Post No. 10,925
Date uploaded in London – – 2 MAY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
ரிக்வேதம் 10-10-9
யமா-யமி YAMA- YAMI SEXY DIALOGUE செக்சி உரையாடல் பகுதி -2
தன்னுடன் படுக்க வரமாட்டேன் என்று சகோதரன் யமன் சொன்னவுடன் யமிக்கு கோபம் வந்தது. கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்கிறாள் :-
அவன் மீது சூரியன் ஒளி விழுந்து அவனை வெளிச்சம் போட்டுக் காட்டட்டும் ; இரவும் பகலும் வானமும் பூமியும் கொஞ்சிக் குலவட்டும்; நட்புணர்வு அற்ற யமனை யமி பொறுத்துக் கொள்வாளாக .
அடுத்த மந்திரம் – யமன் சொன்னது:-
(நீ சொன்னபடி செய்தால் ) சொந்தக்காரர்களே பொறுத்துக்கொள்ள முடியாதபடி, ஏற்க முடியாத செயல்களை, அண்ணன் – தங்கைகள் செய்யத் துவங்குவார்கள். அழகியே; வேறு ஒரு ஆண் மகனை நாடு; அவனைக் கைகளுக்கு அடியில் அணைக்கும் தலையணை போல பயன்படுத்து .
11- ஆவது மந்திரம் ( ரிக் 10-10-11)
சகோதரிக்கு ஆதரவு தராமல் ஓடிப்போகும் அந்த சகோதரன் எவன்? சகோதரன் இருந்தும் கஷ்டப்படும் அந்த பரிதாபத்துக்குரிய பெண் யார்? காதல் கனிந்ததால் நான் பேசலுற்றேன்; அருகே வா; கட்டியணைத்துக்கொள்.
12-ஆவது மந்திரம்
நான் உன்னுடன் இணையக் கூடாது ; ஒருவன் சகோதரியுடன் படுத்தால் அதை உலக மக்கள் பாவம் என்று ஏசுவார்கள் உனக்கு என்ன இன்பம் தேவையோ அதை மற்றவருடன் அனுபவி. உன்னுடைய சகோதரன் இந்த மாதிரி தகாத வார்த்தைகளை சகோதரியிடம் எதிர் பார்க்கவில்லை.
உடனே யமி கோபத்தில் கத்துகிறாள் —
சீ சீ ; நீ ஒரு பயந்தோளி ; கோழை ! உன் உடலுக்குள் இதயம் என்பதே இல்லை போலும் ; ஒரு மரத்தைக் கொடி சுற்றுவது போலவும், ஒரு குதிரையின் கழுத்தில் சேணத்தின் வளையம் தொங்குவது போலும் உன்னை மற்றோரு பெண் கட்டிக்கொள்ளப் போகிறாள்.
கடைசி மந்திரம் (14)
யமீ ! நீ மற்ற ஒரு ஆளை கட்டி அணை ! அவன் உன்னை மரத்தைச் சுற்றிப் பற்றும் கொடி போல காட்டிக்கொள்ளட்டும் ; நீ அவனது இதயத்தைக் கொள்ளை கொள் ; அவன் உன் வலையில் விழட்டும் ; அவன் உன் ஜோடியாகத் திகழட்டும்
இத்தோடு ரிக் வேத துதியின் (10-10) 14 மந்திரங்களும் முடிந்துவிட்டன.
(இதில் முக்கியமான ஒரு உவமை வருகிறது ஆண் = மரம், பெண் = கொடி ; இந்த வேத உவமையை ,அப்படியே காளிதாசன் முதல் சங்கத் தமிழர் வரை அனைவரும் பயன்படுத்துகின்றனர் ; இந்துக்கள் இமயம் முதல் குமரிவரை ஒரே சிந்தனை உடையவர்கள் என்பதை இது காட்டும்; அது பற்றி தனியாக எழுதுகிறேன்) .
இதன் தாத்பர்யம் என்ன? உட்கருத்து என்ன? இப்படி கோடிப் பேரில் ஒருவருக்கு எண்ணம் உதிக்கலாம். அதை பத்திரிகையில் நாம் தினமும் படிக்கிறோம். இதைச் செய்யக்கூடாது என்பதே நீதி.
திருவள்ளுவர் ‘வரைவின் மகளிர்’ என்று தேவுடியாள் prostitutes பற்றி ஒரு சாப்டர் chapter எழுதுகிறார். இன்னும் பல குறள்களில் இருமனப் பெண்டிரை women with two minds ஏசுகிறார் . தமிழர்கள் அப்படிப்பட்ட கீழ்ஜாதியா? இல்லையே! அப்படிப் போகக்கூடாது என்பதே அவர் சொல்லும் நீதி. சங்க இலக்கியத்தில் உள்ள 2500 பாடல்களில் 10 சதவிகித பாடல்களில் தமிழர்கள் பரத்தையுடன் படுத்துவிட்டு வீட்டுக்கு வருவதும் மனைவியர் கதவைத் தா ழிட்டுப் புலம்புவதையும் படிக்கிறோம் ; அப்படிச் செய்தால் மனைவிமார்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பதைக் காட்டவே புலவர்கள் அப்படி கற்பனை செய்கிறார்கள். அது போலவே ரிக் வேத்தில் வரும் செக்சி பாடல்களும் சமுதாயத்தின் தீமைகளை எடுத்துரைக்கின்றன.
அது சரி, நெருப்பில்லாமல் புகையுமா ? என்னு சிலர் வினா எழுப்பலாம். உண்மைதான்; எகிப்தியர்கள் இப்படி சொந்த சகோதரிகளையே மணந்தனர் ; காம்பீஸஸ் Cambyses என்ற பாரசீக மன்னன் இப்படி சகோதரியையே மணந்தான் என்பதை வரலாற்று ஆசிரியர்கள் எழுதியுள்ளனர். வெள்ளைக்காரர்கள் இப்படிச் செய்வது இப்போது பத்திரிகைகளில் வருகிறது. அதாவது ஒரே பெண் பல ஆண்களை divorce டைவர்ஸ் செய்துவிட்டு பலரை அடுத்தடுத்து மணப்பதால் ஒருவருக்குப் பிறந்தவரை கணவரோ மனைவியோ கட்டிக்கொள்கின்றனர். பிரபல நடிகை எலிசபெத் டெய்லருக்கு எட்டு கணவர்கள் என்பதை அறிவோம். யாருக்குப் பிறந்த ஆண் அல்லது பெண்ணை யார் மணக்கிறார்கள் என்று பத்திரிகையில் படிக்கும்போதுதான் தெரியும்.
இந்த உரையாட பகுதிகள் நீண்ட உரை நடையுடன் , வசனங்களுடன் நடத்தப்பட்ட நாடகங்கள் என்பது இப்போது ஆராய்ச்சியில் தெரியவருகிறது. புருருவஸ் – ஊர்வசி sexy செக்சி உரையாடல்களை காளிதாஸ் போன்ற உலக மஹா கவிஞன் விக்ரம ஊர்வஸீயம் என்ற நாடகமாக வடித்தது இதற்குச் சான்று பகரும்.
செக்ஸ் sex பற்றியே புஸ்தகம் எழுதும் சில கீழ்ஜாதிப் பெண்களும் ஆண் ஜாதி கீழ்மகன்களும் ஐரோப்பா, அமெரிக்காவில் அதிகம்; அதுகள் ரிக் வேதம் பற்றி ஆயிரக்கணக்கில் புஸ்தகங்களை கட்டுரைகளையும் எழுதியுள்ளன . அவைகளை மட்டும் படிப்போரின் ரத்தமும் கெட்ட ரத்தம் ஆகிவிடுவதால் நாம் இவைகளின் உட்கருத்தை தமிழ் இலக்கியக் காட்சிகளுடன் ஒப்பிட்டு விளக்க வேண்டும்.
அதாவது எழுத்தை மட்டும் வைத்து கன்னா பின்னா என்று எழுதி டாக்டர் பட்டம் வாங்காதே ; உண்மை நிலை அதுவல்ல என்பதைச் சொல்ல வேண்டும் ஏனைய மதப் புஸ்தகங்களிலும், மதத் தலைவர்கள் வாழ் விலும் புஸ்தகங்களிலும் இத்தகைய விஷயங்கள் இருந்தபோதும் அதை வெளிநாட்டார் கதைக்க மாட்டார்கள்;
கிரேக்க நாட்டில் மிகப்பெரிய தெய்வம் ஸூ ஸ் ZEUS ;அவர் சகோதரி HERA ஹீராவையே மணக்கிறார். இருவரும் CHRONOS க்ரோனோஸுக்குப் பிறந்தவர்கள் அவர்களை யாரும் கண்டித்து எழுதவில்லை. பைபிளில் ADAM AND EVE ஆதாம் – ஏவாள் கதையும் இதைப் போன்றதே .
யம YAMA என்ற சொல்லுக்கே அடக்கம் – புலன் அடக்கம் என்பதே பொருள்; யோகம் பயில்வோருக்குத் தெரிந்த விஷயம். . மிருகங்களில் பல விநோதப் பழக்கம் உடையவை. கணவனுடன் கூடிய பின்னர் கணவனையே சாப்பிடும் சிலந்திப் பூச்சிகள்; பிறந்த குட்டிகளில் சிலவற்றைச் சாப்பிடும் பிராணிகள் என்று புஸ்தகத்தில் படிக்கிறோம். அவைகளுக்கும் மனிதனுக்கும் உள்ள வித்தியாசம் நீதி நெறி முறைகள், சட்ட திட்டங்கள் ஆகும்; நீதிகளை விளக்க வந்ததே வேதங்கள். முழு அர்த்தம் தெரியாத மார்க்ஸீயங்களும் திராவிடங்களும் விஷம் கக்கும் போது , வெளிநாட்டு கீழ்ஜாதிகள் புஸ்தம எழுதும் போது, அவர்களுடைய புஸ்தகங்கள், சங்கத் தமிழ் பாடல்களைக் கொண்டு அவர்களுக்கு நீதி புகட்ட வேண்டும் .
இந்துக்களில், குறிப்பாக பிராமணர்களில், சகோத்திர கல்யாணம் தடை செ ய்யப்பட்டுள்ளது . ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் சகோதர , சகோதரிகள் என்பதே இதன் கருத்து
ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம் கூறுகிறது-
சகோத்ராய துதித்தராம் ந ப்ரயச்சேத்
SAGOTRAAYA DUTHITARAM NA PRAYACCHET
த்யாத் விவேத என்னும் சம்ஸ்க்ருத நீதி மஞ்சரி இது பற்றிக் கூறுவதாவது —
சம்சாரே அஸ்திரதாம் த்ருஷ்ட்வா நைனஹ குர்யன் மஹாநபி
பகினி போகம் பாபம் யமோராஜாபி ந கரோத்
SAMSAARE ASTHIRATAAM DRSTVAA NAINAHKURYA MAHAANAPI
BHAGINI BHOGAM PAAPAM YAMORAAJAAPI NA KAROY
பொருள்
உலகத்தின் நிலையற்ற தன்மையை உணர்ந்த பெரியோர்கள் தீய செயல்களைச் செய்யமாட்டார்கள் ; எம ராஜனும் கூட , பாவம் என்று அறிந்து , சகோதரியுடன் உறவுகொள்ள மறுத்துவிட்டான் .
இறுதியாக எல்லா மத நூல்களும், பெரியோரின் வாழ்வில் வந்த தீய எண்ணங்களை அரக்கன், சாத்தான், மாரன் என்று வருணிப்பதையும் அதை அவர்கள் எப்படி வெற்றி கொண்டனர் என்பதையும் எழுதியுள்ளன. அது போன்ற தீய எண்ணத்தையே யமி YAMI என்ற பெயரில் வேதங்கள் கூறின என்றும் அதற்கு மருந்து யம= அடக்கம் என்றும் தத்துவார்த்த விளக்கமும் உளது .
வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே- வெற்றி
எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே- மஹா கவி பாரதியார்
–subham–
TAGS- யமா, யமி , YAMA- YAMI SEXY DIALOGUE , செக்சி, உரையாடல் பகுதி -2