JOKES நாய்க்கு கோபம் வந்தால் என்ன செய்யும் ? (Post No.10,933)

Compiled BY KATTU KUTTY , CHENNAI

Post No. 10,933

Date uploaded in London – – 4 MAY 2022

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் – 57

Kattukutty

உலகத்துலேயே நல்லவன் திருடன் தான்..

எப்படின்னு கேக்கறிங்களா…?

ஒரு டாக்டரோட எதிர்பார்ப்பு எல்லாரும் நோயாளியா இருக்கனும்ன்னு…

ஒரு வக்கீலோட எதிர்பார்ப்பு எல்லாருக்கும் நிறைய பிரச்சனை இருக்கனும்ன்னு…

ஒரு போலீசோட எதிர்பார்ப்பு எல்லாரும் கிரிமினலா இருக்கணும்ன்னு…

ஒரு மெக்கானிக்கோட எதிர்பார்ப்பு எல்லாரோட காரும் ப்ரேக் டவுன் ஆகணும்ன்னு…

ஒரு டென்டிஸ்ட்டோட எதிர்பார்ப்பு எல்லார் பல்லும் சொத்தையாகணும்ன்னு…

ஒரு வெட்டியானோட எதிர்பார்ப்பு எல்லாரும் எப்ப சாவான்னு…

ஆனா திருடன் மட்டும் தான்

எல்லாரும் நல்லா வசதியா வாழணும்..

அம்புட்டு பயலும் நைட்டு நிம்மதியா தூங்கணும்ன்னு எதிர்பார்ப்பான்…

இப்படி அடுத்தவங்க நல்லாருக்கணும்ன்னு நினைக்கற ஒரு

ஒப்பற்ற ஜீவன பொசுக்கு பொசுக்குன்னு புடிச்சு உள்ளார போட்டறோமே

இது நியாயமா?

ஜோக்.. ஜோக்..

xxx

1) “நாய்க்கு கோபம் வந்தால் என்ன செய்யும் ?

“நாய்கிட்டதான் கேக்கணும் “

“அதாண்டா கேட்கிறேன் பதில் சொல்லு!!”

xxx

2) “நேற்று ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன், ஜோடின்னா அப்படி ஒரு ஜோடி,

என் லைப்ஃ லே பார்த்ததேயில்லை. அப்படி ஒரு அழகு.

“அப்புறம்”

அப்புறம் என்ன……..

காலிலே மாட்டிட்டு வந்திட்டேன் !!

xxxx

3) “சார், என்ன இது ?”

“கொஸ்டீன் பேப்பர்”

“சார், இது என்ன?”

“ஆன்சர் பேப்பர்”

“என்ன ஒரு அக்கிரமம் சார்,

கொஸ்டீசன் பேப்பர்லே கொஸ்டீன் இருக்கு,

ஆன்சர் பேப்பர்லே ஒண்ணுமே காணுமே !!

xxx

4) “எண்டா உன் மனைவி கரண்டி, தட்டு எல்லாம் தூக்கி வீசரா ?”

“நான்தான் சொன்னேனே, அவளுக்கு ‘வீசிங்’ ப்ராப்ளம் இருக்குன்னு.!!”

xxx

5)””என்னப்பா…எக்ஸாம்க்கு ப்ளம்பரை கூட்டிக்கிட்டு வந்திருக்க?”

“கொஸ்டீன் பேப்பர் “லீக்” ஆகுதுன்னு சொன்னங்க, அதான் !!”

xxx

6) “வாங்க … வாங்க, இந்தத் துணி கிழியவே கிழியாது …. வாங்கிப் பாருங்க”

“அப்போ எனக்கு இரண்டு மீட்டர் துணி வேணுமே …. எப்படி கிழிப்பே ?”

xxx

7) “நம்ம டீச்சருக்கு என்ன ஆச்சு?”

“ஏன் கேக்கறே”

“திருக்குறளை போர்டுலே எழுதிட்டு, அவங்களே இதை எழுதினது யார்’னு

கேக்கறாங்க !!”

xxx

சிரிcha போChe…..

No : 1

நிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு இருக்கிற பையனை போட்டு இப்படி அடிக்கறீங்க..?

சும்மா இருங்க சார்..,

Exam-க்கு கூட போகாம ஒக்காந்து படிச்சி கிட்டே இருக்கான்..!!!

xxxx

No: 2

உன் பேரு என்ன..?

” சௌமியா “

உங்க வீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க..?

தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,

பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,

xxx

No : 3 ( இண்டெர்வியூ.. )

உங்களுக்கு பிடிச்ச ஊர் எது..?

சுவிஸ்சர்லாந்து..

எங்கே Spelling சொல்லுங்க..

ஐயையோ.. அப்படின்னா ” கோவா “

xxx

No : 4

( புயல் மழையில் ஒருத்தன் பீட்ஸா வாங்க கடைக்குச் போறான். )

கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..

வந்தவர்: பின்ன.. இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பீட்ஸா வாங்க அனுப்புவாங்க…!?? அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்புனா…

xxx

No : 5

நடிகர் simbu : இனிமே நடிக்கிறதை நிறுத்திட்டு

மக்களுக்கு பொது சேவை பண்ணலாம்னு இருக்கேன்..

நிருபர் : நீங்க நடிக்கிறதை நிறுத்தினாலே அது மக்களுக்கு பண்ற பொதுசேவை

தானே

xxx

No : 6

டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்., இந்தாங்க தூக்க

மாத்திரை..

மனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை கொடுக்கணும் டாக்டர்..

டாக்டர்: இது அவருக்கில்லை… உங்களுக்கு..

xxx

No : 7 ( கல்யாண மண்டபம்.. )

“வாங்க., வாங்க..!!

நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா.?

பொண்ணு வீட்டுக்காரரா..? “

” ம்ம்.. நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரர்..!!”

xxx

No: 8

அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி

Accident ஆச்சு..?

இவர் : அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..?

அவர் : தெரியுது…

இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!


Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: