இலக்கியத்தில் நையாண்டி, பரிகாசம்!—2 (Post No.10,973)

WRITTEN BY B. KANNAN, DELHI

Post No. 10,973

Date uploaded in London – –   12 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

இலக்கியத்தில் நையாண்டி, பரிகாசம்!–2

Written By B.Kannan,Delhi

இப்போது நாம் இதுவரை இந்தி இலக்கியத் துறையில் படித்தோ, கேட்டோ அறிந்திராத  பிரபல சாகித்தியக் கர்த்தாக்களின் நகைச்சுவை மிளிரும் நையாண்டிப் பாக்கள், உரைநடை நவீனங்கள் சிலவற்றைப் பார்க்கப் போகிறோம்.

18, 19-ம் பொ.ஆ.காலக்கட்டம் “ரிதி காவியக் கால்” (செயல் முறைக் காலம்) என அழைக்கப்படுகிறது. அப்போது பல கவிஞர்கள் காலத்தால் அழியாதக் கவிதைகளை இயற்றினர்.வாதப் பிரதிவாதங்கள் நடந்தன; அறிவியல் கோட்பாடுகளும், தத்துவ விளக்கங்களும் எழுதப்பட்டன. ஆங்கிலேயக் காலனி ஆதிக்கத்தின் போது, சமுதாயத்தில் புரை யோடிப் போயிருந்தக் குறைகளைச் சீர்திருத்தும் நோக்கில் எழுதப்பட்டக் கதை கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்த இதழ்களுள் வெகு பிரபலமானவை, “பாரதேந்து மண்டல்”, மத்வாலா’ (கட் குடியன் வெறியாட்டம்), ‘சரஸ்வதி’, ‘அப்யுதை’ (விடியல்), ‘பாரத் மித்ரா’, ‘ஹிந்தி பிரதீப்’, முதலி யனவாகும். இவற்றில் மத்வாலா ஆங்கில ஏகடிய சஞ்சிகை “பஞ்ச்” (PUNCH) போன்றது எனப் போற்றப்பட்டது.

அதன் சந்தா விவரமே பரிகாசத் தொனியில் தான் அமைந்திருந்தது– ” (தனி பிரதி) ஒரு அணா ஒரு கப், வருடாந்திரப் பாட்டிலுக்கு முன் பணம் மூன்று ரூபாய்!” இதில் வெளியானக் “கல் வெட்டுக் கருத்து ஓவியங்கள்”, சல்தி சக்கி (நிறுத்த முடியாத அரவைக் கல்), சாபுக் (சாட்டை) போன்றவை நக்கலுக்குப் பெயர் போனவை. பாரத் மித்ராவில் வெளியிடப்பட்ட “சிவசம்புவின் கடிதங்கள்” அன்றைய அரசாங்கத்தின் கொள்கைகளை நையாண்டியுடன் கடுமையாகச் சாடியது. அச்சமயம் இந்தி இலக்கியவானில் தங்களது தனி முத்திரையைப் பதித்த இரு பெரும் கவிஞர் கள் பாரதேந்து ஹரிஷ்சந்திரா (1850-1884), ராதாசரண் கோஸ்வாமி (1858-1925). இருவரும் அன் றைக்கு நிலவிய சமய சீர்திருத்த முயற்சிகள், கலாச்சார மதிப்புகள்,காலனி ஆதிக்க சட்ட-ஒழுங்குப் பிரச்சினை, சாதி சங்கங்களின் நிலை ஆகியவற்றைக் கேலியும், கிண்டலும் செய்து கட்டுரைகளும், பாடல்களும் எழுதியுள்ளனர்.

நாம் இப்போது பார்க்கப் போவது ஶ்ரீராதாசரண் கோஸ்வாமி இயற்றியப் பிரஹசனக் கவிதை “நாபித் ஸ்தோத்திரா” (நாவிதர் தோத்திரம்) சமூகத்தில் நாவிதர்களின் நிலை, அவர்களது முக்கி யத்துவம், ஆகியவற்றை நகைச்சுவையுடன் கூறியுள்ளார். இவர்களை ஆசிதையன், ஏனாதி, சண்டிலன், சீமங்கலி, மங்ககிலி, மயிர்களைவோன், மயிர்வினையாளன், மாசுநீப்போன், மாஞ் சிகன் என அழைக்கிறார்கள். இவர்கள் ஐவகைப் பண்டிதர்களின் குணாதிசயங்களைப் பெற்றி ருப்பதால்,( ஆன்மிக வாழ்க்கை நெறி, உயிர்க் காக்கும் மருத்துவம், வாழ்வியல் ஒழுக்கம், இசை ஞானம், நாடகவியல் திறமை),ஐம்பட்டன் (ஐந்து+பட்டர்) என்றும் அறியப்படுகிறார்கள். ஒருவர் பிறக்கும் போது மருத்துவச்சியாக, உடல் பிணியின்றி வாழவைக்கும் போது வைத்தி யனாக, மரிக்கும்சமயம் கர்மபிணி போக்கும் பரிகாரியாக விளங்குகிறார்கள் என்பதைக் கவிஞர் அங்கெங்கே சுட்டிக் காட்டுகிறார்.

அம்பட்டன் என்ற வார்த்தை தவறான உச்சரிப்பு, ஐம்பட்டன்= ஐந்து+பட்டர் ஐந்து வகைப் பண்டி தர்களின் குணாதிசயங்களைப் பெற்றிருப்பவர் என்பதே இதன் பொருள். அந்த ஐந்துவகைப் பண் டிதன் என்றால் என்ன என்பது பலரின் மனதில் தோன்றும் கேள்விகள் இதோ அதற்கான விளக்கம்! 1,தத்துவம்(கடவுளை உணரும் ஆன்மாவின் ஆன்மீக தர்மம் வளர்க்கும் வாழ்க்கை நெறி) 2,மருத்துவம்(மறு+தத்துவம் என்ற பொருள் தரும் பூதஉடலின் உயிர்க் காக்கும் தர்மத் தின்படி விதி) 3,இயல்(அறிவு+ இயல்=அறிவியல் உலக மாற்றத்தை அறிந்து கொள்ளும் விதி நடனம் ஆடும் நாயகன் நடராஜன் தந்த வாழ்வியல் ஒழுக்கம்) 4,இசை (உலகத்திற்குப் புதிய தோர் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி அவர்களின் மனோபலத்தை அதிகரித்தல்) 5,நாடகம் (வாழ்வி யல் இலக்கணம் நீதி போன்றவற்றை நாடகத்தின் வழியாக கற்பித்தல்) இதில் குறிப்பிட வேண் டிய விஷயம் என்னவென்றால் மனிதன் பிறக்கும் போது மருத்துவச்சியாக வளமுடன் வாழ வைக்கும் போது வைத்தியனாக அவன் இறந்த போதும் கர்ம பிணிபோக்கும் பரிகாரியாக அவர்கள் இருக்கிறார்கள் மறவாதே என்றும் கோஸ்வாமி கூறுகிறார்.

அக்காலத்தில் கிராமங்களில் சுதந்திரமாகவும், பிரபலமானவர்களாகவும் விளங்கியவர்கள். ஊரில் நல்லதோ, கெட்டதோ எது நிகழ்ந் தாலும் முன்நிறுத்தப் படுபவர்கள் அவர்களே. அதுவே அவர்களுக்கு வலிமைச் சேர்த்தாலும் சிலர் அதிலும் குறை காணத் தவறவில்லை. ஏனெனில், கிராமத்து மிராசு, ஊர் பெரியோர்களின் அந்தரங்க ரகசியங்கள் அவர்களுக்கு அத்துப்படி! ஆகை யால் அச்சமூகத்தில் படித்து முன்னேறி யவர்கள் தங்கள் நட-உடை பாவனை, பழக்க வழக்கங் களைக் காலத்துக்கேற்ப மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எழுதுகிறார் கோஸ்வாமி.

அவர்களது நற்செயல்களைப் பாராட்டிப் புகழும் அதேசமயம் அவர்களின் மறுமுகத்தை வஞ்சப் புகழ்ச்சி செய்துவிடுகிறார். ஊரிலுள்ளத் தனிநபர்களின் உல்லாசக் கேளிக்கைகள், விருப்ப வெறுப்புகள் அனைத்தையும் அறிந்தவர்கள் என்பதால் காலனி ஆதிக்கம் தங்களின் ஆதாயத் துக்காக அவர்களைத் தந்திரமாக உபயோகித்துக் கொண்டது. இதன் மூலம் மற்றவர்களின் ஒருவித பயம் கலந்த வெறுப்பையும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டனர் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும் எனவும் குறிப்பிடுகிறார். தவிர, வருடாந்திரப் பெருவிழாவில்

நம்பெருமாள் பழையமுதும்-மாவடு ஊறுகாயும் சாப்பிட ஆர்வமுடன் ஜீயபுர யாத்திரை மேற் கொள்கையில் அங்கு, பெருமான் நாவிதச் சமூகத்துக்குப் பிரத்தியேகமாக அளிக்கும் மரியா தையைத்தான் மறக்க முடியுமா? ஆனால் இதற்குப் பிறகு தான் நம் பெருமாள் ரகசியமாக உறையூர் சென்று ஶ்ரீகமலவல்லித் தாயாரைச் சந்திப்பதும் அதற்காக ரங்கநாயகித் தாயாரிடம் மட்டையடி வாங்குவதும் நினைவுக்கு வருகிறது, அல்லவா?! அதுதான் நாவிதர் மகானின் ‘அதிர்ஷ்டக் கைராசி’!

இச்சிறு குறிப்புடன் இப்போது நாவிதரைத் துதிப்போமா…….?

சில முக்கியத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தி மூலப் பாடல்களின் தமிழாக்கத்தையும், அவற்றின் பொருளையும் கொடுத்துள்ளேன். மற்றவற்றைப் படித்து ரசிக்க வேண்டும்.

அக்காலத்துச் சூழ்நிலை, பழக்க வழக்கங்களைக் கருத்தில் கொண்டு நக்கலாகப் புனையப் பட்டக் கவிதையே இது என்பதை நினைவில் நிறுத்திக் கொள்வது அவசியம்.

சாஹித்திய அகாடமி, தில்லி, வாராணசி சௌகம்பா வெளியிட்டாரிடமும், தேசிய நூலகங் களிலும் ராதாசரண் கோஸ்வாமியின் புத்தகங்கள் கிடைக்கும்.”பாரதேந்து மண்டல்– ராதாசரண் கோஸ்வாமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்”, தொகுப்பாளர்: கர்மேந்து ஷிஷிர்

“ஹே! ஹமாரே உஷ்ணதா சந்தாபித் சிர் கே ஷீதல் கர்ணேவாலே நாபித், ஆப்கோ ப்ரணாம் ஹை| யதி ஆப் ந ஹோ தோ, ஹமாரீ படீ துர்தசா ஹோ,க்யோங்கி தாடீ பட்கர் ஹமே பக்ரா பநா தே, சிர் கே பால் பட்கர் ஜடா ஹோ ஜாயே, ப்ரேத் மே ஔர் ஹம் மே குச் பீ பேத் ந ரஹே| லோக் ந மானே தோ சன் 1887 மே ஜப் பனாரஸ் மே நாயீ ஔர் லுஹாரோங் கா ஜஹ்டா ஹுவா தா உஸ் சமைய் கீ தவாரீக் தேக் லே| அதஏவ ஹே, ப்ரம்மாஜீ கே பால் பகீசே கே மாலீ, ஆப்கோ தன்ய ஹை!  (பாடல் 1)

 “ஹே, நாவித மகாபிரபு, எங்கள் மண்டைச் சூட்டைத் தணித்துத் தலையைக் குளிர்விப்பவரே, தங்களைச் சிரம் தாழ்த்தி வணங்குகிறோம். ஒருவேளை நீங்கள் இல்லாவிட்டால் நாங்கள் பெரும் வேதனையிலும், துன்பத்திலும் ஆழ்ந்திருப்போம். ஏனெனில், முகத்தில் நீண்ட தாடி வளர்ந்து ஆட்டுக் கிடா போல் ஆகியிருப்போம். ஜடாமுடி போல் சிகை வளர்ந்து நமக்கும் பேய், பிசாசுகளுக்கும் இடையே வித்தியாசம் தெரியாமல் போயிருக்கும். உங்களுக்குச் சந்தேகமாய் இருந்தால் காசியில் 1887-ல் நாவிதருக்கும், கொல்லருக்கும் இடையே நடந்த சச்சரவின் விளை வை ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். ஆகையால், ஓ,பிரம்மதேவனின் முடி தோட்டத்தைப் பராம ரிப்பவரே, எங்கள் பாராட்டு உங்களுக்கு உரித்தாகட்டும்!

ஹே நாபித் மஹாஷய! சர்காரீ கர்மசாரீ ரவிவார் கோ ஔர் ஷௌகீன் ராஜாபாபு புதவார் கோ அவஷ்யஹீ ஆப்கீ பூஜா கர்தீ ஹை, அதஏவ ஹே கல்க்ரஹ, அதவா ரவி-புத் கே

பிரகாஷ் ஹோனேவாலே அர்த்சாப்தாஹிக் சமாசார் பத்ர! ஆப்கோ தன்ய ஹை!

ஐயா, ஏனாதியாரே! அரசாங்க உத்தியோகஸ்தர்கள் ஞாயிற்றுக் கிழமையன்றும், டாம்பீகத்தில் மோகங்கொண்ட சமஸ்தான இளவரசர்கள் புதனன்றும் மாறாமல் சொல்லிவைத்தாற்போல் போற்றித் துதித்து உங்கள் சேவைக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். (முடி திருத்திக்கொள்ளப் புதன், ஜோதிடப்படி நேர்மறை எண்ணம் ஓங்கும் நல்ல நாள் என்பது நம்பிக்கை, ஞாயிறு விடுமுறை தினம்). ஆதலால், ஜனங்களுக்கு அறிவூட்டி, உற்சாகமளிக்கும் விதமாக வாரமத்தியில் வெளிவரும் பத்திரிகையைப் போன்றவரே, பசுவின் கழுத்தில் தொங்கும் சதை போல் எங்களையும் விடாமல் சுற்றியிருக்கும் கிருஹதேவரே! உண்மையில் நீங்கள் ஒரு ‘பெரிய’ மனிதர் தான்!

இஸ் பாரதவர்ஷமே கித்னீ சுகுமார் கன்யாவோன் கா தும்னே சிர் காடா, கித்னே படே ஆத்மி யோன் கோ லட்கியோன் சே தனக் சே லோப்மே ஃபஸ்கர் தரித்ரோங்கே யஹாங் சக்கீ பிஸ் வாயீ, கித்னீ தரூன் காமினியோங்கோ பாலகோங் கே சிர் மடா, கித்னீ பாலிகாவோங்கோ புட்டோங் கீ சிதா கீ லக்டீ பனாயீ, கித்னோ கா அனேக சல்பல் சே சர்வனாஷ் கியா, அதஏவ ஹே, அதாலத் கே உர்தூ காக(ஸ்)ஜோங்கே மாதா பிதா! ஹே மஹ்மூத் கஜ்னபீ, ஔரங்கஜீப், நாதிர்ஷா ஆதி பாரத் சர்வ நாஷகோன் கே படேபாயீ! தும் தன்ய ஹோ!

நம் பாரததேசத்தில் குல வழக்கத்தைக் கடைபிடிப்பவர்களின் அழகானப் பெண் குழந்தைகளின் தலைமுடியை  அதுவும் எண்ணிலடங்கா முறையில் மழித்து விட்டவர், தானே, நீங்கள்?

உங்கள் பணத்தாசைக்கும், பேராசைக்கும் எல்லையே இல்லை, போலும்! வறியக் குடும்பப் பெண்களை ஆசைக் காட்டி பெருந்தனக்காரர்களிடம் அடிமையாக வாழ கட்டி வைத்து, அவர் களை அரவை இயந்திரத்தில் அகப்பட்டுக் கொண்ட தானியம் போல் ஆக்கிவிட்டீர்களே, நியாயமா? அதேசமயம் எத்தனை இளமை வாய்ந்தக் கன்னியரை அதிகம் வயது முதிராத இளம் பையன்களிடம் ஒப்படைத்து இருக்கிறீர்கள்? உங்களால் எத்தனைப் பெண்கள் கிழ மனிதர்களின் சிதைக்குக் கட்டையாகிக் கருகியுள்ளனர்? எத்தனைப் பேர்களை உங்கள் தந்திரத்தாலும், நம்பிக்கைத் துரோகத்தாலும் படுகுழியில் தள்ளியிருக்கிறீர்கள், தெரியுமா மாஞ்சிகரே? முகலாயரது நீதிமன்ற உருது தஸ்தாவேஜு போன்றவரே! அதுவுமின்றிப் பாரதத் தைச் சூறையாடி அழிக்கத் துணிந்த, கஜனி முகமது, அவுரங்கசீப், நாதிர் ஷா போன்றோரின் மூத்த சகோதரரே, நிஜமாகவே நீங்கள் ஒரு ‘பெரிய’ ஆள் தான்!

பாரத்வர்ஷ கீ அனேக் சத்வா, விதவா ஸ்த்ரீயாங் நித்ய பிராதக்கால் உட்கர் துமே ஹஜாரோன் காலியாங் தேதீ, ஔர் அப்னே க்ருத (நெய்) சமான் கர்ப அஸ்ருவோன் ஸே நித்ய துமாரே மார்னேகோ ஹ்ருதயாக்னி மே ஹோம் கர்தீ, பர் தப் பீ தும் நஷ்ட நஹீ ஹோதே, வரன் பட்தேஹீ ஜாதே ஹோ, அத ஏவ ஹே ரக்தபீஜ் கே சந்தான்! ஹே ஹமாரே பூர்வ சஞ்சித் ப்ராரப்த கர்மோங்கே சஜாதீய! ஹே தேவதாவோங்கே சமான் அஜர், அமர்! துமே தன்ய ஹை!

இப் பாரததேசத்தின் அநேக சுமங்கலிப் பெண்மணிகளும், விதவை ஸ்த்ரீகளும் தினமும்  காலையில் எழுந்தவுடன், வெவ்வேறு காரணங்களுக்காக, உங்களைப் பலவாறு திட்டித் தீர்க்கிறார்கள், அவர்களின் அடிவயிற்றிலிருந்து மேலெழும்பி இதயமெனும் ஹோமகுண்டத் தில் நெய் வார்க்கப்பட்டு வெகுண்டெழும் தீப்பிழம்புப் போன்றக் கோபக்கனலால் உங்களுக்கு மரணம் சம்பவிக்க வசை பாடுகிறார்களே! ஆனாலும் உங்களுக்கு நஷ்டம் ஏதுமில்லை,மாறாக வளர்ந்து கொண்டேதான் போகிறீர்கள், அதாவது அரக்கன் ரக்தபீஜனின் வாரிசே! எங்கள் பூர்வ ஜன்மக் கர்மங்களை ஒன்றிணைப்பவரே! நீங்கள் தேவர்களைப் போல் இளமையாகவும், சிரஞ் சீவியாகவும் திகழ்வீர்களாக! நிஜமாகவே நீங்கள் பாராட்டுக்குரியவர் தான்!

TO BE CONTINUED……………………………………………….

TAGS– இலக்கியத்தில் ,நையாண்டி, பரிகாசம்,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: