Post No. 10,969
Date uploaded in London – – 11 MAY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
முதல் பகுதியில் உத்தமியும் பத்தினியுமான இராவணன் மனைவி மண்டோதரியைக் கண்டவுடன் அவள்தான் சீதை என்று தவறாக கருதி, அனுமன், அதிக சந்தோஷத்தில் வாலில் முத்தம் கொடுத்துக் கொண்டதை வால் மீகி வருணித்ததைக் கண்டோம்.
பெண்களையே பார்க்காமல் ஆஸ்ரமத்தில் வசித்துவந்த இளம் முனிவர் ரிஷ்ய ஸ்ருங்கரை (கலைக்கோட்டு முனிவன்) நடன அழகிகள், விலைமாதர்கள் வந்து வாயில் முத்தம் கொடுத்ததை அவர் தேவலோக இளைஞர்கள் என்று கருதி அப்படியே அப்பாவிடம் சந்தோஷமாக உரைத்தை மஹாபாரத வனபர்வத்தில் கண்டோம்.
கடல் கதாநாயகன், நதிகள் என்னும் காதலிகளுக்கு ஒரே நேரத்தில் பூமியின் பலவேறு இடங்களில் முத்தம் கொடுப்பதை உலக மஹா கவிஞன் காளிதாசன் ரகு வம்ச காவியத்தில் வருணித்ததையும் கண்டோம்.
இப்படியிருக்கும் நிலையில், தமிழர்கள் மட்டும் மிக அடக்கமாக முத்தத்ததை மறைத்து வைத்து இருப்பதையும் கண்டோம். சங்க காலத் தமிழர்களுக்கு முத்தம் என்றால் முத்து/ pearl என்று அர்த்தம். கிஸ்/kiss அல்ல. உதடு/lips என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லையும் கூட அவர்கள் சங்கத் தமிழின் 30,000 வரிகளில் எழுதவில்லை.
xxx
argument from silence (Latin: argumentum ex silentio)
வாத்ஸ்யாயன மகரிஷி எழுதிய காம சூத்திர நூலில் உள்ள பல விஷயங்களைக் குறிப்பிடும் வள்ளுவன் கூட வாய் முத்தத்தை , காம சூத்திரம் வருணிப்பது போல எழுதாமல் பயந்து ஒதுங்கிவிட்டான். தமிழர்களைப் பொறுத்தவரையில் முத்தம்/kiss வெளியே சொல்லக்கூடாத விஷயம் போலும!!!
ஒரு விஷயம் சொல்லப்படாததால் அது நடக்கவில்லை என்று பொருள் அல்ல.
‘சொல்லாது மவுனமாயிருப்பதை வைத்து வாதாடுதல்’ ‘argument from silence (Latin: argumentum ex silentio’ என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். அதாவது அப்படி வாதாடுவது தவறு. தமிழர்கள் ‘இதயம்’ என்றே சொல்லாததால் அவர்களை இதயமற்றவர் என்று சொல்லாதே; ரிக் வேதத்தில் ‘உப்பு’ பற்றி சொல்லாததால் அவர்களுக்கு கடல் என்பதே தெரியாது அவர்கள் உப்பில்லாமல் சாப்பிட்ட ‘உப்பிலியப்பன்’கள் என்று எழுதாதே , மெகஸ்தனீஸ் ‘புத்தர்’ பற்றியே கதைக்காததால் அக்காலத்தில் புத்தர் என்றே ஒருவர் இல்லை என்று சொல்லாதே, மார்கோபோலோ சீனா பற்றி எழுதிவிட்டு உலக அதிசயமான நெடுஞ்சசுவர் (Great Wall of China) பற்றி எழுதாததால் அவர் சீனாவுக்கே போகவில்லை என்று எழுதாதே ; இப்படி எழுதுவதை ஆங்கிலத்தில் . argument from silence (Latin: argumentum ex silentio) என்று
சொல்லுவர். ஆகையால் தமிழன் முத்தக் கலைபற்றி எழுதாததை தவறாக எடை போடாதே . உதடுகள் (உஷ்ட்ர =ஸம்ஸ்க்ருதம் ) இல்லாமலா தமிழன் பிறந்தான் ? தாய்மார்கள் குழந்தைகளைக் கொஞ்சி முத்தமிட்டாமலா தமிழர்கள் வளர்த்தார்கள் ? இல்லையே!
