கல்ஹணர் சொன்ன அதிசயச் செய்திகள் – Part 2 (Post No.11,027)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,027

Date uploaded in London – –    18 JUNE 2022        

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

நேற்றைய கட்டுரையின் தொடர்ச்சி

கல்ஹணர் என்னும் காஷ்மீரி பிராமணர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சம்ஸ்க்ருதத்தில்  எழுதிய ராஜதரங்கிணி நூலில் காணப்படும் மேலும் பல அதிசய விஷயங்கள்:-

13.காகம் குயிலின் முட்டைகளை/ குஞ்சுகளை தனது என்று கருதும்; அன்னம் பாலையும் தண்ணீரையும் வைத்தால் பாலை மட்டும் பிரித்து அருந்தும் . நீரில்லாத மேகத்தை க் கண்டால் அஞ்சி நடுங்கும்.

(இந்த உவமைகள் தமிழ் இலக்கியத்திலும் உள்ளன)- 6-275

14.”சீரிஷ மலர்களை சூர்ய ஒளி உதிர்ப்பது போல”- இந்த மலரை அனிச்சம் என்று வள்ளுவர் பல இடங்களில் குறிப்பிடுகிறார். முகர்ந்தால்கூட வாடிவிடும்; அவ்வளவு மென்மையானது என்பார் வள்ளுவர்.6-291

15.தித்தா மஹாராணி தான்  செய்த பாபங்களைக் கழுவ 64 கோவில்களை உருவாக்கினாள் 6-306

(அவளது காலம் கி.பி.972)

15.ஆறுகள் தாழ்வான இடத்தை நோக்கிப் பாயும். உயர்ந்த குடும்பத்தில் பிறந்த பெண்களும் கூட, தாழ்வான எண்ணத்தை நோக்கிச் செல்வர்; இது பெண்களின் இயற்கைக் குணம். 6-316

(கம்பனும் கூட கைகேயி, தாடகை, சூர்ப்பனகை பற்றிய இடங்களில் பெண்களைத் தாழ்வாக விமர்சிப்பதைக் காணலாம்)

.16. பிராமணனுக்கு லஞ்சம் – 6-336-340

தித்தா என்னும்  ராணிக்கு எதிராக பிரமணர்களைத் தூண்டிவிட்டு உண்ணாவிரதம் இருக்கச் செய்தார் விக்ரஹ ராஜா (தித்தாவின் சகோதரர் மகன் ); அக்ரஹார பிராமணர்கள் ஒன்று சேர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். மக்களும் சேர்ந்து கொண்டனர். ஆனால் பாபமே  உருவான தித்தா , பிராமணர்களுக்கு தங்கக் காசுகளைக் கொடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடும்படி செய்தாள்

(பேராசைக் காரனடா பார்ப்பான்; அவன் ஏது செய்தும் காசு பெறப் பார்ப்பான் — என்ற பாரதியாரின் வரிகளை இங்கே நினைவு கூறுதல் பொருத்தம் )

17.புண்ய தீர்த்தங்களில் உள்ள திமி மீன்கள் மெளனமாக இருந்து தனது இனத்து மீன்களையே உண்ணும்; மயில்கள் சுத்தமான மழை  நீரை அப்படியே ஏந்தி அருந்தினாலும் விஷப் பாம்புகளையே விரும்பி உண்ணும்; கொக்குகள் தவம் செய்வது போல நின் றாலும் அருகில் வரும் மீன்களைத் தின்றுவிடும்; பாபாத்மாக்கள் புண்ணியம் செய்வது போல செயல்பட்டும் பாவங்களையே செய்வர் .6-309

18.நாகரத்தினம் – பாம்புகளிடத்தில் நாக ரத்தினம் உண்டு அதை வைத்து அது இரை தேடும் என்று சங்கத் தமிழ் நூல்கள் பகரும். கல்ஹணரும் 7-136, 7-502ல் நாகரத்தினம் பற்றிப் பாடுகிறார். பெண் பாம்புகள் பூமியில் புதைந்துள்ள ரத்தினங்களைப் பாதுகாத்து நிற்கும் என்கிறார் 3-108

பாம்பு மற்றவர்களுக்காக ரத்தினங்களைப் பாதுகாக்கிறது . இதைவிடக் கருமிகள் உலகினில் உண்டோ! 7-502

பாம்புகள் சென்றவுடன் அவை பாதுகாத்த ரத்தினங்கள் எப்படி மறையுமோ அப்படி ராஜா போனவுடன் கலசன் காலியான கஜானாவைக் கண்டான் (7-362)

மற்றவர் செல்வத்துக்கு ஆசைப்பட்டு ஏமாறும் பேராசைக்காரன் போல, பாம்புகளைக் கொன்று ரத்தினம் பெற நினைப்பவனைப்  போல , ராணியின் அம்மாவும் அரசுக்கட்டிலை எதிர்பார்த்து மகனைப் பலிகொடுத்து ஏமாந்தாள் 7-136/137

19. தக்கா என்பவன் ராஜாவுக்கு பல நாட்டுப் பெண்களை விலைக்கு வாங்கி வந்தான்;  துலுக்கர்களிடம் அவர்களை விலைக்கு வாங்கினான்.ராஜா, பலருடைய அழகிய மனைவியரையும் தூக்கி வந்து அந்தப்புரத்தில் வைத்து அனுபவித்தான். 72 பெண்களுடன் இன்பம் அனுபவித்தும் வீர்யம் குறையவில்லை. மீன்களையும் குளிகைகளையும் சாப்பிட்டு சமாளித்தான். அவன் குருமார்களை சந்தித்தபோதும் மாமிச உணவைத் தவிர்க்கவில்லை இவ்வாறு பாபம் செய்தபோதும் பல கோவில்களைப் புதுப்பித்தான் 7-520-525 (இவை கி.பி 1063-1089 காலத்தில் நடந்தவை)

20.ஆராய்ச்சி மணி- ராஜா தனது கோட்டையின் நான்கு வாசல்களிலும் பெரிய மணிகளைத் தொங்க விட்டிருந்தான். மனுக்களைக் கொண்டு வந்து முறையிட விரும்புவோருக்காக இப்படி ஆராய்சசி மணிகள் வைக்கப்பட்டன.7-879

(மநு நீதிச் சோழன் கதையை நினைவுபடுத்தும் ஸ்லோகம் இது)

21.மன்னனுக்கு தென்னாட்டு நடை உடை பாவனை மிகவும் பிடித்தது. நாணயங்களைக்கூட கர்நாடக பாணியில் வெளியிட்டான். மன்னரைப் போல மந்திரிகளும் அதிகாரிகளும் உடை அணிந்தனர். அவர்களுக்கும் தீப ஆரத்தி வழங்கப்பட்டது-925, 926

22.மன்னன் ‘பம்பா’ என்னும் பெரிய ஏரியை உருவாக்கி பறவைகளையும் மிருகங்களையும் உலவ விட்டான்.

(பம்பா என்னும் சொல் உலகம் முழுதும் உள்ளது. இப்போதும் இந்தியாவில் பல மாநில நதிகள், ஓடைகள் பம்பா என்றே அழைக்கப்படுகின்றன )7-940. அவனது தோட்டத்தில் கற்பக வ்ருக்ஷமே இல்லை. ஏனெனில் அவனே கற்பகமரமாகத் திகழ்ந்து  தங்க நாணயங்களை வாரி வழங்கினான் (7-939)

23.மன்னன் கலசன், ஆண்ட காலத்தில் புகழ்பெற்ற காஷ்மீர் புலவன் பில்ஹணன், கர்நாடகத்துக்குச் சென்றார். கர்நாடக மன்னன் பரமாந்தி , அந்தப் புலவரை வித்யாபதி ஆக்கினார் (அரசாங்கப் புலவர் மன்னனுக்கு அடுத்தபடியாக அவர் வெண் கொற்றக் கு டையுடன் பவனி வந்தார் (7-35-938)

24.மன்னர், தனது அந்தப்புரத்தில் 360 பெண்களைச் சேர்த்துக்கொண்டார். அவர்கள் அனைவரும் நல்ல குலத்தவர். சண்டாள பெண்களையும் தொம்பா பெண்களையும் மன்னர் அனுமதிக்கவில்லை. 7-963, 964

25.அறம் , பொருள் , இன்பம் — தொல்காப்பியமும் திருக்குறளும் இந்துமத  தத்துவமான தர்ம, அர்த்த, காம -த்தைக் குறிப்பிடுகின்றன ; ராஜ தரங்கிணியிலும் 7-510ல் வருகிறது.

தொடரும்……………………………

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: