மூன்று வகையான வெற்றிகள் (Post No.11,006)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,006

Date uploaded in London – –    20 MAY 2022        

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

இந்து மத மன்னர்கள் போர் தொடுப்பதிலும் கூட சில கொள்கைகளைக் கடைப்பிடித்தனர். ‘அவன் இருந்தால் நம்மை வாழ விடமாட்டான்’ என்ற நிலையில் மட்டுமே எதிரியைக் கபளிகரம் செய்வார்கள். அல்லது தங்கள் குலத்தில் ஒருவனைக் கொன்று இருந்தால் வஞ்சம் தீர்க்க எதிரியையும் கொல்வார்கள் ; பெரும்பாலும் தர்ம யுத்தமே நடந்தது.

தேர் வீரன், தேர் வீரனுடனும் குதிரை வீரன், குதிரை வீரனுடனும் தான் சண்டையிட வேண்டும். மல் யுத்தம் போல இருந்தால் இருவரும் ஆயுதம் எடுக்காமல் வெற்றி தோல்வியை முடிவு செய்வார்கள். காலையில் துவங்கி மாலை சூரிய அஸ்தமனத்துடன் போரை முடித்த பின்னர் காயமடைந்தோருக்கு சிகிச்சை தருவார்கள் .அது மட்டும் அல்ல. ஊருக்கு ஒதுக்குப் புறமான இடத்தில் வீரர்கள் , மற்ற வீரர்களோடு மட்டுமே சண்டையிட்டனர். பொது மக்கள் பாதிக்கப்படவில்லை.

வாலியைக் கொன்றுவிட்டு சுக்ரீவனை முடிசூட்டிய ராமன், வாலியின் மகனுக்கு அடுத்த முக்கியத்துவம் கொடுத்தான். இந்திய மண்ணிலேயே விபீஷணனுக்கு முடி சூட்டி, ராவணன் இறந்த பின்னர், இலங்கையையே அவனிடம் ஒப்படைத்தான்.

மூன்று வகையான வெற்றி

‘உலக மஹா கவிஞன்’, ‘கவி குல குரு’ என்று போற்றப்படும் காளிதாசன், அவனது ரகு வம்ச காவியத்தின் முதல் அத்தியாயத்திலேயே சூரிய குல மன்னர்களின் குணாதிசயங்களை  வருணிக்கிறான்.

தானம் செய்வதற்காகவே சம்பாதிப்பார்கள்”

தப்பித்த தவறியும் வாயில் பொய் வரக்கூடாது என்பதற்காக அளந்து பேசுவார்கள்.”

செக்ஸ் SEX என்பதை விட்டு வம்ச விருத்திக்காக திருமணம் செய்து கொள்வர்”.

புகழ் பெற வேண்டும் என்பதற்காக போர் செய்வார்கள்”

யஸசே விஜிகீஷுணாம்”  என்பது காளிதாசன் வாக்கு .

2400 ஆண்டுகளுக்கு முன்னர் கெளடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரத்தில் மூன்று வகையான வெற்றிகளை வருணிக்கிறார்.

அவை தர்ம விஜய , லோப விஜய, அசுர விஜய என்பதாகும் ; அற வெற்றி, பண வெற்றி, மூர்க்க குண வெற்றி என்று இவற்றைத் தமிழில்  சொல்லலாம்.

தர்ம வெற்றியில், தான் பிடித்த நாட்டை எதிரியிடமே மன்னன் கொடுத்துவிடுவான் ; அவனும் வெற்றி பெற்ற மன்னனை தனக்கும் மேலான வீரன் என்று போற்றுவான் . கப்பமும் கட்டவேண்டும் .

ஹிந்து மன்னன் போரஸ் என்னும் புருஷோத்தமனை வெற்றி கொண்ட

அலெக்ஸ்சாண்டர் , போரஸிடமே நாட்டை ஒப்படைத்தார். அசுவ மேத யாகத்தில் குதிரை சென்ற இடமெல்லாம் வெற்றி பெற்ற மன்னனுக்கு சொந்தமாயினும் அந்த மன்னர்கள் கொல்லப்படவில்லை இது தர்ம விஜயம். த்ரேதாயுகமான ராமாயண கால யுத்தங்கள் இவ்வகைத்தே.

லோப விஜயத்தில், தோற்றுப்போன மன்னன் கட்டாயம் கப்பம் கட்டவேண்டும். ஆனால் தோல்வி அடைந்த மன்னனே அந்த நாட்டை ஆள்வான். வெற்றி பெற்ற மன்னர்கள் எதிரி  நாட்டின் பெரும்பகுதியை தங்கள் நாட்டுடன் சேர்த்துக் கொள்ளுவர்

அசுரர் விஜய வெற்றியில், எதிரி மன்னன் கொல்லப்படுவான். அவன் நாடு தரை மட்டம் ஆக்கப்படும். அவன் நாட்டை வெற்றி வீரர்கள் சூறையாடுவர். கலியுகத்தில் நடைபெற்ற யுத்தங்கள் இவ்வகைத்தே. வெற்றி கொண்ட அரசன், முழு நாட்டையும் தன் நாட்டுடன் சேர்த்துக்கொள்ளுவான்.

துவாபர யுக முடிவில் கலியுகம் துவங்குவதற்கு 36 ஆண்டுகள் மட்டுமே இருந்த காலத்தில் மஹாபாரத யுத்தம் நடந்ததால் லோப + அசுர விஜய குணங்களைக் காண்கிறோம்.

கி.பி. 150ல் இந்தியாவின் மேற்கு பக்கத்தை ஆண்ட ருத்ரதாமனை வருணிக்கும் கிர்னார் – ஜூனாகட் கல்வெட்டு “பிரஷ்ட ராஜ பிரதிஷ்டாபக” என்று விளம்பும். அதாவது தட்சிண பத பேரரசர்களான சதகர்ணியை  இரு முறை தோற்கடித்த போதும் அவனிடமே நாட்டைத் திருப்பிக்கொடுத்தானாம். இது தர்ம விஜயம்

-subham —

-tags- மூன்று வகை , வெற்றிகள் , தர்ம, லோப, அசுர , விஜய , அர்த்தசாஸ்திரம், கெளடில்யர்

Leave a comment

1 Comment

  1. DeadEternally

     /  May 22, 2022

    நீங்கள் மஹாபாரதத்தை படித்ததில்லை என்று தெரிகிறது. ஒவ்வொரு தேர் சண்டையிலும் ஆயுதமில்லாத தேரோட்டி கொல்லப்படுவான். காலாட் படை சாகறது பூச்சிகளை நசுக்கர மாதிரி. சும்மா தர்ம யுத்தம் மயிர் னு வந்துட்டார்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: