Post No. 10,954
Date uploaded in London – – 8 MAY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
கடந்த 20, 30 ஆண்டுகளில் கடல், சமுத்திரம் பற்றி 20, 30 கட்டுரைகளை எழுதிவிட்டேன். காளிதாசன் காவியங்களில் வரும் கடல் வணிகம் , திமிங்கிலம் மூச்சுவிடும்போது தண்ணீர் பீச்சி அடிக்கும் காட்சி மற்றும் ரிக்வேதத்தில் சொன்ன கடல் வரம்பு தாண்டாது என்பதை பரணரும் எடுத்தாண்ட செய்தி, மஹா வம்சத்தில் வரும் கடல் பற்றிய செய்திகள் முதலியவற்றைக் கண்டோம்.
கடல் பற்றிய மேலும் பல செய்திகளை நுணுகி ஆராய்வோம்.
கடல் என்பதற்கு தமிழர் பயன்படுத்திய சொற்கள் ::-
சமுத்திரம், உவர் நீர், அத்தி, அம்புராசி, ஆர்கலி, உததி ஊழி, சலதி , சலநிதி, சாகரம், சிந்து, நதிபதி , நீராழி நேமி , பயோததி , புணரி, பெளவம் , மகராலயம், மஹோததி , முந்நீர், வாரணம், வாரி, வருதி, வாருணம் வேலை , பெருமணல், நாமநீர்.இவைகளில் சில ஸம்ஸ்க்ருதச் சொற்கள்,
xxxx
ஸமுத்ரோ அப்திர்கூபாரஹ பாராவாரஹ சரித்பதிஹி
உதன்வானு ததிஹி ஸிந்துஹு ஸரஸ்வான் ஸாகரோ அர்ணவஹ
ரத்னாகரோ ஜலநிதிர் யாதஹ பதிரபாம்பதி ஹி
தஸ்ய ப்ரபேதா ஹா – க்ஷீரோதோ லவநோதஸ ததா பரே
—அமர கோசம்
समुद्रोऽब्धिरकूपारः पारावारः सरित्पतिः mark अथ वारिवर्गः
उदन्वानुदधिः सिन्धुः सरस्वान्सागरोऽर्णवः
रत्नाकरो जलनिधिर्यादःपतिरपाम्पतिः
तस्य प्रभेदाः क्षीरोदो लवणोदस्तथाऽपरे
–from sanskritdocuments.org
Xxx
கடல் பற்றி பகவத் கீதை
आपूर्यमाणमचलप्रतिष्ठं समुद्रमापः प्रविशन्ति यद्वत्।
तद्वत्कामा यं प्रविशन्ति सर्वे स शान्तिमाप्नोति न कामकामी॥७०॥
ஆபூர்யமாணமசலப்ரதிஷ்ட²ம் ஸமுத்³ரமாப: ப்ரவிஸ²ந்தி யத்³வத்|
தத்³வத்காமா யம் ப்ரவிஸ²ந்தி ஸர்வே ஸ ஸா²ந்திமாப்நோதி ந காமகாமீ ||2-70||
யத்³வத் = எவ்விதம்
ஆப: ப்ரவிஸ²ந்தி = நீர்த் தொகுதிகள் வந்து விழுகையில்
ஆபூர்யமாணம் அசலப்ரதிஷ்ட²ம் ஸமுத்³ரம் = நிறைந்து இருந்து அசையா நிலைகொண்டிருக்கும் கடல்
தத்³வத் = அதே விதமாக
யம் காமா: ப்ரவிஸ²ந்தி = எவன் விருப்பங்கள் தன்னுள்ளே புகும்போது (கடலைப் போல இருக்கிறானோ)
ஸ ஸா²ந்திம் ஆப்நோதி = அவன் சாந்தியடைகிறான்
காமகாமீ ந = விருப்பங்களை விரும்புவோன் அதனை அடையான்
आपूर्यमाणमचलप्रतिष्ठं
समुद्रमाप: प्रविशन्ति यद्वत् |
तद्वत्कामा यं प्रविशन्ति सर्वे
स शान्तिमाप्नोति न कामकामी || 70||
āpūryamāṇam achala-pratiṣhṭhaṁ
samudram āpaḥ praviśhanti yadvat
tadvat kāmā yaṁ praviśhanti sarve
sa śhāntim āpnoti na kāma-kāmī
கடலில் எவ்வளவோ நதிகள் விழுகின்றன உலகிலேயே வேகமான அமேசான், உலகிலேயே நீளமான நைல், உலகிலேயே புனிதமான கங்கை முதலிய பல்லாயிரம் நதிகள் வந்து விழுந்தபோதும் கடல் நிரம்பிப்போய் கரை கடந்து வருவதில்லை. அத்தனையையும் வாங்கிக்கொண்டு அமைதியாக பூரணமாக , நிலை குலையாமல் அமைதியாக இருக்கிறது. இப்படி ஆசைகள் அனைத்தும் கடலில் சங்கமம் ஆவது போல ஒரு யோகியும் இருப்பான்.
உலகில் இந்துக்களே கடலாதிக்கம் செலுத்தியவர்கள் என்பதற்கு இரண்டு விஷயங்கள் மீண்டும் மீண்டும் சம்ஸ்க்ருத, தமிழ் இலக்கியங்களில் வருகிறது. உலகில் பழங்கால இலக்கியம் எதிலும் இந்த உண்மைகள் இல்லை;
1.ஆழி சூழ் உலகம்; கடல் மூன்று பகுதி; நிலம் ஒரே பகுதிதான். இதைக் கண்டுபிடித்தவர்கள் இந்துக்கள்.
இதனால் உலகம் பற்றிச் சொல்லும் போது எல்லாம் ஆழி சூழ் உலகம் என்ற கருத்தை முன்வைப்பர் .
2. எவ்வளவு ஆயிரம் நதிகள் விழுந்தாலும் கடல் நிரம்பி வழியாது. இதை ரிக்வேதமும் அதற்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த பரணரும் செப்புவதில் இருந்து இந்துக்களுக்கு பிரம்மாண்ட பூகோள அறிவும் வரலாற்று அறிவும் இருந்ததைக் காட்டுகிறது. இந்த உண்மையைக் கண்டு பிடிக்க கொலம்பஸ், கேப்டன் குக் ஆகியோருக்கு முன் அவர்கள் உலகை வலம் வந்திருக்க வேண்டும்; அல்லது யூரி ககாரின் போல வானத்திலிருந்து கண்டிருக்க வேண்டும். அதையும் பல நூறு ஆண்டுகளுக்கு கவனித்து வாய்மொழி மூலமாக சொல்லியிருந்தால்தான் வேறு ஒருவர் அதைக் கவிதையாக தந்திருக்க முடியும் .
தமிழர்கள் வேறு ஒரு உண்மையைச் சொல்கின்றனர் ; ஸம்ஸ்க்ருதத்தில் மட்டும் சகரர் கதை உள்ளது ; அதன் மூலம் பகீரதன் என்ற மாபெரும் சிவில் என்ஜினீயர் கங்கை நதியைத் திசை திருப்பி வங்காள விரிகுடாவில் விழச் செய்த்ததை அறிகிறோம். தமிழர்கள் கடலுக்கு அடியில் உள்ள ஊற்றுக்களையும் கண்டுபிடித்துள்ளனர் முந்நீர் என்று கடலை , தமிழ் இலக்கியங்கள் வருணிக்கின்றன .
முந்நீர் = மூன்று வாகையான நீர் என்பதற்கு இரண்டு விளக்கங்களை உரைகாரர்கள் தருகின்றனர். இந்தச் சொல் தொல்காப்பியம் முதல் சங்க இலக்கியம் வரை சுமார் 35 இடங்களில் வருகிறது
நிலத்தைப் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்கள் உடையது. இது மாபெரும் விஞ்ஞான உண்மை; கடலிலிருந்துதான் உயிரினங்கள் தோன்றின என்ற மாபெரும் உண்மையும் அதுவே மழையாக மாறி உலகைப் பாதுகாப்பதும் அதுவே ஊழிக்காலத்தில் சுனாமியாக TSUNAMI மாறி உலகத்தை அழிப்பதையும் சம்ஸ்க்ருத மற்றும் சங்கத் தமிழ் நூல்கள் நெடுகிலும் காணலாம். ஆனால் தமிழன் போல முந்நீர் என்ற சொல்லை நான் இதுவரை சம்ஸ்க்ருதத்தில் காணவில்லை
உச்சிமேற் புலவர் கொள் நச்சினாற்கு இனியர் (மதுரை நகர பாரத்வாஜ கோத்ர பார்ப்பனன்) இந்த விஞ்ஞான விளக்கம் சொல்கிறார் .
வேறு ஒரு விளக்கமும் உள்ளது ஆற்று நீர், ஊற்று நீர், மேல் நீர் (மழை) ஆகிய மூன்றும் சேர்க்கும் நீர் என்பது அந்த விளக்கம் ; இதற்கு ஆட்சேபனையும் சொல்லி நிராகரித்த செய்தியும் உரையில் உள்ளது. ஆனால் இது சரியே என்பது தற்காலத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆற்று நீர் தவிர, கடலில் பெய்யும் மழையை மேல் நீர் என்றும், கடலுக்கு அடியில் தற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நன்னீர், வெப்ப நீர் (SUB MARINE HOT SPRINGS, PURE WATER UNDREGROUND CURRENTS ஊற்றுக்களை ஊற்று நீர் என்றும் கொண்டால் தமிழர்தம் மாபெரும் அறிவு வெட்ட வெளிச்சத்துக்கு வருகிறது.
ஊற்று நீர் (SUB MARINE SPRINGS) பற்றி தற்கால என்சைக்ளோ பீடியாக்களில் மட்டுமே காண்கிறோம். இதையும் கடலடி எரிமலைகளையும் (SUB MARINE VOLCANOES) வடமுகாக்கினி, படவாக்கினி , குதிரை முகத்தீ) தமிழ் சம்ஸ்க்ருத நூல்கள் வருணிப்பதால் கடல் பற்றிய ஆழந்த அறிவை எவரும் மறுக்க முடியாது .
Xxx
சம்ஸ்க்ருதத்தில் கடலுக்கு உள்ள பெயர்கள்
சாகர, சமுத்ர , அர்ணவ, மஹார்ணவ , உததி , மஹோததி, உதன்வத் , லவணா ம்பஸ் , வருணாலய, ரத்நாகர, அம்புராஸி நதீபதி (இனையனைத்தும் காளிதாசனின் ரகுவம்சத்தில் உள்ள சொற்கள்
அகூபார, சிந்து, சரஸ்வந்த், அப்தி , அம்புதி , அம்போதி , பயோதி , வாரிதி, அபாம் நி தி, நீரநிதி , சலீலநிதி , சிந்து நாத , யாதனாத என்பன மற்ற நூல்களில் காணப்படுகிறது
To be continued………………………
MY OLD ARTICLES
சங்க இலக்கியத்தில் கடல்கோள் (Tsunami சுனாமி …
https://tamilandvedas.com › சங்க-…
1 May 2021 — ஆகவே கடலின் அழிவு சக்தி குறித்தும் “சுனாமி” எனப்படும் இராக்கதப் பேரலைகள் ..
பர்த்ருஹரி அறிவுரை (Post No.6581) | Tamil and Vedas
https://tamilandvedas.com › கடல…
·
21 Jun 2019 — https://tamilandvedas.com/tag/பரணர்/ … அதாவது கடல் பற்றி அதைச் சொல்லவில்லை, …
கடல் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › க…
24 Dec 2021 — கடல் பற்றிய 6 பழமொழிகளைக் கண்டு பிடியுங்கள் (Post No.8548) … https://tamilandvedas.com/tag/பரணர்/.
வேதத்தில் கடல் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › வ…
16 Apr 2015 — அதாவது கடல் பற்றி அதைச் … சென்ற சொல்லே ரிக்வேதத்தில் இருந்து வந்த சொல்லே!
ரிக்வேதத்தில் பாணி | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ர…
·
26 May 2015 — பாணீக்கள் பற்றி ரிக்வேதத்தில் காணப்படாத … மத்திய தரைக் கடல் நாடுகளில் …
கடல் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › க…
24 Dec 2021 — tamilandvedas.com, swamiindology.blogspot.com … கடல் பற்றிய 6 பழமொழிகளைக் கண்டு பிடியுங்கள் (Post …
கடல் போர், கடல்பயணம் 6 பற்றிய கல்வெட்டுகள் …
https://tamilandvedas.com › கடல்…
29 Jun 2018 — Written by LONDON SWAMINATHAN. Date: 29 JUNE 2018. Time uploaded in London – 16-52 (British Summer Time). Post No. 5162.
இந்துக் கடவுள்களின் கடற்படைத் தாக்குதல் – Tamil …
https://tamilandvedas.com › இந்த…
·
26 Apr 2012 — இந்த அசுரர்கள் அனைவரும் கடலை … பற்றிய குறிப்புகளும் இருக்கின்றன.
கடல் பற்றிய 31 பொன்மொழிகள் (Post No.4115)
https://tamilandvedas.com › கடல்…
·
26 Jul 2017 — ஆகஸ்ட் 2017 காலண்டர். Compiled by London Swaminathan Date: 26 July 2017. Time uploaded in London-6-32 am. Post No. 4115
ரிக்வேத வரிகள் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ர…
9 Aug 2021 — this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com. பார்ப்பான் …
ரிக்வேத ஆராய்ச்சியில் கிடைத்த ஒன்பது …
https://tamilandvedas.com › ரிக்…
·
20 Aug 2018 — கடந்த 150 ஆண்டுகளாக வேதங்கள் பற்றி … கடல் போலப் பெருகிக் கிடக்கின்றன.
தனிமையில் கடல் தாண்டிய வீராங்கனை (Post No.7280)
https://tamilandvedas.com › தனி…
30 Nov 2019 — அட்லாண்டிக் கடல் கடந்த வீராங்கனையின் சுவையான அனுபவம் பற்றி 1992-ம் ஆண்டில் …
கடல் கெழு செல்வி யார் ? அகநானூற்றில் ஒரு புதிர் …
https://tamilandvedas.com › கடல்…
20 Jul 2020 — கடல் தெய்வம், கடல் தேவதை பற்றி … கடல் தெய்வ வழிபாடு ரிக்வேதம் முதல் கன்யா …
திமிங்கிலம் பற்றிக் காளிதாசனும் சங்கப் …
https://tamilandvedas.com › திமி…
·
7 Dec 2016 — இதோ காளிதாசன் பாடல்: காளிதாசன் கண்ட அற்புதக் காட்சி இது; திமிங்கிலங்கள் …
கம்பனும் காளிதாசனும் – Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › க…
திமிங்கிலம் பற்றிக் காளிதாசனும் சங்கப் … பின் பாடல்களை காளிதாசனின் அவை அடக்கத்தோடு .
கம்பன் பாட்டில் ஏழு கடல்கள் (Post No.5655) – Tamil …
https://tamilandvedas.com › கம்ப…
13 Nov 2018 — கம்பன் பாட்டில் ஏழு கடல்கள் (Post No.5655). Written by London Swaminathan. swami_48@yahoo.com.
— SUBHAM —