Post No. 10,959
Date uploaded in London – – 9 MAY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
நாற்பது ஆண்டு சொல் ஆராய்ச்சியில் நான் கண்டுபிடித்த விஷயங்கள் :-
தமிழ்- சம்ஸ்க்ருதம் , லத்தீன்-கிரேக்கம் , பாரசீகம்- எபிரேயம் (Hebrew) ஆகிய மொழிகளில் உள்ள இலக்கியங்களை வைத்து மட்டுமே நாம் ஆராய்சசி செய்ய வேண்டும்.
(use only written work)
சம காலத்தைவை அல்லாத மொழிகளை ஒப்பிடுவது சரியன்று. Compare only contemporary works.
வெள்ளைக்காரர்கள் உருவாக்குவது போல கற்பனை Proto ப்ரோட்டோ மொழி தவறான அணுகு முறை. Reconstructing with Proto/Imaginary language is wrong.
இது அவர்களின் ஆரியக் குடியேற்றக் கொளகைக்காக உருவாக்கப்பட்டட் கற்பனை.
White people created this cunning device to discredit Sanskrit and to justify their Aryan Migration Theory.
இரண்டாவதாக, ஒரு மொழி மாறுவதற்கு வெளியில் இருந்து வரும் தாக்கம்/ செல்வாக்கு மட்டும் காரணம் அல்ல ; தாமாகவே சில மாற்றங்களும் ஏற்படும்
A language can change even without external influence. Change is inevitable. It is natural.
மூன்றாவதாக , சில பொதுவான மாற்றங்களை உலகம் முழுதும் காணலாம் .
Some changes in spelling and pronunciations can be seen in every language. Some common changes in all the ancient languages are also seen. Eg. R=L; D=L=R, B/P= V; V=M=P;
உ.ம். ப=வ ; ர=ல
நாலாவதாக உலகில் ஜ/ ‘J’ சப்தம் உள்ள ஒரே பழைய மொழி சம்ஸ்க்ருதம்; இதன் வழியைக் கண்டுபிடித்தால் இந்துக்கள் எங்கே எங்கே எக்காலத்தில் குடியேறினர் அல்லது கலாசாரத்தைப் பரப்பினர் என்பதை அறியலாம்.
ஐந்தாவதாக தமிழுக்கு மிக நெருங்கிய மொழி ஸம்ஸ்க்ருதமே ;
Closest language for Tamil is Sanskrit.
சந்தி , வேற்றுமை உருபுகள் , அகர வரிசை அரிச்சுவடி, வாக்கிய அமைப்பு, எழுத்து/லிபி முதலியன சில உதாரணங்கள் . தமிழும் ஸம்ஸ்க்ருதமும் ஒரே ஊற்றிலிருந்து பெருக்கெடுத்த இரண்டு நதிகள் ; இதனால்தான் இமயமலை முனிவர் அகஸ்தியர் இதற்கு, முதல் இலக்கணத்தை எழுதினார் .
That is the reason Lord Shiva send North Indian Agastya to write a grammar for Tamil
ஆறாவதாக உலகின் பழைய மொழிகள் இரண்டு வழிகளில் வளர்ச்சி அடைவதைக் காணலாம்; ஒன்று சம்ஸ்க்ருத வழி , இரண்டு தமிழ் வழி ; நிறைய எடுத்துக்காட்டுகளை 150 கட்டுரைகளில் கொடுத்துள்ளேன் .
All ancient language branch out and develop in Tamil way or Sanskrit way
ஏழாவதாக மொழியியல் வல்லுநர்கள் சொல்லும் எந்தக் கொள் கையையும் நிராகரிக்கும் வாதங்களை இந்தியாவில் தமிழ், சம்ஸ்க்ருத, பிராகிருத மொழிகளில் இருந்து காட்டலாம்.
All linguistic theories can be exploded and dust binned with examples from Indian languages
எட்டா வதாக திராவிட- ஆரிய மொழிக் குடும்பம் என்பது பிதற்றல்; மதம் மாற்றவும், நாட்டை ஆளவும் வந்த கும்பல் பரப்பிய வாதம் இது.
There is no Aryan family of languages and Dravidian family of languages. There is only one Indian language.
கடைசியாக இப்பொழுது புழக்கத்தில் உள்ள மொழிகளில் சம்ஸ்க்ருதம் மிகவும் சீனியர். நான் முதலில் குறிப்பிட்ட பழைய மொழிகளின் இலக்கியங்களை வைத்து கணக்கிட்டால் தமிழ்தான் ஜுனியர்; கடைக் குட்டித்த தம்பி .இது கல்வெட்டுகள் மூலமும் நிரூபணம் ஆகிறது./ உறுதி ஆகிறது .
சங்க இலக்கியத்தில் உள்ள ஸம்ஸ்க்ருத சொற்களை அகற்றினால் கறையான் அரித்த மரம் போல அல்லது புஸ்தகம் போல ஆகிவிடும் சங்க இலக்கியம் ; துருப்பிடித்த இரும்பு போல ஆகிவிடும் ; வைரஸ் பாதித்த சாப்டவேர் ஆகிவிடும் சங்கத் தமிழ் (Virus infected software)
குறிப்பாக சம்ஸ்க்ருதம் ஒழிக என்று சொன்னால் அவர்கள் 500 திருக்குறள்களை அகற்ற வேண்டி இருக்கும் . உல கல் நாகரீகமுள்ள யாருமே ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இன்றி பேச முடியாது . குறிப்பாகத் தமிழர்கள் யாருமே ஐந்து நிமிடத்துக்கு கூட சமஸ்க்ருதக் கலப்பில்லாமல் பேச முடியாது; அப்படிப் பேசினால் வேறு மொழியைக் கலக்க நேரிடும்; அல்லது செயற்கையாக சில வாக்கியங்களை அமைத்துப் பேசிவிட்டு “பார், கீழே விழுந்தும் மீசையில் மண் ஓட்டவேயில்லை பார்” என்று மார் தட்டிக்கொள்ளலாம்
தமிழ் அகராதி, நிகண்டுகளில் எல்லாம் 50, 60 சதவிகித சம்ஸ்க்ருத சொற்கள் இருப்பது ஏன்? நம்முடைய முன்னோர்கள் இரண்டு மொழிகளையும் இரண்டு கண்களாகப் பாவித்ததால் இரண்டையும் பயன்படுத்தினர் அகஸ்தியர் – பாண்டியர் தொடர்பை 2100 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த காளி தாசனும் உறுதிப் படுத்துகிறான்.
தமிழ் மொழியின் பழமையை இலக்கியங்களும் கல்வெட்டுகளும் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் மட்டுமே எடுத்துச் செல்கின்றன. அதற்குள் லத்தீன், கிரேக்க மொழி இலக்கியங்கள்
பொதிய மலை அளவு வளர்ந்துவிட்டன ; சம்ஸ்க்ருத இலக்கியமோ இமயமலை அளவுக்கு, அவ்விரு மொழிகளும் பிறப்பதற்கு முன்னரே, வளர்ந்துவிட்டன ; ஸம்ஸ்க்ருத்ச் சொல் நிரம்பிய கல்வெட்டுகளோ கி.மு 1500-ல் எகிப்து, சிரியா, துருக்கி வரை கிடைக்கின்றன .
தமிழர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் ஒரு உண்மையும் இவற்றிடையே புதைந்து கிடக்கிறது. பரஞ்சோதி முனிவர், சிவ ஞான முனிவர், பாரதியார் ஆகியோர், ‘ஆரிய மைந்தன் அகத்தியன் தமிழ் மொழிக்கு மேவு இலக்கணம்’ படைத்ததை பாடுகின்றனர். அப்படியானால் அகத்தியர் காலத்தில தமிழ் என்று ஒரு மொழி இருந்தது தெரிகிறதல்லவா ? இலக்கணம் அமைவதற்கு முன்னால் இலக்கியம் இருக்கும் என்பது உலகம் முழுதும் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம்.
Literature comes first; grammar comes later ஆகையால் அகஸ்தியர் தமிழ் இலக்கணம் படைப்பதற்கு முன்னர் தமிழ் இலக்கியம் இருந்திருக்க வேண்டும் அதுதான் முதற்சங்கம் இருந் காலமோ!!
அகஸ்தியரின் தென்னக விஜய காலம் கிமு 700 அல்லது 800 என்று பல ஆராய்ச் சியாளர்கள் காலம் ஆகும். அப்போது தமிழ் இலக்கியம் இருந்ததால்தான் அவர் இலக்கணம் எழுதினார்.
XXX
‘ஐந்து’ என்று பாடலில் வருவதை திருஞான சமபந்தர் திடீரென்று ‘அஞ்சு’ என்று பாடலில் அமைக்கிறார். அதாவது பேச்சு வழக்கு சொல்லைப் பாடலில் புகுத்துகிறார் . ‘கள்’ என்பதை பிராணிகள், தாவரங்களுக்கே பயன்படுத்த வேண்டும் என்று தொல்காப்பியர் சொன்னதைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு திருவள்ளுவர் மக்கள் பயன்படுத்துகிறார். நாமோ ‘யான்’ என்பதை விட்டுவிட்டு ‘நான்’ என்கிறோம். திருவள்ளுவரும் சங்கப் புலவர்களும் “யாரடா இவன் என்று நம்மை முறைத்துப் பார்ப்பார்கள். வண்டி என்று சொன்னால் ‘பாண்டில்’ என்று சொல்லடா முட்டாள் என்று நம்மை ஏசுவர் . மனம், காமம் என்ற சொற்களை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துவர். நாம் அவர்களைப் பார்த்து முறைப்போம் .
நாம் புறா என்றால் புறவு என்று அழகாகப் பேசு என்பர். பூனை என்று சொன்னால் சிரி , சிரி என்று சிரித்துவிட்டு பூசை என்று சொல்லடா தமிழா என்பர்; சங்கத் தமிழில் பூனை, நான், வண்டி என்பன இல்லை.
என் மனைவி லண்டலிலிருந்து டெலிபோனில் பேசுகிறாள் என்று சொன்னால் தொல்காப்பியருக்கு பயங்கரக் கோபம் வந்துவிடும். கடல் கடந்து வெளிநாடுகளுக்கு மகளிர் போகக்கூடாது என்று நான் சூத்திரம் எழுதினேனே ! என்னை மதிக்கவில்லையா என்பார் . அட போ, தொல்காப்பியா ! நீ, ஒரு பார்ப்பனன் தானே! மநு கூட அவர் ஸ்ம்ருதியில் பிராமணர்கள் வெளிநாடு செல்லக்கூடாது என்றார் ; அவர்கள்தானே முதலில் அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் வேலைக்குப் போனார்கள் என்று நாம் ஒரு கொக்கி ( ? ) போடலாம். தொல்லும் வள்ளும் (தொல்காப்பியர், வள்ளுவர்) ஓடிப் போய்விடுவார்கள் !!
—subham–
TAGS- யான், பூசை, அஞ்சு , பாண்டில், வெளிநாடு , கடல் கடந்து