தமிழனுக்கு முத்தம் கொடுக்கத் தெரியாது ?? (Post.10,964)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,964

Date uploaded in London – –    10 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

சங்கத்தமிழ்  நூல்களில் முத்தம் (கிஸ்) என்ற சொல் இல்லை. அதே  காலத்திலும்  , அதற்கு முந்திய காலத்திலும் ஸம்ஸ்க்ருதத்தில் முத்தக் காட்சிகள் உள்ளன. இந்திய திரைப் படங்களில் முத்தக் காட்சிகளுக்கு தடை விழுந்ததற்கு பரத முனியே காரணம். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சம்ஸ்க்ருதத்தில் அவர் எழுதிய பாரத நாட்டிய சாஸ்திர நூலில் முத்தக்காட்சிகள், மரணக் காட்சிகள், கொலை, கற்பழிப்புக் காட்சிகளுக்கு தடை விதித்தார். நாடக மேடைகளில் எவைகளைக் காட்டக்கூடாது என்று அவர் ஒரு பட்டியலே தந்துள்ளார். ஆனால் வாத்ஸ்யாயன மஹரிஷி எழுதிய காம சூத்திர நூலில் முத்தம் கொடுத்தல் (Kissing) பற்றி விரிவான தகவல் உள்ளது.

முத்தம் (கிஸ்) கொஞ்சு, உதடு என்ற சொற்கள் சங்க இலக்கியத்தில் இல்லை உதடு என்பது ஸம்ஸ்க்ருத்ச் சொல் (உஷ்ட்ர = உதடு ; உஷ்ட்ரஹ= ஒட்டகம்/ உதடு பருத்த மிருகம்).

காமத்துப்பால் எழுதிய திருவள்ளுவர் கூட இதை பெரிது படுத்தவில்லை

ஸம்ஸ்க்ருதத்தில் இரண்டு சொற்கள் முத்தம் கொடுப்பதற்குப் பயன்படுகின்றன. சும்பண (CHUMBANA) , க்ரா (GHRAA)

ரிஷ்ய ஸ்ருங்கர் கதை

முத்தம் என்பது பல வகைப்படும். ஒரு தாயார் தன குழந்தையைக் கொஞ்சசும் போது தரும் முத்தம் வேறு; காதலனும் காதலியும் கொடுத்துக்கொள்ளும் முத்தம் வேறு. இரண்டாவது வகை முத்தம் மஹாபாரதத்தில் உள்ளது

உதட்டுடன் உதட்டைச் சேர்க்கும் முத்தம் ரிஷ்ய ஸ்ருங்கர் கதையில் வருகிறது; மஹா பாரத வன பர்வத்தில் வரும் செய்தி இதோ :-

ரிஷ்ய ச்ருங்கர் (கலைக்கோட்டு முனிவன்),  ஆஸ்ரமத்தில் வசித்ததால் பெண்களையே பார்த்தது கிடையாது. அப்பேற்பட்ட தவ சிரேஷ்டரை ஏமாற்றி அழைத்துவர மன்னன், விலைமாதர்களை அனுப்புகிறான். அப்படிப்பட்ட அழகிகளை வாழ்நாளில் பார்த்து அறியாத அம்முனிவன் அவர்களையம் ஆண் என்று நினைத்து கீழ்கணட வசனங்களை மொழிகிறார்:

“அப்பா! அவனை (பெண்ணை) நான் பார்த்தபோது தேவலோகத்தில் இருந்து வந்த புதல்வன் என்றே நினைத்தேன். எனக்கு ரொம்ப சமதோஷம் ஏற்பட்டது. எல்லையில்லாத இன்பம் ஏற்பட்டது.  அவன் என் உடலைக் கட்டிக்கொண்டான். என் ஜடாமுடியைப் பிடித்துக்கொண்டான் ;என் முகத்தைத் தாழ்த்தி அவன் வாயை என் வாயில் வைத்தான். என் வாயுடன் கலந்தபோது ஒரு சப்தம் கொடுத்தான். மிகவும் நன்றாக இருந்தது.”

ஒரு பெண், தனக்கு முத்தம் கொடுத்தது முனிவருக்குத் தெரியவில்லை. தந்தைக்குப் புரிந்துவிட்டது.

மஹாபாரதத்தில் உள்ள இக்கதை மனிதனின் உள்ளத்தைப் படம்பி டித்துக்காட்டுகிறது ; பசி, தாகம் , உறக்கம் என்பன போல செக்ஸ் / காம உணர்வு என்பதும் அடிப்படை உணர்வு என்பதை உலகில் முதலில் கூறிய நூல் மஹாபாரதமே . பாரதியாரும் கூட “சொல்லித் தெரிவது இல்லை மன்மதக் கலை” என்று பாடுகிறார்.

அனுமன் வாலில் முத்தம்

ராமாயணத்தில், அனுமன் சந்தோஷத்தில் தன் வாலில் முத்தம் இட்ட காட்சி வருகிறது.

இரண்டு இதிகாசங்களிலும் முத்தம் இடுதலுக்கு உள்ள ஸம்ஸ்க்ருதச் சொல் ‘க்ரா ராமாயணத்திலும் உதடு முத்தம் வருகிறது சீதையைத் தேடி வந்த அனுமன் ராவணன் அரண்மனையில் ஒவ்வொரு அறையாகப் பார்க்கிறான். கீழ்கண்ட காட்சியை வால்மீகி வருணிக்கிறார் –

அந்தப்புர அழகிகள், ராவணனின் முகத்தில் KISS கிஸ் கொடுப்பதாக நினைத்து சக தோழிகளுக்கே தூக்கக் கலக்கத்தில் முத்தம் கொடுப்பதைக் காண்கிறான்.

அவர்கள் எண்ணம் முழுதும் ராவணன் பற்றியே இருந்ததால் தோழிகளுக்கு தோழிகளே இன்பம் தந்தார்கள்

-வால்மீகி ராமாயணம் 5-7-54/55

வால்மீகி பயன்படுத்திய சொல் -உபாஜிக்ரன் . மற்றோரு ஸம்ஸ்க்ருதச் சொல்லான ‘சும்பண’ (முத்தம்) என்பதை அனுமார் விஷயத்தில் வால்மீகி பயன்படுத்துகிறார்.

சும்பண , க்ரா

அனுமன் , ஓரிடத்தில் இராவணன் மனைவியான மண்டோதரியைக் காண்கிறான்.அழகி; பொன் நிறுத் தோல் கொண்ட உத்தமி;  அவள்தான் சீதை என்று   நினைக்கிறான் அனுமன் . உடனே சந்தோஷத்தில் தன் வாலுக்கே முத்தம் கொடுத்துக் கொள்கிறான்.

இதற்குப் பின்னர் காளிதாசனின் காவியங்கள் வருகின்றன. அவரது காலத்தை ஒட்டி வாழ்ந்த அசுவகோஷர் புத்த சரிதம், சவுந்திராநந்தம் என்ற நூல்களில் முத்தக் காட்சிகளை  எழுதவில்லை; காளிதாசன் அவருக்கு சற்று முந்தியவர் . காளிதாசன் பாடல்களில் முத்தக் காட்சிகள் வருகின்றன.

குமார சம்பவத்தில் மட்டும் நாலு இடங்களில் முத்தம் பற்றி காளிதாசன் பாடுகிறார். இதுதவிர மறைமுகமாக முத்தத்தைக் குறிப்பிடும் சொற்களும் வருகின்றன

சந்திரன் இரவு நேரத்தை முத்தம் இடுவதாக புதிதாக மணந்துகொண்ட உமாதேவியிடம் சிவபெருமான் கூறுவதாக ஒரு இடம்.(8-63)

இன்னொரு இடத்தில் கிம்புருஷன் தனது காதலிக்கு முத்தம் இடுவதை காளிதாசன் பாடுகிறார்.(3-38)

எட்டாவது சர்க்கத்தில்தான் சிவன்- உமா காதல் காட்சிகள் முழு அளவில் மலர்கின்றன .அவைகளை 8-8, 8-19-களில் காணலாம்.

8-23ல் மறைமுகக்குறிப்பு வருகிறது பார்வதியின் வாய் தாமரை என்றும் சிவ பெருமான் தேனீ என்றும் வருணிக்கப்படுகிறது

ரகு வம்சத்தில் கடல் அரசன், நதி அழகிகளை முத்தம் இடும் வருணனை முதல் பல காட்சிகளை 9-31, 13-9, முதலிய பாடல்களில் காண்கிறோம்

சில எடுத்துக் காட்டுகளை மட்டும் பார்ப்போம்

उपहितं शिशिरापगमश्रिया मुकुलजालमशोभत किंशुके ।

प्रणयिनीव नखक्षतमण्डनं प्रमदया मदयापितलज्जया ॥ ९ -३१॥ RAGHU9-31

வசந்த காலம் வந்தவுடன் பலாச மரத்தில் உண்டாக்கப்பட்ட, வளைவான , சிவத்த நிற  மொட்டுக்கள் பெண்கள், அவர்களுடைய காதலன் மீது இட்ட நகக்குறிகள் போல விளங்கின . கலவிக் காலத்தில் பெண்கள், தங்கள்  காதலர் மீது இப்படிச் செய்வதுண்டு நகக்குறிகளை நகக்ஷதம் என்பர். பொதுவாக ஆண்கள்தான் பெண்கள் மீது இக்குறிகளை உண்டாக்குவதாக கவிகள் பாடுவார்கள். காளிதாசர் இங்கே பெண்கள் ‘வெட்கத்தினால்’ இப்படிச் செய்ததாகக் கூறுகிறார்

xxx

मुखार्पणेषु प्रकृतिप्रगल्भाः स्वयं तरंगाधरदानदक्षः ।

अनन्यसामान्यकलत्रवृत्तिः पिबत्यसौ पाययते च सिन्धुः ॥ १३-९॥

13-9 ரகு வம்சம்

கடல், தனது உதடாகிய அலையால் தனது மனைவிகள் ஆகிய நதிகளை ஒரேகாலத்தில் முத்தமிட்டு அனுபவிக்கிறது அவ்வாறே நதிகள் எல்லாம் தங்களுடைய உதடுகளை ஏக காலத்தில் கொடுத்து சுவைக்க வசதி செய்கின்றனவாம்

இந்த ஸ்லோகத்தில் கடலினைக் காதலனாகவும் நதிகளை காதலிகளாகவும் காட்டுகின்றான் கவிஞன்

இவை சில காட்சிகளே. இன்னும் பல காட்சிகளையும் காணலாம்.

குமார சம்பவ ஸ்லோகங்களை தொடர்ந்து  காண்போம்

–தொடரும்

tags-தமிழன், முத்தம், தெரியாது, சும்பண , க்ரா , ரிஷ்ய ச்ருங்கர் அனுமன், வால்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: