அற்புதக் காட்சி அளிக்கும் அரிச்சல் முனை, தனுஷ்கோடி, ராமேஸ்வரம் (Post No.11,013)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,013

Date uploaded in London – –    14 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

அற்புதக் காட்சி அளிக்கும் அரிச்சல் முனை, தனுஷ்கோடி

ராமேஸ்வரம் எங்கு உள்ளது?

ராமேஸ்வரம் தமிழ் நாட்டில் உள்ளது. அது ஒரு தீவு. முன்னர் ரயில் பாதை மூலம் மட்டும் இணைக்கப்பட்டது. அந்தப் பாலம் 1964 புயலில் சேதம் அடைந்தவுடன் சரி செய்யப்பட்டு, புதிய சாலைப் பாலமும்  கட்டப்பட்டது. அந்தப் பாதைகளில் செல்லும்போது இரு புறமும் கடல் இருப்பதைக் காணலாம். மதுரையிலிருந்து சாலை வழியாக 3 மணிநேரத்தில் சென்றுவிடலாம். மதுரையிலிருந்து சுமார் 170 கிலோ மீட்டர் தொலைவில் ராமேஸ்வரம் உள்ளது. தனுஷ்கோடி, அங்கிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

அதிசய விஷயங்கள் என்ன?

ராமேச்வரம் பற்றிய இரண்டு அதிசய விஷயங்கள் :-

1.கப்பல் வந்தால் பாம்பன் பாலம் இரண்டாகப் பிரிந்து வழி விடும். இதே போன்ற பாலம் லண்டனில் டவர் ப்ரிட்ஜில் TOWER BRIDGE உள்ளது. கப்பல் வருகையில் பாலம் இரண்டாகப் பிரிந்து மேலே எழும்பும் .

2.உலகியிலேயே நீண்ட கோவில் பிரகாரம் ராமேஸ்வரத்தில் உள்ளது. அற்புதமான பொறியியல் வேலை அது. கருங்கல் கிடைக்காத தீவில் இவ்வளவு பெரிய பிரகாரம் அமைந்தது உலக அதிசயமே !

பிரகாரத்தின் நீளம் 640 அடி.

மொத்தமுள்ள பல பிரகாரங்களின் நீளம் 3850 அடி

வெளிப் பிரகாரத்தில் உள்ள தூண்கள் 1212. அவற்றில் சிற்பங்களும் உண்டு.

இவை 15-ம் நூற்றாண்டு முதல் கட்டப்பட்டன.

உலகப் பிரசித்திபெற்ற மூன்றாம் பிரகாரத்தை முத்துராமலிங்க சேதுபதி 300 ஆண்டுகளுக்கு முன்னர்தான் கட்டினார்.

இயற்கை அதிசயங்கள் என்ன ?

1.ஏராளமான விதவிதமான சங்குகள், கிழிஞ ல்கள் இந்தக் கடலில் கிடைக்கின்றன.. அவற்றை விலைக்கு வாங்கலாம்.

2.தண்ணீரில் மிதக்கும் பெரிய பாறை போன்ற கற்கள் கிடைக்கின்றன. இவற்றைக் கொண்டு மிதக்கும் பாலத்தை வானர சேனை உருவாக்கியது.

3.மூன்றாவது இயற்கை அதிசயம் உப்பு நீர்க் கடலுக்கு இடையே நல்ல நீர் வரும் ‘வில் ஊன்றி தீர்த்தம்’ உள்ளது. சீதையின் தாகத்தைத் தணிக்க, ராம பிரான் வில் மூலமாக உருவாக்கிய தீர்த்தம் இது.

4.நாலாவது இயற்கை அதிசயம் போகப்போக இருபுறமும் உள்ள கடல் இணையும் காட்சியை பாம்பன் என்னும் இடத்தில் காணலாம் .

5.ஐந்தாவது இயற்கை அதிசயம், தனுஷ்கோடி செல்லும் வழியில் கடல், ஆறு மாதத்துக்கு ஒரு முறை சாலைக்கு எதிர்ப்புறம் மாறுவதாகும்

6. ஆறாவது இயற்கை அதிசயம் தனுஷ்கோடியின் எல்லையில் உள்ள அரிச்சல் முனை EROSION POINT ஆகும்.

