Post No. 10,930
Date uploaded in London – – 3 MAY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
புன்காற் பாதிரி அரி நிறத் திரள்வீ
நுண் கொடி அதிரலொடு நுணங்கு அறல் வரிப்ப
-அகநானூறு 237
கானப் பாதிரிக் கருந்தக்கட்டு ஒள்வீ
வேனில் அதிரலொடு விரை இ
அகநானூறு 261
மள்ளர் அனன மரவம் தழீஇ
மகளிர் அன்ன ஆடுகொடி நுடங்கும்
–ஐங்குறுநூறு 400
xxx
உலகிலேயே மிகவும் பழமையான நூல் ரிக் வேதம்; அதில் வரும் மந்திரத்தில் உள்ள வேத கால கடவுளர் அதே வரிசையில் கி.மு.1380 தேதியிட்ட துருக்கி நாட்டு கியூனிபார்ம் லிபி கல்வெட்டில் உள்ளது. இப்படித் தொல்பொருட் துறைச் சான்றும் இருப்பதால் உலகம் முழுதும் சம்ஸ்க்ருதம் பரவியது தெரிய வந்தது. அது மட்டுமல்ல; ரிக் வேதப் புலவர்கள் 400 பேரும் என்ன உவமைகளைப் பயன்படுத்தினரோ அவை அப்படியே சங்கத் தமிழ் நூல்களிலும் உள்ளது. 450 சங்கப்புலவர் எழுதிய 2500 பாடல்களில் 200 காளி தாசன் உவமைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் காளிதாசன் காலம் மன்னன் விக்ரமாதித்தனின் காலம் என்பதும் உறுதியாகிவிட்டது. அதாவது கிமு. முதல் நூற்றாண்டு . காளிதாசனும் சங்கத் தமிழ்ப் புலவர்களும் நமது தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஒரே உவமையைக் கையாளுவது இமயம் முதல் குமரி வரை ரிக் வேதப் பாடல்களின் தாக்கத்தைக் காட்டுகிறது
xxx
1973 — TAMIL FILM ஸ்கூல் மாஸ்டர் — மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் ஜானகியம்மா
பூங்கொடியே.. பூங்கொடியே..
பூங்கொடியே.. பூங்கொடியே..
பூவிருந்தால் தருவாயோ
பொன்னைக்கொண்டு மாலைக்கட்டி
மாலையிட வருவாயோ
பூந்தோட்டம் நல்ல பூந்தோட்டம்
ஒரு புடவையில் ஒளிந்தது மெதுவாக..
பார்க்கவோ பறிக்கவோ
சேர்க்கவோ அணியவோ
பெண்ணின் மனது என்னம் உள்ளது
கண்ணன் சொன்னால்
போதாதோ போதாதோ போததோ
பொன்னைக்கொண்டு மாலைக்கட்டி
மாலையிட வருவாயோ
மாலையிட வருவாயோ
XXXX
வசந்த ஊஞ்சலிலே
அசைந்த பூங்கொடியே
உதிர்ந்த மாயமென்ன
உன் இதய சோகமென்ன
உன் இதய சோகமென்ன
நூலுமில்லை வாலுமில்லை
வானில் பட்டம் விடுவேனோ
நாதியில்லை தேவியில்லை
நானும் வாழ்வை ரசிப்பேனா
நானும் வாழ்வை ரசிப்பேனா
XXXX
TAMIL FILM – AMARA DEEPAM
தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு
திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு
பூங்கொடியே நீ சொல்லுவாய் ஓஓ..ஓஓ..
பூங்கொடியே நீ சொல்லுவாய்
XXX
கடைசியாக உள்ள அமர தீபம் படத்தில் காதலன், காதலி இருவரும் பூங்கொடியைப் பார்த்துப் பாடுகின்றனர் ; ஆனால் மாமரம் என்ற வரி வருகிறது. நிறைய தமிழ் திரைப்படப்பாடல்களில் பெண்ணை பூங்கொடி (புஷ்ப லதா) என்று வருணிப்பதைக் காண்கிறோம் . காளிதாசன் தனது காவியங்களில் நிறைய இடங்களில் ஆண் மகனை மாமரம் என்றும் பெண்மணியை அதைக் கட்டித்தழுவும் பூங்கொடி என்றும் வருணிக்கிறார் அதற்குப் பின்னர் சங்க காலத் தமிழ்ப் புலவர்கள் இதே மரம், கொடி = காதலன், காதலி உவமையை, உருவகத்தைப் பயன்படுத்துகின்றனர்.
இந்த 2000 ஆண்டு பழமையான சங்க இலக்கியத்துக்கு ஊற்றாக விளங்குவது ரிக் வேத, அதர்வண வேத மந்திரங்களாகும்.
ஒவ்வொன்றாகக் காண்போம் :-
ரிக் வேதத்தில் உள்ள யமா – யமி Sexy செக்சி உரையாடல் (10-10) மிகவும் பிரபலமானது.
பத்தாவது மண்டல பத்தாவது துதியில் 13, 14 ஆவது மந்திரங்களில் மரம்- கொடி உவமை வருகிறது. “உன்னை வேறு ஒரு பெண் மரத்தைக் கொடி தழுவுவது போலத் தழுவட்டும் என்று யமி திட்டுகிறாள். உடனே யமனும் அடுத்த மந்திரத்தில் அதே சொற்களைப் பயன்படுத்தி சகோதரியைத் திட்டுகிறான் ; சகோதர- சகோதரி உறவு கூடாது, சகோத்திர கல்யாணம் கூடாது என்பதற்காக அக்காலத்தில் யாக யக்ஞங்கள் முடிந்தவுடன் இதை நாட்டிய நாடகமாக நடித்துக் காட்டினார்கள் .
வேதத்தில் கொடி என்பதற்கு ‘லிபுஜா’ என்றும் மரத்திற்கு ‘வ்ருக்ஷம்’ என்றும் புலவர்கள் பயன்படுத்தினர். பிற்காலத்தில் ‘லிபுஜா’ என்பதற்கு லதா என்ற சொல் பயன்பட்டது
அதர்வண வேதத்திலும் மரம்- கொடி (லதா) 6-8-1
ஒரு கொடி எவ்வாறு மரத்தின் எல்லா பக்கங்களிலும் படர்ந்து அணைக்குமோ அவ்வாறு நீ என்னைக் கட்டித்தழுவு; என் மீது எப்போதும் காதல் இருக்கட்டும்; என்னை எப்போதும் நீங்காதவளாக இருப்பாயாக.
இது நல்ல உவமை- மரத்தைச் சுற்றிப் படரும் கொடி எவ்வளவு காற்று, மழை அடித்தாலும் மரத்தோடு நிற்கும். மரம் விழுந்தால் அத்தோடு கொடியும் விழும். வேத கால புலவர்கள் எவ்வளவு உன்னிப்பாக இயற்கையைக் கண்டு ரசித்தனர் என்பது தெரிகிறது.
இது காளிதாசனுக்கும் மிகவும் பிடித்த காட்சி . மாமரத்தைக் கட்டி அணைக்கும் பூங்கொடியை அவன் பல பாடல்களில் பாடுகிறான்.
பெண்ணை பூங் கொடியாக வருணிப்பது விக்ரம ஊர்வசீய நாடகத்தில் வருகிறது. அங்கு உண்மையில் ஊர்வசியே கொடியாக மாறி விடுவதாக கதை போகிறது.
உலகப் புகழ்பெற்ற சாகுந்தல நாடகத்தில் ப்ரியம் வதா என்ற தோழி, மற்றோரு தோழியான அனசூயாவிடம் சகுந்தலையைக் கிண்டல் செய் கிறாள் “அவளுக்குப் பிடித்த மல்லிகைக் கொடியையே சகுந்தலை பார்ப்பது ஏன் என்றால் அந்த மரத்தைச் சுற்றி படர்ந்த கொடி போல தனக்கும் ஒரு ஆண் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான்” .
(இதை அவளைக் காதலித்து மணக்கப் போகும் துஷ்யந்தன் மறைந்து இருந்து பார்க்கும் வகையில் அற்புதமாக அமைத்துள்ளான் காளிதாசன்).
XXX
புத்த மதத்தினருக்கு காதல் கீதல் எல்லாம் ரொம்ப தூரம்; ஸம்ஸ்க்ருதமும் ரொம்ப தூரம். ஆனால் பிராமணராக இருந்து புத்த மதத்திற்கு மாறிய அஸ்வகோஷர் புத்த சரிதம், ஸெளந்தரானந்தம் முதலிய ஸம்ஸ்க்ருத காவியங்களில் இந்த ‘மரம்- கொடி உத்தி’யைப் பயன்படுத்தினார் இதற்கெல்லாம் முன்னதாக மஹாபாரத வன பருவத்திலும் 3-12-12 இது உளது . கிர்மீர என்ற அரக்கனால் அச்சுறுத்தப்பட்ட காட்டில் மரங்களை நீண்ட கொடிகள் சிவப்பு நிற மலர்களுடன் கட்டித் தழுவின என்று வியாசர் பாடுகிறார்.
மாமரத்தை அதிமுக்தா, மாதவி கொடிகள் சுற்றி வளைத்து படரும் காட்சிகளை காளிதாசன் மேலும் பல இடங்களில் பயன்படுத்துகிறான் .
ரிக் வேதம், அதர்வண வேதம் ஆகியவற்ரறில் வரும் இக்காட்சியைத் தமிழ்ப்புலவர்கள் படித்திருக்கலாம் ; கண்ணாலும் நேரில் கண்டு இருக்கலாம். இமயம் முதல் குமரி வரை, இந்துக்கள் சிந்தனை ஒன்றே! . 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வேறு எங்கும் இதைக் காண முடியாது .
xxx
இதோ சங்கத் தமிழ் பாடல்கள் :-
அதிரல் கொடி
பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடிய இன்னும் ஒரு அகப்பாடலில் (அகம் 99) அதிரல் பரந்த அம் தண் பாதிரி என்று கூறுவதால் அதிரல் கொடி , பாதிரி மரத்தில் படரும் செய்தி கிடைக்கிறது
சங்க இலக்கியப் பாடல்களில் அதிரல் கொடி வரும் இடமெல்லாம், பாதிரி மரமும் வருவதால் பெரும்பாலும் அந்த மரத்தில் படரும் கொடியை தமிழர்கள் கண்டனர் என்பதை அறியலாம்
xxx
புன்காற் பாதிரி அரி நிறத் திரள்வீ
நுண் கொடி அதிரலொடு நுணங்கு அறல் வரிப்ப
-அகநானூறு 237
பொருள்
பாடியவர் – தாயங் கண்ணனார் ; திணை – பாலை
அதிரல் = காட்டு மல்லிகை; அதி முக்தா ?
புல்லிய காம்பினை உடைய பாதிரியின் நல்ல நிறமுடைய மலர்கள், மெல்லிய கொடியாகிய அதிரலோடு சேர்ந்து நுண்மையான மணலிடத்தே கோலம் செய்து கிடக்கும்.
xxx
கானப் பாதிரிக் கருந்தக்கட்டு ஒள்வீ
வேனில் அதிரலொடு விரைஇ
—அகநானூறு 261
பொருள்
புலவர் – பாலை பாடிய பெருங் கடுங்கோ
இந்த வேனிற்காலத்தில் காட்டிலுள்ள பாதிரியின் ஒளியுடைய மலர்களை காட்டு மல்லிகை மலருடன் கலந்து அழகான கூந்தலில் செருகி, தேன் சிந்தும் வெண்கடம்ப மலர்களையும் சூடி (காதலனு ம் காதலியும் நடந்து சென்றனர் )
xxx
மள்ளர் அனன மரவம் தழீஇ
மகளிர் அன்ன ஆடுகொடி நுடங்கும்
–ஐங்குறுநூறு 400
பொருள் :-
ஐங்குறு நூறு — புலவர் ஓதல் ஆந்தையார் – பாலைத் திணை
மரவம் தலைவனுக்கும் ஆடுகொடி தலைவிக்கும் உவமை.
பெருமாட்டி ! வீரர் போன்ற மரவ மரங்களை மகளிர் போலும் அசையும் கொடிகள் தழுவுகின்ற வேனில் பருவத்தில் வதுவை செய்துகொண்ட மகள் இன்று வருவாள் என்று தூதர்கள் கூறுகின்றனர் என்று
செவிலி கூறினாள் . இதில் ‘உண்ணும் பொருள்களை உடைய வேனில்’, ‘மகள் ஆராய்ந்து அணிந்து கொண்ட கழல்’ , ‘சினமும் வேலும் உடைய காளை /ஆண்மகன்’ என்ற தாய்மொழிகளும் உள
மரவம் = வெண்கடம்ப மரம் ; வந்தன்று = வந்தது ; தூதே = தூதர் மூலம் வந்த தகவல்
–subham—
TAGS- கொடி , மரம் , காளிதாசன் , ரிக்வேதம், சங்கத் தமிழ், சினிமா , பாடல்கள் , மாமரம்