Post No. 10,940
Date uploaded in London – – 5 MAY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
உலகில் முதல் முதலில் காதில் Ear Phone இயர் போன் மாட்டிக்கொண்டு இசை கேட்பதைக் கண்டுபிடித்தது இந்துக்கள் என்பதை முன்னர் கண்டோம் . அஸ்வதரன், கம்பத்தரன் என்ற இரண்டு பேர் எங்கள் இசையை எப்போதும் கேட்கவேண்டும் என்று சிவபெருமானிடம் வேண்ட அவரும் அவ்விருவரை காதில் அணியும் தோ டுகளாகச் செய்து 24 மணி நேர இசை கேட்பதையும் இதனால் ‘தோடுடைய செவியன்’ என்று திருஞான சம்பந்தர் பாடியதையும் அறிவீர்கள் (எனது 213ம் ஆண்டு கட்டுரை இணைப்பைக் கீழே காண்க)
யமா- யமி என்னும் இரட்டைக் குழந்தைகளை ஈன்றெடுத்தவர்கள் விஸ்வவத் – சரண்யூ (Visvavat- Saranyu) தம்பதியர் ஆவர். இவர்களில் சரண்யூ என்ற பெண்மணி இயந்திர மனிதன்= ரோபாட் ROBOT ஆகிய கதை பிருஹத் தேவதா, மஹாபாரதம், ஹரிவம்சம் ஆகிய நூல்களில் உள்ளது . இந்த சுவை யான கதையைக் காண்போம்
பிரம்மா தனது மனத்தின் மூலமாக ஆறு பேரை உருவாக்கினார் . அவர்களை மானஸ புத்திரர்கள் என்பர். அவர்களின் பெயர்கள் :– மரீசி, அத்ரி, ஆங்கிரஸ் புலஸ்திய, புலஹ, க்ரது .
இவர்களில் மிகவும் முக்கியமானவர் மரீசி. அவருடைய புதல்வர் காஸ்யபர்; அவர்தான் இந்துக்களுக்கு மிகவும் முக்கியமானவர் . அவர் திராவிடங்களுக்கும் மார்க்சீயர்களுக்கும், மாக்ஸ்முல்லர்களுக்கும், கால்டு வெல்களுக்கும் வெடிகுண்டு வைப்பவர். அந்தக் கழிசடைகளைத் தூள் தூள் ஆக்குகிறார். இந்துக்கள் வெளிநாட்டில் இருந்து வந்தனர் என்று இந்தக் குமபல்கள் ஆயிரக்கணக்கில் புஸ்தககங்களையும் கட்டுரைகளையும் எழுதிக்குவித்துள்ளன. ஆரியர்கள் என்போர் குடியேறிகள் Migrants என்றும் அதற்கு முன்னர் மத்தியதரைக்கடல் பகுதியிலிருந்து குடியேறியவர்கள் திராவி டர்கள் என்றும் அவர்கள் கூறினர் ; அரக்கர்கள், ராக்ஷஸர்கள் உண்மையில் பூர்வ குடி Aborigines மக்கள் என்றும் கதை கட்டினர் .இததகைய கயவர்கள் மீது அணுகுண்டு வீசுகிறார் காஸ்யப முனிவர்.
அதாவது அரக்கர்களும் தேவர்களும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளளைகள் அல்லது ஒரே தந்தைக்கு இரு பெண்கள் மூலம் பிறந்தவர்கள் என்று இந்துக்கள் கூறுகின்றனர். உலகம் தோன்றிய நாள் முதல் இவர்கள் இருவரும் இருக்கின்றனர். ரிக் வேதத்தில் இந்திரன், அக்கினி, மித்ரன் வருணன் ஆகியோர் அசுரர் என்றே முதலில் அழைக்கப்பட்டனர். அசுரர்களும், தேவர்களும், மனிதர்களும் சென்று இறைவனிடம் ஒரு சொல் தாரீர் என்று Advice அறிவுரை கேட்க அவர் த , த ,த என்று சொன்ன கதை 2800 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங் காட்டு உபநிஷதத்தில் உள்ளது (முன்னரே த த ,த கதையை எழுதியுள்ளேன்); இப்போது காசியபர் கதைக்குத் திரும்புவோம் .
பெருங்காட்டு உபநிடதம் = பிருஹத் ஆரண்யக உபநிஷதம்
தக்ஷப் பிரஜாபதிக்கு 50 பெண்கள். அவர்களில் 13 பேரை காஸ்யபர் கல்யாணம் செய்துகொண்டார்.அவர்களுடைய பெயர்கள் :
அதிதி
திதி
தனு
காலா, அநாயு, ஸிம்ஹிகா, முனி, க்ரோதா , ப்ராதா அரிஷ்டா விநதா , கபிலா, கத்ரு . அவர்களில் மிக முக்கியமானவர்கள் முதல் மூவர்.
இந்த 3 பேரிடமிருந்துதான் தேவர்கள் தைத்யர்கள், தானவர்கள் வந்தனர். ஏனையோரிடமிருந்து நாகர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், கின்னரர்கள் முதலானோர் வந்தனர் என்கிறது இந்துமத நூல்கள். பறங்கித் தலையர்களும் மார்க்ஸீயங்களும் புஸ்தகம் எழுதியபின்னர் நமது தமிழ் சம்ஸ்க்ருத நூல்களில் உள்ள உண்மை எவருக்கும் தெரியாமலேயே போய்விட்டது .
அரசியலில் எப்படி ஓரிரு கட்சிகள் உடைந்தும் பல கடசிகள் ஆகி பின்னர் இணைந்து புதிய கட்சிகள் உருவாகின்றனவோ, நாடுகள் சிதறி மீண்டும் ஒன்றுபட்டு புதிய நாடுகள் உருவாகின்றனவோ அதுபோல இந்த தேவர், அரக்கர்/அசுரர் /தானவர் போன்ற குழுக்களிலும் வரலாறு உண்டு. அதை தற்போது பின்ணிக்குத் தள்ளுவோம்..
பிரஜாபதி என்றால் மக்களை, மக்கள் குழுக்களை உருவாக்கியவர் என்று பொருள். பிரம்மா முதல் அவர் சந்ததி வரை பலரையும் இப்படி அழைப்பர்.
தக்ஷப் பிரஜாபதியின் மூத்த மகளை — அதிதியை — மணந்தவர் காஸ்யப பிரஜாபதி. அதிதி என்ற பெண்மானியைத்தான் கடவுளரின் தாய் என்று ரிக்வேதம் போற்றுகிறது . அதிதிக்குப் பிறந்தவர்கள் ஆதித்யர்கள் ; அவர்கள் 12 பேர் .
தாத, மித்ர , அர்யமா சக்ர , வருண, பக, விஸ்வவத் , பூசா , சவிதா , த்வஷ்டா , விஷ்ணு
இவர்களில் விஸ்வவத் மற்றும் த்வஷ்டா கதையைத்தான் நாம் படிக்கப்போகிறோம் .
அதிதியின் 11ஆவது மகன் த்வஷ்டா. பெரிய என்ஜினீயர். விமானம் முதல் ரதம் /கார் வரை வடிவமைத்தவர். பெரிய தச்சன். கட்டிடம், ரதம் மட்டுமின்றி ஏவுகணைகள், ஆயுதங்களையும் உருவாக்கியவர் இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லில் இருந்துதான் தச்சர், டெக்ட், ஆர்க்கிடெக்ட், டெக் னாலஜி , டெக்னீஷியன், டெக்னிக் முதலிய நூற்றுக் கணக்கான ஆங்கிலச் சொற்கள் வந்தன. த்வஷ்டாவின் மகன் விஸ்வகர்மன் அதன் பொருள் – எல்லாம் செய்யவல்லவர் . இன்றும் நாம் விஸ்வ கர்ம சமுதாயத்தைப் பார்க்கிறோம்.விஷ்வ கர்மனோடு த்ரிசிரஸ் (மூன்று தலையன், விஸ்வ ரூபன் ), விருத்திரன் என்ற இரண்டு மகன்களும் உண்டு. சரண்யூ என்ற புதல்வியும் உண்டு.
விஸ்வ வத், த்வஷ்டாவின் மகளான சரண்யூவை திருமணம் செய்துகொண்டதாக பிருஹத் தேவதா , நீதி மஞ்சரி, ஹரிவம்சம் (மஹா பாரதத்தின் பிற்சேர்க்கை) சொல்லுகின்றன இவ்விருவருக்குப் பிறந்தவர்கள்தான் யமா -யமி இரட்டைக்குழந்தைகள் .இரட்டையர் பிறந்த பின்னர் சரண் யூவுக்கு மிகவும் BORE போர் அடித்தது. கணவன் பன்னிரு ஆதித்யர்களில் ஒருவன் அல்லவா? அந்த சூரிய பகவான் காலையில் புறப்பட்டால் இராவில்தான் வீட்டுக்கு வருவார். மறுநாள் காலையில் உதிக்கப் போய்விடுவார்; அத்தோடு உடம்பு முழுக்க சூரிய வெப்பம். சரண் யூவுக்குத் தங்க முடியவில்லை வாழ்க்கை இப்படி DULL ‘டல்’ அடிக்கத் துவங்கியவுடன் அவளுக்கு ஒரு idea ஐடியா கிடைத்தது. தந்தை, த்வஷ்டா பெரிய என்ஜினீயர் ஆயிற்றே . இந்தப் பெண்மணியும் தன்னைப்போலவே ஒரு உருவம் (Image) சமைக்கிறாள் அந்த Robot ரோபாட்டுக்கு உயிரும் கொடுக்கிறாள் அது வீட்டு வேலைகளைச் செவ்வனே செய்தது. சரண் ஒரு பெண் குதிரை (Mare) வடிவம் எடுத்து ஜாலியாக ஊர் சுற்றுகிறாள் .
