உலகின் சிந்தனைப் போக்கை மாற்றிய 1001 அபூர்வ கருத்துக்கள்! (Post.11,025)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,025

Date uploaded in London – –    18 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

உலகின் சிந்தனைப் போக்கை மாற்றிய 1001 அபூர்வ கருத்துக்கள்!

ச.நாகராஜன்

மனித குலத்தை வளப்படுத்திய கருத்துக்கள் ஏராளம். அவ்வப்பொழுது ஆங்காங்கே தோன்றிய மகான்கள், அறிஞர்கள், விஞ்ஞானிகள் தங்களது கருத்துக்களை மக்கள் முன்னே வைப்பார்கள்.

அதைக் கேட்டு வியந்து போகும் மனித குலம் ஒரு அடி முன்னே வைக்கும்.

இப்படி உள்ள கருத்துக்களில் முக்கியமான 1001 கருத்துக்களைத் தொகுத்துத் தருகிறார் ராபர்ட் ஆர்ப், 1001 ஐடியாஸ் தட் சேஞ்ஜ்ட் தி வே வீ திங்க் (1001 Ideas that changed the way we think) என்ற தனது புத்தகத்தில்!

பழங்காலம், மத்திய காலம், நவீன காலத்தின் முற்பகுதி, பிற்பகுதி, இருபதாம் நூற்றாண்டு, சம காலம் (1950 முதல் தற்போதைய காலம் வரை) என ஆறு பகுதிகளாக வரலாற்றுக் காலத்தைப் பிரித்து உலகின் சிந்தனையாளர்கள் தந்த கருத்துக்களை சுருக்கமாக ஆனால் தெளிவாக இந்த நூலில் பார்க்க முடிகிறது.

சமகாலத்தை எடுத்துக் கொள்வோம் :-

1950இல் பாப் மியூஸிக், க்ரெடிட் கார்டுகள், ஃபெர்மி பாரடாக்ஸ், என்னியாகிராம் (Enneagram), 1951இல் ராக் அன் ரோல், 1952இல் ஸயிண்டாலஜி, 1952இல் பாரா ஒலிம்பிக் விளையாட்டுக்கள், 1953இல் மரபணு பற்றிய டிஎன் ஏ டபிள் ஹெலிக்ஸ், 1954இல் வேல்யூ ஆடட் டாக்ஸ், 1957இல் ஏலியன் அப்டக் ஷன், 1957இல் மெனி வோர்ல்ட் தியரி, 1961இல் ட் ரேக்  ஈக் வேஷன், 1962இல் பர்ஸனாலிடி இண்டிகேடர், 1963இல் கயாஸ் தியரி, 1964இல் ஹிக்ஸ் போஸான், 1965இல் க்ரயானிக்ஸ், 1966இல் டேடா பேஸ், 1967இல் அடாமிக் மாடல், 1968இல் பிபிளிகல் ரிடாரிகள் க்ரிடிஸிஸம், 1969இல் பட்டர்ஃப்ளை எபக்ட், 1970இல் ரீ சைக்ளிங், 1971இல் ப்ரேக் டான்ஸிங், 1972இல் ஜீன் தெராபி, 1973இல் ஜிபிஎஸ், 1974இல் ஜெனிடிக் எஞ்சினியரிங், 1975இல் நியர் டெத் எக்ஸ்பீரியன்ஸ், 1976இல் மிஸ்ஸிங் லெட்டர் எஃபக்ட், 1977இல் ஆர் எஸ் ஏ அலாக்ரிதம், 1978இல் க்ரிடிக் ஆஃப் ஓரியண்டாலிஸம், 1979இல் ராப் மியூஸிக், 1980இல் ஒரிஜினாலிஸம் என இப்படி கருத்துக் குவியலைப் பார்க்கும் போது பிரமிப்படைய வேண்டியிருக்கிறது.

சிந்தனையின் வித்து ஒரு குறிப்பிட்ட ஆண்டில் விதைக்கப்பட அது காலப் போக்கில் பெரிதாக வளர்ந்து பயன் தருவதைப் பார்த்து வியக்கலாம்.

சிந்தனையைத் தூண்டியவர் யார், கண்டுபிடித்தவர் யார், அது எந்த விஷயத்தைச் சார்ந்தது, அதன் விளக்கம் என  விவரங்கள் இந்த நூலில் தரப்பட்டிருக்கிறது.

ஒரு பெயரை எடுத்துக் கொண்டு அதன் மூலமும் விளக்கத்தைப் பெறலாம். எடுத்துக்காட்டாக ஐன்ஸ்டீன் என்று எடுத்துக் கொண்டால் 1905ம் ஆண்டு அவர் முன் வைத்த ‘ஸ்பெஷல் ரிலேடிவிடி’ பற்றிய கொள்கையைக் காணலாம். ஐஸக் நியூட்டன் என்றால் 1687இல் அவர் கண்டுபிடித்த புவி ஈர்ப்பு விசை பற்றிய கொள்கையைப் பற்றிக் காணலாம்.

இன்னும் ஜோதிடம், மறுபிறப்பு, விண்வெளி என இப்படி பல விஷயங்களைப் பற்றியும் உடனடியாக பின்னால் தரப்பட்டுள்ள இண்டெக்ஸ் மூலமாக குறிப்பிட்ட பக்கத்தை நாட முடிகிறது.

மொத்தத்தில் உலகப் போக்கு மாறிய விதத்தைச் சுவையான, சுருக்கமான விளக்கத்துடன் படித்துத் தெளிந்து கொள்ள இந்த நூலை நாடிப் படிக்கலாம்.

மொத்தப் பக்கங்கள் 960 விலை – 32 $.

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: