Post No. 11,023
Date uploaded in London – – 17 JUNE 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கல்ஹணர் யார்?
அவர் காஷ்மீரி பிராமணன்; இந்தியாவின் முதல் வரலாற்று ஆசிரியர் (வெள்ளைக்காரன் கணக்குப்படி); அவர் சம்ஸ்க்ருதத்தில் எழுதிய புஸ்தகத்துக்கு ராஜதரங்கிணி என்று பெயர். அரசர்களின் ஆறு என்று ஆங்கிலத்தில் ஆர்.எஸ்.பண்டிட் மொழிபெயர்த்துள்ளார். நேருஜியின் சொந்தக்காரர். இந்தப் புஸ்தகத்தில் சுமார் 8000 சம்ஸ்க்ருத ஸ்லோகக்ங்கள் இருக்கின்றன. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இதை எழுதினார்.
கலியுகம் போன்ற வருஷங்களைச் சொல்லாமல் தற்கால ஆண்டுகளை பயன்படுத்தியதால் வெள்ளைக்காரர்கள், கல்ஹணர்தான் முதல் வரலாற்று ஆசிரியர் என்று பிதற்றுவர். அவர் முதல் 4 அத்தியாயங்களில் சொன்னதை ஒதுக்கிவிட்டனர். கடைசி நாலு அத்தியாயங்களில் சொன்னதை மட்டும் அப்படியே ஏற்றுக்கொள்வர் வெளிநாட்டார் !
அவர் சொன்ன அதிசய விஷயங்கள்
1.கலியுகம் என்பது கி.மு. 3102-ல் துவங்கவில்லை; அதற்கு 653 ஆண்டுகளுக்குப் பின்னரே துவங்கியது என்பது அவரது கொள்கை
2.ராவணன், விபீஷணன், யுதிஷ்டிரன் என்ற பெயர்களில் கி.மு. காலத்தில் காஷ்மீரி அரசர்கள் இருந்தனர்.
3.அக்னி செளச என்ற மான், தீயில் விழுந்து தன்னை சுத்தம் செய்துகொள்ளும் (5-15)
4.கிளிகள் கொண்டுவந்த முத்துக்களைக் கொண்டு கோவிலில் அலங்காரம் செய்தனர்; இதை அமைத்தவர் பிரபாகர் வர்மன் என்னும் அமைச்சர் ஆவார். விஷ்ணு கோவிலில் அமைக்கப்பட்ட இந்த மண்டபத்தை ஹர்ஷன் கொள்ளை அடித்தார். பின்னர் உச்சல என்பவர் இதேபோல கிளிக்கூண்டு மண்டபத்தை திரிபுவன சுவாமி கோவிலில் அமைத்தார் (8-80)
தமிழ்நாட்டுக் கோவில்களிலும் கிளிக்கூண்டு மண்டபங்கள் உண்டு. பள்ளி மாணவனாக இருந்த காலத்தில் அதை மதுரை மீனாட்சி கோவிலில் நாங்கள் கண் கொட்டாமல் பார்ப்பது வழக்கம்.. நாங்கள் ராமா , மீனாட்சி என்று குரல் கொடுத்தால் அவைகளும் திரும்பிச் சொல்லும்.சுகாவலீ என்று கல்ஹணர் சொல்லும் இக்கிளிக் கூண்டை ஒரு அமைச்சசர் முத்துக்களைக் கொண்டே அமைத்தார் போலும். ஆயினும் அந்த முத்துக்களைக் கிளிகளே கொண்டுவந்து கொடுத்தது அதிசயமே.
பாரி என்னும் மன்னரின் பறம்பு மலையை மூவேந்தர்களும் முற்றுகை இட்ட காலத்தில் கபிலர் என்னும் பிராமணப் புலவர் கிளி களையும், குருவிகளையும் பழக்கி தனியங்களைக் கொண்டுவந்த விஷயம் சங்கத் தமிழ் நூல்களில் உள்ளது
5.அவந்திவர்மன் என்னும் மன்னரின் காலம் காஷ்மீரின் பொற்காலம் ஆகும். அப்போது உயிர்க்கொலைகள் நடக்கவில்லை. இதனால் பாதீன என்னும் மீன் வகை கரைக்கு வந்து உலவின. (5-65)
பாதீன என்னும் மீன் வகையை கிராதார்ஜுனியம் (4-5) என்ற நூலும் குறிப்பிடும். சிராத்தம் என்னும் திதிகளில் இதை காஷ்மீரி பிராமணர்கள் நீத்தாருக்குப் படைப்பர். மனு ஸ்ம்ருதியும் (5-16) இதை பித்ருக்களுக்குப் படைப்பதை ஆதரிக்கிறது .
நல்லாட்சி நடைபெற்றால் விவசாயம் செய்யாமலேயே நல்ல விளைச்சல் ஏற்படும் என்று வள்ளுவர் கூறுவது போல, மீன்களே அஞ்சாமல் வரும் என்பதை ஒப்பிடலாம்.
நல்லாட்சி நடந்தால் புலியும் மானும் ஒரே துறையில் நீர் அருந்தும் என்ற கருத்து கம்பனிலும் காளிதாஸனிலும் உள்ளது .
6.கல்லாடர் என்னும் புலவர் பெயர் சங்கத் தமிழ் இலக்கியத்திலும் பிற்காலத்திலும் காணப்படுகிறது. கல்ஹணரும் ஒரு கல்லாடர் பற்றிப் பேசுகிறார் (6-66) அவந்திவர்மனின் ஆட்சிக்காலத்தில் பல சித்தர்களும் பட்ட கல்லாடரும் பூமியில் அவதரித்தனர்.(6-66)
அவந்திவர்மன் கி.பி 855 முதல் சுமார் 30 ஆண்டுகளுக்கு காஷ்மீரை ஆண்டான். கல்லாடம் என்னும் நூலை எழுதிய கல்லாடருக்கும் காஷ்மீர் கல்லாடருக்கும் தொடர்பு உண்டா என்பதை ஆராய வேண்டும். ஏறத்தாழ அதே காலத்தில் திருமூலரும் காஷ்மீரிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்தார்.
7.காரீ என்னும் எடை அளவு பற்றி கல்ஹணர் 6-71) குறிப்பிடுகிறார். ரிக் வேதமும் (4-32-17), பாணினியும் இந்த அளவை குறிப்பிடுகின்றனர். சங்கத் தமிழ் நூலகளின்படி, காரீ என்பது கடை எழு வள்ளல்களில் ஒருவரின் பெயர் ; காரீ டைய குதிரைக்கும் அதே பெயர் ; அவந்திவர்மன் காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தால் ஒரு காரீ எடை அரிசி விலை 1050 தினாரா ஆனது . அக்காலத்தில் அதிசயமாகப் பிறந்த ஒரு பொறியியல் வல்லுநர் நிலத்தைச் சீர்திருத்தி விளைச்சளைப் பெருகியதால் அரிசிவிலை 36 தினாராகக் குறைந்தது (6-116).
ஒரு சண்டாள வகுப்பு பெண்மணி தெருக்கூட்டும்போது கண் ட பானைக்குள் கிடைத்த குழந்தையே ஒரு சூத்திரர் வீட்டில் வளர்ந்து பேரறிஞன் ஆகியது என்று கல்ஹணர் பாடுகிறார்.
8.பெரும்புகழ் படைத்த அவந்திவர்மன் பகவத் கீதையைக் கேட்டுக்கொண்டு, விஷ்ணுவைப் பிரார்த்தித்தவாறு இறந்தான் (6-125)
9.கவிஞர்கள் பிறர் எழுதியதை தாம் எழுதியதாகச் சொல்லும் காலம் வந்தது. ஆட்சியாளர்கள் பிறர் சொத்துக்களை அபகரிக்கும் காலம் வந்தது ( அவந்திவர்மனின் மகன் சங்கரவர்மனின் ஆட்சியில்) 5-160
10.திமி மீன்கள் அதன் வகைகளையே சாப்பிடும் ; அமைதியாக நிற்கும் கொக்குகள் அவற்றைச் சாப்பிடும் அந்தக் கொக்குகளை காட்டில் மறைந்திருக்கும் வேடன் கொல்கிறான் . இதுதான் உலகம். யாருக்கு அதிக திறமையும் பலமும் உள்ளதோ அவன் வாழ்கிறான் SURVIVAL OF THE FITTEST
11.ரத்தம் தோய்ந்த ஆட்டுத்தோல் மீதி நின்று இரு அரசர்களும் சத்தியப் பிரமாணம் செய்தனர் 5-326. ஸ்காண்டிநேவிய அரசர்களும் இப்படிச் செய்ததாக ரஞ்சித் சீதாராம் பண்டிட் அடிக்குறிப்பில் கூறுகிறார்.8-3006- லும் இது உள்ளது . பிரமணர்கள் நீர் வார்த்து சத்தியம் செய்வார்கள்
.
12.பிராமண குருக்கள் தாமாகவே புதிய சாஸ்திரங்களை உருவாக்கினார்கள். மீன்களைக் கொண்டு யாகம் செய்தார்கள் 6-11
TO BE CONTINUED…………………………………..
tags- கல்ஹணர், ராஜா தரங்கிணி, அதிசய விஷயங்கள்