இதே நேரத்தில் சரண் அமைத்த ரோபாட்டுக்கும் விச்வவத்துக்கும் ஒரு குழந்தை பிறந்துவிடுகிறது. அதுதான் மனு MANU . மனித குலத்தின் மூதாதையர்; மேன் MAN என்ற ஆங்கிலச் சொல், மானுடன், மனுஷன், மனிதத்ன் என்ற ஸம்ஸ்க்ருதச் சொற்கள் மனு விலிருந்து வந்தவையே.
கொஞ்ச காலத்துக்குப் பின்னர் தங்கள் வீட்டில் இருப்பது சரண் அல்ல, அவள் போன்ற உருவம் கொண்ட ROBOT ரோபாட் என்பது விஸ்வவத்துக்குப் புரிகிறது. அவரும் குதிரை வடிவம் எடுத்துக் கொண்டு சரண் யூவைத் தேடுகிறார். இருவரும் ஒருவரை ஒருவர் சந்த்தித்தன் விளைவாக இரட்டையர் பிறக்கின்றனர். அவர்கள்தான் தஸ்ரா , நாஸத்ய என்ற பெயர் கொண்ட அஸ்வினி (Asvins) தேவர்கள் ஆவர்
இந்தக் கதை சிற்சில வேறுபாடுகளுடன் வெவ்வேறு புராணங்களில் உளது. மேலும் சரணின் பெயர் சம்க்ஞா என்றும் இருக்கிறது.
இதில் நம்ப முடியாத விஷயங்கள் சில இருந்தாலும் ஒரு உருவத்தை உண்டாக்கி அதற்கு உயிர் கொடுத்து உலவ வைக்க முடியும் (ROBOTICS ரோபோடிக்ஸ்) என்ற அறிவியல் கருத்து இருக்கிறது. எவ்வளவோ புதிய ரோபாட்டுகளை உருவாக்கும் ஜப்பானும் கூட குழந்தை பிறக்க வைக்கும் மனித ரோபாட்டை உருவாக்க வில்லை. ஆனால் நமது சரண்யூ கதையில் அதையும் காண்கிறோம்; விஞ்ஞான புனைக்கதைகள் SCIENCE FICTION எழுதும் எவரும் தான்தான் அந்த ‘ஐடியா’வைக் கண்டுபிடித்தேன் என்று சொல்ல முடியாது. ஏனெனில் அத்தனையும் புராண இதிஹாசங்களில் உள்ளன. மஹாபாரதத்தில் உள்ள CLONING க்ளோனிங், TEST TUBE BABY டெஸ்ட் ட்யூப் பேபி, SEX CHANGE OPERATION செக்ஸ் மாற்ற ஆபரேஷன் முதலிய 10 அறிவியல் கருத்துக்களை முன்னரே எழுதியுள்ளேன்
சிவன் கேட்ட இசை | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ச…
14 Feb 2013 — உலக வலம் பேடண்ட் உரிமையும் எம்பி 3 இசைக் கருவி, இயர் போன் (காது ஒலிக் கருவி) …
த……….த……….த……….:- தேசிய கீதம் ஆக்கலாமே!
https://tamilandvedas.com › த-த-த-…
19 Feb 2014 — த…..த….. என்ற மூன்று எழுத்துக்களை (சொற்களை) பிரபலமாக்கியோர் மூவர்.
“த, த, த” கதையும் காஞ்சி சங்கராச்சார்யார் பாடலும் …
https://tamilandvedas.com › த-த-த-…
3 May 2021 — this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com. if u want the article in word …
–SUBHAM—
TAGS- சரண்யூ , விஸ்வவத் , ரோபாட் , அறிவியல் , புனைக் கதை,