிமிடம் இறைவனை வணங்க அலுப்பு
செல் போனை தொய்வில்லாமல் தேய்ப்பு!
படித்த உண்மை
*என்னையும் மாற்றிக் கொள்கிறேன்*
*
*முன்னோர்களின் அனுபவ வாக்கு*
உழாத நிலம் கெடும்
உழைக்காத உடல் கெடும்
இறைக்காத கிணறு கெடும்
இரக்கமில்லாத மனிதம் கெடும்
குளிக்காத மேனி கெடும்
குளிர்ந்துபோனால் உணவு கெடும்
துடிப்பில்லாத இளமை கெடும்
பொய்யான அழகு கெடும்
கடன்பட்டால் வாழ்வு கெடும்
கண்டிக்காத பிள்ளை கெடும்
சோம்பலால் வளர்ச்சி கெடும்
சுயமில்லா வேலை கெடும்
அச்சத்தால் வீரம் கெடும்
அறியாமையால் முடிவு கெடும்
அளவில்லா ஆசை கெடும்
ஓய்வில்லா முதுமை கெடும்
கவனமில்லாத செயல் கெடும்
கருத்தில்லாத எழுத்து கெடும்
தூங்காத இரவு கெடும்
தூங்கினால் பகலும் கெடும்
நயமில்லாத சொல் கெடும்
நாடாத நட்பு கெடும்
ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்
ஓதாத கல்வி கெடும்
*
30 வயசுக்கு அப்புறம், இரவும், பகலும் ஒண்ணு தான்.
(கொஞ்ச நாள் தூங்கலன்னா கூட சமாளிச்சிட்டு போக கத்துக்குவோம்).
40 வயசுக்கு அப்புறம், அதிகமா படிச்சிருந்தாலும், குறைவா படிச்சிருந்தாலும் ஒண்ணு தான்
(குறைவா படிச்சவங்க பெரும்பாலும் முதலாளியா இருப்பாங்க, அதிகமாவும் சம்பாதிப்பாங்க).
50 வயசுக்கு அப்புறம், அழகா இருந்தாலும், அசிங்கமா இருந்தாலும், வெள்ளையா இருந்தாலும், கருப்பா இருந்தாலும் ஒண்ணு தான்.
(எவ்வளவு அழகா இருந்தாலும், இந்த வயசில், முகத்தில் சுருக்கங்கள், கரும் புள்ளிகள் வந்துரும்).
60 வயசுக்கு அப்புறம், மேலதிகாரி, கீழதிகாரி எல்லாரும் ஒண்ணு தான்.
(ரிட்டயர் ஆனப்புறம், எல்லார் நிலையும் ஒண்ணு தான்).
70 வயசுக்கு அப்புறம், பெரிய வீடோ, குட்டி வீடோ எல்லாம் ஒண்ணு தான்
(மூட்டு வலி, தள்ளாமை, நடக்க முடியா நிலை எல்லாமே வந்துரும். கொஞ்ச இடத்தில் மட்டுமே புழங்க முடியும்).
80 வயசுக்கு அப்புறம், பணம் இருந்தாலும் பணம் இல்லன்னாலும் எல்லாமே ஒண்ணு தான்.
(அதிகமா செலவழிக்க முடியாது, தேவைகளும் குறைஞ்சிரும், ஆசைகளும் குறைஞ்சிருக்கும்).
90 வயசுக்கு அப்புறம், ஆணோ, பெண்ணோ எல்லாரும் ஒண்ணு தான்
(ஆணுக்கு உரிய தன்மைகளும், பெண்ணுக்கு உரிய தன்மைகளும்.. எல்லாமே மங்கி போயிருக்கும்).
100 வயசுக்கு அப்புறம், படுத்து இருந்தாலும், நடந்துட்டு இருந்தாலும் எல்லாம் ஒண்ணு தான்
(நடக்க முடிஞ்சா கூட, செய்யுறதுக்கு எந்த வேலையுமே இருக்காது).
அதனால வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்..
என்ன இருக்கோ, அதுக்காக சந்தோஷப்பட கத்துக்குவோம், இல்லாதத நினைச்சு வருத்தப்படுறத விட்டிடுவோம்.
மனித வாழ்வில் நாற்பது வயதுக்குள் நாம் என்ன மாதிரியான வாழ்க்கையை வாழப்போகிறோம் என்பது முடிவு செய்யப்பட்டு விடுகிறது…
எனவே இளைஞர்களே உங்களின் வாழ்க்கையை வளமாக்கும் வழிமுறைகளை கண்டறிந்து உங்களின் வாழ்க்கையை நிலைநிறுத்துங்க.
**
ஞான மொழிகள் – 51