இலக்கியத்தில் நையாண்டி, பரிகாசம்!—2 continued……….(Post

WRITTEN BY B .KANNAN, DELHI

Post No. 10,978

Date uploaded in London – –   13 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஆஹா நாபித்! துமாரே பினா தோ பாரதவர்ஷ மே கோயி காம்ஹீ நஹீ சல்தா-முண்டன் மே தும் ஜப்தக் உபஸ்தித் நஹோ, ஔர் அப்னா மன்மான்தா நேக் ந தராலோ, கபி நஹீ ஹோ சக்தா- யக்ஞோபவீத் மே துமீ சே சாந்த் குடானோ பட்தீ, ஔர் விவாஹ் கே தோ தும் ஆத்யா சார்ய ஹோஹீ! ஃபிர் மர்னே பர் காஷ்ட சிதா கீ அக்னி பீ துமீ லாதே, ஔர் அந்த் மே சிரார்த்த பிராயச்சித்த பர்யந்த் பீசா நஹீ சோட்தே,,அதஏவ ஹே வேதமந்த்ர! துமே தன்ய ஹை!

ஆஹா, சீமங்கலியாரே! இவ்வுலகில் உங்களையின்றி ஒரு காரியமும் மங்கலமாக நடந் தேறாதே! குழந்தையின் முதல் மொட்டைப் போடும் நிகழ்வில் உங்கள் வரவை எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பர்; உங்கள் மனதுக்கு ஏற்றவாறு சன்மானம் கிடைக்கும் வரை விழா இனிதாக முடிவுக்கு வராதே! உபநயன விழாவில் பையனுக்குப் பிறை வடிவ சிகையலங்காரம் செய்விப்பது நீங்களே! திருமணத்தில் மாப்பிள்ளையை “உளவு” பார்த்துப் பெண் வீட்டாரிடம் சொல்வதும் தாங்களே,அல்லவா? மரண ஈமச்சடங்கின் போது சிதைக்குத் தீமூட்ட அக்னி எடுத்துத் தருவதும் நீரே! அதுமட்டுமா, திதி கொடுத்து முடியும் வரை நிழல் போல் தொடர்ந்து வருவதை நிறுத்த மாட்டீர்! ஹே,வேதமந்திர சொரூபமே, உங்களைப் பாராட்டாமல் எப்படி இருப்பது?

ஜிஸ் ப்ரஹார் பாரத்வர்ஷ மே ஔர் சப் பதார்த் பஹுமூலா ஹோகயே ஹை உஸீ ப்ரஹார் துமாரா தர் ( கட்டணம்( )பீ ஏக் பைஸே சே பட்கர் டபள் ஹோகயா ஹை! அதஏவ பாரதவர்ஷ கீ உர்பரா (வளமான) பூமி கே பஹுமூலா பதார்த்! ஹே ரத்ன, தும் தன்ய ஹோ!

இந்நாட்டில் எல்லாப் பொருட்களின் விலையும் கூடிக் கொண்டே போவது போல் உங்கள் சேவைக் கட்டணமும் ஒரு “பைசா” விலிருந்து இரண்டு மடங்கு உயர்ந்து விட்டது! தாங்கள் இத்தேசத்தின் செழிப்பான வளம் கொழிக்கும் பூமியின் விலைமதிப்பற்றச் செல்வமே, ஹே ரத்தினமே, உங்களைப் போற்றித் துதிக்காமல் இருக்க முடியவில்லையே! ( இதனால் சிலர் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் முகச்சவரம் செய்து கொள்ளும் முயற்சியிலும் இறங்கி விட்டனர் என்று மேலும் பரிகசிக்கிறார்)

ராத்ரி கோ அமீரோங்கே பைர் தாப்தே-தாப்தே அநேகோங்கி சுக்லீ காதே,அநேக் பிரகார்கீ ஜூட்-சச் கதா கஹ்கர் உன்கா மனோரஞ்சன் கர்தே! அத ஏவ ஹே சுகல்காரோங்கே சசா, ஹே கதா பாஞ்சனே வாலோங்கே ஜீவிகாஹாரீ! தும் தன்ய ஹோ!

இரவில் பெருந்தனக்காரர்களின் பங்களாவில் அவர்களின் கால்களை மசாஜ் செய்தபடி, மற்ற வர்களைப் பற்றி கோள் மூட்டியும், அனைத்து விதமான பொய்-புரட்டு-உண்மை விஷயங் களைச் சுவாரஸியமாகச் சொல்லி அவர்களைக் குஷிபடுத்துகிறீர்கள்! ஆதலால் ஹே கோள் சொல்பவர்களின் சித்தப்பாவே, கதை அளந்தோ, படித்தோ சொல்லி பிழைப்பு நடத்துபவரே, நீங்கள் நிஜத்தில் “உயர்ந்த” மனிதர் தான்!

சம்பந்தி, சம்பந்தியோ மே ஜூட்-சச் லகாகர் துமீ லடாயீ கரா தேதே! கோயி காம் பட்னேபர் சம்பந்தியோ கே யஹாங் ஜாகர் துமீ சப்பன்போக் உடாதே, ஔர் ஜோ கோயீ துமாரீ அச்சி சேவா ந கரைதோ சட் உஸ்கா காம் பிகாட் தேதே. அத ஏவ ஹே நாரத்ஜீ! ஔர் ஹோ துர்வாசா ரிஷி! தும் தன்ய ஹோ!

கல்யாணத்தில் சம்பந்திமார்களிடம் பொய்-புரட்டுச் சொல்லி அவர்களுக்குள் சண்டை மூட்டி விடுகிறீர்! வேலைப் பளு அதிகமானால் உள்ளே புகுந்து வயிறுமுட்ட விருந்தைச் சுவைக்கிறீர். எவர் உங்களைச் சரியானபடி கவனிக்கவில்லையோ, கோபத்தில் அவர்களின் வேலைக்கு வேட்டு வைத்து விடுகிறீர்கள்! அதனால் அல்லவோ நீங்கள் நாரதர்ஜீ! ரிஷி துர்வாசரும் கூட! உங்களுக்கு அனந்தகோடி நமஸ்காரம்!

நிருத்ய கீ சபா மே மஷால் திகாகர் வேஷ்யா கே நிருத்ய கா சுக் துமீ யதார்த அநுபவ் கர்தே! வேஷ்யா கே சாத்-சாத் படுவோங்கீ (தரகன்) தரஹ் துமீ பத்-பத் பர் தம் பர்தே ஔர் டகா ருப் யேகீ தஸ்தூரீ(கமிஷன்) பி துமீ காட் லேதே, அதவா நக்லோ மே பாங்டோ கே ஆஷேப பாத்ர பீ துமீஹோதே. அத ஏவ ஹே “ஆராயஷ் மஹ்ஃபூல்” ஔர் ஹே பாடோங்கே படே தாவூ, தும் தன்ய ஹோ!

நாட்டிய அரங்கில் சுளுந்து (தீவட்டி) பிடித்து வெளிச்சம் காட்டியபடி நர்த்தகியின் நடனத்தை ஆழ்ந்து அநுபவித்து ரசிப்பீர்கள்! கணிகையருடன் சேர்ந்து தரகர் போல் அடிக்கடி தங்கள் கட்ட ணத்தை உயர்த்துவீர்! அதிலிருந்து உங்களுக்குரியக் கமிஷனையும் எடுத்துக் கொள்வீர்! மறுப்ப வர்களிடம் செயற்கையாக நடித்து அதிகப் பணமும் வேண்டும் அளவு கறந்து விடுவீர்! ஆகவே ஹே, “சங்கீத சபையின்  கவர்ச்சிகர அலங்காரத் தோரணம்” போன்றவரே! கோமாளிகளின் பெரியப்பாவே! உண்மையில் நீங்கள் “மாமனிதர்” தான்!

