புத்தகம் படிக்க விரும்புவோருக்கு ஒரு அற்புதமான நிறுவனம்! (Post.10,951)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,951

Date uploaded in London – –     8 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

புத்தகம் படிக்க விரும்புவோருக்கும் எழுத்தாளர்களுக்கும் ஒரு அற்புதமான நிறுவனம்!

ச.நாகராஜன்

வேகமாக வளர்ந்து வரும் அதி நவீன தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுத்து  வாழ வேண்டிய சூழ்நிலையில் அனைவரும் உள்ளோம்.

புத்தகங்களைப் படிக்க விரும்புவோருக்கு, நூல்கள் டிஜிடல் வடிவமாக – மின்னணு நூல் வடிவமாக இருந்தால் கணினி வழியே – இதர அதி நவீன சாதனங்கள் வழியே படிக்கக் கூடியதாக அமைந்திருந்தால் அது ஒரு பெரிய உதவியாக அமைகிறது.

வாகனங்களில் செல்வோருக்கோ அல்லது படிப்பதற்கு கண்களை அதிகமாகப் பயன்படுத்த முடியாதோருக்கோ நூல்கள் ஒலி வடிவமாக இருந்தால் இன்னும் பெரிய உதவி தான்!

நூல்களை வாங்கி இல்ல நூலகத்தில் சேர்க்க விரும்புவோருக்கும், நல்லதொரு நூலை நண்பர்களுக்கோ அல்லது விழாக் காலங்களில் பரிசாகக் கொடுக்க விழைவோருக்கோம் அச்சிட்ட நல்ல நூல்கள் தேவை.

அரிய நூல்கள் எனில் அது நீண்ட காலம் மக்கி மங்கிப் போகாமல் இருத்தல் வேண்டும்.

மேற்கூறிய அனைத்தையும் மனதில் கொண்டு நேர்மையான வணிகத்தைச் செய்யும் நல்ல பதிப்பாளராக அமைகிறார் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் Ph.D. அவர்கள்.

7000க்கும் மேற்பட்ட நூல்களை இவரது நிறுவனம் கொண்டுள்ளது. நாவல்கள், அறிவியல் நூல்கள், கணினி சம்பந்தமான நூல்கள், பல்வேறு பொருள்களைப் பற்றிய நூல்கள், ஆன்மீக நூல்கள் என விருப்பப்பட்ட நூல்களை இந்த 7000 + நூல்களில் பார்க்க முடியும்.

ஒவ்வொரு நூலின் பொருளடக்கமும் சுருக்கமாகத் தரப்பட்டிருக்கிறது – வாங்குவோருக்கு நூல் எந்த விஷயங்களைக் கொண்டுள்ளது என்பதைச் சுலபமாக அறிய முடியும்.

மாதம் தோறும் பணம் கட்டிப் படிக்கலாம். மின்னணு நூலாக வாங்கலாம். அச்சிட்ட நூலாக வாங்கலாம். ஒலி வடிவில் கேட்கலாம்.

தரமான அச்சுப் பதிப்பு. நல்ல தரமான வெள்ளைத் தாள். கேட்டவுடன் கிடைக்கும் டெலிவரி.

நூலின் விலையும் சந்தைக்கு ஏற்ப உரிய விலையைக் கொண்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர் Pustaka Digital Media, Bangalore.

www.pustaka.co.in என்ற இணையதளத்தின் வழியே அனைத்து நூல்களையும். எழுத்தாளர்களையும், பல்வேறு திட்டங்களையும்

காணலாம். தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

எழுத்தாளர்களுக்கு இந்த நிறுவனம் ஒரு வரபிரசாதம். தங்களது படைப்புகளை இங்கு அனுப்பிப் பதிப்பிட்டுக் கொள்ளலாம்.

ஒரு முறை இந்த தளத்தின் உள்ளே சென்று அனைத்து தகவல்களையும் அறிந்து கொண்டால் நிச்சயமாக அனைவருக்கும் அறிமுகப்படுத்துவோம்.நாமும் பயன் அடைவோம்.

எனது நூல்களை இந்த நிறுவனத்தின் வாயிலாகப் படிக்க முடியும்; அச்சிடப்பட்ட நூல்களை வாங்க முடியும் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றி.

tags- www.pustaka.co.in, Nagarajan

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: