Compiled BY KATTU KUTTY , CHENNAI
Post No. 10,989 (Missed Number)
Date uploaded in London – – 17 MAY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
ஞான மொழிகள் – 81
Kattukutty
(இது முழுக்க முழுக்க கடிஜோக்ஸ் – ஏற்கனவே நீங்கள் படித்தாககக் கூட இருக்கலாம். இருந்தாலும் ரசிக்கவும்)
வரதட்சிணையா two wheeler கேட்டது தப்பாப் போச்சு
மாட்டு வண்டிய கொடுத்து அனுப்பியிருக்காங்க?
திருடனுக்கு பிடித்த ராகம் எது?
“சுருட்டி”
மாணவர்களுக்கு பிடித்த ராகம் எது?
“காப்பி”
மிகவும் மக்கான ஊர் எது?
“மா மண்டூர்”!
கப்பல் ஏன் ஆடுது?
அது “தண்ணில “ இருப்பதால்’!
சலூன்காரருக்கு பிடித்த காய் எது?
“கத்தரிக்காய்”!
எலிக்கு பிடிக்காத படிப்பு எது?
“பொறியியல்”!
நோயாளி -ஆபரேஷனுக்கு பிறகு பீஸ் வாங்கிகங்க!
டாக்டர் -யாருகிட்ட?
உலகத்திலேயே எந்த நாட்டிலுள்ள மக்கள் சிரிக்கவே மாட்டாங்க?
“சிரியா”
ராவணன் காதலித்து தோத்து போனா அதுக்கு என்ன பெயர்?
ஒரு தலைக்காதல்
இல்லை ……. பத்து தலை காதல்!
புள்ளிமான் உடம்புல புள்ளி இருக்கும்,
கன்னுக் குட்டி உடம்புல கண்ணு இருக்குமா?…
‘வெட்டி’ சம்பளம் வாங்கரவரு யார்?
டெய்லர், பார்பர்
ரயில் நிதானமில்லாம தள்ளாடி தள்ளாடி்வருகிறது ஏன்?
அது “சரக்கு”ரயில்!
தண்ணீரிலிருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
அப்படி எடுக்கல்லன்னா குளிக்கும்பொது ஷாக் அடிக்குமே!
மண்டேல போடறது DYE!
மண்டைய போட்டா அது DIE!
பரம்பரையா உட்கார்ந்து சாப்பிட பைசா இருந்தாலும்,
பாஸ்ட் புட் கடையில நின்னுகிட்டு தான் சாப்பிடணும்!
நீண்ட நாள் வாழ என்ன வழி?
வேறன்ன சாகாமல் இருப்பதுதான் !
டீ மாஸ்டர் என்னதான் டீ “லைட்டா”போட்டாலும்
அதுலேர்ந்து வெளிச்சம் வராது!
பவர்கிளாச எவ்வளவு நேரம் வச்சாலும்
அது கூலிங் கிளாஸ் ஆகாது!
என்னதான் திருவள்ளுவர் 1330 குறள் சொன்னாலும்,
அவரால ஒரு குரலில்தான் பேச முடியும்!
காதலி அடிச்சா வலிக்கும்,
பிரண்ட்ஸ் அடிச்சா வலிக்கும்,
சரக்கு அடிச்சா வலிக்குமா?
ஒரு அரசனுக்கு வந்த இரண்டு புறாக்களுக்கும்
கால்கள் இல்லை?
என்ன மந்திரி இது?
இதுதான் ‘Missed call” அரசே!
என்னதான் நாம அனுப்பற மெஸேஜ் அட்டு பழசாயிஇருந்தாலும்
உங்க மொபைல்ல நியூ மெஸேஜ் ரிசீ வ்டு ன்னு தான் வரும்!
ஒருவர்- என்னப்பா ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை பிச்சை
எடுக்க வரே?
பிச்சை -இந்த ஏரியாவ இரண்டு லட்சத்திற்கு ஏலம்
எடுத்திருக்கேங்க!
இந்த முறை நம்ம கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு
என்ன தருவாங்க?
அல்வா தருவாங்க!
தலைவரை உங்ங்க வீட்டு பிள்ளைன்னு சொன்னது தப்பாப்போச்சு
ஏன்.
எல்லார் வீட்லயும் போய் “பாக்கெட் மணி”கேக்குறார்!
என்னதான் கம்ப்யூட்டர்வ விண்டோவுலே (COMPUTER WINDOWS) உலகமே தெரிஞ்சாலும்
எதிர் வீட்டு விண்டோவுல பொண்ணு தெரியமா?
ஏம்மா பிச்சை எடுக்க நீ வந்துருக்கே? உன்புருஷன் எங்கே?
பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க சிங்கப்பூர் போயிருக்கரம்மா!
டைம் இஸ் கோல்ட் TIME IS GOLD ன்னா ஏன் ஒத்துக்க மாட்டேங்கறே?
அத அடமானம் வைக்க முடியாதே?
ஜனவரி 14க்கும், பிப்ரவரி 14 க்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்தா அது ஜனவரி 14!
அதே பொண்ணு அல்வா கொடுத்தா அது பிப்ரவரி 14!
மாங்கா மடையனை சிங்கம் கடிச்சா என்ன செய்யும்?
சே புளிக்குதுன்னு துப்பிடும்.
என் மகனும் கரண்டும் ஒண்ணு,
இரண்டுமே வீட்டில இருக்கறதில்லே?
உங்க சின்ன குழந்த எப்படி அந்த சேரில் ஏறிச்சு?
அது “ஈஸி” சேராச்சே!
என்னதான்பூமி சூரியனை சுத்தி வந்தாலும்
பூமிக்கு சூரியன் பிக்கப் ஆகாது!
ரத்த வங்கிக்கு போனா ரத்தம் வாங்கலாம்,
இந்தியன் வங்கிக்கு போனா இந்தியா வாங்க முடியுமா?
அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பொண்ண காதலிக்கும்போது நீங்க அடிமை,
அதுவே அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா
நீங்க கொத்தடிமை!
காந்திஜி சாகரதுக்கு முன்னாடி எப்படி இருந்தார் தெரியுமா?
ஏன் தெரியுமே, உயிரோடு இருந்தார்!
லாரில கரும்பு ஏறினா காசு!
கரும்புல லாரி ஏறினா ஜூஸு!
பேப்பர போடுறவன் பேப்பர்காரன்,
பால் போடுறவன் பால்காரன்,
அப்ப பிச்சை போடுறவன் பிச்சைக்காரனா?
அதிரடி மெகா சீரியல் எடுக்கப்போறாங்களாமே, என்ன தலைப்பு?
இதுவாடா முடியும்!
சிகரட் குடிச்சா கேன்ஸர் வரும்ன்னு சொல்றாங்களே
அது உண்மையாடா?
தெரியல்லடா மாப்ளே, நான் குடிச்சா புகைதான் வருது!
நேற்று ஏன் லீவு?
ஒரு சேஞ்சுக்காக வீட்டிலேயே தூங்கிட்டேன்!
எல்லா மொழியும் பேசக்கூடியது எது?
எதிரொலி!
**
TAGS- ஞான மொழிகள் – 81