WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,920
Date uploaded in London – – 2 MAY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
விஞ்ஞானத்திலும் மோசடிகள்!
ச.நாகராஜன்
நாளுக்கு நாள் வெளிவரும் புது வித அறிவியல் ஆய்வறிக்கைகள் நம்மைத் திகைக்க வைக்கின்றன.
பேப்பரில் வந்தவுடன் அது உண்மை என நம்பி விடுகிறோம்.
ஆனால் பல ஆய்வறிக்கைகள் ஒரு குறிப்பிட்ட (கெட்ட) நோக்கத்துடன் “தயாரிக்கப்படுபவை” என்பதை நம்மில் பலரும் அறிவிதில்லை.
விஞ்ஞானத்தில் கொள்கை முரண்பாடுகள் இருப்பின் அதை அவர்கள் பொதுவாக மறைக்கவே பார்ப்பார்கள்.
தவறான உள் நோக்கத்துடன் கூடிய அறிக்கைகளும் செயற்கையாக எழுதப்பட்ட லேப் ரிபோர்ட்டுகளும் நம்மிடம் தரப்படும் போது அதை எப்படி அறிய முடியும்?
சில நிஜ சம்பவங்களை இங்கே பார்ப்போம்.
வானவியல் விஞ்ஞானியான ஹாடன் அர்ப் (Astronomer Haton Arp)
பிக்பேங் கொள்கையை மறுத்து தனது ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்க முற்பட்டார்.
பிக் பேங் (Big Bag Theory) கொள்கையையா மறுப்பது? அவர் தனது ஆய்வறிக்கையைச் சமர்ப்பிபபது கூடாது என்று மறுக்கப்பட்டது. அத்துடன் அருமையான அறிவியல் ஆய்வாளராக அவர் இருந்த போதும் வலுக்கட்டாயமாக ரிடயர் ஆகும்படி அவர் வற்புறுத்தப்பட்டார்.
எப்படியோ இன்றளவும் பிக் பேங் தியரி காப்பாற்றப்பட்டு வருகிறது?
விஞ்ஞானத்தை விட சர்ச் சக்தி வாய்ந்தது. அது சொல்வதற்கெல்லாம் விஞ்ஞானிகள் தலை அசைத்து ஆட்டம் போட வேண்டும்.
பிக் பேங், டார்வின் தியரி உள்ளிட்டவற்றை யாரும் மறுத்தோ எதிர்த்தோ பேசக் கூடாது.
‘தி டேல் ஆஃப் பில்ட்டவுன் மேன்’ ஒரு சிறந்த உதாரணமாகும்.
1911ஆம் வருடம் பில்ட்டவுனில் ஒரு குழியில் மனித மண்டையோட்டு எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதை மனிதக் குரங்குகளின் எலும்புக்கூடுகளுடன் ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்யப்பட்டு இங்கிலாந்து தான் கற்கால முதல் மனிதன் தோன்றிய இடம் என்பது நிறுவப்பட்டது.
நாற்பது ஆண்டுகள் கழித்து இது ஒரு மோசடி வேலை என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வெளி உலகிற்கு அறிவித்தனர்.
1964ஆம் ஆண்டு கார்லோ ரூபியா (Carlo Rubia) சில ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்தார். இவர் 1984ஆம் ஆண்டு நோபல் பரிசையும் பெற்றார்.
ஆனால் அவரது டீம் உறுப்பினர்களே அவரது தரவுகள் எல்லாம் செயற்கையாகத் தயாரிக்கப்பட்டவை என்பதைச் சொல்லி விட்டனர்.
மார்க் ஸ்பெக்டர் (Mark Spector) தனது 24ஆம் வயதிலேயே நோபல் பரிசு பெற இருந்தார். அவரது தியரி அபாரமானது. எப்படி ஒரு கட்டியில் உள்ள வைரஸானது நார்மலாக இருக்கும் செல்களை கான்ஸர் உள்ளவையாக எப்படி ஆக்குகிறது என்பதை அவர் தியரி கூறியது. 36 மாதங்கள் கழித்து அவரது அறிக்கைகள், புள்ளி விவரங்கள், தரவுகள் செயற்கையாகத் தயாரிக்கப்பட்டவை என்பது அறியப்பட்டு அவர் ஒரு ;ஃப்ராடு என்பதும் நிரூபிக்கப்பட்டது.
இப்படித் தான் ஒரு சிறிய குழுவை ஆராய்கிறேன் என்று சொல்லி சில புள்ளி விவரங்களை எடுத்துக் கொண்டு 750 கோடி உள்ள மனித குலம் அனைத்திற்கும் அந்தப் புள்ளி விவர அடிப்படையில் தவறான சில கொள்கைகளை அளிப்பதும் நடந்து வருகிறது.
ஆகவே அறிவியல் செய்தி எது சொன்னாலும் அது உண்மை என்பதை நம்பக் கூடாது.
பொறுத்திருந்து பார்த்தால் உண்மைகள் வெளிப்படும்.
காலம் காலமாக நாம் கடைப்பிடித்து வரும் சாஸ்திர விதிகள் இந்த வித அபாயங்களுக்கு அப்பாற்பட்டவையாக இருப்பது நமக்கு பிரமிப்பை ஊட்டும் ஒரு செய்தியாக இருக்கிறது.
அறிவியல் கொள்கைகளை அறிவியல் ரீதியாக உரசிப் பார்ப்போம்; பின்னரே அவற்றை நம்புவோம்.
இது தான் நாம் கற்க வே பாடம் இன்று!
***