Post No. 11,016
Date uploaded in London – – 15 JUNE 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
இலக்கியத்தில் அதிசய மான்கள்!
ஸம்ஸ்க்ருத , தமிழ் இலக்கியத்தில் அதிசய மான்கள் பற்றி நிறைய தகவல்கள் கிடைக்கின்றன .
‘மயிர் நீப்பினும் வாழா கவரிமா’ பற்றி (குறள் 969) பற்றி வள்ளுவர் படுகிறார். இதைப் பலரும் ‘மான்’ என்றும் சடை எருமை (YAK யாக்) என்றும் மொழி பெயர்க்கின்றனர். இப்படி ஒருமிருகம் தற்காலத்தில் இல்லை. அதாவது ‘கவரி’யை (பெண்கள் பயன்படுத்தும் செளரி , கடவுளுக்கு வீசப்படும் சாமரம் என்னும் ‘சவுரி’ , அமெரிக்காவில் விழாக்களில் கைகளில் சாமரத்துடன் வரும் சீயர் Cheer ladies லேடீஸ் ஆகிய சொற்கள் இதிலிருந்து வந்தனவே). ஒரு காலத்தில் சிலவகை மிருகங்கள் இப்படி இருந்து அழிந்து போயிருக்க வேண்டும் என்பதே என் கருத்து. சோம லதை என்னும் அற்புத மூலிகை, டோடோ Dodo என்னும் பறவை முதலியன நமது காலத்திலேயே அழிந்துவிட்டன. இது போல அதிக உபயோகம் காரணமாக கவரிமா அழிந்து இருக்கலாம்.
கம்ப ராமாயணத்தில் கவரி ‘மான்’ என்றே பாடுகிறார். பிற இடங்களில் மா= மிருகம் என்று வருகிறது. பரிமேல் அழகர் உரையில் ‘ஒரு மயிர் நீங்கினும் உயிர்வாழாது கவரி மா’ என்பார். அப்படிப்பட்ட மிருகம் உலகில் எங்கும் இல்லை. யாக் Yak என்னும் சடை எருமை குளிரிலிருந்து தப்பிக்க உடம்பு முழுதும் மயிரைப் பெற்றுள்ளது ; ஒருவேளை எல்லா மயிரையும் நீக்கினால் அது குளிரில் இறக்கக்கூடும் . இமயமலையில் மட்டுமே இது காணப்படுவதால் தமிழ்நாட்டில் இது பற்றிய நம்பிக்கை மிகைப்படுத்தப்பதாக இருக்கலாம்.
xxx
கஸ்தூரி என்னும் நறுமணப் பொருளை சுரக்கும் சுரப்பிகள் உள்ள கஸ்தூரி மான் (Musk deer) இப்பொழுதும் உள்ளன . இவை பற்றி நாம் அறிவோம்.
யதி சந்தி குணா: பும்ஸாம் விகசந்த்யேவ தே ஸ்வயம் |
நஹி கஸ்தூரிகாமோத: ஷபதேன நிதார்யதே ||
நற்குணங்கள் இருப்பின் அவர்கள் தாமாகவே விகசிக்கிறார்கள். கஸ்தூரியின் மணத்தை யாராலும் உறுதிமொழியாலோ ஸத்யபிரமாணத்தினாலோ தடுத்து விட முடியாது.
If people have merits then they bloom of their own accord. Nobody can stop the fragrance of musk with an oath or swearing.
கஸ்தூரி மான் தன் உடலில் இருந்து வாசனை வருவதை அறியாது அடி அடியாக முன்னேறி வாசனை வரும் திக்கை நோக்கிச் செல்லும் என்ற உவமையையும் தேவார உரையில் காணலாம். இவ்வகை கஸ்தூரி மான்கள் இப்போது காஷ்மீரில் வசிக்கின்றன.
xxxx
பிராமண பிரம்மசாரிகள் அணியும் பூணூலில் ஒரு சிறிய மான் தோல் இருக்கும். ஒரு காலத்தில் ரிஷி, முனிவர்கள் மான் தோலைப் போர்த்திக் கொண்டு வாழ்ந்ததன் எச்சம் சொச்சம் போலும் இது. காடுகளில் வாழ்ந்த ரிஷி முனிவர்கள் பனி படர்ந்த மலைப்பகுதிகளில் இரவு நேரக் குளிரிலிருந்து தங்களை பாதுகாக்க இவைகளை அணிந்தனர்.
மநு எழுதிய சட்டப் புஸ்தகத்தில் ‘பண்பாடுள்ள கற்றறிந்த அறிஞர்’களை ‘ஆரிய’ என்னும் சொல்லால் குறிப்பிடுகிறார் . அப்படிப்பட்ட ஆரியர்கள் வாழும் பூமி எது, நாடு எது என்பதைக் குறிக்க அவர் ஒரு வகை மான்களைச் சொல்லி இவை வாழும் இடமே ஆரிய பூமி என்கிறார் (காண்க- மநு ஸ்ம்ருதி 2-23; . இவை கிருஷ்ண மிருக (black antelope) என்னும் மான் வகை ஆகும் இதைக்கொண்டு பார்த்தால் தமிழ் நாடும் ஆரிய பூமியே.. தமிழ்நாட்டிலும் காடுகளில் அவ்வகை மான்கள் வாழ்கின்றன.
xxxx
ஆதி சங்கரர் சொல்லும் அதிசய மான் விவேக சூடாமணியில் வருகிறது (ஸ்லோகம் 76). மான்களைப் பிடிக்கும் வேடர்கள் மான் போல ஒலி எழுப்பி மற்ற மான்களைப் பிடிப்பார்களாம். ஒவ்வொரு புலன் மூலமாக சில மிருகங்கள் உயிரை இழக்கின்றன ; மனிதர்களோ ஐந்து புலன்களின் வேட்கையால் உயிரை இழக்கின்றான் என்ற பொருள்பட விவேக சூடாமணியில் பாடுகிறார்.; மானுக்கு எதிரி அதன் செவி.
கவரிமாவுக்கு எதிரி அதன் மயிர்.(குறள் 969)
xxxx
கல்ஹணர் என்னும் பிராமணப் புலவர் ஸம்ஸ்க்ருதத்தில் ராஜ தரங்கிணி என்னும் நூலை எழுதியுள்ளார். அது காஷ்மீர் மாநில வரலாறு பற்றியது . அவர் ஒரு அதிசய மான் பற்றிப் பாடுகிறார்..
ராஜ தரங்கிணி 5-15, 6-364, 8-3034 ஸ்லோகங்களில் ‘அக்நி செளச’ என்னும் மான் பற்றி கல்ஹணர் பேசுகிறார். இந்த மான் தீயில் விழுந்து தன்னுடைய தோலை சுத்தம் செய்துகொள்ளுமாம். அக்கினி என்றால் தீ; செளச என்றால் சுத்தம். அவர் பயன்படுத்தும் உவமைகள்
5-15
கடலில் புகுந்த பின்னரும்கூட லட்சுமி சுத்தம் ஆகவில்லை. எப்படி ‘அக்நி செளச’ தீயில் புகுந்து தன்னை சுத்தம் செய்துகொள்கிறதோ அப்படி அவள் தன்னைப் பிறருக்கு கொடுப்பதன் மூலமே சுத்தம் செய்துகொண்டாள்.
6-364
காட்டு மரங்களில் தீ இல்லாவிடினும் குரங்குகள் அவற்றில் தங்கியே குளிரைத் தாங்குகின்றன. தீ மூலமும் தண்ணீர் மூலமும் மான்கள் தங்களை சுத்தம் செய்துகொள்கின்றன. ஆகையால் பொருள்களில் ஒன்றும் இல்லை. அதை பயன்படுத்துவோரின் அணுகுமுறையிலேயே அவரவர் வேண்டியதைப் பெறுவார்கள் .
மேலை நாடுகளில் பீனிக்ஸ் (Phoenix) பறவை பற்றி உள்ள நம்பிக்கை போன்றது இது. அந்தப் பறவை தீயில் விழுந்து மீண்டும் மீண்டும் புத்துயிர் பெறும் என்பது பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது.
xxx
மான்கள் உள்ள தபால்தலைகளை மட்டும் சேர்ப்பது சிலரின் பொழுது போக்கு . இந்தியா வெளியிட்ட எட்டு பைஸா மான் தபால்தலைக்கு இப்போது கிராக்கி ஜாஸ்தி. குறிப்பாக பயன்படுத்தாத தபால்தலைக்கு இன்னும் அதிக மதிப்பு . 100 தபால்தக்காளின் விலை குறைந்தது 550 ரூபாய்.!
–subham—
TAGS- அதிசய மான்கள், கவரி மா, அக்நி செளச, கருப்பு மான், கிருஷ்ண மிருக , மநு , ராஜதரங்கிணி