XXXX
இதோ சில ‘குமார சம்பவ’ முத்தக் காட்சிகள்
உலக மஹா கவிஞன் காளிதாசன் முத்தங்களை வருணிக்கும் இடம் தேவலோகம். சிவனும் உமையும் கல்யாணம் செய்த பின்னர் முருகன் பிறப்பதற்கு முன்னர், நடந்தவை. தாரகாசுரனைக் கொல்ல வல்ல தேவ சேனாபதியை – திரு முருகனை — அவதரிக்கச் செய்ய – நடந்த செயல் அது.; காமத்தை வென்ற சிவ பெருமான் மனதில் காமத்தை தோற்றுவிக்க மன்மதனை அனுப்புகின்றனர் தேவர்கள் ; சிவன் தனது ஞானக் கண்ணால் மன்மதனை எரிக்கவும் ரதி தேவி அழுது புலம்பினாள். போகட்டும் போ ; மனித இனம் உள்ளவரை உன் புருஷன் அநங்கன் (Bodyless) ஆக – அங்கம் இல்லாதவனாக – என்றும் (in abstract form) இருப்பான் என்று அருளுகிறார். அதனால்தான் இன்றும் நம் மனதில் உருவம் இல்லாத எண்ணம் (Abstract but not concrete) ஆக காமம் உலவுகிறது; அதனால்தான் உலக ஜனத்தொகை நிமிடம் தோறும் ஆயிரக்கணக்கில் அதிகரிக்கிறது மன்மதனை (Sexual desire) எவரும் அழிக்க முடியாது.
xxx
Kumara sambhavam sloka 8-8
“அவர்கள் முத்தத்தில் உமாதேவி கீழ் உதட்டை சுவைக்க அனுமதியாள் .
சிவனோ முரட்டுப் பிடியில் அவளை வைத்திருந்தான்.
உமாதேவிக்கு வேதனையாக இருந்தாலும், செய்கையில் ஆதரவு காட்டாவிட்டாலும்,
சிவனின் சிந்தை மகிழ்ந்தது 8-8
Xxx
Sloka 8-9
“அவள் வாயை அகற்றினாள் ;
ஆனால் கீழ் உதடு கடிபடவில்லை .
நகத்தால் கீறினாலும் காயம் ஏற்படும் அளவுக்கு இல்லை ;
சிவனது செய்கைகளும் பார்வதியின் மெல் மேனி
தாங்கும் அளவே இருந்தது 8-9
Xxx
8-16
கணவனின் கவர்ச்சியில் சொக்கிப்போனாள் மனைவி;
மனைவியின் கவர்ச்சியில் சொக்கிப்போனான் கணவன்.
ஜானுவின் புதல்வியான கங்கா ,
சமுத்திரத்தை நோக்கித்தானே ஓடும் .
அவளுடைய வாய் அமுதம் சிவனுக்குக்
கிடைத்த வரப் பிரசாதம் 8-16
தம் யதா த்ம ஸத்ருசம் வரம் வதூர்
அன்வரஜ்யத வரஸ் த தைவ தாம்
சாகராத் அனபகா ஹி ஜாஹ்னவி
ஸோ அபி தன் முக ரஸை க நிர் வ்ருத்தி ஹி 8-16
Xxx
8-18
லோக மாதா அம்பிகாவின்
பூங் கொடி போன்ற கைகள்
வலியில் துடித்தன ;
கடிபட்டு விடுதலை பெற்ற
அவளுடைய கீழ் உதடு விரைவில் குளிர்ந்தது ;
முக்கோல் தாரியான சிவன் முடிமேல்
உள்ள பிறைச் சந்திரன் போல (குளிர்ந்தது) 8-18
xxxx
8-19
சிவன் முத்தம் இட்டபோது உமை அம்மையின்
கூந்தல் பொடியினால் மூன்றாவது கண் எரிச்சலுற்றது ;
மலர்ந்த தாமரையின் மணம் வீசியது
பார்வதியின் மூச்சுக் காற்றும் கூட 8-19
சும்பனாத் அலக சூரண தூஷிதம்
ஸத்காரோபி நயனம் லலாடஜம்
உத்சவசத் கமல கந்த யே ததெள
பார்வதி வதன கந்த வாஹினே 8-19
Xxx
8-90
காதலியின் இதழ் ரசம் அருந்திய
சிவனுக்கு தாகம் தணியாது, அதிகரித்தது ;
இரவும் பகலும் வாழ்க என்று கருதிய தருணத்தே ,
வெளியே பெரும் கூட்டம் தரிசனத்துக்காக
காத்திருப்பதை விஜயா அறிவிக்கவே,
சிவனும் அவ்விடத்தில் இருந்து மறைந்தார்.
ஸ ப்ரியா முகரஸம் திவானிசம்
ஹர்ஷவ்ருத்தி ஜனனம் சிஷே விஷுஹூ
தர்சன ப்ரணியினாம் அத் ர்ஷ்யதாம்
ஆஜ காம விஜயா நிவேதநாத் 8-90
8-90
XXXX
MY RESEARCH ON MOUTH= MUTHA= KISS= CHUMBANA
தமிழ் மொழியில் இருந்து தோன்றிய தெலுங்கு, மலையாளத்தில் தமிழ் அல்லது ஸம்ஸ்க்ருத்ச் சொல்லே உள்ளன.
ஐரோப்பிய மொழிகளை மொழியியல் அணுகுமுறையில் பார்த்தால், வாய் (Vaai= Baai) என்ற சொல்லை பல மொழிகளில் காணலாம். ‘முத்த’ (M=P) என்ற சொல்லை வேறு சில மொழிகளில் காணலாம். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து :-
மவுத் / வாய் = MOUTH= MUTH/A
முத்த (ஆங்கிலம்)
Albanian puthje= புதுஜெ = முத்தம் (ப=ம)
Some examples for B=M changes;பத்ர= மத்ர , பனுவல் = மானுவல்
Basque musu= ச = த முசு =முத
Some examples for T=S (ஓசை= ஓதை ; தானை=சேனை ; வித்தை = விச்சை )
Catalan petó =ப=ம; பெத்த=முத்த
xxx
வாய் என்ற சொல்லின் ஒலியை பிரெஞ்சு, இத்தாலியன், போர்ச்சுகீசிய மொழிகளில் காணலாம் ;
B=V
baiser/பிரெஞ்சு; bacio/ இத்தாலியன் ; beijo/ போர்ச்சுகீசியம் ;Beso/ஸ்பானிஷ்
உலகம் முழுதுமுள்ள எந்த மொழிச் சொல்லையும் சம்ஸ்க்ருதம் அல்லது தமிழுடன் தொடர்புபடுத்திவிடலாம். அவ்விரு மொழிகளே உலகம் முழுதும் பண்பாட்டைப் பரப்பிய மொழிகள் என்பது என்னுடைய ஆராய்ச்சிக்களின் துணிபு
XXX
FROM WEBSITES:–
चुम्बित
adjective
kissed | चुम्बित |
kissed | प्रणिंसित |
noun
verb
–SUBHAM—
Tags- முத்தம், சும்பன , அனுமன், காளிதாசன், குமார சம்பவம், தமிழர், kissing