ப்ரயாக்ராஜ் ஜோ சப் தீர்த்தோங்கா ராஜா ஹை, வஹாங் பினா துமாரா ஆஸ்ரய கியே சுத்தி நஹீ ஹோதீ. ஔர் சர்வ பாபோங் கே ஆஸ்ரய கே ஷோகாபீ துமீ சேதன் கர்தே. அத ஏவ ஹே பதித தபாவன்! ஹே தீர்த்தராஜ் கே சகல் ஃபல்தாதா வேணீமாதவ், ஹே பிரயாக்வால் பண்டாவோங்கே சண்டா! துமே தன்ய ஹை!

எல்லா புண்ணியத் தீர்த்தங்களுள் தலை சிறந்தது பிரயாகை. அங்கு உங்களுடையத் துணை யின்றி நீத்தார் காரியங்கள் சுமுகமாக முடிப்பது என்பது அரிது. அனைத்துப் பாபச் செயல்க ளால் ஏற்படக்கூடியத் துன்பங்களின் அடைக்கலனாயிருந்து அவற்றை உணர்வுபூர்வமாக அணுக வைக்கிறீர்!.ஆகையால்,ஹே வீழ்ந்தவர்களைக் கைதூக்கி விடுபவரே! பிரயாக்ராஜ் க்ஷேத்திரத்தில் சகலப் பிணிகளையும் களையும் வேணீமாதவ்! காளைக் கன்றின் வாலைப் பிடித்துக் கொண்டு வைதரணீய நதியைக் கடக்க உதவும் பண்டிதர்கள் நிறைந்த இப்பூமியில் அவர்களின் அந்தக் காளைக் கன்று போன்றவரே! உங்களைப் பாராட்ட வார்த்தையே இல்லை!

–போற்றிகள் இப்படித் தொடர்கின்றன……

முடிவுரையாக கோஸ்வாமி அவர்கள் இப்படிக் கூறுகிறார்…..

ஐயா நாவிதர் பெருமானே! நாங்கள் விரும்பி அழைக்கும் விருந்தாளி, நீங்கள். உங்கள் மனம் நிறைந்தால் எங்கள் சந்ததியினர் நலமுடன் வாழ்வார்கள். அதனால், கோள் சொல்லாதீர், சண்டை, சச்சரவை உண்டாக்கி அதில் குளிர் காயாதீர். இந்தத் துதி மூலம் உங்களை வேண் டிக் கொள்வது இது தான். உங்கள் உதவியை நாடும் சமயம் சீக்கிரம் வந்து சேருங்கள். எங்கள் மகன்- மகள் கல்யாண விழாவின் போது உங்களுக்கே உரிய சில்விஷமக் கைவரிசையைக் காட்டாமல் இருங்கள். எங்கள் பரிவார ஜனங்களுக்கு ஒரு நல்ல உத்தமமான வழிகாட்டியாக நீங்கள் திகழவேண்டும் என்பதே எங்கள் ஆசை. ஆகையால் அநாவசியமாக “வரி” யை

உயர்த்தாதீர்கள். சூழ்நிலையைப் புரிந்துகொண்டு கண்ணிருந்தும் குருடனாய் நடிக்க வேண்டாம். “கண்களோ குருடு, பெயரோ கண்ணாயிரம்” என்ற அவச்சொல்லுக்குப் பாத்திரமாகாமல் இருங் கள்! வேலையில் கண்ணும் கருத்துமாக இருங்கள் என மனம் குளிரும்படித் தோத்திரம் பாடிப் போற்றுகிறோம்.

வாழி  எங்கள் கலியுக மந்திரி, நியாயாதிகாரி, சீர்திருத்தவாதி நாவிதர் பெருமான்!

–SUBHAM–

TAGS- நாவிதர், ,நையாண்டி, பரிகாசம்

        ————————————————————————————————————–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: