கெளடில்யரின் அர்த்த சாஸ்திர பொன்மொழிகள் (Post No.10,990)
Post No. 10,990
Date uploaded in London – – 15 MAY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
FESTIVAL DAYS- 12- VAIKASI VISAKAM, 13- KANCHI PARAMACHARYA JAYANTHI, 21- INTERNATIONAL YOGA DAY.
FULL MOON DAY – 14; NEW MON DAY- 28; EKADASI-10, 24
AUSPICIOUS DAYS – JUNE 1,3,9, 10, 17,23, 27
ஜூன் 2022 நற்சிந்தனை காலண்டர்
பண்டிகை நாட்கள் – ஜூன் 12- வைகாசி விசாகம், 13- காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் ஜெயந்தி, 21- சர்வ தேச யோகா தினம்
அம்மாவாசை -28; பெளர்ணமி -14; ஏகாதசி விரத நாட்கள் -10,24
சுப முகூர்த்த நாட்கள்- JUNE 1,3,9, 10, 17,23, 27
xxx
ஜூன் 1 புதன் கிழமை
ரக்ஷேத் ஸ்வ தேஹம் ந தனம், கா ஹ்யநித் யே தனேதயா?
ஒருவனுடைய உடலைத்தான் காக்கவேண்டும்; உடைமையை அல்ல ; நித்தியமில்லாத செவத்தைப் பற்றி கவலைப்படுவதேன்
xxx
ஜூன் 2 வியாழக் கிழமை
சமவ்யாயா மோ யோகக்ஷேமயோ ர் யோனிஹி
அமைதியும் தொழில்களும் தான் பாதுகாப்புக்கும் பொது நலனுக்கும் ஆதாரம் ஆகும்
xxx
ஜூன் 3 வெள்ளிக் கிழமை
ந ச அகாமஹ புருஷோஸ்தி
ஆசையில்லாத மனிதனே இல்லை
xxx
ஜூன் 4 சனிக் கிழமை
நக்ஷத்ரமதி ப்ருச்சந்தம் பாலமர் தோ நிவர்த்ததே
அர்த்தோஹ்யர்த்தஸ்ய நக்ஷத்ரம் கிம் கரிஷ்யந்தி தாரகாஹா ?
எப்போதும் ஜோதிடம் பார்ப்பவனை விட்டு செல்வம் பறந்தோடிப்போகும் ; அவன் செயல் சிறுபிள்ளைத்தனமானது ; செல்வமே செல்வத்துக்குரிய நக்ஷத்ரம் ; ஆகாயத்திலுள்ள தாரகைகள் என்ன செய்யும்?
xxx
ஜூன் 5 ஞாயிற்றுக் கிழமை
சாஸ்த்ராவித ஹஷ்டகர்மா கர்மசு விஷாதம் கச்சேத்
(ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது)- அனுபவ அறிவு இல்லாத படிப்பாளி காரியத்தை நிறைவேற்ற முடியாமல் தவிப்பான்
xxx
ஜூன் 6 திங்கட் கிழமை
ந த்வே வார்யஸ்ய தாஸ பாவஹ
நல்ல பண்பாடுமிக்க ஆளை (ஆரியனை)அடிமை(தாசன்) ஆக்கக்கூடாது
XXX
ஜூன் 7 செவ்வாய்க் கிழமை
பரஸ்பர ஸாதகா ஹி சக்தி தேச காலாஹா
இடம், காலம், அதிகாரம் ஆகியன ஒன்றுக்கு ஒன்று உதவி செய்யும்
ஒப்பிடுக – குறள் – கருவி, காலம், இடம்
xxx
ஜூன் 8 புதன் கிழமை
கார்ய சாமத்யார்த்தி புருஷ ஸாமர்த்யம் கல் ப்யதே
செயலில் காட்டும் திறமையை வைத்தே ஒருவன் எடைபோடப்படுகிறான் .
xxx
ஜூன் 9 வியாழக் கிழமை
இந்த்ரஸ்ய ஹி ஸப்ரணமதி யோ பலீயசோ நமதி
அதிகாரத்தில் உள்ளவனை வணங்குவது, இந்திரனை வணங்குவதற்கு சமம் ஆகும் .(இந்திரனைப் போல வரம் தருவார்கள்)
XXX
ஜூன் 10 வெள்ளிக் கிழமை
ஸ்திர கர்மா நாஸமாப்ய கர்மோ பரமதே
உறுதியான தொழிலாளி (அரைக் கிணறு தாண்ட முடியாது) ; காரியத்தை முடிக்கும் வரை அவன் விடமாட்டான். ஒப்பிடுக- கருமமே கண்ணாயினார் பாடல்
XXX
ஜூன் 11 சனிக் கிழமை
காஷ்டம் ஹ்யக்நி ரவஹிதோ வசதி
கட்டைக்குள் தீ வசிக்கிறது ; (விறகில் தீயினன் )
(எந்தப் புற்றில் எந்தப் பாம்பு வசிக்குமோ!)
XXX
ஜூன் 12 ஞாயிற்றுக் கிழமை
நதீ பாத்ருகம் ஹி ஸ்வாஜீவம் அபாக்ஷயஸ்சாபதி பவதி
ஆற்று நீர் பாசனமுள்ள பூமி, வாழ்க்கைக்கு வழிவகுக்கும்; கஷ்ட காலத்தில் ஆதரவும் தரும் ; ஒப்பிடுக- குறள் -துப்பார்க்குத் துப்பாய ……
XXXX
ஜூன் 13 திங்கட் கிழமை
சித்தமநித்யம் ஹி மனுஷ்யாணாம்
(மனம் ஒரு குரங்கு) மனிதனின் மனம் மாறிக்கொண்டே இருக்கும்
XXX
ஜூன் 14 செவ்வாய்க் கிழமை
அசூசயோ ஹி காரவஹ
கொல்லன், தச்சன், கொத்தன் போன்றோர் பொதுவாக நேர்மையில்லாதவர்கள் .ஒப்பிடுக- சிலப்பதிகாரம்- பொற்கொல்லன்
XXX
ஜூன் 15 புதன் கிழமை
தைவ மானுஷம் ஹி கர்ம லோகம் யாபதி
கடவுளும் மனிதனும் சேர்ந்துதான் உலகத்தை நடத்துகிறார்கள்
ஒப்பிடுக – பகவத் கீதை – கர்மண்யேவ திகாரஸ்தே ; வினையே ஆடவர்க்குயிரே – குறுந்தொகை
XXX
ஜூன் 16 வியாழக் கிழமை
ப்ரணிபாதேன ப்ராஹ்மணஸ்வ பரோஅபீஹாரயேத்
வணங்குதல் மூலம் அறிஞர் பட்டாளத்தைக்கூட வென்று விடலாம்
XXX
ஜூன் 17 வெள்ளிக் கிழமை
ஸுமஹதாப்யர்த்தேன ந கஸ்சன் சரீர விநாசமிச்சேத்
பெரும் செல்வமே கிடைப்பதாயினும் , யாரும் சாவதற்கு ஆசைப்படுவதில்லை
XXX
ஜூன் 18 சனிக் கிழமை
ஸாமான்யா ஹி பதி ஸித்திஸ்சாஸித்திஸ்வ
வெற்றியும் தோல்வியும் எல்லா பாதைகளிலும் வரக்கூடியதே
XXX
ஜூன் 19 ஞாயிற்றுக் கிழமை
தாத்ருஸா ஹா தாத்ருசைரேவ போத்தப் யாஹா
(பாம்பின் கால் பாம்பறியும்). ஒரு இனத்தைச் சேர்ந்தவர் அவர் இனத்தை எளிதில் அடையாளம் காண்பர் .
XXX
ஜூன் 20 திங்கட் கிழமை
பராக்ரமோ ஹி வ்யஸன மபஹந்தி
வீரத்தைக் காட்டினால்தான் தொல்லைகளை அடக்கமுடியும்
XXX
ஜூன் 21 செவ்வாய்க் கிழமை
கர்மபலோ ப போகானாம் க்ஷேமா ராக்ஷனஹ சமஹ
கிடைத்தவற்றை தொல்லைகளின்றி அனுபவிக்கும்போதுதான் சாந்தி ஏற்படும்
XXX
ஜூன் 22 புதன் கிழமை
விக்ரமாதிகோபி ஹஸ்தினமிவ லுப்தகஹ ப்ராக்ஞஹசூரமதி சந்ததே
வீரதீரத் செயல்களில் கூட புத்திமான் பலவான் ஆவான்; பெரிய யானையை வேடன் கொன்றுவிடுகிறானே
XXX
ஜூன் 23 வியாழக் கிழமை
விரக்தா யாந்த்யமித்ர வா பர்த்தாரம் க் நந்தி வா ஸ்வயம்
மக்களுக்கு அதிருப்தி உண்டானால் எதிரிகளை நாடுவர் அல்லது ஆட்சிசெய்வோரை அழிப்பர் .ஒப்பிடுக ரஷ்யப் புரட்சி, பிரெஞ்சுப் புரட்சி
XXX
ஜூன் 24 வெள்ளிக் கிழமை
புத்ரார்த்தா ஹி ஸ்திரியஹ
பிள்ளைகளைப் பெற்றுத் தருவதற்கு பெண்கள் அவசியமே
XXX
ஜூன் 25 சனிக் கிழமை
ஸஹஸ்ரேஷு ஹி முக்யோ பவத்யேகோ ந வா
ஆயிரம் பேரில் ஒரு தலைவன் கிடைப்பது அரிதிலும் அரிது
XXX
ஜூன் 26 ஞாயிற்றுக் கிழமை
த்ருவம் ஹி ஸாக்ஷிபிஹி ஸ்ரோதவ்யம்
சாட்சிகள் உண்மையை உரைக்கவேண்டும்
xxx
ஜூன் 27 திங்கட் கிழமை
கர்மா ரம்பாணாம் யோகாராதனஹ வ்யாயாமஹ
செயல்கள் தான் வெற்றியைக் கொணரும் (வாய்ச்சொல், திட்டம் மட்டும் போதாது )ஒப்பிடுக – குறள் – வினைத் திட்பம்
XXX
ஜூன் 28 செவ்வாய்க் கிழமை
ஏகம் ஹன்யாத் ன வாம் ஹன்யாதிஷுஹூ க்ஷிப்தோ தனுஷ்மதா
ப்ராக்ஞ்நேன மதிஹி க்ஷிப்தா ஹன்யாத் கர்பஹதானபி
வில் வீரன் விடுத்த அம்பு ஒருவனைக் கொல்கிறதோ இல்லையோ , புத்திசாலி மனிதன் போடும் திட்டம் கர்ப்பத்தில் உள்ள சிசுவைக் கூடக் கொன்றுவிடும் .ஒப்பிடுக – மஹாபாரதம் – பிரம்மாஸ்திரம்
XXX
ஜூன் 29 புதன் கிழமை
பலம் ஹி சித்தம் விகரோதி
பலமே மனிதனின் மனத்திற்கு ஆதாரம்; பலம் வந்துவிட்டால் மனது மாறும் ;ஒப்பிடுக – பலவீனனால் ஆத்மாவை அறிய முடியாது- உபநிஷதம்
XXX
ஜூன் 30 வியாழக் கிழமை
அஸாரம் ஹி பால ப்ராதிபாவ்யம்
வயது குறைந்தவனின் வாக்குமூலம் பயனற்றது
xxx
BONUS QUOTE
ஸுகோபருத்தாஹா ஹி புத்ரா ஹா பிதரம் நாபித்ருஹ்யந்தி
பிள்ளைகளுக்கு சுக போகத்தைக் கொடுத்துவிட்டால், அப்பாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்க மாட்டார்கள்
—SUBHAM—
TAGS- கெளடில்யர், அர்த்தசாஸ்திரம், சாணக்கியன், பொன்மொழிகள்,