அங்கே இந்தியப் பெருங்கடல் என்னும் இந்து மஹா சமுத்திரமும் , வங்காள விரிகுடாவும் சந்திக்கின்றன. 30 கிலோ மீட்டர் தொலைவில் இலங்கை என்னும் ஸ்ரீ லங்கா உள்ளது  இந்தியாவின் எல்லையைக் குறிக்கும் அசோக ஸ்தூபி அங்கே உள்ளது. மாலை ஆன பின்னர் எவருக்கும் அனுமதி இல்லை. அங்கே புதை மணலிலும் கடல் அலையிலும் சிக்கிப் பலர் இறந்தனர். ஆகையால் எச்சரிக்கை போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. நான் ஜூன் மாதம் (2022) சென்றபோது எச்சரிக்கை எல்லையையும் தாண்டி 100, 200 பேர் கடலுக்குள் சென்றவுடன் கடல் பாதுகாப்புப் படையினர் வந்து எச்சரி க்கை விசில் அடித்து அவர்களை விரட்டினர்.

கடலில் தொலைவில் பேரலைகள் வீசும். கடற்கரைக்கு அருகில் வேகமான ஆறு ஓடுவது போல தண்ணீர் நம் காலின் கீழேயுள்ள மணலை அரிப்பதைக் காணலாம் . ஒரு காலத்தில் அதையும் தாண்டி இருந்த கட்டிடங்கள், கோவில்கள் அனைத்தும் 1964 புயலில் கடலுக்குள் மூழ்கிவிட்டன. சுருங்கச் சொன்னால் கடல் அரித்து அரித்து முன்னால் வந்து கொண்டு இருக்கிறது இந்த இடத்தின் பெயரே அரிச்சல் முனை.

சமய அதிசயங்கள் என்ன?

  1. ராமேஸ்வரம் 12 ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் ஒன்று . நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்டும் 12 ஜோதிர் லிங்க கோவில்கள் 12 இடங்களில் உள்ளன. அவற்றில் மிகவும் சிறப்பானது ராமலிங்கம் என்னும் ராமநாத சுவாமி கோவில் ஆகும். ராமரே சிவபெருமானை பூஜித்ததாக ஐதீகம் (வரலாறு). அதுமட்டும் அல்ல. இங்கு கடலில் (அக்கினி தீர்த்தத்தில்) ஸ்னானம் செய்து அந்த தண்ணீரையும் மணலையும் எடுத்துக்கொண்டு பிரயாகையில் கொட்டுவார்கள். காசியிலிருந்து கங்கை நீரைக் கொண்டுவந்து ராமலிங்கக சுவாமிக்கு அபிஷேகம் செய்வார்கள். தமிழ் நாட்டையும் உத்தரப் பிரதேசத்தையும் நாள் தோறும் இணைக்கும் காட்சியை, கண் முன்னே காணலாம்.

விபீஷணரை இந்தியமண்ணிலேயே ராமர், இலங்கை அரசனாக முடி சூட்டிய இடமும் இதுதான். உலகின் முதல் EXILE GOVERNMENT ‘எக்ஸைல் கவர்மெண்ட்’ ராமபிரானால் உண்டாக்கப்பட்டது. அங்கு உயரமான இடத்தில் கோதண்ட ராம சுவாமி கோவில் உள்ளது .

பழங்கதாலத் தமிழ்நாட்டுக் கோவில்களில் பெருமாள்/ விஷ்ணு சந்நிதியும் உண்டு. இதற்குச் சான்று -சிதம்பரம், ராமேஸ்வரம் கோவில்கள் . ராமநாத சுவாமி கோவிலுக்கு உள்ளேயே பெருமாள் சந்நிதியும் உண்டு.

XXX

ஒரு இடம் பெருமை பெறுவதற்கு மொன்று விஷயங்கள் தேவை. மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம்.

மூர்த்தி- ராம பிரானே பூஜித்த சிவ லிங்கம்

ஸ்தலம் – ராமாயண காலத்திலேயே சேது/ பாலம்/BRIDGE எழுப்பிய இடம். 1400 ஆண்டுகளுக்கு முன்னரே சம்பந்தர் முதலிய ஞானிகளால் பாடல் பெற்ற இடம்/ ஸ்தலம் .

தீர்த்தம் – கோவிலுக்குள் மட்டுமே 22 தீர்த்தங்கள் உள . மேலும் 31 தீர்த்தங்கள் தீவின் பல இடங்களில் இருக்கின்றன.

கோவிலில் உள்ள சந்நிதிகள்

ராமநாதர், ராமலிங்கர் என்றழைக்கப்படும் சிவலிங்கம்

பர்வத வர்த்தனி என்னும் அம்மன் சந்நிதி; அங்கு ஸ்ரீசக்கரமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது

ராம பிரான், இராவணன் என்னும் பிராமணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி (பிராமணக் கொலை) தோஷம் ஏற்பட்டது அதிலிருந்து விடுபட இமயமலையில் இருந்து சிவ லிங்கத்தை எடுத்துவர அனுமனை அனுப்பினார். அவர் வருவதற்குத் தாமதம் ஆகவே , சீதையே மணலால் லிங்கத்தைச் செய்து கொடுக்க, ராமன் அதை வழிபட்டார். அவரே மூலவர். பின்னர் அனுமன் கொண்டு வந்த லிங்கத்தையும் அதே கோவிலில் ராமர் பிரதிஷ்டை செய்து பூஜிக்க உத்தரவிட்டார்.

XXX

வேறு முக்கிய சந்நிதிகள்

அனுமன் கொணர்ந்த லிங்கம்- விசுவநாதர்

அவரது துணைவியார் – விசாலாட்சி

செளபாக்கிய கணபதி

சந்தான கணபதி

மஹா கணபதி

பெருமாள் சந்நிதி

உலகப்  பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரத்தில் நடராஜர் சந்நிதி

ஆஞ்சனேயர்

மஹாலெட்சுமி

பள்ளியறை

இவை தவிர பல மண்டபங்கள்.

இந்திய ஜனைதிபதியாவும் நாட்டின் தலை சிறந்த விண்வெளி, விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் ஊர் இராமேஸ்வரம். அவரைப் பற்றிய காட்சி சாலையும் இருக்கிறது ; பாம்பனில் மீன் காட்சி சாலை இருக்கிறது .

பதஞ்சலி முனிவர் சமாதி அடைந்த புனித இடமும் இராமேஸ்வரம்.

கோவிலுக்குள் இருக்கிறது. எங்கெங்கு சித்தர்கள் சமாதிகள் உள்ளனவோ அங்ககெ ங்கெங்கெல்லாம் மகத்தான கூட்டமும் செல்வமும் வந்து சேரும். தமிழ்நாட்டின் மிகப் புகழ்பெற்ற கோவில்கள் அனைத்தும் சித்தர்கள் சமாதி உள்ள இடங்கள்தான்.. ராமேஸ்வரத்தில் பதஞ்சலி  முனிவர் சமாதி அடைந்தார்.

XXX

நான் பல முறை ராமேஸ்வரம் சென்று வந்துள்ளேன்.

ராமேஸ்வரம் கடற்கரையில் அமைந்த சங்கர மண்டபத்திலும் கோவிலிலும் பேசுவதற்கு எனது தந்தை தினமணி பத்திரிகை பொறுப்பாசிரியர் வே. சந்தானம் பல முறை சென்றுள்ளார். அப் போது அவருடன் சென்ற நினைவு இன்றும் உள . மானாமதுரை சாம்பார் சாதம் மிகவும் கீர்த்தி வாய்ந்தது. அந்தக் காலத்தில் ரயில்பாதை மட்டும்தான் . ரயில்வேயின் ஐ ஆர் ஆர் I R R சமையல்காரர் செய்யும் சாதம் அவ்வளவு ருசியானது .

இரவு நேரத்தில் தினமணி கரஸ்பாண்டண்ட் ஆதிநாராயணனின் மகன்களுடன் உட்கார்ந்து கொண்டு கடல் அலைகளை ரசித்தோம். கடலில் ஒளி உமிழும் LIGHT EMITTING PLANKTONS பிளாங்டான்கள் என்னும் தாவரங்கள் மிதந்து வந்தன. அவற்றை பாட்டிலில் பிடித்துக் கொண்டுபோய் தேவஸ்தான தங்கும் விடுதியில் வைத்து வேடிக்கை பார்த்தோம் . கடல் குச்சி, ராவணன் மீசை, சீதை மஞ்சள் ஆகியவற்றை வாங்கினோம். இப்போது சென்றபோது, என் பேரக் குழந்தைகளுக்காக விதவிதமான சங்குகளை (SEA SHELLS) வாங்கினோம்.  சீதை மஞ்சள் எனப்படும் பவளப் பாறைகள் (CORAL REEFS) கிடைக்கவில்லை. ஆனால் 300, 400 ரூபாய்க்கு நல்ல, பாலிஷ் போடாத பவள மாலைகள் (CORAL NECKLACES) கிடைத்தன .

அருகில் உள்ள திருப்புல்லாணி, உத்தரகோச மங்கை ஆகிய இடங்களுக்கும் சென்றோம்.. ஆனால் இம்முறை சேதுப்பட்டினம் , சேதுக்கரை செல்ல வில்லை .

-SUBHAM-

TAGS-  ராமேஸ்வரம், பதஞ்சலி முனிவர், அரிச்சல் முனை, தனுஷ்கோடி,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: